நிர்மலா சீதாராமன் பெண்களுக்கு முன்னுதாரணமானவரா?

சாதனைப் பட்டியல்களில் நிர்மலாக்கள் நிரம்பி வழிவதும், பட்டியல் சாதி, பழங்குடிப் பெண்கள் இல்லாமல் இருப்பது தற்செயலானதா?

“ஸ்பிண்ட்ரெல்லா”: ஸ்மிருதி இரானியின் புதிய அமைச்சரவை குறித்து டெலிகிராப்!

“ஸ்பிண்ட்ரெல்லா” அதாவது நூல் நூற்கும் தேவதை என தலைப்பிட்டு ஸ்மிருதி இரானி ஜவுளித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டது குறித்து முதல் பக்க செய்தி வெளியிட்டுள்ளது டெலிகிராப். ஸ்மிருதி இரானி சர்ச்சைக்குரிய வகையில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக செயல்பட்டது குறித்து செய்தி வெளியிட்டிருக்கும் இந்நாளிதழ், ஜேஎன்யூ மாணவர் பிரச்சினை தீவிரமடைந்தபோது ‘ஆண்டிநேஷனல்’ என தலைப்பிட்டு செய்திவெளியிட்டது. முன்னதைப் போலவே ஆதரவும் எதிர்ப்புமாக டெலிகிராப்பின் முகப்புச் செய்தி சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது. டெலிகிராப் நாளிதழைப் போல ட்விட்டர்வாசிகள் ஸ்மிருதி … Continue reading “ஸ்பிண்ட்ரெல்லா”: ஸ்மிருதி இரானியின் புதிய அமைச்சரவை குறித்து டெலிகிராப்!

“அகந்தை, அறியாமையின் ஆபத்தான கலவை ஸ்மிருதி இரானி”

மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டஸ்மிருதி இரானி, அகந்தை மற்றும் அறியாமையின் ஆபத்தான கலவை என வரலாற்றாசிரியர் ராமசந்திர குஹா கருத்து தெரிவித்துள்ளார். யேல் மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் விரிவுரையாற்றியிருக்கும் ராமச்சந்திர குஹா, ஸ்மிருதி இரானி தன்னுடைய அமைச்சகத்தின் நம்பகத்தன்மையை கணிசமான அளவு சீர்குலைத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். என்டிடீவி செய்தி ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மூத்த பேராசிரியர்களை ஸ்மிருதி இரானி நடத்திய விதம் குறித்து நினைவுகூர்ந்த குஹா, “கூட்டமொன்றில் ஐஐடி இயக்குனர்கள் ஒருவர், … Continue reading “அகந்தை, அறியாமையின் ஆபத்தான கலவை ஸ்மிருதி இரானி”

பெண்களை டியர் என்று அழைப்பது நாகரீகமா?: பீகார் அமைச்சரிடம் சண்டைக்குப் போன ஸ்மிரிதி இரானி….

Kathir Vel டியர் ஸ்மிருதி இரானி ஜி, புதிய கல்விக் கொள்கை எப்போது வெளியாகும்? :பிகார் கல்வி அமைச்சர் அசோக் சவுத்ரி போட்ட ட்வீட். ____ டியரா? ஒரு பெண்ணை டியர் போட்டு அழைக்கிறீர்களே, இதுதான் உங்கள் நாகரிகமா? :மத்திய கல்வி அமைச்சர் ’டிகிரி புகழ்’ ஸ்மிருதியின் அதிர்ச்சி. _____ டியர் போட்டு பேர் சொல்றதுதானே மரியாதை? நீங்ககூட அப்படிதானே ட்வீட்டெல்லாம் போட்டீர்கள். இப்போது திடீர் என்று டியருக்கு என்ன வந்தது? :பிகார் அமைச்சரின் குழப்பம். ____ … Continue reading பெண்களை டியர் என்று அழைப்பது நாகரீகமா?: பீகார் அமைச்சரிடம் சண்டைக்குப் போன ஸ்மிரிதி இரானி….

