”செக்ஸி துர்கா” சர்ச்சையை கிளப்பிக் கொண்டுவருகிறது ஒரு சினிமா!

சனல்குமார் சசிதரன், மலையாள திரைப்பட இயக்குநர். மாற்று திரைப்பட முயற்சியாளர். இவருடைய ஒரல்போக்காம் என்ற படம் விருது பெற்றது. இந்தப் படத்தின் நாயகியாக எழுத்தாளரும் சமூக செயல்பாட்டாளருமான மீனா கந்தசாமி நடித்திருந்தார்.

நாயகியாக மீனா கந்தசாமி
நாயகியாக மீனா கந்தசாமி

சனலின் அடுத்த படைப்பாக அறிவிக்கப்பட்டிருக்கிறது ‘செக்ஸி துர்கா’. பெயர் அறிவிப்பே சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.குறிப்பாக, கருத்துரிமை-சகிப்பின்மை பறிபோவதாக படைப்பாளிகள் அச்சப்படும் சூழலில் இந்தத் தலைப்பு ஏன் என்ற கேள்விக்கு, “ஓர் படைப்பின் பெயர் மாற்றம் செய்வது மிகப்பெரும் சரணாகதி” என்கிறார் சனல். எக்காரணம் கொண்டும் இந்தப் பெயரை மாற்றப்போவதில்லை என்றும் சொல்கிறார்.

sanalkumar sasidharan

இந்தப்படம் எதைப் பற்றியது?

“கேரள சமூகத்தின் தற்போதைய சூழலை பகடி செய்கிறது இந்தப் படம். இந்த சமூகம் பாலியலை, பெண்களை, அந்தரங்கத்தை எப்படி அணுகுகிறது என்பதை சொல்ல முயற்சித்திருக்கிறேன்”

பரபரப்பை உண்டாக்கத்தான் இந்தத் தலைப்பா?

“இல்லவே இல்லை. வேறு எந்தப் பெயராலும் இந்தப் படத்தை முழுமை செய்ய முடியாது. ஒரு திரைக் கலைஞனாக என் திரைப்படத்துக்கு பொருத்தமான தலைப்பை தீர்மானிக்கும் சுதந்திரத்தை விரும்புகிறேன். எண்ணற்ற பெண்கள் இந்தப் பெயருடன் இருக்கிறார்கள். நான் விட்டுத்தர மாட்டேன்.” என்கிறார் சனல் அழுத்தம் திருத்தமாக.

கேரளத்தில் இந்துத்துவ சக்திகளில் எழுச்சி பெற்றிருக்கக்கூடிய காலக்கட்டத்தில் இந்தப் பெயர் நிச்சயம அவர்களைப் பிரபலப்படுத்தும். சனல்தான் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.

இந்தப் படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ராஜஸ்ரீ தேஷ்பாண்டே. ஆங்க்ரி இண்டியன் காட்டஸஸ் படத்தில் நடித்தாரே, அவரே தான். நிச்சயம் மிகப் பொருத்தமான தேர்வுதான்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.