மார்கழி மாதம் அதிகாலையில் எம். எஸ். சுப்புலட்சுமியின் விஷ்ணு சகஸ்ரணாமம் பாடலைக் கேட்கலாம் என யூ ட்யூப் திறந்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இந்தப் பாடல் உரிமை ‘சரிகம’ நிறுவனத்துக்குச் சொந்தமானது என அறிவிப்புதான் வந்தது, பாடலைக் காணோம். இத்தனை நாள் வரை கேட்டுவந்த பாடல் இன்று இசை வெளியீட்டு நிறுவனத்தின் காப்புரிமை தலையீட்டால் தடை செய்யப்பட்டுள்ளது என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் எழுதி வருகின்றனர்.
எம். எஸ். சுப்புலட்சுமி போன்ற முன்னோடி கர்நாடக இசைப்பாடகர்களின் பாடல்களை காப்புரிமை என்ற பெயரில் ‘அடைத்து’ வைப்பது இசை உலகத்துக்கு நல்லதல்ல என்பதை ரசிகர்கள் வலியுறுத்துகின்றனர்.
6 thoughts on “எம். எஸ். சுப்புலட்சுமியின் பாடலைத் தடை செய்த யூ ட்யூப்!”