ஸ்ரீதரன் சுப்ரமணியன் பத்மா சேஷாத்ரி கல்வி நிறுவனத்தில் பள்ளி மாணவிகள் சிலர் ஒரு ஆசிரியரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. அந்த விஷயத்தில் நம் ஒவ்வொருவரின் நிலைப்பாட்டுக்கு ஏற்றபடி நமது அணுகுமுறை வித்தியாசமாக வெளிப்படுகிறது. பிரச்சினை அந்தக் குற்றம் கூட அல்ல. அந்தப் பள்ளியில் இப்படி ஒரு குற்றம் அரங்கேறிக்கொண்டு இருந்தது என்பது அதிர்ச்சியாக இருக்கவில்லை. அப்படிப்பட்ட குற்றங்கள் தேசமெங்கும் பெண்கள் படித்துக் கொண்டிருக்கும் பல்வேறு பள்ளிகளில் நடந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் … Continue reading #MeToo 2.0 | ஸ்ரீதரன் சுப்ரமணியன்
பகுப்பு: me too
பாலியல் சுரண்டலில் கௌரவமானது, கௌரவமற்றது என இரண்டு இல்லை |தமிழ்நதி
தமிழ்நதி 'விரும்பித் தொடப்படுகிற தொடுதல்களைக்கூட ஒரு பெண் மறந்துபோகக்கூடும். ஆனால், தன்னுடல் விருப்பமின்றி ஒரு பொருளைப்போல கையாளப்பட்ட அவமானத்தையும் அருவருப்பையும் அவளால் ஒருபோதும் மறக்கவியலாது. முதுமை கூடி, நினைவு தடம்மாறிப் பிறழும்வரை மனதில் ஊர்ந்து திரியும் புழு அது' பாலியல் ஒழுக்கம் (அதுவும் சமூகத்தால் வரையறுக்கப்பட்டதே. வர்க்கங்களுக்கேற்றபடி பாரபட்சமானதே) என்பது வேறு; தன்னுடைய கடமையைச் செய்ய பாலியல் லஞ்சம் கேட்பது, எதிர்ப்புக் காட்டவியலாத நிலையில் நிராதரவான நிலையில் உள்ளவர்களிடம் பாலியல் சுரண்டல் செய்வது, பாலியல் சார்ந்து உளவியல்ரீதியான … Continue reading பாலியல் சுரண்டலில் கௌரவமானது, கௌரவமற்றது என இரண்டு இல்லை |தமிழ்நதி
சந்தர்ப்பவாத பெண்ணியம் | மாலதி மைத்ரி
மாலதி மைத்ரி அரசு அரசியல் இலக்கியம் கலை ஊடகம் உள்ளிட்ட எல்லா பொதுத்துறைகளில் இயங்கும் ஆண்களில் பொது ஒழுக்க கிரிபிலிட்டி கொண்டே ஒருவர் மதிக்கப்பட வேண்டும் அவன் நோபல் பரிசு வாங்க தகுதியானவன் ஆஸ்கர்வாங்க தகுதியானவன் எனவே அவனின் பாலியல் குற்றங்களை பொருட்படுத்த தேவையில்லை என்னும் ஆண்கள் உங்க பிரபலத்துக்கு நேரடியாய் போய் பாலியல் சேவை செய்யுங்கள் உங்களைத் தடுக்கவில்லை. கட்சி, நிறுவன பொருப்பாளர்கள் செக்ஸூவல் அபியூசர்களை அதிகாரத்தால் அரவணைத்து பெண்களிடம் பாலியல் அத்துமீற அங்கீகாரமளித்து விடாதீர்கள். … Continue reading சந்தர்ப்பவாத பெண்ணியம் | மாலதி மைத்ரி
பிஹெச்டி மாணவிகள் அனுபவிக்கிற பாலியல் சுரண்டல்களைப் பற்றி நிச்சயம் பேசத்தான் வேண்டும் | தீபா ஜானகிராமன்