மாணவர்களின் தாய் ஸ்மிருதி இரானிக்கு கன்னய்யா குமார் கடிதம்!

ஜேஎன்யு வளாகத்தில் பிப்ர வரி 9 அன்று நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து விசாரணை செய்த உயர் மட்ட அளவிலான விசாரணைக் குழு அந்த நிகழ்வு குறித்து ஜோட னையாகப் புனையப்பட்ட வீடி யோவை ஆதாரமாகக் கொண்டு இடதுசாரி மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் மீது பல்வேறுவிதமான தண்டனைகளை விதித்துள்ளது. இதனை எதிர்த்து அவர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்கள் அனைவருமே என் குழந்தைகள் போன்றவர்கள் என்று ஒருசமயம் ஸ்மிருதி இரானி … Continue reading மாணவர்களின் தாய் ஸ்மிருதி இரானிக்கு கன்னய்யா குமார் கடிதம்!

உருது படைப்புகள் தேசத்துக்கும் அரசுக்கும் எதிரானவை அல்ல என சர்டிபிகேட் வாங்க வேண்டும்:ஸ்மிருதி அமைச்சரவை உத்தரவு

இரா.தெ. முத்து  டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை விவகாரத்தில் முன்னுக்கு கொண்டு வரப்பட்ட தேசவிரோதிகள் பழியும் வழக்கும் இருக்கும் பொழுதே, அதே ஸ்மிருதி இராணி அமைச்சகம் இன்னொரு தாக்குதலை கருத்துரிமை படைப்புரிமை மீது தொடுத்திருக்கிறது. உருது மொழி படைப்பாளர்களை முன் வைத்து தாக்குதல் தொடுத்துள்ளது. உருதுமொழியில் வெளி வந்த படைப்புகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கு The National Council for Promotion of Urdu Language (NCPUL) என்ற அரசு சார்பான அமைப்பு இருக்கிறது. இது அனுப்பி … Continue reading உருது படைப்புகள் தேசத்துக்கும் அரசுக்கும் எதிரானவை அல்ல என சர்டிபிகேட் வாங்க வேண்டும்:ஸ்மிருதி அமைச்சரவை உத்தரவு

உயிருக்கு போராடியவருக்கு உதவவில்லையா ஸ்மிருதி இரானி? பலியானவரின் குடும்பம் குற்றச்சாட்டு: பொய்களின் பிறப்பிடமாகிறாரா அமைச்சர்?

உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு திரும்பிய மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பயணித்த கார், யமுனா விரைவு சாலையில் நள்ளிரவில் வந்து கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த வாகனங்கள் திடீரென ஒன்றன் பின் ஒன்று மோதி விபத்தில் சிக்கின. இதில் போலீஸார் சென்ற பாதுகாப்பு வாகனம், அதன்பின் சென்ற ஸ்மிருதி இரானியின் கார்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. … Continue reading உயிருக்கு போராடியவருக்கு உதவவில்லையா ஸ்மிருதி இரானி? பலியானவரின் குடும்பம் குற்றச்சாட்டு: பொய்களின் பிறப்பிடமாகிறாரா அமைச்சர்?

#வீடியோ: ஜேஎன்யூவில் கன்னய்யா குமார் பேசியதன் தமிழ் டப்பிங்!

மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, நாடாளுமன்றத்தில் ரோஹித் வெமுலா தற்கொலை, ஜேஎன்யூ மாணவர்கள் விவகாரம் குறித்து பேசியதை தமிழக பாஜக தமிழில் டப் செய்து வெளியிட்டது. இப்போது இரானிக்கும் மோடிக்கும் பதிலடி கொடுக்கும்வகையில் பேசிய, கன்னய்யா குமாரின் பேச்சை தமிழில் டப் செய்திருக்கிறது தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. வீடியோ இணைப்பு கீழே... http://www.youtube.com/watch?v=SjDIS29Mquc

“துப்பாக்கிகளை ஏந்துங்கள், கத்திகளைத் தயாராக வைத்துக்கொள்ளுங்கள், தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது”: ’தேசபக்தர்கள்’ முழக்கம்!

