வசுமித்ராக்களும் ஸ்ரீராம ஜெயமும்: பகுதி – 2

ப. ஜெயசீலன்

வசுமித்ராக்களும் ஸ்ரீராம ஜெயமும்: பகுதி – 1

வசுமித்ரா தனது பேட்டியில் தான் கிராமத்திலிருந்து கிளம்பி வந்து கோவையில் சித்தாள் வேலை பார்த்ததாகவும், பிறகு தொலைக்காட்சி சீரியலுக்கு வசனம் எழுத சென்னை வந்ததாகவும் இதற்கிடையில் கடந்த 20 வருடமாக “நிறைய” படித்ததாகவும் தான் எழுதிய புத்தகத்தின் பின்னணி உழைப்பை பற்றி சொன்னார். 10ஆம் வகுப்பு படித்துவிட்டு கல்விமுறை பிடிக்காமல்,கல்வி வராமல் படிப்பை நிறுத்திவிட்டு சித்தாள் வேலையும், வசனகர்த்தா வேலையும் பார்த்துகொண்டே தலைவன் வசுமித்ர மார்ஸ்சையும், அம்பேத்கரையும் கரைத்து குடித்து 903 பக்கங்களுக்கு புத்தகம் எழுதியுள்ளார். கேட்டால் 20 வருடமாக “நிறைய” படித்தேன் என்கிறார். நன்று. பேட்டியின் ஒரு இடத்தில கொஞ்சம் கூட தயக்கமோ, கூச்சமோ இல்லாமல் அம்பேத்கர் மார்க்சையும், புத்தரையும் முழுதாக படிக்கவில்லை. மார்க்சின் சில மேற்கோள்களை மட்டுமே படித்துவிட்டு அம்பேத்கர் மார்ஸ்சியத்தை பற்றியும், புத்தரையும் தவறான புரிதலை தனது புத்தகங்களில் வழங்கியுள்ளார் என்று சொன்னார்.

இந்த இடம்தான் இந்த கட்டுரைக்கான தலைப்பை வழங்கியது. சாதி ஹிந்துக்கள் பல வகையில் one of its kind. 5 பைசாவுக்கு பெறாத முட்டாள் நாயாக ஒரு சாதி ஹிந்து இருந்தாலும் his casteist mind assumes he is a smartass when compared to any dalit no matter what that dalits credentials are. அம்பேத்கரின் இந்த கருத்தோடு நான் முரண்படுகிறேன் என்று ஒருவர் சொல்வது வேறு. ஆனால் அம்பேத்கர் சொன்ன கருத்து சும்மா அடிச்சுட்டது. அவருக்கு முழுசா மேட்டர் தெரியாது என்னும் தொனியில் சாதி ஹிந்துவை பேச தூண்டுவதன் பெயர்தான் குதகொழுப்பு எனப்படும். பொருளாதாரத்தில் இரண்டு முக்கிய மேற்கத்திய பல்கலைக்ககங்களில் phd வாங்கிய ஒருவரை, பொருளாதாரத்தை பற்றி தீவிரமான ஈடுபடும் புரிதலும் கொண்டிருந்த ஒருவரை, இந்திய RBI உருவாக்கத்தில் பெரும்பங்காற்றிய ஒருவரை, பல்வேறு துறைகளில்/தளங்களில் தன்னை ஒரு முக்கிய ஆய்வாளராக/கல்வியாளராக நிறுவிய ஒரு அசாத்தியமான academic, மற்றும் scholarஐ சித்தாள் வேலை மற்றும் வசனகர்த்தா வேலை பார்த்துகொண்டே வெறித்தனமாக படித்த வசுமித்ர சொல்கிறார் அம்பேத்கர் மார்க்ஸ்சை முழுவதுமாக படிக்காமல் மேற்கோள்களை மட்டும் படித்துவிட்டு புத்தகம் எழுதியுள்ளார் என்று.

