“ஆர்டினரி கேக்கை வீட்டு வேலை செய்யறவங்க சாப்பிடுவாங்க; நாங்க வெல்வெட் கேக் மட்டும் சாப்பிடுவோம்”: அதிமுக ஃபேஸ்புக் பிரபலத்தின் பதிவு

பெங்களூருவில் வசிக்கும் அதிமுகவைச் சேர்ந்த ஃபேஸ்புக் பிரபலம் ப்ரியா குருநாதன். இவர் அளித்துள்ள ஃப்ரி அட்வைஸ் முகநூலில் விறுவிறுப்பான விவாத்தைக் கிளப்பியுள்ளது.
Priya GuruNathan

யார் வீட்டுக்காச்சும் விருந்தாளியா போனா தயவு செஞ்சு சும்மா போங்க.
Just my free advice.
ஆர்வகோளாறுல ஸ்வீட் வாங்கிட்டு போறேனு தர்மசங்கடத்துல தள்ளிடாதீங்க.
எங்க வீட்டுக்கு நேத்து ஒருத்தர் வந்தார் கல்யாண பத்திரிகை குடுக்க. வந்தவர் 6 cake வாங்கிட்டு வந்து குடுத்தார். எதுக்கு பணத்தை விரயம் பண்ணனும். என் பொண்ணு ஓபன் பண்ணி பாத்துட்டு நீயே ஆறும் சாப்பிடுனு சிரிச்சிட்டு போய்ட்டா.
Ordinary cake எல்லாம் இப்போ யார் தொண்டைலயும் இறங்கறதில்ல.
எங்க வீட்டு ப்ரிஜ்ல எப்பவுமே ஒரு choco truffle or Black forest இருக்கும். அதெல்லாம் பழகி போய் இப்போ வேற எதுவும் திரும்பி பார்க்க முடியரதில்ல.
என் பொண்ணு இன்னும் ஒரு படி மேல. என் பையன் Bangalore la software engineer. அவன ஊருக்கு வா னு உயிர எடுத்திடுவா. வரும் போது Red Velvet cake வாங்கிட்டு வரனும் அவன். அது ஒரு small piece Rs 250/- ஒரு கேக்குக்கு அவ்ளோ செலவு பண்ணாதனு பையன திட்டினா, ஆமாம் it’s so expensive , mummyku வேண்டாம் எனக்கு மட்டும் வாங்கிட்டு வந்தா போதும்னு சொல்லுவா…
காலம் இப்படி இருக்கு.
ஆறு கேக்கும் என் வீட்ல வேலை செய்யும் அம்மணிக்கு பாசமா குடுத்தது தான் மிச்சம்….

இந்தப் பதிவுக்கு வந்த பின்னூட்டங்கள் சில..

பொன்னியின் செல்வன்பிரபலமாக ஆசைப்படனும்னா இந்த மாதிரி பதிவு போடனும்…

ஆக்சுவலி ஐ ஹேட் ஒன்லி பீட்சா, பர்க்கர்.. வாட் டு டூ வந்தவங்க கேக்குதான் வாங்கி வந்தாங்க…

வீட்ல வேலை செய்யரவங்கள அடிமை மாதிரி நடத்தனும்.. நம்ம குடுக்கறததான் அவங்க தின்னனும்.. அப்பறம் பாப்ளிசிட்டி தேட இந்த மாதிரி போஸ்ட் போட்டு நாங்க ஆர்த்தடாக்ஸ் அய்யோடக்ஸ்ன்னு பொங்கனும்…

உங்க தலைவி தமிழ்நாட்டு மக்கள அடிமை மாதிரி டீரிட் பண்றதான் நீங்க உங்க வூட்ல பண்ணிட்டு இருகீங்க…

உங்களையும் ஒரு மனுஷியா மதிச்சு கேக் வாங்கிட்டு வந்தாரே ஒரு நல்லவர்… அவர சொல்லனும்.

Haris Sabariஇந்த பதிவில் நியாயமில்லைங்க கா.
அவர்கள் வாங்கி வந்ததை நீங்க சாப்பிடலைனாலும் பரவாயில்லை. இப்படி ஓர் பதிவுஅவசியமா.

நீங்க சொன்ன சாதாரண கேக் கூட கிடைக்காம கஷ்டப்படுறாங்க. அவங்கல எல்லாம் நீங்க அவமானப்படுத்திட்டீங்கனு நினைக்கிறேன்.வாங்கி வந்தவங்களையும் சேர்த்துதான்

