கர்நாடக தேர்தல்: வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கணிப்பில் காங்கிரஸ் ஆட்சியமைக்க வாய்ப்பு!

கர்நாடக தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் இந்தியா டுடே தொலைக்காட்சியும் அக்ஸிஸ் இந்தியாவும் இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் காங்கிரஸ் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.

70, 574 பேரிடம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பின் முடிவுகள்:

காங்கிரஸ் 106 -118 இடங்களை பிடிக்க வாய்ப்பு

பாஜக 72- 92 இடங்களைப் பெற வாய்ப்பு

ஜனதா தளம்(ம) – 22 -30 இடங்கள் பெறலாம்

மற்றவர்கள் – 1- 4 இடங்கள்.

மொத்தம் 224 தொகுதிகள் உள்ள கர்நாடக சட்ட சபைக்கு 222 இடங்களுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் தற்போதைய முதல் சித்தராமையாவும் பாஜக சார்பில் எடியூரப்பாவும் ஜனதா தளம் (ம)-பகுஜன் சமாஜ் கூட்டணி சார்பில் குமாரசாமியும் முதலமைச்சர் வேட்பாளர்களாக களம் இறங்கினார்கள்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.