“ஒரு வழக்கு தற்கொலை செய்துகொண்டது”

மென்பொறியாளர் ஸ்வாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. சிறையில் இருந்த ராம்குமார் எப்படி தற்கொலை செய்துகொண்டிருக்க முடியும்? என சமூக ஊடகங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. சில கண்டனக் குரல்கள் இங்கே:

Vijayasankar Ramachandran: ஒரு வழக்கு தற்கொலை செய்துகொண்டது.

பிரதாபன் ஜெயராமன்: இரு ஆணவக்கொலைகள்

Joshua Isaac Azad: Ramkumar murdered by the state!!!!

#CustodialMurder

#I_Stand_By_Ramkumar

#JusticeForRamkumar

Aravindan Sivakumar: ராம்குமார் இறந்தார் என்று போடாமல் தற்கொலை என்று எப்படி முடிவு செய்தார்கள்? இந்த கதையின் முடிவு எதிர்ப்பார்த்தது தான் என்றாலும்
மிகவும் எரிச்சலாகவும் கடுப்பாகவும் உள்ளது.

Maheswari Nagarajan: So sad….சுவாதி கொலையில் மீண்டும் பரபப்பைக் கூட்டும் ஊடகங்கள்.. பரபப்பைத் தவிர எதுவும் வெளிவரவில்லை இந்த வழக்கில்

Bala G: ராம்குமார் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வருகிறது. அது கொலையா தற்கொலையா என்று தெரியவில்லை.

சுவாதி கொலையில் ராம்குமாருக்கு தொடர்பில்லை என்று சொல்வதை நான் நம்பவில்லை. ஆனால் ஒருதலைக்காதல் என்று போலீஸ் சொன்ன கட்டுக்கதையில் எனக்கு சந்தேகம் இருந்தது..

சுவாதி கொலைக்குப் பின் அதிகாரத்தில் இருப்பவர்கள் மறைக்க விரும்பும் ஏதோ ஒரு பெரிய மர்மம் இருக்கிறது..

இப்போது ராம்குமாரின் மரணத்தோடு அந்த மர்மத்தையும் அதிகாரம் குழியில் புதைக்கிறது என்றே தோன்றுகிறது..

என்னமோ நடக்குது.

Kavin Malar: ராம்குமாரோடு சேர்த்து எல்லா மர்மங்களையும் புதைக்கிறது காவல்துறையும் தமிழக அரசும். வயிற்றெரிச்சலாய் இருக்கிறது. உண்மைகளைப் பொய்யாக்கவும் பொய்யை உண்மையாக்கவும் முடிகிறது அதிகாரத்தால்.

Manonmani Pudhuezuthu : எத்தனையோ விடை தெரியாத மரணங்களுள் ஒன்றாக ஸ்வாதியுடன் ராம்குமாரையும் சேர்த்து விட்டார்கள்.

Arul Ezhilan: ராம்குமார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.உடல் ராயப்பேட்டை மருத்துவமனையில் உள்ளது.

Sathish Chelladurai#ஸ்வாதி கொலை வழக்கில் கைதான #ராம்குமார் தற்கொலை(?!)

த்தூத்தேறிங்கடா நாய்ங்களா உங்க நீதியை..

Surya Xavier: ஒரு அப்பாவியை அநியாயமாகக் கொன்றுவிட்டார்கள். ராம்குமார் கொலை செய்யப்பட்டுவிட்டார்.அடப்பாவிகளா.நாடா இது? த்தூ.

Elamathi Sai Ram: நம்பிட்டோம், நம்பிட்டோம்… காவல்துறையினர் நெருங்கும்போது ராம்குமார் கழுத்தை அறுத்துக்கொண்டான்… இப்போது சிறையில் மனஅழுத்தத்தினால் தற்கொலை செய்துகொண்டான்..

நம்பமுடியவில்லையே, ஜோடித்த கதை போலிருக்கிறதே என்று அடுக்கடுக்காக சந்தேகங்களை முன்வைக்கும் சாதாரண மனிதர்கள்தான் இங்கு குற்றவாளிகளாக பார்க்கப்படுகிறார்கள். கைதும் செய்யப்படுவார்கள். இவ்வளவுதான் மக்களுக்கு இங்கிருக்கும் அதிகாரம். மற்றபடி அரசதிகாரத்தும், அதை பாதுகாக்கும் அமைப்புகளுக்கும் இங்கு எந்த பங்கமும் நேராது. நாமும் அவர்கள் செய்யும் கூத்தை மேவாய்கட்டையைத் தடவியபடி அண்ணாந்து பார்ததுவிட்டு போய்க்கொண்டிருக்க வேண்டியதான்..

