மு. க. ஸ்டாலினுக்கு வெற்றியைத் தேடித் தந்தது எது?

பாவெல் தருமபுரி பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியின் வெற்றிக்குப் பிற்பாடு மு.க. ஸ்டாலின் அவர்களை கதாநாயகனாகவும், ரட்சகன் போலவும் பிம்பங்கள் கட்டமைக்கப் படுகின்றன. இன்னொரு பக்கம் இது பெரியார் மண் என்றும் இங்கே எந்த காலத்திலும் பா.ஜ.க குடியேற முடியாது என்றும் பரவலாக கருத்துக்கள் பகிரப்படுகின்றன. இது உண்மைதானா? ஸ்டாலினின் கள வியூகமும், அவரின் தொடர் பிரச்சாரங்களும், திராவிட கோட்பாடும்தான் தி.மு.க கூட்டணிக்கு வெற்றியினை கொண்டுவந்து கொடுத்ததா? நிச்சயமாக இல்லை. ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததை விடுங்கள், … Continue reading மு. க. ஸ்டாலினுக்கு வெற்றியைத் தேடித் தந்தது எது?

இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். தாக்கம் எல்லா கட்சிகளிலும் உள்ளது: அ. மார்க்ஸ் நேர்காணல்

பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் இந்த வேளையில் ஜனநாயக அமைப்புகளின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து வரும் பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களை சந்தித்தோம். த டைம்ஸ் தமிழ்.காமிற்காக நேர்காணல் செய்தவர் பீட்டர் துரைராஜ். இதில் காங்கிரசின் தேர்தல் அறிக்கை, அதன் போதாமை, அடையாள அரசியல், ஆர்எஸ்எஸ் -ன் தாக்கம் என பல ஆழமான செய்திகளை இந்த நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார் அ. மார்க்ஸ். கேள்வி : பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் இஸ்லாமிய வேட்பாளர்களாக அதிமுக, திமுக சார்பில் யாருமே … Continue reading இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். தாக்கம் எல்லா கட்சிகளிலும் உள்ளது: அ. மார்க்ஸ் நேர்காணல்

ஸ்டாலின்: ஏகாதிபத்தியம் மற்றும் பாசிச எதிர்ப்பின் மகத்தான வீரன்!

சந்திரமோகன் "ஏகாதிபத்திய சகாப்தத்தில் தனியொரு நாட்டில் சோசலிசத்தை கட்டி எழுப்ப முடியும் " என்ற லெனினியத்தை நடைமுறைப் படுத்தும் சவால்மிக்க கடமைக்கு தன்னை அர்ப்பணித்து கொண்ட தோழர். JV ஸ்டாலின் [ ஜோசப் வி ஸ்டாலின் 18.12.1878] அவர்களின் 140 வது பிறந்த நாள் இன்று! ஏகாதிபத்திய - முதலாளித்துவ சக்திகள் துவங்கி இலக்கியவாதிகள், இடதுசாரிகள் வரை தொடுக்கும் வெறுப்பு விமர்சனங்கள் தாக்குதல்கள் இதுநாள் வரையும் குறையவில்லை. புனையப்பட்ட பொய்களும் ஏராளம். "ஸ்டாலின் மீது எவ்விதமான குறைகளும் … Continue reading ஸ்டாலின்: ஏகாதிபத்தியம் மற்றும் பாசிச எதிர்ப்பின் மகத்தான வீரன்!

அநீதி வீழ்ந்து அறம் வென்றிருக்கிறது: 2 ஜி வழக்கு தீர்ப்பு குறித்து மு. க. ஸ்டாலின்

திமுக தலைவர் கருணாநிதி “அநீதி வீழும் அறம் வெல்லும்” என்று சொன்னதைப் போல, இன்றைக்கு “அநீதி வீழ்ந்து அறம் வென்றிருக்கிறது” என திமுக செயல் தலைவர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  ஏழு ஆண்டுகளாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதி ஓ.பி. சைனி தன்னுடைய தீர்ப்பில் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் தகவல் தொடர்பு துறை … Continue reading அநீதி வீழ்ந்து அறம் வென்றிருக்கிறது: 2 ஜி வழக்கு தீர்ப்பு குறித்து மு. க. ஸ்டாலின்

அரசியல் களத்தில் கருணாநிதி இருந்திருந்தால் அதிமுக ஆட்சியை கவிழ்த்திருப்பார்: விஜயகாந்த் பேட்டி!

இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் பேட்டி அளித்துள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாகவே அரசியலில் ஒதுங்கியிருந்த , இந்த பேட்டியின்போது தீவிர அரசியல் பேசியது மட்டுமல்லாது, தோற்றத்திலும் புதுப்பொலிவுடன் இருப்பதை பார்க்க முடிகிறது. அந்த பேட்டியிலிருந்த சில கேள்விகளின் தமிழாக்கம் இங்கே. ****************** கேள்வி: அதிமுக ஆட்சியை கவிழ்ப்போம் என்று திமுக சொல்லியதைப்போல, செயலில் கட்டமுடியவில்லை என்று நினைக்கிறீர்களா ? பதில்: இந்த அதிமுக அரசு தானாகவே … Continue reading அரசியல் களத்தில் கருணாநிதி இருந்திருந்தால் அதிமுக ஆட்சியை கவிழ்த்திருப்பார்: விஜயகாந்த் பேட்டி!

ஆவின் பால் 7 ரூபாய் குறைக்கப்படும்: திமுக வாக்குறுதி சாத்தியமா? இதோ ஒரு கணக்கு!

பெ.சண்முகம் திமுகவின் தேர்தல் அறிக்கைதான் ஹீரோ என்று கூட்டம் தவறாமல் கூறிவருகிறார் மு.க.ஸ்டாலின். வாக்குறுதிதானே பின்னால், யார் கேட்கப் போகிறார்கள், அப்படியே கேட்டாலும் வார்த்தையால் விளையாடத்தான் கலைஞர் இருக்கிறாரே என்ற தைரியத்தில் பல பொய்யான வாக்குறுதிகளை தேர்தல்தோறும் வழங்குவது வாடிக்கையாகிவிட்டது  திமுக,விற்கு! உதாரணத்திற்கு சில மட்டும் இங்கே! 1967 தேர்தலில் ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்று அண்ணா சொன்னார். ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு படி நிச்சயம், மூன்று படி லட்சியம் என்று கூறி அதுவும் ஒரு … Continue reading ஆவின் பால் 7 ரூபாய் குறைக்கப்படும்: திமுக வாக்குறுதி சாத்தியமா? இதோ ஒரு கணக்கு!

தேர்தலில் செலவிடப்படும் ’பினாமி’ பணங்கள்!

அ. மார்க்ஸ் இரண்டு நாட்களாகப் பெரிய அளவில் (கோடிக் கணக்கில்) பதுக்கி வைக்கப்பட்ட பணம் கைப்பற்றப்படுகிறது. இவர்கள் அனைவரும் அ.தி.மு. க வினர்க்கு நெருக்கமானவார்கள், அமைச்சர்களுக்கு பினாமிகளாக இருப்பவர்கள் என்கிற செய்தியும் வருகிறது. மாவட்ட ஆட்சியாளர்கள், காவல் துறை உயர் அதிகாரிகளும் பெரிய அளவில் மாற்றப்படுகின்றனர். கரூரில் கைப்பற்றப்பட்ட 4.77 கோடி ரூபாய்க்கு உரிய அதிமுக காரர் அரசு வாகனம் என்கிற பெயரில் போலி பதிவு எண்ணுடன் இக் குற்றத்தைச் செய்துள்ளார். இவர்கள் கைது செய்யப்பட்டு கொஞ்ச … Continue reading தேர்தலில் செலவிடப்படும் ’பினாமி’ பணங்கள்!

