தமிழக அரசியலின் சமூக நீதி தளத்தில் தவிர்க்க முடியாத சக்தியா திமுக ?!…

ஜி. கார்ல் மார்க்ஸ் திமுக மீதான சாதிப் பாகுபாடு குறித்த விமர்சனங்கள் ஒன்றும் தமிழக அரசியலில் புதிதல்ல. அண்ணாவின் காலத்தில் அது முதலியார் கட்சி என்று விமர்சிக்கப்பட்டது. காஞ்சிபுரம் தேர்தலில், அண்ணாவின் சாதியப் பின்னொட்டுடன் தேர்தல் பிரச்சார போஸ்டர்கள் அடிக்கப்பட்டபோது, “எங்கிருந்து புதிதாக முளைத்தது இந்த முதலியார் என்னும் வால்...” என்று பெரியார் விமர்சித்ததெல்லாம் ஆவணமாக இருக்கிறதுதான். திகவில் இருந்து பிரிந்து வெகுஜன தேர்தல் கட்சியாக திமுக வெளியேறிய போதே அதன் சமரசங்கள் தொடங்குகின்றன. இது திகவுக்கும் … Continue reading தமிழக அரசியலின் சமூக நீதி தளத்தில் தவிர்க்க முடியாத சக்தியா திமுக ?!…

போராட்டமும் எதார்த்தமும்

ஜி. கார்ல் மார்க்ஸ் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை பாரதீய ஜனதா கட்சி தட்டிக் கழித்திருப்பது தமிழகம் முழுவதும் கட்சிகளைக் கடந்து எல்லா மக்களையும் அதிருப்திக்கு உள்ளாக்கியிருக்கிறது. இங்கு தன்னெழுச்சியாக நடக்கத் தொடங்கியிருக்கும் போராட்டங்கள், வெறும் காவிரிக்கானது மட்டும் அல்ல. காவிரி என்பது அதிருப்திகளின் பிரதான காரணமாக இருக்கிறது அவ்வளவே. கொஞ்சம் கொஞ்சமாக சேகரமாகிக்கொண்டே இருக்கும் அதிருப்தி அதன் கொதிநிலையை எட்டுவதன் வெளிப்பாடே இப்போது நடக்கும் போராட்டங்கள். காவிரி விவகாரத்தில், காங்கிரஸ், பிஜேபி, ஜனதாதளம் என எந்த … Continue reading போராட்டமும் எதார்த்தமும்

குப்பை அள்ளுற உனக்கு அவ்வளவு எகத்தாளமா?; துப்புரவு பணியாளரை செருப்பால் அடிக்கவைத்த சாதிவெறி

இந்த நிமிஷம் என் உடம்புல உசுரு ஒட்டியிருக்கிறதுக்குக் காரணம், என் பொண்டாட்டி, புள்ளைங்கதான். நான் போயிட்டேன்னா அதுங்க பொழப்பு சிரிப்பா சிரிச்சிரும். என்னைய நம்பி யாரும் இல்லைன்னா இந்நேரம் நான் செத்திருப்பேன் சார். 'தூக்குல தொங்கிடலாமா’னு இருக்கு..

அசலா? ஜிகினாவா? என்ன சொல்கிறது கமல்ஹாசனின் அரசியல் வருகை….

ஜி.கார்ல் மார்க்ஸ் ஒரு வழியாக கமல் தனது கட்சியைத் தொடங்கிவிட்டார். “மக்கள் நீதி மய்யம்” என்கிற அவரது கட்சியின் பெயரைப் பார்த்தால் பெயரை அவரேதான் தேர்ந்தெடுத்திருப்பார் என்று தோன்றுகிறது. மறக்காமல் அருகில் இருந்த ஆலோசனைக் குழுவிடம் “நல்லாருக்குல்ல...” என்று அவர்களது கருத்தைக் கேட்டிருப்பார். அவர்களும் “அட்டகாசமாக இருக்கிறது” என்று அவருக்குப் பிடித்த பதிலைச் சொல்லியிருப்பார்கள். விழாவுக்கு கேஜ்ரிவாலை வரவழைத்திருக்கிறார். இதை நல்ல ஏற்பாடு என்றே நான் புரிந்துகொள்கிறேன். அன்னா ஹசாரேவுடன் களத்துக்கு வந்தபோது கேஜ்ரிவால் டெல்லியின் முதலமைச்சர் … Continue reading அசலா? ஜிகினாவா? என்ன சொல்கிறது கமல்ஹாசனின் அரசியல் வருகை….

விபச்சார ஊடகம் என்று உங்களை ஏன் அழைக்கிறார்கள் தெரியுமா ஆங்கில நிருபர்களே?#ஜிக்னேஷ் #ஷபீர்

மாட்டிறைச்சி வைத்திருந்ததற்காக, உண்டதற்காக  இஸ்லாமியர்களும் தலித்துகளும் சரமாரியாக  கொல்லப்பட்ட இந்துத்துவ ஆட்சியில், ஒடுக்கப்பட்டவர்களுக்கான  எழுச்சியாக நிமிர்ந்து நிற்கும்  குஜராத் மாநில எம்எல்ஏ, செயற்பாட்டாளர் ஜிக்னேஷ் மேவானி ஹிந்து இலக்கிய விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னைக்கு வந்திருந்தார். அப்படியே பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார். அதில் லயோலாவில் நடைபெற்ற கலந்துரையாடலும் ஒன்று. அந்த கலந்துரையாடல் முடிவில், ஒரு பேட்டி வேண்டி அங்கிருந்த  பத்திரிக்கையாளர்கள், ஜிக்னேஷை கேட்டிருக்கிறார்கள். பேட்டி  தொடங்குவதற்கு முன்னதாக, அங்கிருந்த (அர்னாப் கோஸ்வாமியின்)  ரிபப்ளிக்  டிவி  மைக்கைப் பார்த்ததும், … Continue reading விபச்சார ஊடகம் என்று உங்களை ஏன் அழைக்கிறார்கள் தெரியுமா ஆங்கில நிருபர்களே?#ஜிக்னேஷ் #ஷபீர்