Thiru Yo: ராம்குமார் மரணம் தற்கொலையல்ல, கொலை என்பதற்கான எல்லா முகாந்திரமும் உள்ளன. இக்கொலையின் பொறுப்பை தமிழக காவல்துறை ஏற்கவேண்டும். சுவாதி கொலையில் உண்மை குற்றவாளிகளை காவல்துறை தப்பிக்க விடுகிறது. அது மக்களுக்கு பாதுகாப்பல்ல.

Chandra Thangaraj: நீங்கள் கொலைசெய்யப்படலாம்…அல்லது குற்றம்சாட்டப்பட்டு கொலைசெய்யப்படலாம்.அதிகாரம் இந்த ரெண்டையும் செய்யும்.

Saravanan Chandran: பாதுகாப்பான சிறைக்குள் ஒருத்தனால் தற்கொலை செய்ய முடியுமாம். அதிகாரத்தின் கோரக் கரங்களை நினைத்தால் அச்சமாக இருக்கிறது. நாளை யாருக்கு வேண்டுமானாலும் இது நிகழலாம். அவர்தான் கொலையாளியா என்கிறதெல்லாம் இரண்டாம் பட்சம். சிறை பாதுகாப்பானது என்கிற பொய்யை எத்தனை நாள் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறோம்?

ஜி விஜயபத்மா எழுத்தாளர் இயக்குனர்“கதம் கதம்” _ முடிச்சிட்டாங்கப்பா….! 😢😢👌தமிழ் நாட்டில் உயிருக்கான மதிப்பீடுகள் என்ன? சில் நாட்கள் தலைப்பு செய்திகள் ..பின் செய்திகள் …then “close the file! That’s all

Radhika Sudhakar: ramkumar, unprovenly accused of killing swathi dead. according to police ramkumar died attempting suicide in jail. nothing to say.

Rahim Journalist: தோட்டாவுக்குப் பதில்…. மின்சாரம்….என்கவுண்டர் ஸ்டைல மாத்திட்டாங்க போல…

Eniyanஎன்னய்யா நடக்குது நாட்டுல … அதிகாரங்க சொல்றத கிளிப்பிள்ளையாய் ஒப்பிக்கும் ஊடகங்கள் சொல்றதையும் எத்தனை நாளுக்கு தான் குருட்டு செவிடர்களாய் நம்பிக் கொண்டிருக்க போகிறோம்.

Vini Sharpanaராம்குமார் தற்கொலை என்பதை நம்ப முடியாது 😦 காவல்துறைக்கு கதை வசனம் எழுதுவதெல்லாம் புதிதா என்ன?

Rajarajan RJகாவல் துறை பிடிக்க செல்லும் போது “பிளேடை” வைத்து கழுத்தை அறுத்துக்கொண்டவன், இன்று மீண்டும் தற்கொலை முயற்சி செய்து “வெற்றிகரமாக செத்திருக்கிறான்”.

இப்படியான கோழை தான் ஸ்வாதியை கொடூரமாக கழுத்தை வெட்டி கொன்றிருப்பான் என்று கூறுவதை நாமும் ஏற்றுக்கொள்வோம். வேறு வழியில்லை.

ராம்குமார் குற்றவாளியா இல்லையா என்பதை முடிவெடுக்க வேண்டியது கோர்ட். ஆனால், கோர்ட்டுக்கு போவதற்கு முன்னரே இந்த கேஸை வெற்றிகரமாக முடித்துவிட்டார்கள்.

நீதி மறுக்கப்பட்டது ராம்குமாருக்கு மட்டுமல்ல. ஸ்வாதிக்கும் தான்!

இந்தியாவில் நீதி என்பது ஒரு நூலில் தான் வித்தியாசப்படுகிறது என்பது மீண்டும் நிரூபணம் ஆகி இருக்கிறது.

கொலைகாரனுக்கு வக்காலத்தா என்று இங்கே வந்தும் கேட்பவர்கள் இருப்பார்கள். நான் யாருக்கும் வக்காலத்து வாங்கவில்லை. இந்த நிமிடம் இந்தியா என்னும் நாட்டில் வாழ்வதற்கு மிகவும் அச்சப்படுகிறேன்!