“இன்றைய அரசியலில் நையாண்டி செய்யப்பட வேண்டிய அரசியல்வாதி ஜெயலலிதாதான்”

ஜி. கார்ல் மார்க்ஸ் எனக்குத் தெரிந்து இன்றைய அரசியலில், மிகவும் நையாண்டி செய்யப்பட வேண்டிய அரசியல்வாதி யாரென்றால் அது ஜெயலலிதாதான். எழுத்தாளர்கள், அரசியல் விமர்சகர்கள், முக்கியமாக கார்ட்டூனிஸ்டுகள் ஆகியோருக்கு தனது தேர்தல் பரப்புரை மூலம் ஜெயலலிதா அளித்துக்கொண்டிருப்பது பெரும் தீனி. ஜனநாயகத்துக்கு கொஞ்சமும் தகுதியில்லாத, பதட்டங்கள் நிறைந்த காமெடியனாக அவர் தோற்றம் கொண்டிருக்கிறார். ஒரு செருப்போ, ஒரு கல்லோ மேடையை நோக்கி வரக்கூடும் என்ற பதட்டம் அவரைச் சுற்றியுள்ள மற்றெல்லோருக்கும் இருக்கிறது. அதனால் தான் இவ்வளவு உருட்டல் … Continue reading “இன்றைய அரசியலில் நையாண்டி செய்யப்பட வேண்டிய அரசியல்வாதி ஜெயலலிதாதான்”

திமுக-தேமுதிக கூட்டணி அமையாமல் தடுத்தது யார்?

(தேமுதிகவுடன் மக்கள் நல கூட்டணி இணைவதற்கு முன்னால் அச்சான நம்ம அடையாளம்  கவர் ஸ்டோரி இது. விஜயகாந்த் மட்டுமல்ல ஏனைய கட்சி தலைவர்களும் திமுக பக்கம் வரவிடாமல் தடுத்தது யார் என்பதை விவரிக்கிறது). திமுகவும் தேமுதிகவும் சேர்ந்தால் அதிமுகவை வீழ்த்துவது உறுதி என தெரிந்தும், அந்த கூட்டணி அமையாமல் போனது ஏன்? ஆட்சிக்கும் சேர்த்து கூட்டணி என விஜயகாந்த் விதிக்கும் நிபந்தனை முதல் காரணம். கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து கிடைத்த அனுபவம் அவரை அப்படி பேச வைக்கிறது. … Continue reading திமுக-தேமுதிக கூட்டணி அமையாமல் தடுத்தது யார்?

திமுகவின் பலவீனத்தை ஸ்டாலினை விட தெளிவாக புரிந்து கொண்டவர் விஜயகாந்த்!

ஜி. கார்ல் மார்க்ஸ் நடைபெற இருக்கிற தேர்தலில் சிறப்பே, கூட்டணி பேரத்தில் எல்லா கட்சிகளும் குறைந்தது இரண்டு முறைக்கு மேல் அசிங்கப்பட்டது தான். ஆனால், எல்லா இடங்களிலும் ஜெயலலிதாவுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதற்குக் காரணம், இந்த அரசு மீது 'அதிருப்தி அலை' இல்லை. ஜெயாவின் இந்த செயல்படாத அரசு மீது உள்ள முணுமுணுப்பு, திமுகவுக்கான அலையாக ஏன் மாறவில்லை? போன ஐந்து வருடத்தில் திமுக ஆடிய ஆட்டம், மக்களுக்கு மறக்கவில்லை. அதுதான். மட்டுமல்லாமல் திமுகவின் … Continue reading திமுகவின் பலவீனத்தை ஸ்டாலினை விட தெளிவாக புரிந்து கொண்டவர் விஜயகாந்த்!

“ஸ்டாலின் குடும்பம் திமுகவைக் கட்டுப்படுத்துகிறது”: மு.க. அழகிரி யின் பேட்டியும் கருணாநிதியின் பதில் அறிக்கையும்

திமுகவிலிருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி, மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார் என சமீபத்தில் சொல்லப்பட்டது. ஆனால், காங்கிரஸ்- திமுக கூட்டணி உறுதியானதற்குப் பிறகு தந்தி டிவிக்கு அளித்த தொலைபேசி வழி பேட்டியில் அவர் திமுக மீது கடும் விமர்சனத்தை வைத்திருக்கிறார். காங்கிரஸ் திமுக கூட்டணி வெல்ல வாய்ப்பே இல்லை. அதிமுக பலமாக உள்ளது; அதை வீழ்த்த முடியாது. திமுகவில் கலைஞர் ஓரம்கட்டப்பட்டுள்ளார். ஸ்டாலின் குடும்பம் திமுகவைக் கட்டுப்படுத்துவதால் திமுக ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பே இல்லை” என பேசியிருக்கிறார் அழகிரி. http://www.youtube.com/watch?v=ofKkH1RMSn4Continue reading “ஸ்டாலின் குடும்பம் திமுகவைக் கட்டுப்படுத்துகிறது”: மு.க. அழகிரி யின் பேட்டியும் கருணாநிதியின் பதில் அறிக்கையும்

“பெருங்கனவோடு எழுந்த ஒரு மாபெரும் இயக்கம் ஒரு குடும்பத்தின் வாசலில் வீழ்த்தப்பட்ட துயரம்!”