ஐந்து மாணவர்களை மட்டும் மருத்துவப்படிப்பு அனுப்பிய அரசு பள்ளி ஆசிரியர்: நீதிபதி கிருபாகரன் சாடல்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்-ஆசிரியர்கள் அமைப்பான ஜாக்டோ- ஜியோ சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இந்த போராட்டம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு, நீதிபதி கிருபாகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் "ஆசிரியர்கள் என்ன தொழிலாளர்கள் வர்க்கத்தினரா?" என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். எதிர்கால தலைமுறையை உருவாக்க வேண்டியதைப் புரிந்துகொள்ளாமல், ஏன் போராட்டம் நடத்துகின்றனர் என்று … Continue reading ஐந்து மாணவர்களை மட்டும் மருத்துவப்படிப்பு அனுப்பிய அரசு பள்ளி ஆசிரியர்: நீதிபதி கிருபாகரன் சாடல்

மூன்று பண்டிதர்களின் சாதியற்ற தமிழ் தேசியம் – அயோத்திதாச பண்டிதர், ஆபிரகாம் பண்டிதர், தேவநேயப் பாவாணர்!

டி. தருமராஜ் மூன்று பண்டிதர்களின் சாதியற்ற தமிழ் தேசியம் - அயோத்திதாச பண்டிதர், ஆபிரகாம் பண்டிதர், தேவநேயப் பாவாணர்! தமிழ் தேசியம் என்ற யோசனையின் மீது எனக்குக் கொஞ்சம் மரியாதை இருக்கிறதென்றால் அது இந்த மூன்று பண்டிதர்களால் மட்டுமே. துரதிர்ஷ்டவசமாக, இந்தப் பண்டிதர்களைப் பற்றி இன்றைய தமிழ் தேசியர்களுக்கு அட்சரமும் தெரியாது. பெயர்களைக் கூட கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்த மூன்று பேரும் தமிழ் தேசியத்தையே பேசியிருந்தார்கள். அவர்களின் பேச்சு, புறக்கணிக்கப்படுகிற அளவுக்கு காத்திரமானதாக இருந்தது … Continue reading மூன்று பண்டிதர்களின் சாதியற்ற தமிழ் தேசியம் – அயோத்திதாச பண்டிதர், ஆபிரகாம் பண்டிதர், தேவநேயப் பாவாணர்!

அனிதா தலித்தாக இறந்து போகவில்லை…

Dharmaraj Thamburaj 'தலித்' என்பது ஆவேசம் என்றால், அது ஒரு தனி நபர் தன்னை 'தலித்' என்று அறிவித்துக் கொள்ளும் முறை. 'நான் தலித்!' என்று சொல்லிக் கொள்வது மட்டுமே எப்பொழுதும் சாத்தியம்.   அடுத்தவரை 'தலித்' என்று அடையாளப்படுத்த ஆரம்பிக்கும் பொழுது அந்த வார்த்தையின் ஆவேசம் வடிந்து விடுகிறது.நிறைய நேரங்களில் தலித் அரசியலில் இது தான் பிரச்சினை.   இளவரசன், சங்கர் நிகழ்வுகளில், அவர்களின் மரணத்தில் சாதியம் இருந்தது. அதைப் பார்த்து / கேள்விப்பட்டு அதே … Continue reading அனிதா தலித்தாக இறந்து போகவில்லை…

திருச்சி பாஜக பொதுக்கூட்டத்திற்கு 93 தொண்டர்கள்தான் வந்தார்களா?: வீடியோவைப் பாருங்கள்…

திமுகவுக்கு பதிலடி தரும்வகையில் பாஜக  திருச்சியில் பொதுக்கூட்டத்தை நடத்தியது. அந்தக்கூட்டத்துக்கு ஆட்களே வரவில்லை என சமூக ஊடகங்களில் படங்கள் போட்டு பலர் எழுதினர். இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் தமிழிசை சவுந்தர்ராஜன், கூட்டம் தொடங்கும் முன் போடப்பட்டிருந்த காலியான நாற்காலிகளை படம் பிடித்து சமூக ஊடகங்களில் சிலர் எழுதிவருவதாக குற்றம்சாட்டினார். இந்நிலையில் ஆதரத்துடன் பலர் திருச்சி பொதுக்கூட்டம் பற்றிய வீடியோக்களையும் படங்களையும் பகிர்ந்துவருகின்றனர். அதில் ஒருவர் பகிர்ந்துள்ள வீடியோவில் மத்திய இணை அமைச்சர் … Continue reading திருச்சி பாஜக பொதுக்கூட்டத்திற்கு 93 தொண்டர்கள்தான் வந்தார்களா?: வீடியோவைப் பாருங்கள்…