இப்பொழுது எனக்கு சில கேள்விகள். அம்பேத்கர் மார்க்ஸை படித்து புரிந்துகொள்வதில் அவருக்கு என்ன பிரச்சனை இருந்திருக்க முடியும்? பொருளாதாரத்தில் 2 phd வாங்கிய அவருக்கு மார்க்ஸ் புரியாமல் போயிருப்பாரா? பொருளாதாரத்தில் புறம்தள்ளமுடியதா ஒரு கோட்பாட்டை முன்வைத்த மார்க்சின் எழுத்துக்கள் அம்பேத்கருக்கு bore அடித்து புத்தகத்தை மூடி வைத்திருப்பாரா? புத்தகங்கள் படிப்பதை தனது வாழ்நாளெல்லாம் ஒரு தவத்தை போல செய்த அம்பேத்கருக்கு மார்க்சின் புத்தகங்களை படிப்பதில் ஏதேனும் மனத்தடை இருந்திருக்கமா? படிக்காத விஷயங்களை படித்ததாக, புரியாத விஷயங்களை புரிந்ததாக பாவனை செய்து 903 பக்கங்களுக்கு புத்தகம் எழுதி கவனம் கோர கூடிய சில்லறைத்தனமான நிலையிலிருந்தவரா அம்பேத்கர்? anyone with little bit of common sense will answer these questions with a no. ஆனால் “நிறைய” படித்துள்ள வசுமித்ர கோமாளித்தனமாக கூச்சப்படாமல் சொல்கிறார் அம்பேத்கர் மார்க்ஸை முழுவதுமாக படிக்கவில்லை என்று.

உண்மையில் இந்தியாவில் இன்றுவரை இருந்த எல்லா மார்க்சியர்களை விடவும் அம்பேத்கர் மார்க்ஸை ஆழமாக வாசித்திருக்கவும், ஆழமான புரிதலோடு இருந்திருக்கவே வாய்ப்பிருக்கிறது.ஏனென்றால் These dickheads reading marx are like the kids learning trigonometry from a professor. whereas amedkar reading marx is like two professors having a conversation about infinity. அம்பேத்கரும் மார்க்ஸும் பேசிக்கொண்டிருப்பதை பார்த்த கணக்கில் புஜ்யம் எடுக்கும் சிறுவன் அந்த இரண்டு பேரில் ஒருவருக்கு trigonometry தெரியவில்லை. நான் சித்தாள் வேலை பார்த்துகொண்டே trigonometry கரைத்து குடித்துள்ளேன் என்று சொன்னால் நீங்கள் அந்த சிறுவனை எப்படி பார்ப்பீர்கள்?

இந்த பேட்டியில் வெளிப்பட்ட வசுமித்ராவின் தொனி கோமாளித்தனமும், துடுக்குத்தனமும், துட்பமான சாதி ஹிந்துவின் மனநிலையையும் கொண்டது என்பதற்கு அவர் சொன்ன இன்னொரு வாக்கியம் உதாரணம். நிறைய படித்துள்ள மேதை வசுமித்ர சொல்கிறார் “முகநூலில் நூற்றுக்கணக்கான மார்க்ஸும், ஆயிரக்கணக்கான சே குவேராக்களும், “லச்சக்கணக்கான” அம்பேதகர்களும் புழங்குக்குகிறார்கள்” என்று. வெறும் நூறுகளில் புழங்கும் மார்ஸுகளும், வெறும் ஆயிரத்தில் புழங்கும் சேக்களும் இருக்கையில் லச்சக்கணக்கான அம்பேத்கர்கள் எப்படி முளைத்து வருகிறார்கள்?

அவர் சொன்னதின் தோனி அம்பேத்கரின் கோட்பாடுகள் லச்சக்கணக்கானவர்களை வழிநடத்துகிறது என்பதாக இல்லை. அந்த தொனி அரைகுறை புரிதல் உள்ளவர்களின் “commercial commodity” அல்லது “mainstream appeal” ஆக, அவர்களுக்கு புகலிடமாக அம்பேத்கரியம் மாறியிருக்கிறது என்னும் தொனியிலுள்ளது. அம்பேத்கரை just another dalit leader என்று பார்க்கும் அற்ப சாதி ஹிந்து உளவியலின் வெளிபாடாதாகத்தான் அவரது அந்த வாக்கியத்தை நான் பார்க்கிறேன்.

