பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியாகியுள்ள ‘கபாலி’ படம் குறித்து விமர்சனங்கள் வெளியாகத்துவங்கியுள்ளன. முதல் கருத்தாக Rajarajan RJ முகநூலில் பதிவு:
“25 வருஷமா ரஜினியை எப்படி பார்க்க ஆசைப்பட்டோமோ அப்படி ஒரு ரஜினிப்படத்தை கொடுத்து இருக்கீங்க ரஞ்சித்!
கதாநாயகனில் இருந்து மீண்டும் கதையின் நாயகனாக சூப்பர் ஸ்டாரை ஆக்கி இருக்கீங்க!
தூய நரையில் காதல் வழியும் காட்சிகளில் கண்களிலும் ஆனந்தத்தை வழிய வைத்துவிட்டீர்கள் ரஞ்சித்!
மீண்டும் ஒரு “காளியை”, “தளபதியை”, “பரட்டையை” “கபாலியாக” எங்களுக்கு தந்து இருக்கிறீர்கள்!
மகிழ்ச்சி! :)”.