நேற்று ரோஹித் – இன்று அனிதா – நாளை நான் : கிருபா முனுசாமி

Kiruba Munusamy ஆமாம்! அனிதா குறித்து நான் எதுவும் பேசவில்லை. இளவரசன், ரோஹித் வெமுலா, சரவணன், கல்புர்கி, கோகுல்ராஜ், யாகூப் மேமன், சங்கர், முத்துக்கிருஷ்ணன், ஜாதிய-மத வன்மத்தால் வன்புணர்ந்து கொலை செய்யப்பட்ட பெண்கள், இடுகாட்டிற்கு வழிமறுக்கப்பட்ட தலித் பிணங்கள், பார்ப்பனியம்-ஜாதியம்-இனவெறி-மதவெறி-சகிப்பின்மை போன்ற பலவற்றாலும் இந்நிமிடம் ஒடுக்கப்பட்டு பாதிக்கப்படும் இன்னும் பெயர் தெரியாத எத்தனையோ நபர்களுக்காகவும் பேசியும், எழுதியும் என்ன கண்டோம். உயிர்கள் மாய்ந்த வண்ணமே தான் இருக்கின்றன. ஒரு வேளை, வக்கிரமும் அசிங்கமும் நிறைந்த இந்து மதத்தை … Continue reading நேற்று ரோஹித் – இன்று அனிதா – நாளை நான் : கிருபா முனுசாமி

அரசுப்பள்ளி மாணவர்களில் 1%தான் மருத்துவர்கள் ஆகிறார்களா? நீட் ஆதரவுப் பிரசாரத்திற்கு பலியாகிக் கொண்டிருக்கிறோமா?….

muthuRam NEET விஷயத்தில் அவர்களின் பிரச்சார உத்திகளைக் கையாள்வதில் நாம் தோற்றுக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது. அரசு பள்ளிகளில் இருந்து வெறும் 1% மாணவர்களே மருத்துவம் பயில செல்கிறார்கள்னு சொன்னாங்க. உண்மை என்னனு பாப்போம். தமிழக அரசு விண்ணப்பப் படிவத்தில், அரசு பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி கார்பரேஷன் பள்ளி முனிசிபால்டி பள்ளி பஞ்சாயத்து யூனியன் பள்ளி கே.வி சிபிஎஸ்சி பள்ளி தனியார் பள்ளி என்று வகை உள்ளது இதில் அரசு பள்ளி அரசு உதவி … Continue reading அரசுப்பள்ளி மாணவர்களில் 1%தான் மருத்துவர்கள் ஆகிறார்களா? நீட் ஆதரவுப் பிரசாரத்திற்கு பலியாகிக் கொண்டிருக்கிறோமா?….

மருத்துவர் தீண்டத்தகாதவர்களா? அனிதாக்கள் அழிக்கப்படுவதற்கும் வேதத்திற்கும் என்ன தொடர்பு?….

அரியலூர் மாவட்டம், குழுமூரைச் சேர்ந்த அனிதாவை நாம் அறிவோம். அனிதாவின் மரணத்தை புரிந்து கொள்ள அஸ்வினை நாம் அறிந்து கொள்வது அவசியம். மருத்துவம் என்ற அறிவுத்துறை சார்ந்த செயல்பாட்டுக்காகத்தான் அஸ்வின்களும் அனிதாக்களும் பலியாக்கப்பட்டார்கள். அஸ்வின் அனிதாவைப்போல சுமைப்பணியாளர் வீட்டிலே பிறந்தவன் அல்ல, இன்னும் சொல்லப்போனால் அஸ்வின் மனிதனே அல்ல, அவன் கடவுள். அப்படித்தான் அழைக்கப்படுகிறான். தெய்வத்தோடு தெய்வமாக வைத்து போற்றப்பட்ட ஒருவனுக்கும், ஏழை மாணவி அனிதாவுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? இருவரும் மருத்துவத்தோடு சம்பந்தப்பட்டவர்கள். அதன் … Continue reading மருத்துவர் தீண்டத்தகாதவர்களா? அனிதாக்கள் அழிக்கப்படுவதற்கும் வேதத்திற்கும் என்ன தொடர்பு?….

இந்திய அரசை எதிர்த்து நிற்கும் துணிச்சல் எப்படி வந்தது வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு?…

நீட் தேர்வு முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து,  மருத்துவ மாணவர்கள் சேர்க்கையை வேலூரில் உள்ள CMC மருத்துவக் கல்லூரி  தற்காலிமாக நிறுத்தியுள்ளது. "ஏழைகளுக்கு சேவை செய்யும் உணர்வும், பண்பும் கொண்ட மருத்துவர்களை உருவாக்குவதே தங்களின் நோக்கம்.  மாணவர்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மை இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டே அவர்களுக்கு அட்மிஷன் வழங்கப்படும். நீட் தேர்வு மூலமாக அத்தகைய மாணவர்களை எங்களால் உருவாக்க இயலாது " என்று மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே CMC மருத்துவமனையில் ஒரு மருத்துவ இடம் … Continue reading இந்திய அரசை எதிர்த்து நிற்கும் துணிச்சல் எப்படி வந்தது வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு?…

ஸ்வாதியின் பாடையை வைத்து எப்போது கேலிசித்திரம் வரையப்போறேள் Mr.குருமூர்த்தி?…

ப்ளஸ் டூவில் அதிக மதிப்பெண்கள் வாங்கிய அனிதா என்கிற சிறு பெண் , நீட் தேர்வினால் மருத்துவ படிப்பு கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்டார். இது ஜாதி மத பேதமில்லாமல் அனைவரிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்ப்பனர்களைத் தவிர என்றால் அதில் எவ்வித ஆச்சர்யமும் இல்லை எனலாம். அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக வந்திருக்கிறது செப்டம்பர் மாத துக்ளக் இதழ். சோ.ராமசாமியின் மரணத்திற்கு பின் துக்ளகிற்கு பொறுப்பு ஏற்றிருக்கும் பாரதீய ஜனதாவின், இல்லை இல்லை ஆர்எஸ்எஸ்ஸின் கோட்பாடுகளை … Continue reading ஸ்வாதியின் பாடையை வைத்து எப்போது கேலிசித்திரம் வரையப்போறேள் Mr.குருமூர்த்தி?…

நீட் தேர்வை தமிழகம் மட்டும் இவ்வளவு எதிர்ப்பது ஏன் என்று தெரியுமா?….

