’ஜட்டியோட நிக்கவைத்து போட்டோ எடுத்தது ஏன்?’ நீதிபதிகள் கேள்வி

உடுமலைப் பேட்டையில் பொறியியல் மாணவரும் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட தலித் இளைஞருமான சங்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் என ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் புகைப்படம் பத்திரிகைகளில் வெளியானது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குக் தொடர்ந்தது.

இந்த வழக்கு விசாரணையில், நீதிபதிகள் நாகமுத்து, ஜெயச்சந்திரன் ஆகியோர் “பத்திரிகைகளில் வெளியான புகைபட்டத்தில் உள்ளபடி, கைது செய்யப்பட்டவர்களுக்கு உரிய ஆடையை வழங்காமல் போலீஸ் நிறுத்தியது ஏன்? ” என்று கேள்வி எழுப்பியதுடன் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

அண்மையில் நீதிபதி ஒருவர் தனக்குக் கீழே பணியாற்றும் உதவியாளரை ஜட்டியை துவைக்கவில்லை என்பதற்காக பணிநீக்கம் செய்துவிடுவேன் என மிரட்டியிருந்தார். அவர், உதவியாளருக்கு அனுப்பிய மெமோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. பிறகு, வெகுஜன ஊடகங்களிலும் வெளியானது. அந்தப் பெண் உதவியாளரை நீதிபதி வீட்டு வேலைகளுக்குப் பயன்படுத்தியது குறித்தும் அடிமைத்தனமான செய்கையை கண்டித்தும் செய்திகள் வெளியாகின. ஆனால்,  அது குறித்து எந்த நீதிமன்றமும் நீதிபதியும் தாமாக முன்வந்து வழக்கு தொடுக்கவில்லை. அந்த நீதிபதியின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

அதேபோல், தேசியக் கொடியை எரித்தாக திலீபன் மகேந்திரன் என்ற இளைஞரின் கையை உடைத்தது காவல்துறை. அது குறித்தும் செய்திகள் வெளியாகின. ஆனால் மேற்கண்ட சம்பவங்களில் எல்லாம் மனிதநேயத்தைக் காட்டாத நீதிமன்றம், கொலையாளிகள் எனப் படுவோர், ஜட்டியோடு நிற்க வைக்கப்பட்டதை தாமாக முன்வந்து கண்டிக்கிறது.

One thought on “’ஜட்டியோட நிக்கவைத்து போட்டோ எடுத்தது ஏன்?’ நீதிபதிகள் கேள்வி

  1. It very interesting to note that about 25% of the people are subjected to violation of haman rights, insult, indignity, oppression and suppression and discrimination every day on the lines of caste, but no judge of the High Court or Supreme Court have ever come forward to condemn such inhuman practice. The young and innocent lovers for the sin of marrying out of their love, have been eliminated by these rascals but they enjoy the sympathy of the High Court Bench headed by Justice Nagamuthu.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.