யோ. திருவள்ளுவர் தமிழக அரசியலிலிருந்து அதிமுக அகற்றப்படுவதை திமுகவும், திமுக அகற்றப்படுவதை அதிமுகவும் விரும்பாது. ஏனெனில் அவையிரண்டும் மணல், கிரானைட், மண், நிலம் கொள்ளை முதல் ஊழல், மதுஆலைகள், டாஸ்மாக், அணு உலைகள், கெயில், மீத்தேன், ஒப்பந்தம் கொள்ளைகள் ஆகிய அனைத்திலும் இருகட்சிகளுக்கும் அவ்வளவு ஒற்றுமை. மற்றொரு அணி அல்லது கட்சி தமிழக அரசியலில் பலம்பெறுவதை இரண்டு கட்சிகளும் விரும்பாது. மாற்று ஒன்று உருவானால் இருகட்சிகளின் கொள்கைகளுக்கும் முடிவு வந்துவிடுமல்லவா. அப்படி மாற்று அணி அல்லது கட்சி … Continue reading “பெருங்கனவோடு எழுந்த ஒரு மாபெரும் இயக்கம் ஒரு குடும்பத்தின் வாசலில் வீழ்த்தப்பட்ட துயரம்!”

”நான் பிரபலமாக இருக்கறதால ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டியிருக்காங்க” போஸ்டர்கள் குறித்து மு. க. அழகிரி!

வெள்ளிக்கிழமை சென்னை வந்த மு. க. அழகிரியை நிருபர்கள் விடாமல் துரத்தி செய்தி சேகரித்தனர். அப்போது ஒரு நிருபர் “ஊர் முழுக்க உங்க போஸ்டரா இருக்கே”  என்றதற்கு “நான் பிரபலமாக இருக்கறதால சிட்டி ஃபுல்லா இருக்கு” என்று தெரிவித்தார். இதைக் கேட்ட நிருபர்கள் பலர் சிரித்தனர். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தங்களது ஆதரவாளர்கள் திமுகவில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அழகிரி, தன்னுடைய ஆதரவாளர்கள் யாரும் நீக்கப்படவில்லை என்றும், அப்படி நீக்கப்பட வேண்டுமென்றால் லட்சம் பேரை நீக்க … Continue reading ”நான் பிரபலமாக இருக்கறதால ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டியிருக்காங்க” போஸ்டர்கள் குறித்து மு. க. அழகிரி!

’இந்துமயமாக்கப்பட்ட திமுக எனக்கு ஓகேதான்’: சுப்ரமணியம் சுவாமி

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விருப்பம் தெரிவித்து ட்விட்டியுள்ளார். சுப்பிரமணியன் சுவாமி தனது டிவிட்டர் பக்கத்தில், மு.கருணாநிதி முதல்வராவதை தவிர்ப்பார் என்றும், ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவார் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.மேலும், திமுக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். https://twitter.com/Swamy39/status/694491246652366850 https://twitter.com/Swamy39/status/694491123302080514 https://twitter.com/Swamy39/status/694477931037372416 இதுகுறித்து கருத்து சமூக வலைத்தளங்களில் … Continue reading ’இந்துமயமாக்கப்பட்ட திமுக எனக்கு ஓகேதான்’: சுப்ரமணியம் சுவாமி

ஸ்டாலின்-வைகோ: யார் சிறந்தவர்?