எந்த மாநிலமும் எதிர்க்காத ’நீட்’ தேர்வினை தமிழ்நாடு மட்டும் தனியாக எதிர்ப்பதும்-விலக்கு கோருவதும் ஏன்? என்பது முதல் கேள்வி.  மற்ற கல்விமுறைகளுடன் போட்டியிடும் வகையில் மாநிலக் கல்விமுறை தரமாக உள்ளதா? நீட் தேர்வில் ஒரு  முறை தோற்றாலும் மூன்று முறை எழுத முடியுமே? மருத்துவக் கல்வியைத் தவிர வேறு படிப்பே இல்லையா? உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டது சரிதானா? என்று அடுத்தடுத்த கேள்விகளும் பாய்கின்றன. முதல் கேள்விக்கான விடையை விரிவாகத் … Continue reading நீட் தேர்வை தமிழகம் மட்டும் இவ்வளவு எதிர்ப்பது ஏன் என்று தெரியுமா?….

குழந்தைகளின் பச்சைக்குருதி குடித்தா உங்கள் நம்பிக்கைகளை வளர்க்கவேண்டும்…?

ஒரு அடையாளம் இன்னொரு அடையாளத்தை அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறது. அடையாளங்களுக்கு இடையே சாத்தியப்படும் சமரசம் என்பது அன்பினால் வருவதல்ல என்று தோன்றிக்கொண்டே இருக்கிறது. பலத்தால்தான் தீர்மானிக்கப்படுகிறது.

சாதி வெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட செகுடந்தாளி முருகேசன் பற்றித் தெரியுமா?

@Aasifniyaz கோவை-அவினாசி சாலையில் சோமனூர் அருகேயுள்ள செகுடந்தாளி என்னும் கிராமத்தைச் சேர்ந்த விசைத் தறித் தொழிலாளி முருகேசன்.  அங்கு ஆதிக்கச்சாதி கவுண்டர்களின் ஒடுக்குமுறைக்கு உள்ளான 30 அருந்ததியக் குடும்பங்களில் இருந்து வந்த முதல் எதிர்ப்புக்குரல் முருகேசனுடையதே. 1998 நவம்பர், தீபாவளி நேரம்.அவினாசியில் உள்ள மாமனார் வீட்டிலிருந்து செகுடந்தாளிக்கு 6 மாத கர்ப்பிணி மனைவியுடன் அரசுப் பேருந்து ஏறினார். காலியாய் இருந்த ஓர் இருக்கையில் அவர் அமர, அருகில் இருந்த சாதி வெறியர், "சக்*** நாயே, நீ எப்பிடி … Continue reading சாதி வெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட செகுடந்தாளி முருகேசன் பற்றித் தெரியுமா?

மிதிபட்டும் அடிபட்டும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது அவசியமா தலித்துகளே?#நல்லூர்கலவரம்

கல்பாக்கம் அடுத்த நல்லூர் காலனி பகுதியில் உள்ள தலித்துகள், பிள்ளையார் சதுர்த்தியை ஒட்டி சாலையோரத்தில் விநாயகர் சிலை வைத்து வெள்ளி இரவு  பூஜை செய்திருக்கிறார்கள். அப்போது வன்னியர் இனத்தை சேர்ந்த இளைஞர்கள் அவ்வழியாக பைக்கில் வேகமாக வந்ததாகவும், குழந்தைகள் விளையாடிக்கொண்டிருப்பதால் மெதுவாக செல்லும்படி அங்கிருந்த தலித்துகள்  கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வன்னிய இளைஞர்கள் தகாத வார்த்தைகளால் பேச, தொடர்ந்து இரு பிரிவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பைக்கில் வந்தவர்கள் போன் செய்ததையடுத்து, 200க்கும் … Continue reading மிதிபட்டும் அடிபட்டும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது அவசியமா தலித்துகளே?#நல்லூர்கலவரம்

கதிராமங்கலம் இருக்கையில் பல்கேரியாவில் பல்டி அடிப்பது ஏன்? அத்தனை பயந்தவர்களா தமிழ் சினிமா ஹீரோக்கள் ?…

இந்த விவேகம் திரைப்படம் தொடர்பான செய்திகளையும் விவாதங்களையும் சமூக ஊடகங்களில் கவனிக்கையில் ஒன்று மட்டும் தெரிகிறது. நமக்கு சினிமா என்பது மதம். நடிகர்கள் கடவுள்கள். நமக்குப் பிடித்த கதை நாயகர்களை யாராவது விமர்சித்துவிட்டால் நாம் மிக ஆழமாகக் காயமடைகிறோம். அவ்வாறு விமர்சிப்பவர்களை மன ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ காயப்படுத்த விரும்புகிறோம். குறைந்த பட்சம் நாம் இயங்கும் சைபர் வெளியிலாவது  ரத்தம் தெறிக்கவைத்தால்தான் நமக்கு ஆசுவாசமாக இருக்கிறது. அளவில் குறைந்தது என்றாலும் ஒருவித “தணிக்கை மனநிலையை” நோக்கி … Continue reading கதிராமங்கலம் இருக்கையில் பல்கேரியாவில் பல்டி அடிப்பது ஏன்? அத்தனை பயந்தவர்களா தமிழ் சினிமா ஹீரோக்கள் ?…

திராவிட அரசியலை அழிப்பதா? வாக்கு அரசியலா?: தமிழகத்தில் என்ன வேண்டும் பாஜகவுக்கு….