Muthazhagan Ma: “ஸ்காட்லான்ட்யார்ட்” மீண்டும் ஒரு முறை தன் “வீரத்தை”?!?!?!? நிரூபித்தது.

Saravanan Savadamuthu: புரட்சித் தலைவியின் பொன்னான ஆட்சியில் இதுகூட நடக்கவில்லையெனில்தான் இது ஆத்தாவின் ஆட்சியா என்று சந்தேகமே வரும்..

சிறை முழுக்க சிசிடிவி கேமிராக்கள் இருக்க, எந்த கேமிராவிலும் படாமல் வெற்றிகரமாக தற்கொலை செய்திருக்கும் ராம்குமாரின் சாமர்த்தியத்தை, தமிழக காவல் துறையினரே நிச்சயம் பாராட்டுவார்கள்.

சிறையில் அதி முக்கிய குற்றவாளி என்ற பெயரில் இருப்பவரையே பாதுகாத்து வைக்க முடியவில்லை என்றால், எதற்கு இத்தனை சிறை காவலர்கள்..?

இது கொலை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இதை தானாகவே செய்வதற்கு எந்த அதிகாரியும் முன் வர மாட்டார்கள். மேலிட ஒத்துழைப்போ, உத்தரவோ இன்றி இதனை செய்திருக்கவே முடியாது..!

இதற்கு நிச்சயமாக சிறைத்துறைதான் பொறுப்பேற்க வேண்டும். சிறைத்துறையை தன் வசம் வைத்துக் கொண்டு வீட்டில் கும்பகர்ணத் தூக்கம் தூங்கிக் கொண்டிருக்கும் மாநிலத்தின் முதலமைச்சரான ஆத்தாதான் இந்தப் பாவத்துக்கும் பொறுப்பேற்க வேண்டும்..!

குற்றம் நிரூபிக்கப்பட்டால்கூட 10 வருட தண்டனையோ அல்லது 14 வருட சிறை தண்டனையோ கிடைத்து ராம்குமார் தன்னுடைய மத்திம வயதிலாவது திருந்தி வாழ ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும். இப்போது ஒரேயடியாக சொர்க்க லோகத்திற்கு அனுப்பி வைத்திருக்கும் ஆத்தாவின் கொடுங்கோல்தனத்திற்கு என்ன பெயர்..?

இவ்வளவிற்கு பிறகும் இன்னும் நான்கைந்து பேர் “ஜெயலலிதாவின் தைரியம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்..” என்று இதே முகநூலில் வெண்சிரிப்போடு சொல்வார்கள் பாருங்கள்..!

தமிழர்களின் டிஸைன் அப்படி..!

Murugan Kanna: ஸ்வாதி கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகள் யார் என அனைவருக்கும் அடையாளம் தெரிந்து விட்ட நிலையில் குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது என்றால் குற்றவாளிகள் காப்பாற்றப்படுகிறார்கள் ஆடு மேய்த்த அப்பாவி பலி ஆடாக ஆக்கப்பட்டுள்ளான்.

Abdul Hameed Sheik Mohamed: ஸ்வாதி கொலை வழக்கில் சந்தேகத்திற்கிடமான முறையில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சற்று முன் புழல் சிறையில் மின் கம்பியைக் கடித்து தற்கொலை செய்துகொண்டாராம்.

இந்த வழக்கில் இதுவரை சுற்றப்பட்ட பூக்களிலேயே பெரிய பூ இந்த சாவுப்பூதான்,

ராம்குமாரை ஆரம்பத்திலிருந்தே பேச விடாமல் தடுத்தவர்கள் இப்போது நிரந்தரமாக அவரது வாயை மூடிவிடடர்களா? .

Anbu Selvan: எல்லோரும் ஒருமனதாக நம்புவோம். இராம்குமார் தற்க்கொலை செய்துகொண்டார். இரக்கமனமுள்ள காவல்த்துறை, காப்பாற்ற நினைத்தும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்…நம்புறோம் எசமான். ஐயா சொன்னீங்கன்னா அப்படியே கரீட்டாத்தான் இருக்கும்…

Sukumar Mani: ராம்குமார் “கொலை”க்கு யார் காரணம்? இந்த சமூகம் தான் ராம்குமாரை கொன்றுவிட்டது. பல குற்றம் வழக்குக்களில் தொடர்புடையவர்கள் கூட “சிவப்பு விளக்கு” வாகனங்களில் அரசு பாதுகாப்புடன் வலம் வருகின்றனர். ஆனால், குற்றம் சாட்டப்பட்ட நபரை, குற்றவாளியாக மனம்மாற்றி தற்கொலைக்கு தூண்டியது காவல் துறை, நீதித்துறை உட்பட இச்சமூகமே. #தற்கொலை தீர்வுக்கு முடிவல்ல .. அதனை எதிர்த்து போராட வேண்டும்.

