“எங்கே அந்த பிலால், அந்த தேசத் துரோகிக்கு பாடம் கற்பிக்கிறோம்”: காஷ்மீரி மாணவர்கள் மீது இந்துத்துவ அமைப்பினர் தாக்குதல்

காஷ்மீரில் ஒரு வார காலமாக மக்கள் போராட்டம் வலுத்துவருகிறது. 42 பேர் இதில் இறந்துள்ளனர். இந்நிலையில் பல்கலைக் கழகங்களில் பயிலும் காஷ்மீரி மாணவர்களை இந்துத்துவ அமைப்பினர் தாக்குவது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. போபாலில் உள்ள பரகத்துல்லா பல்கலையில் உமர் ரஷித் என்ற ஆய்வு மாணவர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். விடுதி காப்பாளர்கள் முன்பே இவர் தாக்கப்பட்டிருக்கிறார். காரணம் காஷ்மீரி என்பது மட்டும்தான். இவரைத் தாக்கியது சக மாணவர்களே. இதேபோல், ஹைதராபாத் பல்கலையில் ஆராய்ச்சி பிரிவு மாணவரான அமோல் சிங் (25), … Continue reading “எங்கே அந்த பிலால், அந்த தேசத் துரோகிக்கு பாடம் கற்பிக்கிறோம்”: காஷ்மீரி மாணவர்கள் மீது இந்துத்துவ அமைப்பினர் தாக்குதல்

ஏபிவிபியின் அடுத்த இலக்கு அலகாபாத் பல்கலைக்கழகம்: ரோஹித் வெமுலா பாணியில் பல்கலைக்கழகத்தால் அலைக்கழிக்கப்படுகிறார் ரிச்சா சிங்

கன்னய்யா குமார், பிணையில் வெளியாகி ஜேஎன்யூ பல்கலை வளாகத்தில் ஆற்றிய உரை, பலருக்கு மகிழ்ச்சியையும் சிலருக்கு கலக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக பாஜகவுக்கும் அதைச் சார்ந்த ஆர் எஸ் எஸ் அமைப்பினருக்கும். இந்த வகையில் தான் கன்னய்யாவின் பேச்சுக்குக் கிடைத்த ஆதரவு குறித்து கேட்டபோது, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு, ‘மாணவர்கள் அரசியல் செய்யக்கூடாது’ என்று கருத்து சொன்னார். அந்தக் கருத்து பாஜகவின் மிகப் பெரிய மாணவர் அமைப்பான ஏபிவிபிக்கும் பொருந்துமா என்கிற கேள்வியை பலர் முன்வைத்தனர். … Continue reading ஏபிவிபியின் அடுத்த இலக்கு அலகாபாத் பல்கலைக்கழகம்: ரோஹித் வெமுலா பாணியில் பல்கலைக்கழகத்தால் அலைக்கழிக்கப்படுகிறார் ரிச்சா சிங்

தேசவிரோத குற்றவாளியா டி.ராஜாவின் மகள்…?

தமிழ்நாடு சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாக இருக்கும் வலது கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜா, தமிழகத்தின்  அடித்தட்டு மக்களுக்கும் அதிக பரிச்சயமானவர். தமிழ்நாட்டின் அத்தனை முக்கிய பிரச்சனைகளுக்கும், பாராளுமன்றத்தில் உரத்து ஒலிக்கும் ஒரு சில குரல்களில் டி.ராஜாவின் குரலும் முக்கியமான ஒன்று. அவரின் மகள் அபராஜிதா ராஜாவின் பெயர்தான்,  கடந்த இரண்டு நாட்களாக டெல்லி பத்திரிக்கைகளில் முக்கிய இடம் பிடித்துள்ளது. "புலிக்கு பிறந்தது" என்ற சொல்லுக்கு சிறிதும் பிழை இல்லாமல் வளர்ந்த பெண்ணான அபராஜிதா, ஐந்தாண்டுகளுக்கு முன், … Continue reading தேசவிரோத குற்றவாளியா டி.ராஜாவின் மகள்…?

செத்தவன் எந்த சாதிக்காரன் என்று உறுதி செய்துகொண்டு அழச்சொல்கிறார் சமூக ஆர்வலர் பானு கோம்ஸ்

ஹைதராபாத் பல்கலையில் மரணமடைந்த ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமூலா,  தலித் அல்ல, அவர் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர் என்று தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் சமூக ஆர்வலர் பானுகோம்ஸ். இந்தப் பதிவுக்கு கடும் கண்டனங்கள் கிளம்பிய நிலையில் அவர் அந்தப் பதிவை நீக்கிவிட்டார். தலித்தாக இருந்தாலும் வேறு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர் இறுதிவரை போராடியது இந்துத்துவத்தை எதிர்த்துதான் என்பதை, பானு கோம்ஸ் போன்ற வலதுசாரிகள் தெரிந்துகொள்ள வேண்டும் என பலர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து … Continue reading செத்தவன் எந்த சாதிக்காரன் என்று உறுதி செய்துகொண்டு அழச்சொல்கிறார் சமூக ஆர்வலர் பானு கோம்ஸ்

தலித் மாணவர்களை விடுதியில் இருந்து நீக்கிய பல்கலைக்கழகம்: தெருவில் படுத்து உறங்கும் மாணவர்கள்!

டாக்டர் அம்பேத்கர் மாணவர் சங்கத்தை விமர்சித்த - ஆர்.ஏஸ்.எஸ் -இன் மாணவர் பிரிவான ABVP மாணவர்களிடம் விளக்கம் கேட்ட டாக்டர் அம்பேத்கர் மாணவர் சங்கத்தினர் ஐந்து பேரை எந்த விசாரணையும் இல்லாமல் பிஜேபியின் அமைச்சர் ஒருவர் கொடுத்த அழுத்தத்தால் ஹைதராபாத் பல்கலைகழக நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது . இந்த திடீர் நீக்கத்துக்கு  தெருவில் உறங்கி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். Parimala Rajan ஒரு நல்லரசாகவே இல்லாத இந்த இந்திய துணைக்கண்டம் 'வல்லரசாகி என்னத்த கிழிக்கப்போகிறது?' யாருக்காக இந்த துணைக்கண்டத்தை … Continue reading தலித் மாணவர்களை விடுதியில் இருந்து நீக்கிய பல்கலைக்கழகம்: தெருவில் படுத்து உறங்கும் மாணவர்கள்!