கருணாநிதியை ஊழல்வாதி என்று நிறுவியதில் வலது சாரி அமைப்பினர் அடைந்த வெற்றி கருணாநிதியை மட்டும் பாதிக்கவில்லை. திராவிட இயக்கங்களின் மீதான பொது விமர்சனமாக மாறவும் வழி வகுத்துவிட்டது.

12 ஆயிரம் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 1,310 மருத்துவ இடங்களா?இதுதான் நீட் தரும் சமூக நீதியா?…

*தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் எண்ணிக்கை 83 ஆயிரத்து 859 *நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள் எண்ணிக்கை 32 ஆயிரத்து 570 *தமிழகத்தில் இருக்கும் அரசு மருத்துவ கல்லூரி இடங்கள் 3 ஆயிரத்து 534. ************************** *தமிழகத்தில் மாநிலப்பாடத் திட்டதின் கீழ் 12-ம் வகுப்பு தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 22 ஆயிரத்து 838. *சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 12 ஆயிரத்து 575. … Continue reading 12 ஆயிரம் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 1,310 மருத்துவ இடங்களா?இதுதான் நீட் தரும் சமூக நீதியா?…

சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு மட்டுமென்ன கொம்பா முளைத்திருக்கிறது ? #நீட்

சதீஷ் செல்லதுரை CBSE என்றாலே வாயப்பொளக்கும் அன்பர்களுக்கு...என்னோட பையன் அதுலதாம் படிக்கிறான்.நான் பாதுகாப்பு படையிலிருப்பதாலும் பல மாநிலங்களுக்கு மாறுதலாவதாலும் அரசுப்பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்ற உறுதியாலும் நாடு முழுவதும் செயல்படும் கேந்திரிய வித்யாலாயாவில் மகனை சேர்த்தேன். கேந்திரிய வித்யாலாயா என்றதும் CBSE யை வாயைப்பொளந்து பார்ப்பது போல பார்ப்பார்கள் நம்மவர்கள். நமது ஊர் அரசுப்பள்ளி எப்படியோ அப்படியே அச்சு அசலாக இருக்கிறது கேந்திரிய வித்யாலாயா. சிலபஸ் மட்டும்தான் வேறு. ஆனால் அந்த அரசு இயந்திர வாத்தியார்கள் பயிற்சி … Continue reading சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு மட்டுமென்ன கொம்பா முளைத்திருக்கிறது ? #நீட்

கவுண்டர்களும், தேவர்களும், நாடார்களும், வன்னியர்களும் இழந்திருக்கிறார்கள் #நீட்கவுன்சிலிங்

பிராபகரன் அழகர்சாமி நாம் ஏன் நீட் தேர்வை எதிர்த்தோம், எதிர்க்கிறோம் என்பதற்கான விடை இதில் இருக்கிறது. தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடு போக மீதமிருக்கும் 31% இடங்களில், கடந்த ஆண்டு வெறும் 3% இடங்களைக் கூட முன்னேறிய வகுப்பினர் (FC) பெறவில்லை. இந்த ஆண்டு கிட்டத்தட்ட 20% - 25% இடங்களை முன்னேறிய வகுப்பினர் ஆக்கிரமிக்கப் போகிறார்கள். வெறும் 3% கூட இல்லாத பார்ப்பனர்கள்தான் அதில் ஆகப்பெரும்பான்மையான இடங்களை பெறப்போகிறார்கள். தர்மம் வென்றது என்று எச்.ராஜா சொன்னது இதைதான்! பிற்படுத்தப்பட்ட … Continue reading கவுண்டர்களும், தேவர்களும், நாடார்களும், வன்னியர்களும் இழந்திருக்கிறார்கள் #நீட்கவுன்சிலிங்

4 ஆயிரம் மாணவர்களுக்காக 4 லட்சம் மாணவர்கள் பலி கொடுக்கப் படுகிறார்களா ? #நீட்கவுன்சிலிங்

Thirumurugan Gandhi தமிழ்நாட்டில் தான் அதிகபட்சமாக 24 மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. குழந்தைகள் இறப்பு விகிதம் தமிழ்நாட்டில் 1000க்கு 21. இந்தியாவில் 1000க்கு 40. பிரசவத்தில் இறக்கும் தாய்கள் விகிதம் தமிழ்நாட்டில் 1 லட்சத்துக்கு 79. இந்தியாவில் 167. ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் தமிழ்நாட்டில் 18%. இந்தியாவில் 28%. 1 லட்சம் பேருக்கு தமிழ்நாட்டில் 149 மருத்துவர்கள். இந்தியாவில் 36. வெளிநாட்டு நோயாளிகள் சிகிச்சைக்காக அதிகமாக வருகை புரிவது தமிழ்நாட்டிற்குத்தான். மருத்துவ உயர்கல்வியில் பல்வேறு ஆய்வுப் படிப்புகளுக்கான … Continue reading 4 ஆயிரம் மாணவர்களுக்காக 4 லட்சம் மாணவர்கள் பலி கொடுக்கப் படுகிறார்களா ? #நீட்கவுன்சிலிங்

BC இடஒதுக்கீடை நாடு முழுக்க சாத்தியமாக்கிய தமிழ்நாடு நீட் விலங்கை உடைக்குமா?….

Prabaharan Alagarsamy தமிழ்நாட்டு சமூகநீதி வரலாற்றில் இப்படி ஒரு சவாலான சூழலை நாம் சந்திப்பது இது முதல்முறையல்ல. 1950ஆம் ஆண்டு, செண்பகம் துரைசாமி என்கிற பார்ப்பன பெண்மணி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பினால், தமிழகத்தில் அதுவரை நடைமுறையில் இருந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்கிற 100% இடஒதுக்கீடு முறை செல்லாது என்று ஆக்கப்பட்டது. தந்தை பெரியார் அதை எதிர்த்து போர்க்குரல் எழுப்பினார். காமராசரும் முயற்சி எடுத்தார். அதன் விளைவாக இந்திய அரசமைப்புச்சட்டம் திருத்தப்பட்டு, இந்தியா முழுமைக்கும் இன்று பிற்படுத்தப்பட்ட சமூக … Continue reading BC இடஒதுக்கீடை நாடு முழுக்க சாத்தியமாக்கிய தமிழ்நாடு நீட் விலங்கை உடைக்குமா?….