தீபா ஜானகிராமன் இந்த நேரத்தில் கல்லூரி பேராசிரியர்களும் தங்கள் மனசாட்சியை கேள்விக்கு உட்படுத்த வேண்டும். பிஹெச்டி மாணவிகள் அனுபவிக்கிற பாலியல் சுரண்டல்களைப் பற்றி நிச்சயம் பேசத்தான் வேண்டும். காரணத்தை வெளியே சொல்ல முடியாமல் பாதியில் பிஹெச்டி முடிக்காமல் ஆய்வை நிறுத்திய மாணவிகள் அதிகம். ‘கையை அமுக்கி விடு..காலை பிடிச்சு விடு’ என்று தன்னிடம் சேரும் ஆராய்ச்சி மாணவிகளிடம் சொல்லும் பேராசிரியர்கள் எங்கும் காணக் கிடைக்கலாம். தன்னிடம் ஆய்வுக்காக வரும் மாணவிகள் தங்களுக்காக ‘நேர்ந்துவிடப்பட்டவர்கள்’ என்று நினைக்கும் பேராசிரியர்கள் … Continue reading பிஹெச்டி மாணவிகள் அனுபவிக்கிற பாலியல் சுரண்டல்களைப் பற்றி நிச்சயம் பேசத்தான் வேண்டும் | தீபா ஜானகிராமன்
தமிழர், ஆரியம், திராவிடம் என்று சாயம் பூசிக்கொள்கிறார்கள் |கொற்றவை
கொற்றவை என் குழந்தை பருவத்திலிருந்து நான் கடைசியாக இந்த வேலையே வேணாம் “மானத்தோட” பொழைச்சா போதும் என்று முடிவெடுத்து என் வேலையை ராஜினாமா செய்த 42, 43 வயது வரை நான் ஏதோ ஒரு வகையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிக் கொண்டே தான் இருந்தேன். (வேலையிடத்தில் நீ கொற்றவையா என்றா பார்க்கப் போகிறார்கள்? அங்கு நான் வெறும் கூலிக்கு என் உழைப்புச் சக்தியை விற்க வந்த ஒரு பண்டம்… அவ்வளவே). எனக்கு 10, 11 வயது இருக்கும் … Continue reading தமிழர், ஆரியம், திராவிடம் என்று சாயம் பூசிக்கொள்கிறார்கள் |கொற்றவை
பீடோபைல்களை ஆதரிக்க வேண்டாம்: ராஜராஜன் ஆர்.ஜே
ராஜராஜன் ஆர்.ஜே வைரமுத்து எனக்கு பிடித்த கவிஞர். அவரது பல பாடல்களை, சில கவிதைகளை மிகவும் ரசித்து இருக்கிறேன். பலமுறை பகிர்ந்தும் எழுதியும் இருக்கிறேன். ஆனால், சமீபத்தில் நான் பார்த்த இரண்டு படைப்புகள், அவரது ஆள்மன வக்கிரத்தை வெளிப்படுத்துவதாகவே இருந்தது. ஒரு கவிதை. காமத்தை சொட்ட சொட்ட எழுதிய ஒரு கவிதை போல பல வரிகளை எழுதிவிட்டு கடைசிவரியில் ஒரு குழந்தைக்கும் தாய்க்குமான கவிதையாக மாற்றி இருப்பார். அவரது கவித்திறமையோடு அவரது வக்கிரமும் வெளிப்பட்டிருக்கும். மூன்று நாட்களுக்கு … Continue reading பீடோபைல்களை ஆதரிக்க வேண்டாம்: ராஜராஜன் ஆர்.ஜே
கொடூரமான வழக்கறிஞர்கள் | சுரேஷ் கண்ணன்
சுரேஷ் கண்ணன் ‘இந்த வழக்கை தொடர்ந்து விடுவாயா?’ என்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அச்சமூட்டுவதுதான் இதன் நோக்கம். இது போன்ற பாலியல் வன்முறை விவகாரங்களை ‘அரசியல்சரித்தன்மையுடன்’ கறாராக எழுதுகிறோம் என்கிற அசட்டுத்தனத்துடன் கிளம்பியிருக்கும் சிலர், மேற்கண்ட வில்லன்களை விடவும் கொடூரமாக யோசித்து எழுதுகிறார்கள். அத்தனை கேவலமான சிந்தனையாக, தரவுகளாக அவை இருக்கின்றன. பாதகம் செய்த ஆசாமிகளே ‘பேஷ்.. பேஷ்’ என்று மகிழும்படி ஓவர்டைம் வக்கீல்களாக இவர்கள் மாறி விடுகிறார்கள். * தகுந்த ஆதாரமோ, சாட்சியமோ இன்றி ஓர் ஆணின் மீது … Continue reading கொடூரமான வழக்கறிஞர்கள் | சுரேஷ் கண்ணன்