செயல்பாட்டாளரும் முன்னாள் பள்ளி ஆசிரியருமான சபரிமாலா, பள்ளிகளில் மாணவிகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்து அண்மையில் தனது முகநூலில் கருத்து ஒன்றை பதிந்திருந்தார். பள்ளிகளில் பாவாடை அணிவதை தடை செய்வதும், மாணவிகள் படிக்கும் பள்ளிகளில் பெண் ஆசிரியர்களை பணியமர்த்துவதும் தான் மாணவிகள் மீதான பாலியல் சீண்டலகளை தவிர்க்கும் என அதில் கூறியிருந்தார். சபரிமாலாவின் கருத்து சர்ச்சையான நிலையில், தமிழ் முகநூல் பக்கங்களில் பலர் எதிர்வினை ஆற்றினர்.
எழுத்தாளர் ஸ்ருதி:
ஆடை அரசியல் கடலை போல பெரிய டாபிக்.. அதை வெறுமனே உடலை மறைக்கும் துணி உடலை மறைக்காத துணி வகைகள் என்று வகுக்க முடியாது.
Patriarchy பெண்ணுக்கு எதுவெல்லாம் அழகு என்று வகுத்து வைத்திருக்கிறதோ அதுவெல்லாமே அவளுக்கு ஒரு discomfortஐயும் இம்சையுமே தருகிறது..
Wired bra – tight fit jeans without pockets – heals – ஏன் இறுக்கி கட்டி 2000 safety pin குத்தி புடவை கட்டினால் தான் இப்போதைக்கு அது புடவை என்றே மதிக்கிறார்கள்..
ஆசைக்கு அழகுக்கு என்பதைத் தாண்டி சௌகரியத்துக்கு பெண்ணுக்கான உடையை தேடினால் கூட கிடைக்காத உலகம் இது.
பள்ளி மாணவர்களுக்கு Shirt and Skirt – chudidhar – தாவணி பஞ்சாயத்தில் கவணிக்க வேண்டிய விஷயம் அதன் சைசோ, அது எவ்வளவு தூரம் உடலை மறைக்கும் என்பதோ அல்ல.
ஓடியாடி விளையாடும் குழந்தைகள் 6-8 மணிநேரம் ஒரு உடையை உடுத்தும் போது அது சவுகரியமாக இருக்கவேண்டும். இவர்கள் சொல்லும் சட்டையும் ஸ்கர்ட்டும் சுடிதாரும் அந்த சவுகரியத்தை தருவதில்லை. சுடிதாரில் குத்திய துப்பட்டா pin அவிழ்ந்துவிடும் என்று பல பெண் குழந்தைகள் pt period விளையாடாமல் இருப்பதை பார்த்திருக்கிறேன்.. கொஞ்சம் பூசிய- heavy breasted பதின் குழந்தைகள் shirt skirt உடைகளுக்காக minimizer bra – wired bra உடுத்தி கஷ்டப்படுவதை பார்த்திருக்கிறேன்..
ஏன் இந்தியா போன்ற வெயில் கொளுத்தும் நாட்டில் shoe socks tie எல்லாம் தேவையில்லாத ஆணி தான்.
தமிழக அரசு பள்ளி சீருடையில் ஏதேனும் மாற்றம் கொண்டுவர தீர்மானித்தால், சட்டை – ஸ்கர்ட் சீருடைகள் வைத்திருக்கும் பள்ளிகள் loose pinafore உடைகளுக்கு மாறலாம்… சுடிதார் சீருடைகளுக்கு துப்பட்டாவை தவிர்க்கலாம்.
பிள்ளைகள் நகர ஆட ஓட ஏதுவாக உடைகளை வடிவமைப்பது தான் முக்கியமே தவிர அது சிறிதாக இருக்க வேண்டும் பெரிதாக இருக்க வேண்டும் என்ற சண்டை இப்போதைக்கு வீண்..
எழுத்தாளர் தமயந்தி:
முழு உடலை மூடிய உடை – அதே gender ஆசிரியர்கள் இதெல்லாம் ஒரு போதும் தீர்வாகாது
முதலில் pornographic sites ஐ ban செய்யணும்
அடுத்து பாலியியல் கல்வியை பாடமாக்கணும்.
