மே 16ஆம் தேதி தேர்தல்: தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன!

தமிழகம், கேரளா, கர்நாடகா, அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநில அரசுகளின் பதவிக் காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இந்த 5  மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியை வெள்ளிக்கிழமை பிற்பகல் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் சைதி டெல்லியில் அறிவித்தார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட இந்த நிமிடத்திலிருந்து , தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன என்பதை குறிப்பிட்டு சொன்னார் நஜீம் சைதி.

அசாம்: 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படும். ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தல்; ஏப்ரல் 11-ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல்

மேற்குவங்கம்: 6 கட்டமாக தேர்தல். ஏப்ரல் 4 முதல் கட்டத் தேர்தல். இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 17, மூன்றாம் கட்டம் ஏப்ரல் 21, நான்காம் கட்டம் ஏப்ரல் 25, ஐந்தாம் கட்டம் ஏப்ரல் 30, ஆறாம் கட்டத் தேர்தல் மே 5.

கேரளம்: ஒரே கட்டமாகத் தேர்தல். மே 16-ஆம் தேதி

தமிழ்நாடு: ஒரே கட்டமாகத் தேர்தல். மே 16-ஆம் தேதி

புதுச்சேரி: ஒரே கட்டத் தேர்தல். மே 16-ஆம் தேதி.

வாக்கு எண்ணிக்கை அனைத்து மாநிலங்களிலும் மே 19-ஆம் தேதி நடைபெறும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.