சென்னையில் கே.சி.பழனிச்சாமி மகன் சிவராமன் வீட்டில் இருந்து ரூபாய் 1.50 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்த வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரவக்குறிச்சி தற்போதைய எம் எல் ஏவாக இருக்கும் கே.சி. பழனிச்சாமிக்கு மக்கள் எதிர்ப்பு வலுத்து வரும்நிலையில், பணப்பட்டுவாடா மூலம் அதை சரிக்கட்ட முயல்வதாக சொல்லப்படுகிறது.
மக்கள் நலக் கூட்டணி சார்பில் மதிமுகவின் கோ. கலையரசன் இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார்.