Stalin Balanஉண்மையான குற்றவாளிங்க எவன்னு தெரியகூடாதுன்னு, ராம்குமார் கதைய ஜெயில்ல முடிச்சிட்டானுங்க..!

Edgar Solomonraja: இனி எல்லாத்தையும் அவனோட போட்டு புதைச்சிடுங்க…அவ்வளவுதான் இந்த நாட்டின் நீதி…#ராம்குமார்_தற்கொலை

Bala Ji: நீங்களும் ஓர் நாள் தற்கொலை செய்து கொள்ள கூடும். அது காவிரிக்காய் தற்கொலை என்று பேசபடலாம். காவிரிக்கு பதிலாய் அந்த தற்கொலையின் இடத்தை நிரப்ப வேறு ஒரு தற்கொலை நிகழலாம். அந்த தற்கொலையினை பேசி தீர்க்கும் முன்னே ஏதோ ஒரு பண்டிகை வந்துவிடலாம். ஓலங்கள் நிறைந்த காற்றலைகளும். உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக வசனங்களும், சிறப்பு நிகழ்ச்சியினை வழங்குவோர் என்று விளம்பரதாரர்களின் பட்டியல்கள் கொண்டு நிரப்படலாம். இந்த கேடுகெட்டவர்களிடையில் வாழும் பாவத்திற்காய் எதற்கும் ஒரு தற்கொலைக்கு நீங்களும் தயாராய் இருங்கள்.

Mani Kandan: ராம்குமார் மரணமடைந்த இதே நாளில் தான் கடந்தாண்டு, கோகுல்ராஜ் வழக்கினை விசாரித்த டி.எஸ்.பி விஷ்ணுபிரியாவும் மரணமடைந்தார். இரண்டுமே தற்கொலை என்று பிரகடனப்படுத்தியுள்ளனர். ஜனநாயக சர்வாதிகரத்தின் கோரப்பிடியை நினைத்தால் அச்சமாகவுள்ளது.

Govi Lenin: கழுத்தறுபட்டபோது ஊமையாக்கப்பட்ட உண்மைகள், கரண்ட் கம்பியைக் கடித்தபிறகு கச்சிதமாகப் புதைக்கப்பட்டுவிட்டன.

Prakash JP: சுவாதி கொலை விஷயத்தில் புதைந்துள்ள மர்மத்தை காக்கவும், சம்பந்தப்பட்டவர்களை காப்பாற்றவும் செய்யப்பட கொலை.. விசாரணைகள் எல்லாம் முடிந்தநிலையில், நாளை ஜாமீன் மனு கோர்ட் விசாரணைக்கு வரும்நிலையில், இந்த சம்பவம்.. கூடவே, காவிரி தோல்வி, கர்நாடக கலவர RSS பங்கு, நத்தம் விஸ்வநாதன் போன்ற அதிமுக மூத்த அமைச்சர்கள் செய்த பல்லாயிரம் கோடி ஊழல், அதில் ஜெயாவின் பங்கு தொகை… போன்றவற்றிலிருந்து மக்களின் கவனத்தை திசைத்திருப்ப உதவி….

சட்டபூர்வமான நடவடிக்கைகள், விசாரணைகள் எல்லாம் முடிந்தநிலையில், அடுத்து எப்படியும் குற்றம்சாட்டப்பட்டுள்ள ராம்குமாருக்கு ஜாமின் கிடைத்து விடும், வெளியே வந்தால், உண்மையை சொல்லிவிடுவான் என்ற நிலையில், மாநிலத்தின் மிக பாதுகாப்பான சிறையில் இருந்த #ராம்குமார், “மின் வயரை கடித்து” தற்கொலை செய்து கொண்டான் என்று கதை சொல்கிறார்கள்.. ஏற்கனவே, அவனுடைய கழுத்தை அவனே அறுத்துகொண்டான் என கதை சொல்லப்பட்டது…

Vinoth Malaichamy:
சுவாதிக்காக
சென்றமுறை அறுக்காத கழுத்தை ராம்குமாரே அறுத்தான்
சுவாதிக்காக
இம்முறை கடிக்க முடியாத
மின் கம்பியைக் கடித்து
ராம்குமாரே இறந்தான்

நீன்ட பயணத்தின் ஒரு வெள்ளை ஆடாக கூட ராம்குமார்கள் வாழமுடியாது …

Mohideen Abdul Kadherஅதிகாரவர்க்க-பார்ப்பனீய கூட்டுச்சதியின் கிளைமாக்ஸ் – தம்பி ராம்குமாரின் உயிரிழப்பு.

