குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பெசண்ட் நகரில் கோலம் போடும் போராட்டத்தை முன்னெடுத்தவர்களை கைது செய்தது தமிழக போலீசு. கைதானபோது போராட்டத்தில் ஈடுபட்ட மதன்குமார் உள்ளிட்டோர் "வெட்கம் கெட்ட அரசே கோலம் போடுவது குத்தமா?" என முழக்கம் எழுப்பினர். https://www.facebook.com/madhankumar.madhankumar.376/videos/1708861345917723/
குறிச்சொல்: #CAAProtest
“குடியுரிமை திருத்தச் சட்டத்தால் வங்கதேச இந்துக்கள் தாக்கப்படுவார்கள்”
ஏஐடியுசி அசாம் மாநிலக் குழுவின் பொதுச் செயலாளர் தோழர். ரமென்தாஸ் (Ramen Das) தனது மனைவியின் மருத்துவ ஆலோசனைக்காக சென்னை வந்திருந்தார். அசாமின் வளங்கள், அசாம் ஒப்பந்தம், தேசிய குடியுரிமை பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் என பல்வேறு பொருள் குறித்து பீட்டர் துரைராஜுடன் பேசுகிறார். கேள்வி: நீங்கள் எப்படி ஏஐடியுசி அரங்கத்திற்கு வந்தீர்கள்? பதில்: கௌகாத்தி பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி, படித்தேன். முதலில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்திலும், பின்பு இளைஞர் பெருமன்றத்தி்லும் பணியாற்றினேன். அப்போது இருந்த தலைவர்கள் … Continue reading “குடியுரிமை திருத்தச் சட்டத்தால் வங்கதேச இந்துக்கள் தாக்கப்படுவார்கள்”
மங்களூருவில் போலீசு துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் இருவர் பலி: உறுதி செய்தது போலீசு
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மங்களூருவில் நடந்த போராட்டத்தை ஒடுக்க நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இரண்டு போராட்டக்காரர்கள் பலியாகியுள்ளனர். இதை மங்களூரு போலீசு உறுதி செய்துள்ளது. https://twitter.com/IndiaToday/status/1207686276167749632?s=20 போராட்டங்களை அடுத்து மங்களூருவில் ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கூடியிருந்த போராட்டக்காரர்களை களைக்க போலீசார் முதலில் தடியடி நடத்தியதாகவும், பின்னர் போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதாகவும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. கல்வீச்சு சம்பவங்களை தடுக்க துப்பாக்குச் சூடு நடத்தப்பட்டதாகவும் அதில் இருவர் பலியானதாகவும் போலீசு தரப்பு கூறுகிறது. இந்த பலிக்கு … Continue reading மங்களூருவில் போலீசு துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் இருவர் பலி: உறுதி செய்தது போலீசு
“திரு. மோடி…என் ஆடையால் என்னை அடையாளம் காண முடியுமா?”
டிசம்பர் 15-ஆம் தேதி, ஜார்க்கண்டில் நடந்த பேரணியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “கலவரக்காரர்களை அவர்களின் ஆடைகளால் அடையாளம் காண முடியும்” என்று கூறினார். குடியுரிமை திருத்தச் சட்டம் பாரபட்சமானது இசுலாமியர்களுக்கு எதிரானது என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்புக்கள் வெடித்த நேரத்தில் மோடியின் பேச்சு அதை உறுதி செய்யும்வகையில் இருந்தது. நான்கு நாட்களுக்குப் பிறகு, சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் கொச்சியில் போராட்டம் நடத்தியபோது. ஒரு இளம்பெண் பிடித்திருந்த பதாகை அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. 18 … Continue reading “திரு. மோடி…என் ஆடையால் என்னை அடையாளம் காண முடியுமா?”
பாகிஸ்தானில் இருந்து வரக்கூடிய முசுலீம்களுக்காகத்தான் போராடுகிறார்கள்: மாலன்
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இந்தியாவில் நடக்கும் போராட்டங்கள், ‘பாகிஸ்தானிலிருந்து வரக்கூடிய முசுலீம்களுக்காகத்தான் என பத்திரிகையாளரும் மோடி அரசின் ஆதரவாளருமான மாலன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கிளர்ந்தெழுந்த போராட்டங்கள் குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் கலந்துகொண்ட மாலன், ‘இந்தியாவில் இருக்கும் முசுலீம்களுக்கு பிரச்சினை இல்லை. எதிர்கால சந்ததியினருக்கும் பிரச்சினை இல்லை. பாகிஸ்தானில் இருந்துவரக்கூடிய இசுலாமியார்களுக்குத்தான் இந்தப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. காங்கிரஸ் கட்சி இவங்களுக்கு ஏன் குடியுரிமை கொடுக்கவில்லை என்றுதான் போராடுகிறது’ என்றார் … Continue reading பாகிஸ்தானில் இருந்து வரக்கூடிய முசுலீம்களுக்காகத்தான் போராடுகிறார்கள்: மாலன்
‘இரண்டு குஜராத்தி குண்டர்கள்’: மோடி – ஷாவை விமர்சித்தவர் பாஜகவிலிருந்து நீக்கம்!
இந்தி பேசும் மாநில மக்களை கடந்த ஐந்து ஆண்டுகளாக இரண்டு குஜராத்தி குண்டர்கள் ஏமாற்றி வருகிறார்கள்
இவர்களின் வாழ்தலுக்கான போராட்டத்தை வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டுமா?
சிவபாலன் இளங்கோவன் ஒட்டுமொத்த மாணவர்களின் போராட்டத்தின் முகமாக இருக்கும் அந்த பர்தா அணிந்த, கண்ணாடிபோட்ட பெண்ணிடம் பத்திரிக்கையாளர் “எதற்காக இந்த போராட்டம்” என கேட்கும்போது, அந்த பெண் ஒரே வார்த்தை தான் அதற்கு பதிலாய் சொல்கிறாள் “For existence”. இதை சொல்லும்போது அவள் அத்தனை பதட்டமாக இருக்கிறாள். அவளது கரங்களை இறுக்கமாக பற்றிக்கொண்டு ‘பயப்பட வேண்டாம்’ என சொல்ல வேண்டும் போல் இருக்கிறது. ஆனால் பயப்பட வேண்டாமா? “survival” ஐ தவிர மனிதனுக்கு வேறு என்ன தலையாக … Continue reading இவர்களின் வாழ்தலுக்கான போராட்டத்தை வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டுமா?
ஜெலட்டின் குச்சி!
ரத்தவெறி கொண்டவர்கள் நாக்கை சப்புக்கொட்டிக் கொண்டு காத்திருக்கிறார்கள்!