ஆர்எஸ்எஸ் வார இதழை விட ஆபத்தான உங்கள் பத்திரிகையில் எழுத முடியாது;மன்னித்துக் கொள்ளுங்கள் சமஸ்…

நான்கு நாட்களுக்கு முன் ஒரு தொலைபேசி அழைப்பு. "சமஸ் பேசுறேன் சார்" எதிர்பார்க்கவில்லை. யார் தமிழ் இந்து சமசா எனக் கேட்டு உறுதிப் படுத்திக் கொண்டேன். எப்படி இருக்கீங்க ஹிரண்யா ஆபரேஷன் எல்லாம் முடிந்து குணமாயிட்டீங்களா என விசாரித்தேன். என்ன இருந்தாலும் நான் பணி செய்த கல்லூரியில் படித்த மாணவர் அல்லவா. பாசம்.. விஷயத்திற்கு வந்தார். கலைஞர் பொன் விழாவை ஒட்டி திராவிட இயக்கச் சிறப்பிதழ் ஒன்று வெளியிடுகிறார்களாம். இளைஞர்களுக்கு திராவிட இயக்கம் பற்றிய சரியான புரிதலை … Continue reading ஆர்எஸ்எஸ் வார இதழை விட ஆபத்தான உங்கள் பத்திரிகையில் எழுத முடியாது;மன்னித்துக் கொள்ளுங்கள் சமஸ்…

தமிழக தொழிலாளி முருகன் குடும்பத்தை நேரில் சந்தித்த கேரள முதல்வர்….

மருத்துவ உதவி மறுக்கப்பட்டதால் மரணமடைந்த, தமிழக தொழிலாளி முருகனின் குடும்பத்தாரை, முதல்வர் பிணராயி விஜயன் இன்று சந்தித்தார்.முருகன் குடும்பத்தாருக்கு அவசியமான உதவிகளை அரசு வழங்கும் எனவும், அவர்களின் இழப்பிலும் துயரத்திலும் கேரள மக்கள் பங்குகொள்வதை தெரிவித்தார். முன்னதாக, மருத்துவமனைகள் அவசர சிகிச்சையளிக்காததால் உயிரிழந்த முருகன் உறவினர்களிடம் கேரள மக்களின் சார்பாக முதல்வர் பினராயி விஜயன் மன்னிப்புக் கோரியது குறிப்பிடத்தக்கது. மேலும் விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் உடனடியாக சிகிச்சையளிக்க தேவைப்பட்டால் புதிய சட்டம் இயற்றப்படும் என்றும் பினராயி விஜயன் … Continue reading தமிழக தொழிலாளி முருகன் குடும்பத்தை நேரில் சந்தித்த கேரள முதல்வர்….

திருமுருகன் காந்தியும் மகளும்: அவள் விரல்களே எழுதுகோலானால் ஆட்சியாளர்கள் என்ன செய்வார்கள்?

யாழன் ஆதி திருமுருகன் காந்தியும் மகளும் இந்தச் சந்திப்பில் நீ எதைக் கடத்துகிறாய் என் அன்பு நண்பனே பிஞ்சு விரல்கள் பற்றிய உன் விரல்கள் என்ன சொல்கின்றன குழந்தையிடம் அன்பின் தூரிகைகளாய் மாறியிருக்கும் உங்கள் விரல்களில் வழியும் உணர்வின் பெரும்பாதையில் நாளையின் கணங்கள் நடக்கலாம் சொல்லாமலேயே பாதியில் விடப்பட்ட ஒருபுரட்சியின் காதையை மீண்டும் சொல்வேன் என்னும் நம்பிக்கை அந்தத் தீண்டலில் துளிர்விட்டிருக்கலாம் ஒன்றும் கவலைப்படாதே என்னும் சொல்லொன்று உனக்கு அந்த விரல்களிலிருந்து வந்திருக்கலாம் ஒளியேற்றி வந்ததனால் சிறையிருள் … Continue reading திருமுருகன் காந்தியும் மகளும்: அவள் விரல்களே எழுதுகோலானால் ஆட்சியாளர்கள் என்ன செய்வார்கள்?

50 வருடங்களுக்கு முன்னரே தனிக்கொடி கேட்ட தமிழ்நாடு…

கே.எஸ்.ராதா கிருஷ்ணன் அண்ணா மறைவுக்குப் பின் ஆட்சிக்கு வந்த கருணாநிதி இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு குழுவை அமைத்தார். நீதிபதி பி.வி.இராஜமன்னார் தலைமையிலான அந்தக் குழுவில் சந்திரா ரெட்டி, சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் இலட்சுமணசாமி முதலியார் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற நிலையில், அமெரிக்கா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் இருப்பதைப் போன்று ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனிக் கொடி வேண்டும் என்று வலியுறுத்தினார் கருணாநிதி. 1970 ஆகஸ்ட் 20-ல் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் இந்திரா காந்தி … Continue reading 50 வருடங்களுக்கு முன்னரே தனிக்கொடி கேட்ட தமிழ்நாடு…

நீங்கள் எழுதிய “கீழ்த்தரமான ட்வீட்களுக்கு” எப்போது மன்னிப்பு கேட்பீர்கள் தான்யா..?

