நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபிறகு, இந்திய மரபு மருத்துவ முறைகளுக்கென தனி அமைச்சகம் ‘ஆயுஷ்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. இந்த அமைச்சகம் 2015-ஆம் ஆண்டு உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு உலகெங்கிலும் யோகா சொல்லித்தருவதற்காக ஆயுஷ் அமைச்சகம் யோகா பயிற்சியாளர்களை அனுப்பி வைத்தது. யோகா பயிற்சியாளர்கள் தேர்வை மத்திய அமைச்சகமே நடத்தியது. இதற்கு 3841 முஸ்லீம்கள் உட்பட பலர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் ஒரு முஸ்லீம்கூட நேர்முகத் தேர்வில் பங்கேற்கக் கூட அழைக்கப்படவில்லை.
முஸ்லீம்கள் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டபோது, “மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் விதிகளின் படி முஸ்லிம்களுக்கு ஆயுஷ் அமைச்சகத்தில் பணி கிடையாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. The Milli Gazette இதழ் இந்த உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளது.
‘அனைவருக்குமான வளர்ச்சி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி’ என முழங்கிய மோடியின் பேச்சுக்கு என்ன பொருள் என கேட்டுள்ளது The Milli Gazette.
ஆயுஷ் அமைச்சகம், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, யோகா, நேச்ரோபதி, ஹோமியோபதி ஆகிய மரபு வழி மருத்துவத்தை உள்ளடக்கியது.