
கே. ஏ. பத்மஜா
குழந்தைகளுக்கு மட்டும் அல்ல… பெரியவர்களுக்கும் பரிசுகள் வாங்குவதிலும் கொடுப்பதிலும் மட்டற்ற மகிழ்ச்சி. நாம் குழந்தைகளுக்கு பரிசுகளைக் கொடுக்கும்போது சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அவை:
- நீங்கள் கொடுக்கும் பரிசு குழந்தைக்கு உங்கள் அன்பை வெளிப்படுத்த வேண்டுமே தவிர உங்கள் பணபலத்தையோ அல்லது உங்கள் அந்தஸ்தையோ வெளிக்காட்டுவதாக அமைந்து விடக்கூடாது.
-
குழந்தைகளுக்கு நீங்கள் கொடுக்கும் பரிசின் மதிப்பு தெரிந்திருக்க வேண்டும். விலையுர்ந்த பொருளை பரிசாக கொடுத்துவிட்டு, அந்தப் பொருளை பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு.
-
தேவையில்லாத நேரங்களில் அல்லது குழந்தை கேட்கும் நேரங்களில் எல்லாம் பரிசு பொருட்கள் வாங்கி கொடுக்காதீர்கள். இது குழந்தைக்குக் ஒருவித அலட்சிய உணர்வை ஏற்படுத்தும்.
-
எல்லா நேரங்களிலும் பரிசை பொருள் வடிவில் மட்டுமே கொடுக்காதீர்கள். சில நேரங்களில் அவர்களோடு நேரம் செலவிடுவதையும் பரிசாய் கொடுக்கலாம். உதாரணமாக, வாகனத்தில் ஒரு நீண்ட பயண உரையாடல், ஒரு சினிமா, ஒரு சிறந்த உணவை சேர்ந்து சமைத்தல் அல்லது சமைத்து கொடுத்தல்… இப்படி உங்கள் குழந்தைக்கு எது அதிக விருப்பமோ அதை நீங்கள் செய்வதும் ஒரு பரிசுதான்.

- குழந்தைகள் எப்போது பரிசுகளை எதிர்பார்ப்பவர்களாக மட்டும் இல்லாமல், பரிசுகளைக் கொடுப்பவர்களாகவும் இருக்கப் பழக்குங்கள். “பெறுவது மட்டும் அல்ல; கொடுப்பதும் மகிழ்ச்சி”தான் என்பதைப் புரியவையுங்கள்.
-
விழாக்கள் மற்றும் விசேஷ நாட்களில் வீட்டு உறுப்பினர்களுக்கு பரிசு கொடுக்கும்படி குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள் குழந்தைகளை சிறு ஓவியம், கதை, கடிதம், கவிதை, கைவினை பொருள் செய்ய சொல்லி அதை பரிசாய் கொடுக்க ஊக்குவியுங்கள்.
-
முக்கியமான ஒன்று: குழந்தைகள் கொடுக்கும் சிறு பரிசை பாராட்டுங்கள், பத்திரமாக பாதுகாத்து வைத்து இனிமையான நினைவு பொக்கிஷமாக போற்றுங்கள்.
கே. ஏ. பத்மஜா, உளவியலில் முதுகலை அறிவியல் பட்டம் பெற்றவர். மழலையர் பள்ளி நிர்வாகத்தில் 10 ஆண்டுகால அனுபவம் உள்ளவர். குழந்தை வளர்ப்பு ஆலோசகர்.
மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!
சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது. வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!
குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..