நரேந்திர மோடியை விமர்சித்தார் என்பதற்காகவும் ராமனை விமர்சித்தார் என்பதற்காகவும் கைது செய்யப்பட்ட மைசூர் பல்கலைக்கழக பேராசிரியர் மகேஸ் சந்திர குருவை இடைநீக்கம் செய்துள்ளது பல்கலைக் கழக நிர்வாகம்.
கர்நாடக சிவில் சர்வீஸ் சட்டத்தின்படி, பேராசிரியரை இடைநீக்கம் செய்துள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் சி. பசவராஜு தெரிவித்துள்ளார். பேராசிரியருக்கு பிணை கிடைத்தவுடன் இந்த தடை விலக்கிக் கொள்ளப்படும் என்றும் பதிவாளர் தெரிவித்துள்ளார்.
கர்நாடக பியூசிஎல் தலைவர் டாக்டர் லக்ஷ்மி நாராயணன், இந்த வழக்கு குறித்து விசாரித்து வரும், இதுவரை போலீஸ் தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. நரேந்திரமோடி, ஸ்மிருதி இரானி குறித்த அவதூறு பேச்சு (ரோஹித் வெமுலா இரங்கல் கூட்டத்தில் மோடி இரானிக்கு எதிராக மாணவர்கள் ‘கிளர்ச்சி’ செய்ய வேண்டும் என்று பேசியதாக) பத்திரிகைகளில் வந்த தகவல்களின் அடிப்படையில் போடப்பட்டதாகவும் பேரா.குருவுக்கு விரைவில் பிணை கிடைத்துவிடும் என தெரிவித்துள்ளார்.
பேரா. குரு கடந்த 17-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.