“ராம்குமார் என்பது முஸ்லிம் பெயர்தான் என்று யஜூர் வேதத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது”

மென்பொறியாளர் ஸ்வாதி கொலை வழக்கில் ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த கைது சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ள கருத்துகளில் சில…

பிரதாபன் ஜெயராமன்

கொடிய கொலையாளி ராம்குமாரின் அரிவாலை விட கொடிய நஞ்சு ஊறிய
நாக்கை உடைய ஒய்.ஜி.மகேந்திரன், S.ve சேகர், கல்யாணராமன் உள்ளிட்ட காவி பயங்கரவாதிகளை
யார் கைது செய்வது?

Muthu Krishnan

ஒய்.ஜி. மகேந்திரனின் சீறிய முயற்சியால் பிலால் மாலிக-அய் அவர் ஹிந்து மதத்திற்கு மாற்றினார், இனி பிலால் மாலிக் ராம் குமார் என்று அழைக்கப்படுவார்… ஆமேன்

சுவாதி கொலை வழக்கில் குற்றவாளி பிடிபட்டான். கொலைவழக்கை திசை திருப்பிய சதிகாரர்கள் தப்பித்துவிட்டார்கள். இந்த சமூகவலைத்தளம்
ஜாதிவெறியையும், மதவெறியையும்
வளர்க்க உதவதுதான் கொலையினும் கொடூரம்

Arul Ezhilan

சுவாதியின் கொலையாளி பிலால் மாலிக் என்னும் முஸ்லீமாக இருக்க வேண்டும் என்று சில சாதி வெறியர்கள் விரும்பினார்கள். ஆனால் அவர் மீனாட்சிபுரத்தைச் சார்ந்த ராம்குமார் என்கிறார்கள்.தமிழக கலகத்தின் அடையாளமாக மீனாட்சிபுரம் இருந்தது. நான் கடந்த வருடம் அங்கு சென்றிருந்தேன். மீனாட்சிபுரம் பாதுகாக்கப்பட வேண்டும்.

ராம்குமாரை பிடித்ததில் ஆச்சர்யமென்ன? அவன் பெயர் ராம்குமாரே அன்றி யுவராஜ் அல்ல…டாட்.

Rk Rudhran

thank god it is ‘ramkumar’

சுவாதி கொலையை வேடிக்கைப் பார்த்த பொதுமக்களை கரித்துக் கொட்டுகிறோம். ஏன், தமிழ் நாட்டிலுள்ள ஒரு பள்ளி, கல்லூரி முதல்வரிடம் அல்லது நிர்வாகத்திடம் என்னைப் போன்ற ஒருவரை அழைத்து அவர்கள் மாணவர்களிடம் பேசவைக்கச் சொல்லுங்கள் பார்ப்போம்.
தமிழர்களின் மானம், வீரம், தீரம் பற்றியெல்லாம் வாய்கிழியப் பேசலாம், சினிமா எடுக்கலாம். அவ்வளவுதான்!

Rajarajan RJ

காந்தியை கொலை செய்தது முஸ்லிம் என்று வதந்தியை பரப்பிவிட்டார்கள்!

ஸ்வாதியை கொன்றதும் ஒரு முஸ்லிம் என்று வதந்தியை பரப்பினார்கள்!

காந்தி கடைசியாக உதிர்த்த வார்த்தைகள் “ஹே ராம்” என்று சொல்வார்கள்!

Vijayasankar Ramachandran

ராம்குமார் என்பது முஸ்லிம் பெயர்தான் என்று யஜூர் வேதத்திலேயெ சொல்லப்பட்டிருக்கிறது.

Abdul Hameed Sheik Mohamed

ராம்குமார் பேசவேண்டும்
………
சுவாதியைக் கொன்றது ராம் குமார் என்ற பொறியியல் பட்டதாரி என செங்கோட்டை அருகே ஆடு மேய்த்து வந்த அவரை காவல்துறையினர் நேற்று நள்ளிரவில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டபோது பிளேடால் தன் கழுத்தை அறுக்க முயன்று அவசர சிகிச்சைப் பிரிவில் ராம்குமார் இருக்கிறார். கைது செய்யப்பட்டவர்தான் கொலையாளி எனில் தமிழகக் காவல்துறையினர் பெரிதும் பாராட்டிற்குரியவர்கள்.

கைது செய்யப்பட்டவர் பெயர் ராம்குமார் என்று இல்லாமல் பிலால் மாலிக் என்றோ அப்துல் காதர் என்றோ இருந்திருந்தால் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை நினைக்கவே அச்சமாக உள்ளது. இணையத்தில் ஆதாரமற்ற தகவல்களைப் பரப்பி மதமோதல்களை ஏற்படுத்த முயற்சித்தவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் எந்தக் குற்றம் நடந்தாலும் இந்த சமூக விரோதிகள் உள்ளே வருவார்கள்
காலையில் சற்றே மயக்கம் தெளிந்த ராம்குமார் குற்றத்தை ஒப்புக்கொண்டு மறுபடி மயங்கிவிட்டதாகவும் கூறுகின்றனர். ராம்குமார் உயிருக்கு எந்த ஆபத்தும் நிகழக்கூடாது. அப்படி நிகழ்ந்தால் இந்த வழக்கின் உண்மைகள் உலகிற்குத் தெரியாமலே போய்விடும்.

