“திருமாவளவன் பெண்ணிழிவு செய்தாரா?”: மீண்டும் ஒரு விளக்கம்!

சமீபத்தில் திருமாவளவனின் வீடியோ பேச்சு குறித்து காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாளர் கண்ணன் சுந்தரம்  முகநூலில் (டிசம்பர் 26) ஒரு பதிவு எழுதியிருந்தார். அதில் திருமாவளவனின் பேச்சு சாதியத்தை வலியுறுத்துவதாக குறிப்பிட்டிருந்தார்.  அதற்கு கவிஞர் யாழன் ஆதி எதிர்வினை ஆற்றியிருந்தார்.

அந்தப் பதிவு இங்கே… இந்நிலையில் எழுத்தாளர் பிரேம் இந்த விஷயத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

“தோழர் திருமா பெண் முதன்மை உணராதவரா?

பெண்ணியத்தைத் தன் அறிவுமுறையில் இணைத்துக்கொள்ளாதவரா?

பெரியார் ஒரு ஃபாசிஸ்ட் என்று நிருவிவிட்டார்கள், பிறகு தலைவர் திருமா பெண்ணடிமைத்தனத்தை ஆதரிப்பவர் என்று நிறுவிவிட்டால் தமிழரசியல், தலித்தரசியல் இரண்டையும் கீழிறக்கம் செய்துவிடலாம்.

அதற்குப் பிறகு சனாதன சத்திய தர்மத்தை எந்தக் குறைவுமின்றி பி.ஏ.கிருஷ்ணன் போன்ற முகமூடி பஜரங்கிகளின் வழி நின்று கொண்டாடி மகிழலாம்.

தோழர்.திருமா பெண்ணிழிவு செய்தார் என்பதை சாதிவெறியர்களின் மொழியை அவர்களுக்கு எதிராக திருப்பித் தாக்குதல் தொடுக்கும் பேச்சின் வழியாக நிறுவ முடியும் என்றால். தமிழக அறிவுத்துறை-இலக்கியவாதிகள்-ஊடகத்துறையினரின் தினவாழ்வு பேச்சுமரபு வன்கொடுமை சட்டத்தின் வழி தண்டிக்கப்படத் தக்கதாக உள்ளதை நாம் பதிவு செய்தாக வேண்டும்.
பெண்ணியம் பெண்சமத்துவம் ஏற்காத தலைமையல்ல தமிழக தலித் அரசியலின் தலைமை. தோழர்.திருமா பெண்ணியம், சூழலியம் கொண்ட தலித் அரசியலை வலியுறுத்தி வருபவர்.

பேச்சு வழக்கில் தன் மக்களிடம் சீற்றத்தைப் பகிர்ந்து கொள்ளும் அவருடைய வெளிப்பாட்டில் உள்ள பெண் பற்றிய குறிப்பு சாதிவெறியர்களின் சாதிகாக்கும் பெண்மை பற்றிய கேலி.

அதில் அவருக்குள் ஒலிந்தும்-மறைந்தும் வெளிப்பட ஒன்றும் இல்லை. “தாயாய் நிற்கும் எங்கள் தலைவனே” என பெண்கள் அவரை நேசிப்பதைப் பற்றியெல்லாம் ஊடகங்கள் நமக்குச் சொல்லித்தருவதில்லையல்லவா!”.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.