உட்சபச்சமாக அம்பேத்கரை மகாத்மா என்று சிலர் அழைக்கிறார்களே என்று கேட்க, சித்தாள் வேலையும் நாடக வசனமும் எழுதி கொண்டே மார்க்சியத்தையும் அம்பேத்கரியத்தையும் கரைத்து குடித்துள்ள, தன்னை “மார்க்சிஸ்ட்” என்று பிரகடனப்படுத்தும் வசுமித்ர ஒரு மணிநேரம் கூட பிரிட்டிஷ் அரசாங்கத்தால் சிறையில் அடைக்கப்படாத ஒருவரை, இந்தியாவை ஆதிக்கம் செலுத்திய பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றிய ஒருவரை எப்படி “மகாத்மா” என்று அழைக்கமுடியும் என்று அதி புத்திசாலித்தனமான கேள்வியை எழுப்பி தனது மார்க்சிய, அம்பேதகரிய புரிதலை பிரகடனப்படுத்துகிறார். அம்பேத்கர் ஏன் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போராடவில்லை என்று வசுமித்ர கேட்கும் கேள்வி வசுமித்ர எழுதியுள்ள புத்தகத்தை நாம் ஏன் படித்து நம் நேரத்தை வீணாக்கி கொள்ளக்கூடாது என்பதற்கான பதிலை தருவதுடன் நிர்வாண அமைப்பை சந்தித்த பெரியார் இலுமினாட்டிதான் என்று கேட்ட கோமாளி பாரிசாலனுக்கு அருகில் கேள்விகளுக்கு அப்பாற்பட்ட ஒரு சீட்டை வசுமித்ராவுக்கும் அளிக்கிறது.

அம்பேத்கரின் தேசியத்தை சந்தேகிக்கும் வசுமித்ர மார்க்ஸின் தேசியம் குறித்தான பார்வை குறித்து என்ன புரிந்து வைத்திருக்கிறார்? bourgeoisie nationalism பற்றி வசுமித்ர என்ன நினைக்கிறார்? உண்மையில் சுதந்திரத்துக்கு முன்பான இந்தியாவில் அம்பேத்கர் indian bourgeoisie constructed nationalismக்கு எதிரான நிலையெடுத்து இந்தியாவில் சாதி ரீதியாகவும், வர்க்க ரீதியாகவும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளை வென்றெடுக்க பிரிட்டிஷ் ஆளுகையை பயன்படுத்திக்கொண்டாரே அதை மார்க்சியத்தை புரிந்தவர்கள் எதிர்க்க வேண்டுமா பாராட்ட வேண்டுமா? எந்த அம்பேத்கர் பிரிட்டிஷ் ஆளுகையின் போது இந்திய தேசியத்தை முன்னெடுக்கவோ/வலியுறுத்தவோ இல்லையோ அதே அம்பேத்கர்தான் சுதந்திரத்துக்கு பிறகான இந்தியாவில் இந்திய தேசியத்தை வலியுறுத்துபவராக மாறி போகிறார்.

இங்குதான் சாதி ஹிந்துக்களுக்கு அம்பேத்கர் ஒரு புதிராக மாறுகிறார். சாதி வெறி பன்றிகளால் புரிந்துகொள்ளமுடியதாக தளத்துக்கு இங்குதான் அவர் நகர்கிறார். நீங்கள் அம்பேத்கரின் அடிப்படை அரசியல் நுட்பத்தையும்,சாதுர்யத்தையும், statesmanship யும் புறிந்துகொள்ளாமல் அம்பேத்கரின் அரசியல் நிலைப்பாடுகளை புரிந்துகொள்ள முடியாது. எனக்கு தெரிந்த இரண்டு உதாரணங்களை சொல்கிறேன். இந்தியாவை நாகர்களின் தேசம் என்றும், நாகர்களின் மொழி தமிழ் என்றும் புத்தகம் எழுதுகிறார். சம்ஸ்கிருத வேதங்களில், உபநிடதங்களில் உள்ள மானுட விரோத, ஜனநாயகத்திற்கு எதிரான கருத்துக்களை தோலுரிக்கிறார், பார்ப்பனர்கள் மாட்டிறைச்சிக்கு அடிமையாயிருத்த உண்மையை அவர்களின் சம்ஸ்கிருத வேதங்களிலிருந்தே அம்பலப்படுத்துகிறார். பிறகு அம்பேத்கரே சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக்கும் யோசனையும் ஆதரிக்கிறார். ஆனால் பெரியார் சம்ஸ்கிருத வேதங்களை இங்கு கொளுத்துகிறார். இதையெல்லாம் பார்க்கும் பொழுது அம்பேத்கரை குறித்து குழப்பம் ஏற்படும். இந்த குழப்பத்தில் மீன் பிடிக்கத்தான் RSS முயல்கிறது.