தன்னுடலைப் பற்றி புரியாமல் – ஒரு தொடுதலின் உள்ளர்த்தத்தைப் புரியாமல் தான் பெரும்பாலான பெண்களின் பால்யம் கழிந்தது.
செயல்பாட்டாளர் அருள்மொழி
ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துவகைப் பணியாளர்களுக்கும் பாலின சமத்துவம் பற்றிய பயிற்சி அளிக்க வேண்டும்.
அவர்களது சிந்தனையில் சமத்துவம் என்கிற கருத்தாக்கத்தை தொடர்ந்து உருவாக்க வேண்டும்.
ஆசிரியர்கள் காவலர்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் என யார் தவறு செய்தாலும் அவர்களை வெளிப்படையாக்க் கண்டிக்க வேண்டும். கௌரவத்திற்காக மறைத்து வைத்தால் அவர்கள் அக்குற்றத்தை தொடர்ந்து செய்துகொண்டே இருப்பார்கள்.
அவர்களைத் திருத்த வேண்டும். ஆலோசனைகள் வழங்கவேண்டும்.
திருத்த முடியாத அளவுக்கு மனவக்கிரம் பிடித்தவர்களை தண்டிக்க வேண்டும். குற்றத்தின் தன்மையைப் பொறுத்து தண்டனை அமைய வேண்டும் .
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். பெண்களுக்கான தனிப்பேருந்துகளின் தேவை இருப்பது உண்மைதான். ஆனால் பொதுப்பேருந்திலேயே இயல்பாக “இடிபாடுகளின்றி” பகலிலும் இரவிலும் பயணம் செய்யக்கூடிய நிலையை உருவாக்குவதுதான் ஒரு பண்பட்ட சமுதாயத்தை உருவாக்கும் நிரந்தரத்தீர்வு.
அதற்கு என்ன செய்ய வேண்டும் ?
ஆண்களும் பெண்களும் அணியும் உடைகள் ஒரே மாதிரியாக இருப்பது நல்லது . பள்ளிகளில் சிறுவர்களாக இருக்கும்போது இருவருக்கும் முட்டிவரையிலான , இறுக்கமில்லாத அரைக்கால்சட்டையும் வளர்ந்தவர்களுக்கு பேண்ட் சட்டையும் சீருடையாக வைப்பது தான் வேறுபாடுகளைக் களையும். ஆணுக்கு பேண்ட் சட்டை பெண்ணுக்கு சுடிதார்+துப்பட்டா என்கிற சிந்தனை மாற வேண்டும்.
விளையாட்டுப் பயிற்சிகளுக்கும் ஒரேமாதிரியான சீருடைகளை பழக்கத்திற்குக் கொண்டுவர வேண்டும்.
பயணிக்க வேண்டிய தூரம் அதிகம். இன்னும் பேருந்து நிறுத்தத்தில்தான்
நின்று கொண்டிருக்கிறோம்.
எழுத்தாளர் நாச்சியாள் சுகந்தி:
ஏற்கனவே நிறைய பஞ்சாயத்து. இப்ப சமூக ஆசிரியர் சபரிமாலா….
மேடம் கண்ணியம் பெண்மை என்பதெல்லாம் 1980 வரை பெண்கள் வீட்டிலும் தமிழ் டினிமாவிலும் புடவையை போர்த்தியிருப்பது போல் 2020களிலும் புடவையை இழுத்துப்போர்த்தி இதுதான் பெண்மை கண்ணியம்னு நீங்க புதுசா ஒரு விஷயத்தைக் கட்டமைக்காதீங்க மேடம்.
இந்த நிலையை கடந்து பெண்கள் சுயமா நிற்கவும் பேசவும் வாழவும் அம்புட்டு போராட்டங்களைக் கடந்துதான் இங்க வந்து நிக்குறாங்க.
மேடம் நீங்க நம்மள ஒரு 50 வருஷம் பின்னோக்கி கூட்டிட்டு போகாதீங்க ப்ளீஸ்.
மேடம் முடிஞ்சா எதாச்சும் ஒரு பல்கலையில் women studies course படிங்க மேடம். அப்போது உங்கள் குட்டைப்பாவாடை அபிப்பிராயங்கள் மாறும்.