ராம்குமாரை பின்தொடர்து கண்காணித்து பிடிக்க முயன்றபோது அவர் தற்கொலைக்கு முயல்வதற்கான அவகாசத்தை ஏன் அளித்தனர் என்று புரியவில்லை. இந்த நபர் ஒரு பயங்கரவாதியோ தொழில்முறை குற்றவாளியோ அல்ல. மேலும் அவரது கிராமத்தைச் சேர்ந்த பலரும் அவரது நடத்தை பற்றி நல்ல அபிப்ராயங்களையே கூறுகின்றனர், பொதுவாக ஸ்ப்லிட் பெர்சனாலிட்டிகள் அப்படி இருக்க வாய்ப்பு உள்ளது. அவர் கைது செய்யப்பட்டபோது மின்சாரம் நிறுத்தப்பட்டிருந்தது என்று சொல்லப்படுகிறது. எனவே கைது சம்பவத்தின்போது என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. அவரை சேதாரமில்லாமல் பிடிப்பதற்கான வாய்ப்புகள் காவல்துறைக்கு இருந்தன என்பதை மறுக்க முடியுமா?

சென்னைக்கு வந்து மூன்று மாதமே ஆன ஒருவர் அதற்குள் ஒரு பெண்ணை காதலிக்க முயன்று கொலை செய்யும் அளவுக்கு தயாராக முடியுமா என்பதை உளவியலாளர்கள்தான் விளக்க வேண்டும். மேலும் முதல்முதலாக ஒரு குற்றத்தைச் செய்யும் ஒருவர் தொழில்முறைக் குற்றவாளியைபோல அவ்வளவு துல்லியமாகச் செயல்பட்டிருக்க முடியுமா என்பதும் பெரும் ஆச்சரியம். அவர் பயன்படுத்திய ஆயுதம், கொலையை திட்டமிட்டதாகச் சொல்லப்படும் விதம், தப்பிச்சென்றவிதம் எதுவும் கணநேர ஆத்திரத்தில் இந்தக் கொலையைச் செய்தவருடையதாக தெரியவில்லை. ராம்குமாருடன் இருந்த ஒரு நபர் பற்றிய கேள்விகளும் எழுப்பப்படுகின்றன. அவர் ராம்குமாருக்கு உதவியாக இருந்தாரா அல்லது ராம் குமார் அவருக்கு உதவியாக இருந்தாரா என்று தெரியவில்லை.

ராம்குமார் உயிருடன் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு முறையாக விசாரிக்கப்பட்டு சந்தேகத்திற்கிடமற்ற வகையில் அவர்தான் குற்றவாளி என்றால் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். அதற்குமுன் அவிழ்க்கப்படவேண்டிய மர்மமுடிச்சுகள் பல இருக்கின்றன.

இரா. முருகவேள்

சுவாதி வழக்கில் கொலையாளி பிடிக்கப்பட்டு ஆரம்ப கட்டம் முடிவுக்கு வந்து விட்டது.

ஆனால் கொலையாளி பிலால் முகமது என்கிற முஸ்லீம் என்று பொய் சொல்லி மதக்கலவரத்தைத் தூண்டிவிட முயன்றவர்கள் மீது இன்னும் ஒரு நடவடிக்கையும் இல்லை.

ஒய்.ஜி. மகேந்திரன் சொல்வது உண்மையானால் யாரோ இந்த வேலையைத் திட்டமிட்டுச் செய்திருக்கின்றனர்.

கலவரம் வெடித்திருந்தால் மேலும் பல உயிர்கள் போயிருக்கும். பலரு்டைய வாழ்க்கை நாசமாகியிருக்கும்.

எனவே மதக் கலவரத்தைத் தூண்டிவிட முயன்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படாதவரை நாம் நிம்மதியடைய எதுவுமில்லை.

Edison Kommedu

சுவாதி கொலைக்கு பிறகான நாட்களில் இருவிதமான நிலைகளை கவனிக்க முடிந்தது.