மத்திய அரசில் அங்கம் வகிக்கும் நபர்கள், முஸ்லீம் மக்களுக்கு எதிராக மிக மோசமாக வெறுப்பை உமிழ்ந்துகொண்டிருப்பதற்கு எதிராக அரசமைப்புச் சட்டத்தின்கீழ் தாமாகவே முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியையும் இதர நீதிபதிகளையும், முன்னாள் நீதிபதிகள், ஐபிஎஸ் அதிகாரிகள், சட்ட நிபுணர்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஓய்வுபெற்ற நீதிபதிகள் பி.பி.சாவந்த், ராஜிந்தர் சச்சார், பி.ஜி.கோல்சே பாட்டீல், ஹாஸ்பெட் சுரேஷ், ஐபிஎஸ் அதிகாரி ஜூலியோ ரிபெய்ரோ, முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆப் போலீஸ் எஸ்.எம்.முஷ்ரிப், மூத்த வழக்கறிஞர்கள் … Continue reading “துப்பாக்கிகளை ஏந்துங்கள், கத்திகளைத் தயாராக வைத்துக்கொள்ளுங்கள், தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது”: ’தேசபக்தர்கள்’ முழக்கம்!

விடுதலைக்குப் பின் ஜேஎன்யூவில் கண்ணையா குமார் ஆற்றிய முழு உரை! தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன்

விடுதலைக்குப் பின் ஜேஎன்யூவில் கண்ணையா குமார் உரையாற்றினார். அதன் தமிழாக்கம் இங்கே... ஆங்கில மூலம்: இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன்   இங்கிருக்கும் ஊடகங்களின் வாயிலாக ஜேஎன்யூவிற்கு ஆதரவாக நின்ற உலக மக்கள் அனைவருக்கும் நான் நன்றிசொல்ல விரும்புகிறேன். ஊடகங்களுக்கும், சிவில் சமூகத்திற்கும், அரசியலுக்கும் அரசியலுக்கு அப்பாற்பட்டும் ஜேஎன்யூவைக் காப்பாற்றவும், ரோஹித் வேமுலாவுக்கு நீதி கேட்டும் போராடும் அனைவருக்கும் நான் செவ்வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக அவர்களின் போலீஸ், அவர்களின் ஊடகங்கள் வாயிலாக எது சரி, எது தவறு … Continue reading விடுதலைக்குப் பின் ஜேஎன்யூவில் கண்ணையா குமார் ஆற்றிய முழு உரை! தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன்

போலி வீடியோக்கள் விநியோகிக்கப்பட்டது ஸ்மிருதி இரானியின் உதவியாளர் ட்விட்டர் பக்கத்திலிருந்தே: வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னய்யா குமார், உமர் காலித், அனிபன் பட்டாச்சார்யா உள்ளிட்ட ஐந்து மாணவர்கள் மீது தேச துரோக விரோத வழக்கு பதிவு செய்ய காரணமான போலி வீடியோக்களை பகிர்ந்தது மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் உதவியாளர் ஷில்பி திவாரி என தெரியவந்துள்ளது. மக்களவைத் தேர்தலில் இரானிக்கு தேர்தல் வேலை செய்த, ஷில்பிக்கு விதிமுறைகளைத் தளர்த்தி அமைச்சகத்தில் ரூ. 35 ஆயிரம் சம்பளத்தில் பணிவாங்கிக் கொடுத்த விவகாரமும் … Continue reading போலி வீடியோக்கள் விநியோகிக்கப்பட்டது ஸ்மிருதி இரானியின் உதவியாளர் ட்விட்டர் பக்கத்திலிருந்தே: வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

செம்மொழி நிறுவன முத்திரையில் தமிழ் இல்லை: தமிழாய்வு அலுவலகத்திலேயே இந்த நிலையா?!!