இங்கு அம்பேத்கரை புரிந்துகொள்வதின் மூலம் நீங்கள் அவரது யுக்தியை புரிந்துகொள்ளலாம். சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக்கும் யோசனையை ஆதரித்த அதே அம்பேத்கர்தான் “அடிமைகளிடம் அவர்கள் அடிமைகள் என்ற உண்மையை சொல்லுங்கள். அவர்கள் கிளர்ச்சி செய்வார்கள்” என்றும் சொல்கிறார். சம்ஸ்கிருதத்தை எல்லாருக்கும் கற்று தரவேண்டும் என்று அம்பேத்கர் விரும்பியதின் நோக்கம் நிச்சயமாக அவருக்கிருந்த சம்ஸ்கிருத பற்று காரணமாக இருக்க முடியாது. பிறகு எதற்கு? இரண்டு காரணங்களை சொல்லலாம்

1) எந்த வேதத்தை கேட்டால் சூத்திரர்களின் காதில் ஈயம் ஊற்ற சொன்னார்களோ அதே வேத மொழியை பாரபட்சமின்றி எல்லோரும் கற்றறிந்து அந்த மொழியின் “தேவ பாஷை” ஸ்தானத்தை உடைப்பது அதன் மூலம் பார்ப்பனியத்தின் மொழிரீதியானா intellectual edgeஐ சிதைப்பது .

2) இந்தியா முழுவதும் பார்ப்பனரல்லாத ஓவ்வொருவரிடமும் போய் வேதங்களில் உன்னை ஒத்த ஒம்மா என்று பார்ப்பனர்கள் திட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்வதைவிட அவர்களே சமஸ்கிருதத்தை படித்துவிட்டால் தாங்கள் அடிமையாக நடத்தப்படுகிறோம்/கருதப்படுகிறோம் என்கின்ற உண்மையை அவர்களே வேதங்களை படித்தும் கேட்டும் உணர்ந்து கலகம் செய்வார்கள்.

எனவே, அவர் வெறுத்த, எதிர்த்த வேதமொழியை நொறுக்க பார்ப்பனர்களின் துணைகொண்டே அவர் ஒரு அரசியல் வலையை விரித்தார்.இன்னொரு உதாரணம் மேதை வசுமித்ர எழுப்பிய அம்பேத்கரின் தேசியம் குறித்தானது. அம்பேத்கர் சுதந்திரத்துக்கு முன்பான இந்தியாவில் இந்திய தேசியத்தை ஆதரிக்காமலும், வலியுறுத்தாமலும் இருந்ததின் மூலம் இரண்டு அனுகூலங்களை அடைந்தார். இந்திய தலித்துகளின் இருத்தலையும், இந்திய தலித்துகளின் பங்கேற்பில்லாத, பங்களிப்பில்லாத சுதந்திர கோரிக்கை வலுவானதாக இருக்காது என்று காங்கிரஸ்க்கு புரிய வைத்ததின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைசார்ந்த விஷயங்களில் தனது பேர வலிமையை அதிகரித்து கொண்டார். அதே நேரத்தில் இந்திய சுதந்திர போராட்டத்தை கடுமையாக கேள்விக்குள்ளாக்கியத்தின் மூலம் பிரிட்டிஷ் ஆட்சியினரிடமும் தனது கோரிக்கைகளையும் அவர்களை பயன்படுத்தி தான் மேற்கொள்ள விரும்பிய சமூக மாற்றத்தையும் நிறைவேற்றிக்கொண்டார்.