மகேந்திரன், சேகர் போன்றவர்கள் இந்த கொலையை செய்தது பிலால் மாலிக் என்ற முஸ்லீம் தான், இது ஒரு லவ் ஜிகாத் கொலை என்றெல்லாம் வதந்திகளை பரப்பி திட்டமிட்ட மத கலவரத்துக்கு வித்திட்டார்கள். மறுபுறம் சுவாதியை ஆகச் சிறந்த சமூக சேவகராக சித்தரிக்கும் பணியை ஊடகங்கள் செய்தன. மகேந்திரன் , சேகர் போன்றவர்கள் உசந்த சாதி என்று தங்களை பீற்றிக் கொண்டதை , ஆமா ஆமா அவங்கலாம் ஒசந்த சாதி, சமூகத்துக்கு சேவை செய்யவே பொறந்தவங்க என பொது புத்தியில் பதிய வைக்கும் எல்லா வழிகளையும் மேற்கொண்டன பார்ப்பன அடிமை புத்தி விபச்சார ஊடகங்கள்.

2வதாக காலைல 6 மணிக்கு வேலைக்கு போற பொண்ணுக்கு 5 மணிக்கு என்ன ஆம்பள பையனோட பேச்சு என சிலர் ஒழுக்கப் பாடம் எடுத்தார்கள்.

பார்ப்பனர்கள் என்றாலே ரொம்ப நல்லவர்கள் என பொது புத்தியில் பதிய வைப்பதும் பெண் என்றால் இப்படி இருக்க வேண்டும் என புத்தி சொல்ல க்யூவில் நிற்பதும் நமது புத்தி பேதலித்து சாதி,மத ஆதிக்க சீழ் பிடித்து கிடக்கின்றன என்பதையே காட்டுகின்றன. சாதி,மதம்,பாலினம் தாண்டி சக உயிரை நாம் ஒரு உயிராக மட்டும் பார்க்க கற்றுக்கொள்வது எப்போது?

Govi Lenin

ஸ்வாதியை ‘பிலால் மாலிக்’குகள் கொலை செய்யவில்லை என்பதை இரவு நேரத்திலும் அயராது பணியாற்றி நிரூபித்த காவல்துறைக்கு நன்றி.
கழுத்தறுபட்டிருப்பது ராம்குமாரா, கொலையின் பின்னணியில் உள்ள உண்மைகளா என்பதையும் தெளிவாக்குங்க ஆபீசர்ஸ்.

KN Senthil

ஒரு தடகளப் போட்டியின் உச்சபட்ச சுவாரஸ்யத்துடன் விளம்பர இடைவெளிகளோடு சுவாதியைக் கொலைசெய்த கொலையாளி குறித்து செய்திச் சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு காலையிலிருந்து செய்திகளை நேரலையாக ஒளிப்பரப்பிக் கொண்டேயிருக்கின்றன. தேர்தல் காலம் போல களநிலவரத்திற்குச் செய்தியாளர்கள் வேறு இணைப்பில் வந்து தகவல் சொல்கிறார்கள்.

இந்தப் பொறுக்கிகள் ஒரு கொடூரத்தை தன் டி.ஆர்.பி ரேட்டிங்கிற்காக எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்கிறார்கள்..!! இதற்குள் இருக்கும் உளவியல் அந்த கொலைக்கு நிகரானது. ”முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா..” என்ற பாரதியின் வரி தான் நினைவுக்கு வருகிறது.

Swara Vaithee

இவர் தான் கொலையாளி என்று காவல்துறை ஒருவரை கைகாட்டியிருக்கிறது.. என்ன காரணத்துக்காக அவரைக் கைது செய்தீர்கள் என்று பிரஸ்மீட்டில் ஒருவர் கேட்கிறார்.. “போலீஸால எல்லா விபரத்தையும் உங்ககிட்ட சொல்லிகிட்டு இருக்க முடியாது” என்று சொல்கிறார்.

சரி.. குற்றவாளி பேச முடியாத நிலையில் இருக்கிறார். அவர் வாயையே திறக்காமல் காவல் துறை சொல்வதை மட்டுமே உண்மை என்று நம்ப வைக்கப்பட்டிருக்கிறோமோ?

Villavan Ramadoss

காட்சி ஊடகங்கள் கொடூரமான செய்திப்பசியில் இருப்பது அப்பட்டமாக தெரிகிறது.

இவர்களே ஆள்வைத்து குற்றங்களை செய்து அதனை செய்தியாக்கும் நாள் தொலைவில் இல்லை என்று நினைக்கிறேன் (பல ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு ஜேம்ஸ்பாண்ட் படம் இந்த அடிப்படையில் வந்திருக்கிறது)

Saravanan Chandran

சுவாதி கொலையில் செய்திச் சேனல்கள் சிலவும் மாண்புமிகு மக்களும் நடந்து கொள்ளும் முறையைப் பார்க்கையில் பீப்ளி லைவ் படம்தான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது.

ராம்குமாரின் குடும்பத்தை விட்டு விடுங்கள். மேலும் உயிர்ப்பலிகளை வாங்காமல் விடமாட்டோம் என இறங்கியிருப்பது நல்லதல்ல. கத்தி ஒருபக்கம் மட்டும் பாயாது. ஒருநாள் அது நம்மை நோக்கியும் பாயக்கூடும்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.