கடந்த சில மாதங்களுக்கு முன் தந்தி தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்,
“மக்கள் நலக் கூட்டணியை விட அதிக வாக்குகளை நாங்கள் பெறுவோம். குறைவாகப் பெற்றால் நாம் தமிழர் கட்சியைக் கலைத்துவிட்டு, கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துவிடுகிறேன்” என்று பேசினார்.
இதைப் படியுங்கள்: #வீடியோ: “ஏய், சும்மா லூசு மாதிரி பேசுக்கிட்டு இருக்காதய்யா” தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேராசிரியர் அருணனை ஏசிய சீமான்; சிரித்து ரசித்த பாண்டே!
தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கின்றன. நாம் தமிழர் கட்சி மக்கள் நலக் கூட்டணியைவிட குறைவான வாக்குகளே பெற்றுள்ளது.
அருணனிடம் சீமான் விட்ட சவால் என்னவானது என்பது குறித்து நியுஸ் 7 சேனலுக்கு வழங்கிய நேர்காணலில் சொல்லியிருக்கிறார் சீமான். வீடியோவின் 7.57 வது நிமிடத்தில் இந்த பதில் வருகிறது பாருங்கள்…