2020 டெல்லி கலவர வழக்கில் இன்று பாட்டியாலா நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் உமர் காலித், கைவிலங்குகளுடன் ஆஜர்படுத்தப்பட்டார்.
டெல்லி காவல்துறை கைவிலங்குடன் ஆஜர்படுத்துவதற்கான மனுக்களை டெல்லி நீதிமன்றம் நிராகரித்திருந்தது. உமர்காலித்தை கைவிலங்கிட்டு அழைத்து வரக்கூடாது எனவும் நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. இதைப் பொருட்படுத்தாது டெல்லி காவல்துறை உமர் காலித்தை கைவிலங்கிட்டு அழைத்து வந்துள்ளது.
இந்த நிலையில், நீதிபதி அமிதாப் ராவத்தின் நீதிமன்ற அறையில் கைவிலங்குடன் உமர்காலி ஆஜர்படுத்தப்பட்டதாக அவரது வழக்கறிஞர் தரப்பு ஆஜர்படுத்தப்பட்டதாகக் கூறியுள்ளது..
செய்தி ஆதாரம்: த வயர்.