ஆனால் அதே அம்பேத்கர் சுதந்திரத்துக்கு பிறகு super nationalist ஆக மாறி நாம் முதலும் கடைசியுமாக இந்தியர்கள் மட்டும்தான் வேறெதுவும் இல்லை என்றும் சொன்னார். சுதந்திரத்துக்கு முன்பு பிரிட்டிஷ் ஆளுகையில் இந்திய தேசியத்தை ஆபத்தானதாக போலியானதாக பார்த்த அம்பேத்கர் சுதந்திரத்துக்கு பிறகு அதே தேசியத்தை ஒடுக்கப்பட்டோருக்கான ஒரு கவசமாக பார்த்தார். எப்படி என்றால் அம்பேத்கர் சாதி வெறி பன்றிகளின் உளவியலை ஆய்ந்தறிந்திருந்தார். இந்தியாவில் இருக்கும் ஓவ்வொரு சாதி ஹிந்துவும் தங்கள் சாதிதான் உயர்ந்தது என்று நம்பிக்கொண்டும் வெவ்வேறு கலை கலாச்சார பின்னணியோடு இயங்குவதை அம்பேத்கர் அறிந்திருந்தார்.

திருநெல்வேலியில் சாதி கலவரம் வந்தால் அங்கு தமிழக போலீசார் நேராக தலித் குடியிருப்புக்குள் சென்று 4 பேரை சுட்டுக்கொள்வார்கள். ஆனால் நீங்கள் ஆந்திர போலீசை அங்கு இறக்கினால் தேவர் சாதியில் 10 பேரையும் தலித்துகள் 10 பேரையும் சுட்டுக்கொள்வார்கள். ஏனென்றால் ஆந்திரா சாதி ஹிந்துக்களுக்கு தமிழக சாதி ஹிந்துக்களின் மீது எந்த பற்றோ பாசமோ கிஞ்சித்தும் கிடையாது. இந்த உளவியலைத்தான் அம்பேத்கர் ஒரு முக்கியமான கவசமாக பார்த்தார். மேலும் தேசியத்தின் கருத்தாக்கம் கோட்பாடு ரீதியாகவும், தர்க்கரீதியாகவும் சாதி ஹிந்துக்களுக்கு தங்களது சாதி வெறியை பயில ஒரு தடையை ஏற்படுத்தும் என்றும் நம்பினார்.

இந்த புள்ளியில்தான் இன்றும் கூட தமிழகத்து தலித்துகள் தமிழ்த்தேசியத்தை சந்தேகத்தோடு பார்க்கிறார்கள். ஒருவகையில் இந்தியதேசியத்தை தமிழக சாதிஇந்துக்களிடம் இருந்து தங்களை காக்கும் கவசமாக பார்க்கிறார்கள். இந்த இரண்டு உதாரணங்களும் அம்பேத்கரின் விசாலமான அரசியல் நுட்பத்துக்கும் சாதுர்யத்துக்கும் என்னளவில் நான் சொல்லும் எளிய உதாரணங்கள். இதைத்தாண்டி அம்பேத்கரின் அரசியல் ஆளுமை மிகவும் நுட்பமானது, கூர்மையானது.

“நிறைய” படித்துள்ள மேதமை வசுமித்ரா போன்றவர்களுக்கு அம்பேத்கரின் ஆளுமை ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாதது. மார்க்சிய மேதை வசுமித்ரர்களின் பார்வையில் ஒரு மணிநேரம் கூட ஜெயிலுக்கு போகாத அம்பேத்கர் மகாத்மா ஆக முடியாது. ஜெயிலுக்கு போன முத்துராமலிங்கமும், சவர்காரும்தான் மகாத்மாவாக முடியும்.

தொடரும்.

ப.ஜெயசீலன், சமூக-அரசியல் விமர்சகர்.

One thought on “வசுமித்ராக்களும் ஸ்ரீராம ஜெயமும்: பகுதி – 2

  1. // மார்க்சிய மேதை வசுமித்ரர்களின் பார்வையில் ஒரு மணிநேரம் கூட ஜெயிலுக்கு போகாத அம்பேத்கர் மகாத்மா ஆக முடியாது. ஜெயிலுக்கு போன முத்துராமலிங்கமும், சவர்காரும்தான் மகாத்மாவாக முடியும்.//

    *செம அடி.சிறப்பு..

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.