ஸ்வாதி படுகொலை வழக்கில் கைதாகியுள்ள ராம்குமாரின் தாயையும் தங்கையும் நக்கீரன், தினமலர் ஆகிய ஊடகங்கள் படம் எடுத்து வெளியிட்டிருக்கின்றனர், குற்றம்சாட்டப்பட்டர் சார்ந்த குடும்பத்தினரின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக பலர் இந்தப் போக்குக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எல்லோருக்கும் அந்தரங்கம் காத்துக் கொள்ளும் உரிமை உண்டு.
கொலை செய்ததாக கருதப் படுபவனுக்கும் அவனது குடும்பத்தினருக்கும் கூட.
சுவாதி வெட்டப்பட்ட போட்டோவை பார்த்த போது ஏற்பட்ட அதே பதைபதைப்பு
ராம்குமாரின் சகோதரி காவல் நிலையத்தில் முகத்தை மறைத்து நிற்கும் போது ஏற்படுகிறது……..
முன்னர் நடந்த கொலை வழக்குகளில் அவர்கள் வீட்டுபெண்களை இப்படித் தான் நிறுத்தியிருந்தார்களா??????
கொலைக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் ராம்குமாரின் குடும்ப உறுப்பினர் புகைப்படங்களைப் பிரசுரிப்பவர்கள் மனநோயாளிகள். இதில் கடுமையான வர்க்க-சாதியப் பழிவாங்கும் நோக்கம் இருக்கிறது
அதேபோல், குற்றஞ்சாட்டப்பட்ட ராம்குமார் குடும்பத்து பெண்களின் முகங்களை துழாவியெடுக்கும் ஊடகக் கேமராக்களின் அதிகாரத்தையும் சகிக்கமுடியவில்லை.
ஒரு கொலையில் என்ன நடந்தது என மக்கள், நம் வார்த்தையில் சொல்லப்போனால் viewers தெரிந்துக்கொள்ளத்தான் விரும்புவார்கள்.. ஆனால் அவர்களை நாம் இப்படி பார்க்க பழக்கப்படுத்தக்கூடாது நண்பர்களே..!
காவல்துறையின் லத்திகளுக்கும், கேமரா மைக்குகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது..