சென்னை தீவுத்திடலில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டு திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்கிறார்.
புதுச்சேரியில் நடைபெறும் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் சோனியா, அதைத் தொடர்ந்து மாலை தீவுத் திடலில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார். திமுக தலைவர் கருணாநிதியும் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார். சோனியாவின் வருகையைக் கண்டித்து சென்னை உழைப்பாளர் சிலை முன்பு மாணவ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.