செம்மொழித் தமிழாய்வை வளர்க்கும் நோக்குடன் 2007 ஆம் ஆண்டு, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்  நிறுவியதுதான் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம். பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் அனைத்துக் கூறுகளையும் வெளிப்படுத்தும் வகையில் ஆவணப்படுத்துவதையும் பாதுகாப்பதையும் இந்நிறுவனம் தன் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால், இந்த செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் அலுவலக முத்திரையில் தமிழ் இல்லை என்பது தெரிய வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Maraimalai Ilakkuvanar எங்கும் தமிழ்??எதிலும் தமிழ்?? ஏங்கும் தமிழ்!தூங்கும் தமிழன்! செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் அலுவலக … Continue reading செம்மொழி நிறுவன முத்திரையில் தமிழ் இல்லை: தமிழாய்வு அலுவலகத்திலேயே இந்த நிலையா?!!

நாடாளுமன்ற பேச்சுக்கு கைமேல் பலன்: உ.பியின் முதல்வர் வேட்பாளராகிறார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி

நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் ஸ்மிருதி இரானி ஆற்றிய ஆவேச உரையை பாரதிய ஜனதா கட்சியினர் கொண்டாடுகிறார்கள். இப்படி கொண்டாடப்பட வேண்டும் என்றுதான் ஸ்மிருதி இரானி விரும்பினார். காரணம் உத்திரபிரதேச மாநிலத்தில் நடக்க இருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் யாரை பாஜகவின் முதல்வர் வேட்பாளராக நிறுத்துவது என்கிற தயக்கத்துக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் இரானி. கடந்த மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய, அதிக தொகுதிகளைக் கொண்ட மாநிலமான உ.பி. பாஜகவுக்கு வெற்றியை அள்ளிக்கொடுத்தது. சமீபத்தில் நடந்த இடைத் தேர்தல்களிலும் … Continue reading நாடாளுமன்ற பேச்சுக்கு கைமேல் பலன்: உ.பியின் முதல்வர் வேட்பாளராகிறார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி

#வீடியோ: சினிமா டப்பிங் பார்த்திருப்பீங்க, சீரியல் டப்பிங் பார்த்திருப்பீங்க, ஸ்மிருதி இரானியின் நாடாளுமன்ற பேச்சோட டப்பிங் கேளுங்க!

ஹிந்தி சினிமா டப்பிங் பார்த்திருப்பீங்க, ஹிந்தி சீரியல் டப்பிங் பார்த்திருப்பீங்க, நாடாளுமன்ற பேச்சையே டப்பிங் பண்ணி பார்த்திருக்கீங்களா? தமிழ்நாடு பாஜக  ஸ்மிருதி இரானியின் பேச்சை டப் செய்திருக்கிறது. இந்த வீடியோ பாருங்கள்.... http://www.youtube.com/watch?v=CKnzVP_MPrk

பதிலில் திருப்தியில்லை;தலையை வெட்டிக் கொள்வீர்களா ஸ்மிருதி? : அதிரவைத்த மாயாவதி

ஹைதராபாத் பல்கலைக்கழக தலித் ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலைக்கு தள்ளப்பட்ட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, அப்பட்டமாக பொய்களை அள்ளி வீசியது கடும் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. ஸ்மிருதி இரானி தனது பொய்களுக்கு உரிய விளக்கங்களை அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் காரசாரமான விவாதத்தை வெள்ளியன்றும் மேற்கொண்டனர். மாநிலங்களவையில் வெள்ளியன்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, மாயாவதி இடையே நேருக்கு நேர் மோதல் ஏற்பட்டது. மாயாவதி, “இந்த விசாரணைக் கமிஷனில் … Continue reading பதிலில் திருப்தியில்லை;தலையை வெட்டிக் கொள்வீர்களா ஸ்மிருதி? : அதிரவைத்த மாயாவதி

“இயற்கை உபாதை” என்று கூறுவது தவறா?: ஆபாச தாக்குதல் புகாரை கையிலெடுத்த ஸ்மிருதி இரானி !!!