இச்சமூகத்தில் role of women என்ன என்பதை கொஞ்சம் புரிஞ்சிட்டு பேசுங்க மேடம். உங்க பட்டிமன்றம் மாதிரி எல்லா விஷயத்துக்கும் சட்டுடட்டுன்னு தீர்ப்பு சொல்லாதீங்க மேடம். இது பெண் பிள்ளைகள் வாழ்க்கை மேடம்.
பெண்ணை அவள் சம்மதம் இன்றி தொடக்கூடாதுன்னு இந்த ஆண்களுக்கு சொல்லிக்கொடுங்க மேடம்.
நன்றி
மருத்துவர். அனுரத்னா:
பெண் பிள்ளைகளை பெண்கள் மட்டுமே உடலுறவு கொண்டு பெற்றுக்கொள்ளவேண்டும், ஆணும் பெண்ணும் இணைந்து பெற்றுக்கொள்ள கூடாது என்று கோரிக்கை வையுங்கள். ஏனெனில் உங்க பெண் விடுதலை என்பது ஆண்கள் அண்டாமல் இருப்பது தானே?!
பிறக்கப்போவது பெண் குழந்தை என தெரிந்தால் மகப்பேறு மருத்துவர்,மயக்க மருத்துவர்,செவிலி,குழந்தைகள் மருத்துவர் என அனைவரும் பெண்களாகவே இருக்க வேண்டும் என கோரிக்கை வையுங்கள். ஏனெனில் பிறக்கும்போது எந்த குழந்தையும் ஜட்டி போட்டுகொண்டு பிறப்பதில்லை. அதை ஆண் மருத்துவ ஊழியர்கள் பார்த்துவிடக்கூடாது. ஏனெனில் உங்க பெண் விடுதலை என்பது ஆண்கள் அண்டாமல் இருப்பது தானே?!
6 ஆம் வகுப்பில் இருந்து சுடிதார் என்று மட்டும் சொல்லிருக்கீங்க.துப்பட்டா எப்படி போடவேண்டும்,எத்தனை பின் குத்த வேண்டும் (safety pin) என்றும் சொல்லிடுங்க.இதை நீங்க சொல்லாததால் துப்பட்டா இல்லாமல் வந்துட போறாங்க பிள்ளைகள். ஏனெனில் உங்க பெண் விடுதலை என்பது ஆடையில் தானே இருக்கு?!
பெண் ஆசிரியைகள் மட்டுமல்ல பெண்கள் படிக்கும் பள்ளியில் துப்புரவு,வாகனம் ஓட்டுதல் என அத்தனையும் தலைமை ஆசிரியர் உட்பட பெண்காளாகவே இருக்கவேண்டும் என கோரிக்கை வையுங்கள்.அந்த பெண்கள் சேலை கட்டினாலும் சேலையை சுற்றி குளிருக்கு போர்த்தியதுபோல் போர்த்திக்கவேண்டும் என சொல்லுங்க.ஏனெனில் உங்க பெண் விடுதலை என்பது பெண்கள் மட்டுமே இங்கு இருத்தல் வேண்டும் என்பது தானே?!
குட்டைப்பாவாடை கூடவே கூடாது தான்.காரணம் பெண்களின் கற்பு என்பது கெண்டங்கால் சதையில் தான் மறைந்து கிடக்கு.அதைகாட்டிக்கொண்டு நடந்தால் கற்பு போயிடும் தான்.ஏனெனில் உங்க பெண் விடுதலை என்பது பெண்களின் கெண்டங்கால் சதை மறைப்பதில் தானே இருக்கிறது ?!
வாழ்த்துகள் பெண் விடுதலைக்கட்சி தலைவரே.உங்க கொள்கைகள் வாழ்க.உங்க கோரிக்கைகள் வெல்க.
(இந்த அம்மா அரசுப்பணியை விட்டு அரசியல்பணிக்கு வந்தபோது இந்த அம்மாவை “போராளி” ஆக்கின நபர்கள் எல்லாம் என் முன்னாடி வாங்க.உங்களை தான் நாலு சாத்து சாத்தனும்.வரவன் போறவனை எல்லாம் போராளி ஆக்கி ஏண்டா தமிழ்நாட்டு அரசியலை கெடுக்குறீங்க???)