நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஹிட்லரின் கருத்துக்களை பரப்பி வருவதாகவும் ஹிட்லரின் கொள்கைகளை தமிழ் இளைஞர்களிடம் திணித்து வருவதாக பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். அதை மெய்ப்பிக்கும் விதமாக ஹிட்லரின் சுயசரிதையை தனது காரில் சீமான் வைத்திருப்பதாக சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து பத்திரிகையாளர் இலியாஸ் அகமது, ‘வெறும் 1000 ரூபாய் வருமானம் ஈட்டி, தமிழ்நாட்டில் நாஸிசத்தைப் பரப்ப Isuzu காரில் வலம்வருகிறார் அண்ணன் சீமான்.
படத்தில் இருப்பது சீமானின் காரில் எப்போதும் இருக்கும் புத்தகம் ஹிட்லரின் சுயசரிதையான Mein Kampf தமிழாக்கம். நாம் நாஜி!’ என விமர்சித்துள்ளார்.