வணக்கம் திரு. கமல்ஹாசன் அவர்களே !!! A Common Man-ன் கடிதம்…

வணக்கம் திரு. கமல்ஹாசன் அவர்களே!

மக்களுக்கு நல்லது செய்யுங்கள் அல்லது ஒதுங்கி இருங்கள் என்று நீங்கள் திராவிட கழகத் தலைவர் திரு. வீரமணிக்கும், திராவிட கழகத்திற்கும், திராவிடர்களுக்கும் ட்விட்டரில் அறிவுரை சொன்னதை நான் காண நேர்ந்தது. அடேங்கப்பா எவ்வளவு நிதர்சனமான உண்மை என்று நானுணர்ந்தேன்.நவம்பர் 8,2016 இரவு 8 மணி இருக்கும் தொலைக்காட்சியில் தோன்றிய பாரத பிரதமர் நரேந்திர மோடி செல்லா காசு அறிவிப்பின் மூலமாக டிசம்பர் மாதம் வரை அறிவிக்கப்படாத பொருளாதார நெருக்கடியை கொண்டு வந்தார். அதை திராவிட கழகம் உட்பட எல்லா திராவிட இயக்கங்களும், திராவிட கட்சிகளும், நீங்கள் சொன்ன திராவிடர்களும் இது மக்களுக்கு எதிரனாது என்று மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். அதே சமயம் நீங்கள் என்ன செய்தீர்கள் தெரியுமா? அறிவிக்கப்படாத அந்தப் பொருளாதார நெருக்கடியை நீங்கள் தலை வணங்கி வரவேற்றதும் இல்லாமல் கட்சி பேதமின்றி அம்முடிவை கொண்டாட வேண்டும் என்று சொன்னீர்கள். அதனால் ஏற்பட்ட விளைவு என்ன தெரியுமா திரு. கமல்ஹாசன் அவர்களே ஏடிஎம் வரிசையிலும், பேங்க் வரிசையிலும் நின்ற 300 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். அதை விடுங்க கமல்ஹாசன் அவர்களே உங்களுக்கு ஒரு கதை சொல்றேன்.

பாபநாசம்னு ஒரு ஊரு! நீங்க நடிச்ச படமில்லை திரு. கமல்ஹாசன் அவர்களே! கும்பகோணம் பக்கத்தில் உள்ள ஊர். அந்த ஊரில் ஒரு பெரியவர் அவர் கடின உழைப்பால் சம்பாதித்தப் பணம் திடீரென செல்லாது என்று சொன்னதால் அதை மாற்றுவதற்காக வரிசையில் நின்று உயிரிழந்தார். அதில் கொடுமை என்ன தெரியுமா கமல்ஹாசன் அவர்களே அவர் இறந்துவிட்டார் என்று தெரிந்தும் (ஒருவேளை தெரியாது போல) இருக்கலாம் அவரை அப்புற படுத்தாமல் அல்லது அங்கிருந்து நகர்ந்தால் எங்கு வரிசை போய்விடுமோ! அப்படி போய்விட்டால் செலவுக்கு காசில்லாமல் என்ன செய்வது? மனிதநேயம் கொன்று வரிசையில் நின்றார்கள் மக்கள். அதற்கு யார் காரணம் தெரியுமா? நீங்கள் புகழ்ந்த இந்திய பிரதமர் திரு.நரேந்திமோடி தான்!

தமிழகம் முழுவதும் நீங்கள் வரவேற்ற பண மதிப்பிழப்பால் சுமார் 150 கும் மேற்பட்ட விவசாயிகள் நெருக்கடி சாவுக்கு தள்ளப்பட்டனர் என்பதை நீங்கள் அறிவீர்களா? ஒருவேளை நீங்கள் அறிந்திருந்தால் அவர்களுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்?