தான்யா ராஜேந்திரனுக்கு... வணக்கம்.  இதே பத்திரிகைத்துறையில் எட்டு வருடங்களுக்கு மேலாகக் குப்பை கொட்டுவதாலும், தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் ஆங்கில ஊடகவியலாளர்களுக்குமான லாபியிங் திறமை என்பது மலைக்கும் மடுவுக்குமானது என்பது பற்றித் தெரியுமென்பதாலும் உங்களுடைய சமீபத்திய செயல்பாடுகள் குறித்து எனக்குள் எழும் சில கேள்விகளை உங்களிடம் கேட்கலாம் என நினைக்கிறேன். “நியூஸ் மினிட்” என்கிற ஆங்கில இணையதளத்திற்கு நீங்கள் “எடிட்டர் இன் சீஃப்” ஆக இருக்கலாம். ஆனால் நீங்கள் செய்தியாளாரா அல்லது வெறும் செய்தி சேகரிப்பாளரா என்பதில் உங்களுக்கே சந்தேகம் … Continue reading நீங்கள் எழுதிய “கீழ்த்தரமான ட்வீட்களுக்கு” எப்போது மன்னிப்பு கேட்பீர்கள் தான்யா..?

இந்தியா ஒரு இந்து நாடு:இஸ்லாமிய படையெடுப்பாளரை வெட்டிய இந்து மகாராஜ்: உ.பி பாடத்திட்டக் கேள்விகள் இது….

1. இந்தியா ஒரு இந்து நாடு என்று கூறியவர் யார் ? கேஷவ் பலிராம் ஹெட்கேவார் 2.சிகாகோவில் சுவாமி விவேகானந்தா  எந்த மதத்தை முன்னிருத்தினார் ? இந்துத்துவா 3. மகாராஜ் சுஹேல்தியோ என்கிற மன்னர், வெட்டி சாய்த்த இஸ்லாமிய  படையெடுப்பாளர் பெயர் என்ன ? சையத் சலார் மசூத் காஸி 4.ராம் ஜென்மபூமி எங்கிருக்கிறது ? அயோத்யா ஹரிஜன்ஸ் என்று காங்கிரசும், காந்தியும் கூறியதை எதிர்த்து டாக்டர் அம்பேத்கர் எழுதிய புத்தகத்தின் பெயர் என்ன ? Congress … Continue reading இந்தியா ஒரு இந்து நாடு:இஸ்லாமிய படையெடுப்பாளரை வெட்டிய இந்து மகாராஜ்: உ.பி பாடத்திட்டக் கேள்விகள் இது….

எங்கிருந்து தொடங்குகிறது உறவுமீறும் ஆண்-பெண் மீதான வன்முறை?…

எப்போதுமே சர்வாதிகாரிகள் ஒழுக்கவாதிகளாக தம்மை முன்னிறுத்துவதில் கவனம் கொள்கிறார்கள். உதாரணத்துக்கு மோடி.

அரசியல் களத்தில் கருணாநிதி இருந்திருந்தால் அதிமுக ஆட்சியை கவிழ்த்திருப்பார்: விஜயகாந்த் பேட்டி!

இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் பேட்டி அளித்துள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாகவே அரசியலில் ஒதுங்கியிருந்த , இந்த பேட்டியின்போது தீவிர அரசியல் பேசியது மட்டுமல்லாது, தோற்றத்திலும் புதுப்பொலிவுடன் இருப்பதை பார்க்க முடிகிறது. அந்த பேட்டியிலிருந்த சில கேள்விகளின் தமிழாக்கம் இங்கே. ****************** கேள்வி: அதிமுக ஆட்சியை கவிழ்ப்போம் என்று திமுக சொல்லியதைப்போல, செயலில் கட்டமுடியவில்லை என்று நினைக்கிறீர்களா ? பதில்: இந்த அதிமுக அரசு தானாகவே … Continue reading அரசியல் களத்தில் கருணாநிதி இருந்திருந்தால் அதிமுக ஆட்சியை கவிழ்த்திருப்பார்: விஜயகாந்த் பேட்டி!

”தலித் மக்களை ஒன்றிணைத்து அரசியல் அதிகாரத்துக்காக போராடுவதே என் நோக்கம்” டாக்டர் கிருஷ்ணசாமியின் ஃபிளாஷ்பேக் பேட்டி

1998-ம் ஆண்டு பத்திரிக்கையாளர் ஷோபா வாரியாருக்கு, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க்ருஷ்ணசாமி அளித்த பேட்டியின் ஒரு பகுதியை இங்கே தமிழாக்கம் செய்திருக்கிறோம். நீட் தேர்வுக்கு ஆதரவாக போராட்டம், இட ஒதுக்கீடுக்கு எதிராக போராட்டம், தேவேந்திர குல வேளாளர்களை தலித் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் இன்றைய டாக்டருக்கும், தலித்துகளை ஒன்றுபடுத்தி அரசியல் அதிகாரத்தை நோக்கி நகரவேண்டும் என்ற அன்றைய டாக்டருக்கும் எட்ட முடியாத அளவிலான வித்தியாசங்களைப் பார்க்க முடிகிறது. ஆச்சர்யமாகவும் … Continue reading ”தலித் மக்களை ஒன்றிணைத்து அரசியல் அதிகாரத்துக்காக போராடுவதே என் நோக்கம்” டாக்டர் கிருஷ்ணசாமியின் ஃபிளாஷ்பேக் பேட்டி

தலித் என்பதால் மட்டுமே பாஜகவின் ராம்நாத் கோவிந்தை ஆதரிக்க வேண்டுமா ? #ஜனாதிபதிதேர்தல்…

