தமிழ்நதி 'விரும்பித் தொடப்படுகிற தொடுதல்களைக்கூட ஒரு பெண் மறந்துபோகக்கூடும். ஆனால், தன்னுடல் விருப்பமின்றி ஒரு பொருளைப்போல கையாளப்பட்ட அவமானத்தையும் அருவருப்பையும் அவளால் ஒருபோதும் மறக்கவியலாது. முதுமை கூடி, நினைவு தடம்மாறிப் பிறழும்வரை மனதில் ஊர்ந்து திரியும் புழு அது' பாலியல் ஒழுக்கம் (அதுவும் சமூகத்தால் வரையறுக்கப்பட்டதே. வர்க்கங்களுக்கேற்றபடி பாரபட்சமானதே) என்பது வேறு; தன்னுடைய கடமையைச் செய்ய பாலியல் லஞ்சம் கேட்பது, எதிர்ப்புக் காட்டவியலாத நிலையில் நிராதரவான நிலையில் உள்ளவர்களிடம் பாலியல் சுரண்டல் செய்வது, பாலியல் சார்ந்து உளவியல்ரீதியான … Continue reading பாலியல் சுரண்டலில் கௌரவமானது, கௌரவமற்றது என இரண்டு இல்லை |தமிழ்நதி
குறிச்சொல்: me too
தமிழர், ஆரியம், திராவிடம் என்று சாயம் பூசிக்கொள்கிறார்கள் |கொற்றவை
கொற்றவை என் குழந்தை பருவத்திலிருந்து நான் கடைசியாக இந்த வேலையே வேணாம் “மானத்தோட” பொழைச்சா போதும் என்று முடிவெடுத்து என் வேலையை ராஜினாமா செய்த 42, 43 வயது வரை நான் ஏதோ ஒரு வகையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிக் கொண்டே தான் இருந்தேன். (வேலையிடத்தில் நீ கொற்றவையா என்றா பார்க்கப் போகிறார்கள்? அங்கு நான் வெறும் கூலிக்கு என் உழைப்புச் சக்தியை விற்க வந்த ஒரு பண்டம்… அவ்வளவே). எனக்கு 10, 11 வயது இருக்கும் … Continue reading தமிழர், ஆரியம், திராவிடம் என்று சாயம் பூசிக்கொள்கிறார்கள் |கொற்றவை
பீடோபைல்களை ஆதரிக்க வேண்டாம்: ராஜராஜன் ஆர்.ஜே
ராஜராஜன் ஆர்.ஜே வைரமுத்து எனக்கு பிடித்த கவிஞர். அவரது பல பாடல்களை, சில கவிதைகளை மிகவும் ரசித்து இருக்கிறேன். பலமுறை பகிர்ந்தும் எழுதியும் இருக்கிறேன். ஆனால், சமீபத்தில் நான் பார்த்த இரண்டு படைப்புகள், அவரது ஆள்மன வக்கிரத்தை வெளிப்படுத்துவதாகவே இருந்தது. ஒரு கவிதை. காமத்தை சொட்ட சொட்ட எழுதிய ஒரு கவிதை போல பல வரிகளை எழுதிவிட்டு கடைசிவரியில் ஒரு குழந்தைக்கும் தாய்க்குமான கவிதையாக மாற்றி இருப்பார். அவரது கவித்திறமையோடு அவரது வக்கிரமும் வெளிப்பட்டிருக்கும். மூன்று நாட்களுக்கு … Continue reading பீடோபைல்களை ஆதரிக்க வேண்டாம்: ராஜராஜன் ஆர்.ஜே
கொடூரமான வழக்கறிஞர்கள் | சுரேஷ் கண்ணன்
சுரேஷ் கண்ணன் ‘இந்த வழக்கை தொடர்ந்து விடுவாயா?’ என்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அச்சமூட்டுவதுதான் இதன் நோக்கம். இது போன்ற பாலியல் வன்முறை விவகாரங்களை ‘அரசியல்சரித்தன்மையுடன்’ கறாராக எழுதுகிறோம் என்கிற அசட்டுத்தனத்துடன் கிளம்பியிருக்கும் சிலர், மேற்கண்ட வில்லன்களை விடவும் கொடூரமாக யோசித்து எழுதுகிறார்கள். அத்தனை கேவலமான சிந்தனையாக, தரவுகளாக அவை இருக்கின்றன. பாதகம் செய்த ஆசாமிகளே ‘பேஷ்.. பேஷ்’ என்று மகிழும்படி ஓவர்டைம் வக்கீல்களாக இவர்கள் மாறி விடுகிறார்கள். * தகுந்த ஆதாரமோ, சாட்சியமோ இன்றி ஓர் ஆணின் மீது … Continue reading கொடூரமான வழக்கறிஞர்கள் | சுரேஷ் கண்ணன்