ஜே.என்.யூ விவகாரம் குறித்து லோக்சபாவில்   ஆவேசமாக பேசி, பத்திரிக்கைகளில், இணையங்களில் பாராட்டு பெற்ற ஸ்மிருதி இரானி, ராஜ்யசபாவில்  அந்தளவு ஆவேசத்தை காண்பிக்க முடியாமல் நேற்று (25.02.16)அவஸ்தைக்கு ஆளாகினர். இரானியின் குற்றச்சாட்டுக்களுக்கு, உடனுக்குடன் கம்யூனிஸ்ட்,  காங்கிரஸ்  உறுப்பினர்கள்  பதில் அளித்ததால், அமைச்சர் தடுமாறினார். அத்துடன் மட்டுமல்லாமல், அவையில் நாகரீகங்கள் தெரியாமல், அநாகரீகமாக இரானி நடந்துகொல்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இந்நிலையில், "மகிசாசுரனை ஆதரித்து" ஜேஎன்யூ மாணவர்கள் நடத்திய போராட்டம் குறித்து லோக்சபாவில்  கூறிய அதே புகார்களை ராஜ்யசபாவில் முன் வைக்க  … Continue reading “இயற்கை உபாதை” என்று கூறுவது தவறா?: ஆபாச தாக்குதல் புகாரை கையிலெடுத்த ஸ்மிருதி இரானி !!!

ரோஹித் வெமுலாவை சோதிக்க மருத்துவர்களை அனுமதிக்கவில்லை என நாடாளுமன்றத்தில் பொய் சொன்ன ஸ்மிருதி இரானி: வீடியோ ஆதாரம் இங்கே…

மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, புதன்கிழமை மாநிலங்களவையில் ரோஹித் வெமுலா தற்கொலை விவகாரத்தின் மீது பேசிய போது, ரோஹித் தற்கொலை செய்துகொண்டு இறந்த பிறகு, அவரைப் பார்க்க மருத்துவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என சோதிக்கஅடுத்த நாள் காலை 6.30 மணி வரை அனுமதிக்கப்படவில்லை என்று பேசியிருந்தார். ஆனால், ரோஹித் ஹைதராபாத் பல்கலை மாணவர் விடுதியில் தற்கொலை செய்துகொண்டதை அறிந்த நண்பர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் தெலுங்கானா காவலர்களும் … Continue reading ரோஹித் வெமுலாவை சோதிக்க மருத்துவர்களை அனுமதிக்கவில்லை என நாடாளுமன்றத்தில் பொய் சொன்ன ஸ்மிருதி இரானி: வீடியோ ஆதாரம் இங்கே…

“ஆண்டி நேஷனல்”: ஸ்மிருதி இரானியின் நாடாளுமன்ற பேச்சை பகடி செய்யும் தி டெலிகிராப்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி வருகிறது. புதன்கிழமை ரோஹித் வெமுலாவின் தற்கொலையை ஒட்டி நாடாளுமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதிக்கும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கும் கடுமையான வாக்குவாதம் எழுந்தது. மாயாவதி பேசும்போது, “தலித் மாணவர் ஒருவர் பல்கலை தற்கொலை செய்து கொள்வது இது முதல்முறை அல்ல; குறிப்பாக அம்பேத்கரின் கொள்கைகளை முன்னெடுக்கும் ரோஹித் வெமூலா போன்ற மாணவர்களை ஆர். எஸ். எஸ். போன்ற அமைப்புகள் விரும்புவதில்லை. அவர்களை அழிக்க நினைக்கின்றன. தலித் மாணவர்கள் தொடர்ந்து … Continue reading “ஆண்டி நேஷனல்”: ஸ்மிருதி இரானியின் நாடாளுமன்ற பேச்சை பகடி செய்யும் தி டெலிகிராப்!