Perumal Karuppaiah: இருட்டறையில் உள்ளதடா நீதி! (இன்னமும்) நியாயம் இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே! ஹேராம்!

பி.எம். இப்ராகிம்: நேற்று பேரறிவாளன் தாக்கப்பட்டார். இன்று ராம்குமார் தற்கொலை? ஜெயில விட வெளியேதான் பாதுகாப்பு போல!

Vijay Bhaskarvijay: ஆச்சாரம் காக்க ஒரு கொலை …

Villavan Ramadoss: நிரபராதி என நிரூபித்து விடுதலை ஆனவர்கள் உண்டு, கொல்லப்படுவதன் வாயிலாகவும் நிரபராதியாக முடியும் என்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

Jackie Sekar: ராம்குமார் தற்கொலை செய்துக்கொண்டார். எதற்கும் மீண்டும் விசாரனை திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை ஒரு முறை பார்த்து விடுங்கள் டாட்

Farooq Meeran: போலி என்கௌண்டர்களுக்கு வாய்ப்பில்லாத சூழலில் குற்றவாளிகளே ‘தற்கொலை’ செய்துகொள்ளும் அதிர்ஷ்டத்தை பெற்றிருக்கிறது நமது காவல்துறை.

Gunavathy M: பெரியாரின் பிரச்சாரங்களுக்கு பிறகுதான், இங்கு கடவுள் நம்பிக்கை வலுப்பட்டு கோவில்களில் கூட்டம் அள்ளிக்கொண்டு போகிறது என்றும், இந்து மதம் அவரால் வலுப்பட்டது என்றும் ”பாலகுமாரன்” நேற்று பதிவிட்டு இருந்தது.

இப்போதுதான் பெரியாரின் தேவை அதிகமென்றும், சமூக நீதியை நிலைப்படுத்த வேண்டுமென்றும், இந்துத்துவ சக்திகள் எவ்வளவு முயன்றாலும் மாற்றம் நிகழ்ந்தே தீரும் என்றும் பலர் பதிவு செய்திருந்ததையும் பார்க்க முடிந்தது.

இவையனைத்திற்கும் அப்பால் ’அரசு, அரசின் ஏவல் அமைப்புகள்’ அதன் குரூரத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. சமூகத்தின் “படிகளை”அப்படியே வைத்திருப்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

விஷ்ணுப்ரியா வழக்கின் கதி என்ன! கோகுல்ராஜ் வழக்கு என்னாயிற்று! இன்னும் பல நமது கவனத்திற்கு வராத கொலைகளுக்கு மத்தியில், இப்போது அவர்கள் நம்பும் ஆச்சாரங்களைக் காப்பாற்றிக்கொள்ளவும், இன்னும் பல பெரிய்ய்ய ஆட்களைக் காப்பாற்றிக்கொள்ளவும் மற்றுமொரு கொலை.

”படிநிலைகளை” இறுக்கமாகப் பிடித்து தொங்கிக்கொண்டே இருக்கும் சமூகத்தின் மனசாட்சியை எப்படி சாந்தியடைய வைப்பது என்று ”அவர்களுக்குத்” தெரியும்.

Arul Ezhilan: ராம்குமார் சிறையில் கொலை செய்யப்பட்டிருக்கவே வாய்ப்புகள் அதிகம்! சுவாதியின் குடுமபம் ஆர்.எஸ். எஸ் அமைப்பில் திவீரமான செல்வாக்குள்ள குடும்பம். துவக்கத்தில் இருந்தே ராம்குமார் பேசி விடக் கூடாது என்பதில் சிலர் உறுதியாக இருந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை சொல்வது நம்பும்படியாக இல்லை!

Nallu R Lingam: சுவாதி கொலை வழக்கை விசாரிக்கும் காவல்துறையினர் அனைவரும் கொடுஞ்சிறையில் தள்ளப்பட வேண்டிய கொடூரர்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.