திரு. கமலஹாசன் அவர்களே! கருவறுத்தல் என்றால் என்னவென்று தெரியுமா? திரு. கமல்ஹாசன் அவர்களே! நீங்கள் இங்கு சல்லிக்கட்டுக்காக மெரினாவில் இருந்தவர்களை நீங்கள் ட்விட்டரில் உற்சாகப் படுத்திய போது நிகழ்ந்தது திரு.கமல்ஹாசன் அவர்களே! ஆம் அரியலூர் அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தைச் சார்ந்த நந்தினி எனும் 17 வயது பெண் ஆர்எசுஎசு பிரமுகரின் கருவை சுமந்து வந்தாள். அவள் எப்படி கொன்று வீசப்பட்டாள் தெரியுமா? ஆர்எசுஎசு கும்பலால் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு அவள் பிறப்புறுப்பில் கையை விட்டு கருவறுத்து கொலை செய்து நிர்வாணமாக கிணற்றில் வீசப்பட்டார் திரு. கமல்ஹாசன் அவர்களே! இச்சம்பவத்திற்கு என்ன எதிர்வினை ஆற்றினீர்கள் திரு. கமல்ஹாசன் அவர்களே?

கடைசியாக ஒன்றே ஒன்று மட்டும் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன் திரு.கமல்ஹாசன் அவர்களே! நடுக்குப்பத்திலும் இன்னும் பல்வேறு குப்பங்களையும் கொளுத்தியது நீங்கள் ஆதரிக்கும் பன்னீர் செல்வம் தலைமையிலான ஆட்சியில் தான் என்பதை நினைவுப் படுத்த விரும்புகிறேன்.

மேலே குறிப்பிட்ட எல்லா சம்பவங்களுக்கும் திராவிட கழகத்தினரும், மற்ற திராவிட இயக்கத்தினரும், திராவிடர்களும் மக்களுக்காகவும், பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் களத்தில் நின்றவர்கள் என்று உங்களுக்கத் தெளிவுப் படுத்த விரும்புகிறேன். அதுசமயம் நீங்கள் திராவிட கழகத் தலைவர் திரு.கி. வீரமணிக்கும், திராவிட கழகத்திற்கும் இன்னும் ஏனைய திராவிடர்களுக்கும் சொன்னதை நீங்கள் கடைப்பிடியுங்கள்!

புரட்சிக் கவிஞன் பாரதிதாசனின் வரிகளை உங்களுக்கு நினைவுப் படுத்த விரும்புகிறேன்!

தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டேன்போன்
சின்னதொரு கடுகு போல் உள்ளங் கொண்டோன் !

இவ்வளவு சொல்றீயே இதெல்லாம் எனக்கு சொல்ல நீ யார் என்று கேட்டால் நானும் உங்களைப் போல ஒருவன் A Common Man

முரளிகிருட்டிணன் சின்னதுரை

One thought on “வணக்கம் திரு. கமல்ஹாசன் அவர்களே !!! A Common Man-ன் கடிதம்…

  1. ஒரு சினிமா கலைஞன் என்ற முறையில் சினிமா எனும் கலையின் யந்திரதுக்கு (Hard ware) அவர் வழ்ங்கிய பங்களிப்புகள் அபாரமானவை. அவை தக்கவைக்கப்பட வேண்டியவை, வளர்த்தெடுக்கப் படவேண்டியவை. இதேகலையின் உள்ளடக்கித்திற்கு (Soft ware) அவர் வளங்கிய பங்களிப்புகளின் ஒட்டுமொத்த விளைவு சமூகவிரோதமானவை, எதிர் புரட்சிகரமானவை. அதன் தொடர்ச்சியை தற்போது அரசியலுக்குள்ளும் புகுத்துகிறார். அவரின் அரசியல் நிலைப்பாட்டிற்கு எதிரானதொரு நிராகரண விமர்சந்த்தை முன்வைத்தால் மட்டும் போதாது. அவரின் கலைப்படைப்புகளில் உள்ள நச்சுத்தன்மையையும் வெளிக்கொணர வேண்டும்.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.