"மநுஸ்மிருதியில் சதுர் வர்ணம் இருக்கிறது. சதுர்வர்ண அமைப்பு முறை மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு மாபெரும் ஊறு விளைவிக்கக் கூடியது. சூத்திரர்கள் அனைத்து வகையான இழிவான பணிகளைத்தான் செய்ய வேண்டும் என்று மநுஸ்மிருதி கூறுகிறது. அவர்களுக்கு ஏன் கல்வி அளிக்கப்பட வேண்டும்? பார்ப்பனர்கள்தான் கல்வி கற்க வேண்டும். சத்ரியன் ஆயுதங்களை எடுக்க வேண்டும். வைசியர்கள் வணிகம் செய்ய வேண்டும். ஆனால், சூத்திரர்கள் தொண்டூழியம் செய்ய வேண்டும்” – பாபாசாஹேப் டாக்டர் அம்பேத்கர். மநுஸ்மிருதியில் என்ன கூறப்பட்டுள்ளதோ அதைத்தான் பாரதீய … Continue reading தலித் என்பதால் மட்டுமே பாஜகவின் ராம்நாத் கோவிந்தை ஆதரிக்க வேண்டுமா ? #ஜனாதிபதிதேர்தல்…

பெண்களை அடித்த போலீசுக்கு பதவி உயர்வு; தமிழக அரசு நடவடிக்கை…

திருப்பூர் மாவட்டம் அருகேயுள்ள சாமளாபுரத்தில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், பெண்கள் என ஏராளமானோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைய மறுத்ததால் காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்க துவங்கினர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை மாவட்ட ஏஎஸ்பி  பாண்டியராஜன் அடித்தது பெரும் சர்ச்சையை  ஏற்படுத்தியது. இந்நிலையில்  திருப்பூர் மாவட்ட போலீஸ் தலைமையிட கூடுதல் எஸ்.பி., யாக பணியாற்றிய ஸ்டாலின், பதவி உயர்வு வழங்கப்பட்டு, சென்னை திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு எஸ்.பி.,யாக, … Continue reading பெண்களை அடித்த போலீசுக்கு பதவி உயர்வு; தமிழக அரசு நடவடிக்கை…

செக்ஸ் வைத்துக்கொள்ளாதீர்கள்; அசைவம் சாப்பிடாதீர்கள்: கர்ப்பிணிகளுக்கு மோடி அரசு பரிந்துரை…

ஆயுர்வேதம், யோகம், இயற்கை மருத்துவம், யுனானி, சித்தம் மற்றும் ஓமியோபதி மருத்துவத்துறை இணைந்த தனி அமைச்சகம்தான் “ஆயுஷ்”. இந்த அமைச்சகத்தின் சார்பில் “தாய் சேய் நலம்” தொடர்பான சிறு நூல் வெளியாகியுள்ளது. அதில்... *கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமான குழந்தையை பெற செக்ஸ் வைத்துக் கொள்ளக்கூடாது". *ஆசை கோபம் வெறுப்பு போன்றவற்றை ஒதுக்க வேண்டும். தீய எண்ணங்கள் உடையவர்களுடன் பழக கூடாது" *ஆன்மீக சிந்தனையை வளர்த்துக் கொள்ளவேண்டும்" என்றும் கூறப்பட்டுள்ளது.    

பேரக் குழந்தைகளை வளர்க்கும் கொத்தடிமைகளா பெற்றோர்கள்?…

மலேசிய வீடியோ அது. ஆறு அல்லது ஏழு வயது பெண் குழந்தையை அறுபது வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் ஸ்கேலினால் அடி வெளுத்து எடுக்கிறார். பார்த்தவுடன் பதறிப் போகிற அளவுக்கு அப்படி ஒரு அடி. பொங்கி பீராய்ந்து உடனடியாக அந்த வயதான அம்மாவைத்திட்டி ஸ்டேடஸ் எழுதி என்னுடைய கடமையை ஆற்றினேன். இருந்தும் அந்த வீடியோ கண்ணுக்குள்ளயே நின்றுகொண்டிருந்தது. எதற்காக இவ்வளவு எமோஷன் ? நீ அடி வாங்கினதே இல்லையா ? என்று உடன்பணிபுரிபவர் கேட்டதும்தான் அதில் இருந்து … Continue reading பேரக் குழந்தைகளை வளர்க்கும் கொத்தடிமைகளா பெற்றோர்கள்?…

ஐஐடியில் இரட்டைக்குவளை முறை: அசைவத்திற்கு தனி பாத்திரங்கள்; ஆராய்ச்சி மாணவர் பகீர் குற்றச்சாட்டு…

அசைவத்திற்கென்று தனி பாத்திரத்தைதான் ஒதுக்கி இருப்பார்கள் அந்த பாத்திரத்தில் சிவப்பு வண்ணம் அடிக்கப்பட்டிருக்கும்.

#வாயைத்திறக்கலாமே தமிழக முதலமைச்சரே ; திராவிடநாடுக்கு அடுத்து டிவிட்டரில் பரபரப்பாகும் புதிய ட்ரெண்ட்…

மாட்டிறைச்சி விற்பனை செய்வதை தடை செய்து, மத்திய அரசு சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வந்ததை கண்டித்து,  சென்னை ஐ.ஐ.டி.,யில் மாட்டிறைச்சி விருந்து நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்ததாக கூறி சூரஜ் என்ற மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் அறிக்கை வெளியிட்டிருக்கும் நிலையில், இது பற்றி கருத்து எதுவும் வெளியிடாத தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழநிசாமியை கண்டித்து … Continue reading #வாயைத்திறக்கலாமே தமிழக முதலமைச்சரே ; திராவிடநாடுக்கு அடுத்து டிவிட்டரில் பரபரப்பாகும் புதிய ட்ரெண்ட்…