Vijay Kumarநீங்க பெரியஅப்பாடக்கரா இருக்கலாம்.
அந்த ஒரு கேக் எதிர்பார்த்து இருக்கிற குழந்தைங்க இருக்குற வீடு நிறைய இருக்கு!
தேவையில்லாத பதிவு
Sivakumar Selvarajபணக்காரத் திமிர் உங்களது பதிவில் நன்றாகத் தெரிகிறது .
நீங்கள் சாப்பிடுவதும் சாப்பிடாததும் உங்களது தனிப்பட்ட விருப்பம்.
ஆனால் அதை வாங்கிவந்தவர் வசதி குறைந்தவராக இருக்கலாம்.
அல்லது உங்களுக்கு அந்த சாதா கேக்கே போதும் என நினைத்து வாங்கிவந்திருக்கலாம்.
ஆதை இப்படி பொதுவாக பதிந்ததைவிட மற்றவர்களையும் இதை பின்தொடரச்சொல்வது ஆணவத்தின் உச்சகட்டம்.
Saravanan Thirumeniகருணாநிதி இல்ல மன்னார்குடி வகையறா , வீட்டு வாரிசுகள்ல யாரைவாவது ஒருத்தர பார்த்து உங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைங்க , அப்போதான் அவங்க திங்குற தீனிக்கு கட்டுபடி ஆகும் … 
Sathish Rahulஇது அவர்களை அவமதிக்கும் செயலாகும். . .குழந்தைக்கு நாம்தான் சொல்லிக்கொடுக்கனும். . . . தமிழரின் விருந்தோம்பலில் இது ஒரு கண்டிப்புக்குண்டான பதிவு
Jeeva Manickamநீங்க புதுப் பணக்காரங்களா? முகேஷ் அம்பானியே மும்பைல இருக்கிற ஒரு சாதாரண வெஜிடேரியன் ஒட்டல்லதான் மசாலா தோசை வாங்கி சாப்பிடறாராம்.
Ebenezer Judeஇதே மாதிரி நீங்க யாரு வீட்டுக்கும் அல்லது பிறந்த நாள் பரிசாக choco Truffle அல்லது Black Forest கேக்கை கொடுக்கும் போது இது எனக்கு புடிக்காது னு அவைங்க வீட்டு நாய் குட்டிக்கு வச்சிடானுங்கனு வைங்க அப்போ உங்க வீட்டுக்கு ordinary cake வாங்கிட்டு வந்தவரின் முகம் ஞாபத்துக்கு வருமோ இல்லையோ …
Parveen Binth Meeran பெரிய பெரிய பணக்காரர்கள் தன் வீட்டு மொட்டை மாடிகளில் நின்றுகொண்டு யாரரவது உணவுப்பொட்டலங்களை மேலிருந்து போடமாட்டார்களா என்று ஏங்கிய சென்னை வெள்ள தருணம் என் நினைவுக்கு வருவதை தவிர்க்கமுடியவில்லை…!( முஹம்மது இப்ராஹீம் ஸிராஜ்)

Srinivasan Perumalswamy இந்த மாதிரி வெட்டி பந்தா பன்னவன் எல்லாம் வெள்ளம் வந்தப்ப சோத்துக்கு என்ன கஷ்டப்பட்டாங்கனு உங்களுக்கு தெரியாதா இது உங்க மகளின் தவறு இல்லை வழர்த்த உங்களின் குற்றம் அந்த ஆறு கேக் சாப்பிட்ட அம்மு கிரேட்

7 comments

  1. என்னா பெரிய பீப் மாதிரி status போடுற ……• Almond Honey – Black Currant – Black Forest – Blueberry – Butter scotch – Choco Fantasy – Choco walnut – Chocolate flavor – Chocolate Truffle – Fruit Feast – Grapes – Irish Coffee – Kiwi Forest – Litchi – Mango – Pineapple – Pista – Red Velvet – Strawberry – Vannila – White Forest இது எல்லாத விட 5 ரூபா honey கேக் எவ்வளவு taste தெரியுமா
    Like · Reply · Just now

    Like

  2. சில பெண்கள் இப்படி பேசுவதை கிராமத்தில் கூட பார்க்கலாம்.ஆண்கள் கூட சிலர் பன்னீரில வாய்கொப்பளிப்பதாக புருடா விடுவார்கள். ஆனால் தம்பி சாய்ராம் சொன்னது போல் ஹனி கேக் கூட சீப் & பெஸ்ட். தான்.
    ஒபாமாவையே கேளுங்க. அவர் மனைவி
    நல்ல அழகி என்பார்.

    Liked by 1 person

  3. என்னதான் இன்னைக்கு Red velvet cake தான் சாப்டுவேன்னு உதார் விட்டாலும்,
    ஒரு காலத்துல ஆரஞ்சு மிட்டாய்க்கும், ஆசை சாக்லேட்டுக்கும் தெருதெருவா அலஞ்ச கேசா தான் இருந்திருக்கும்….
    ‪#‎cake‬ ‪#‎கேக்‬ ‪#‎ADMK‬ ‪#‎NanumCakeStatusPotuten‬

    Like

  4. Ordinary cake
    Choco truffle or black forest
    cake
    பையன் Software engineer

    Redd velvet cake

    வீட்டு க்கு வேலைக்கார அம்மணி.

    தங்கள் பொருளாதார நிலையை அழகாய் சொல்லிருக்கிங்க.

    வாழ்த்துக்கள்.

    பழைய சோறோ
    Red velvet cake எதை திண்ணாலும்

    தொண்டைக்குழிக்கு கீழே
    #மலம் தான் சகோதரி.

    அந்த சாதாரண கேக் வாங்கி வந்தவரின் வீட்டு கல்யாணத்திற்கு போய்விடாதீர்கள்.

    அந்த கல்யாண விருந்தில் உங்கள் இலையில் பரிமாறப்ப்படும் சோறு கூட உனக்கு அசிங்கமாய் தெரியும்.

    நாம் நீங்கள் அனைவரும் மலம் சுமக்கும் மனிதர்களே !

    Like

Kuben -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.