ராம்குமார் சேகர் முதலமைச்சர் மாநாடு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மாநாடு, IIT, IIM யில் சிறப்புறை என்று எப்பேர்ப்பட்ட இடத்திலும் வைகோ மிகச்சிறப்பான பேச்சாளராக இருப்பார். அது தமிழாகட்டும், ஆங்கிலமாகட்டும்... ஐரோப்பிய பாராளுமன்றத்தில் வைகோ பேசியது நீங்கள் இபோதும் youtube இல் பார்க்கலாம். தமிழர்களுக்காக அவர் பேசிய உரை அது... ஸ்டாலினுக்கு திமுக கூட்டத்தை தவிர்த்து வேறு எங்கும் பேசத் தெரியாது. இந்த விஷயத்தில் ஸ்டாலினை விட கனிமொழி பரவாயில்லை. வைகோ சுய ஒழுக்கம் மற்றும் நேர்மையில் அனைத்து … Continue reading ஸ்டாலின்-வைகோ: யார் சிறந்தவர்?

லயோலா கருத்து கணிப்பு:’ஸ்டாலின் மருமகன் சபரீசனை முதல்வர் வேட்பாளர் பட்டியலில் ஏன் சேர்க்கவில்லை?’

திரு யோ 'லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள்' லேபிள் ஒட்டி கருத்துத்திணித்தால் எடுபடுமா? இந்த தில்லுமுல்லு கருத்துக்கணிப்பில் முதல்வராக யாரை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள் என்கிற கேள்விக்கு கருணாநிதிக்கு 70.99%, ஸ்டாலினுக்கு 69.6%, ஜெயலலிதாவுக்கு 65.9%. முறையான கருத்துக்கணிப்பு சதவிகிதம் என்றால் மொத்தம் கூட்டுத்தொகை நூறு வரவேண்டும். இதில் வருவது 206.49. என்னவகை கருத்துக்கணிப்பு இது? ஸ்டாலினின் மருமகன் சபரீசனை முதல்வர் வேட்பாளர் பட்டியலில் ஏன் சேர்க்கவில்லையோ. திரு யோ, அரசியல் விமர்சகர்.  

விஜயகாந்’த்தூ’ என சொன்ன அன்புமணி: மு. க.ஸ்டாலினை செருப்பால் அடிக்க வேண்டும் என்று பேசிய காடுவெட்டி குரு!

சமீபத்தில் விஜயகாந்த் பத்திரிகையாளர்களைப் பார்த்து ‘த்தூ’ என்று சொன்னது பெரும் சர்ச்சையானது. இது குறித்து அரசியல் தலைவர்கள் சிலரும் கருத்து தெரிவித்திருந்தனர். குறிப்பாக பாமக முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், ‘த்தூ’ என்று துப்பியதால் இனி விஜயகாந்‘த்தூ’ என அழைக்கப்படுவார் என பகடி செய்திருந்தார். விஜயகாந்தின் நடத்தையும் கண்டித்திருந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விழுப்புரத்தில் நடந்த பாமக மாநாட்டில் பேசிய ‘சர்ச்சை’ புகழ் காடுவெட்டி குரு, திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினின் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் … Continue reading விஜயகாந்’த்தூ’ என சொன்ன அன்புமணி: மு. க.ஸ்டாலினை செருப்பால் அடிக்க வேண்டும் என்று பேசிய காடுவெட்டி குரு!

நெருங்கி வரும் பொங்கல்: ஜல்லிக்கட்டை வைத்து அரசியல் செய்கிறதா மத்திய அரசு?

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு குறித்து விவாதிக்கப்படவில்லை என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். ஜல்லிக்கட்டு விளையாட்டின் போது, காளைகள் துன்புறுத்தப்படுவதாக வந்த புகார்களை தொடர்ந்து நீதிமன்ற  மேற்பார்வையில் 2014ம் ஆண்டு வரை நடைபெற்று வந்தது. விலங்கு நல ஆர்வலர்களின் தொடர் புகார்கள், விலங்குகள் துன்புறுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு உச்ச நீதிமன்றம் அதிரடி தடை விதித்தது. இந்நிலையில் நடந்த முடிந்த பாராளுமன்ற  குளிர்காலகூட்டத் தொடரின் இறுதி நாளன்று, … Continue reading நெருங்கி வரும் பொங்கல்: ஜல்லிக்கட்டை வைத்து அரசியல் செய்கிறதா மத்திய அரசு?