தமிழ் ஸ்டுடியோ நவம்பர் 23 வியாழன் அன்று பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனை முன்னிட்டு இயக்குனர் பாலாஜி சக்திவேல், இயக்குனர் ராம், இயக்குனர் ஸ்ரீகணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்கும் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வில் தமிழ் ஸ்டுடியோ கடந்து வந்த பாதை, அதன் நிறை குறைகள் பற்றி விவாதிக்க இருப்பதாக தமிழ் ஸ்டுடியோ நிறுவனர் மோ. அருண் தெரிவித்துள்ளார்.
23-11-2017, வியாழன், மாலை 7 மணி.
பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
10-ஆம் ஆண்டின் தொடக்க விழாவை முன்னிட்டு பியூர் சினிமாவில் பேசாமொழி பதிப்பக புத்தகங்கள் ஐம்பது சதவீத கழிவு விலையிலும், மற்ற பதிப்பக புத்தகங்கள் பத்து சதவீத கழிவிலும் விற்பனைக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவலுக்கு Arun Mo முகநூல் பக்கத்தைப் பார்க்கவும்.