புதுச்சேரி-கடலூர் சாலையில் சிங்காரவேலர் சிலை அருகே மக்கள் நலக்கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்ட விளக்கப் பொதுக்கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.மாநில ஒருங்கிணைப்பாளர் ஆர்.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆர்.ராஜாங்கம், தேவ.பொழிலன், அ.சந்திரசேகரன், லெனின் முன்னிலை வகித்தனர். மக்கள் நலக்கூட்டணி இணையதளத்தை மதிமுக பொதுச் செயலர் வைகோ துவக்கி வைத்தார். கூட்டணி இலச்சினை (லோகோ) து.ராஜா எம்.பி. வெளியிட்டார். குறைந்தபட்ச செயல்திட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வெளியிட முத்தரசன், ராமகிருஷ்ணன். கே.நாராயணா பெற்றுக் கொண்டனர். முன்னதாக சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், எம்.எல். ஏ,விடுதலை ச்சிறுத்தைகள் பொதுச்செயலாளர் துரை. ரவிக் குமார், ம.தி.மு.க வின் மல்லை சத்தியா உள்ளிட்ட தலைவர்கள் பேசினர். கூட்டணி கட்சி களின் தொண்டர்கள் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்றனர்.
மக்கள் நலக் கூட்டணி தேர்தல் பிரச்சாரத்தை உற்சாகமாக தொடங்கியிருக்க, அதன் தலைவர்களும் உற்சாகமாக செல்ஃபி எடுத்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர்
ஜி. ராமகிருஷ்ணன் தன்னுடைய முகநூலில் பதிந்துள்ள பதிவில்…
“இது ஊழலை ஒழிக்கும் செல்பி, மீத்தேன் திட்டம் தடுக்கும் செல்பி, மதுவிலக்கு அமலாக்கும் செல்பி,
தீண்டாமை ஒழிக்கும் செல்பி, கொள்கை அரசியல் முழங்கும் செல்பி …” என்று தெரிவித்திருக்கிறார்.
தீண்டாமை ஒழிக்கும் செல்பி, கொள்கை அரசியல் முழங்கும் செல்பி …” என்று தெரிவித்திருக்கிறார்.