உச்ச நீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து மதுரை புறநகர் பகுதியில் சீமானின் ஆதரவாளர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டை நடத்த பாலமேடு செல்ல இருப்பதாக சீமான் அறிவித்துள்ளதால், சீமானைக் கைது செய்ய தற்போது மதுரையில் அவர் தங்கியுள்ள ஓட்டலில் போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.