“நான் ஜட்டியை துவைக்கச் சொல்லவில்லை; பனியனைத்தான் துவைக்கச் சொன்னேன்” என சத்திய மங்கலம் சார்பு நீதிமன்ற நீதிபதி டி.செல்வம் விளக்கம் தெரிவித்திருக்கிறார். சார்பு நீதிமன்றத்தில் தனக்குக் கீழே அலுவலக உதவியாளராக பணிபுரியும் வசந்தி என்பவருக்கு, தனது உள்ளாடைகளை துவைக்கவில்லை என்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பேன் என்று மெமோ அனுப்பினார்.
உள்ளாடையை துவைக்காவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை?!! : பெண் உதவியாளருக்கு சார்பு நீதிபதி நோட்டீஸ்…
இந்தத் தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி, வைரலானது. இந்நிலையில் இந்த மெமோ குறித்து எண்டீடிவி சானலுக்கு அளித்த பேட்டியில், “வீட்டு வேலை செய்வதற்காகத்தான் அவர் நியமிக்கப்பட்டார். நீதிமன்றம் வகுத்த வழிகாட்டுதல் நடைமுறைகளின் படிதான் அவருக்கு துணிகள் துவைக்கும் பணிகள் தரப்பட்டன. நான் ஜட்டியை துவைக்கச் சொல்லவில்லை; பனியனைத்தான் துவைக்கச் சொன்னேன்” என்றும் நீதிபதி செல்வம் பேசியுள்ளார்
நீதிமன்ற உதவியாளராக இருக்கும் 48 வயதான வசந்தி, நீதிபதி செல்வம் வீட்டில் பெருக்குவது, துடைப்பது, துணிதுவைப்பது போன்ற பணிகளைச் செய்ய வற்புறுத்தப்பட்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல், நீதிபதி மனைவியின் , அவதூறான பேச்சுகளுக்கும் ஆளாகியுள்ளார்.
இரண்டு பெண் குழந்தைகளுக்கு அம்மாவான வசந்திதான், அவருடைய குடும்பத்தில் சம்பாதிக்கும்ஒரே ஆள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக வேறு வழியில்லாமல் இதை சமாளித்த நிலையில்தான், அவருக்கு இப்படிப்பட்ட மெமோ வழங்கபட்டிருக்கிறது.
நீதிபதிகள் பலர் ஜமீன் தாரர்களாக தங்களை நினைத்துக்கொண்டு, தனக்கு கீழ் உள்ளவர்களை நவீன அடிமைகளாக நடத்துவதாக, நீதிமன்ற உதவியாளர்கள் கடுமையான விமர்சனம் முன் வைத்துள்ளனர்.