பா. ரஞ்சித்தும் சோழர்களும்

வாசுகி பாஸ்கர் தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் பகுதிக்கு சமீபத்தில் ஒரு நிகழ்வுக்குச் சென்று திரும்பிய இயக்குனர் பா.ரஞ்சித்தின் உரையின் ஒரு பகுதி மட்டும் விவாதத்திற்குள்ளாகி இருக்கிறது, அது இராஜராஜ சோழன் காலத்தில் பிடுங்கப்பட்ட நிலம் தொடர்பான கருத்து. அவர் பேசியதில் இரண்டு முக்கியமான அம்சம் உள்ளது, அந்த இரண்டுக்குமே நெருங்கிய தொடர்புமுள்ளது, இவ்விரண்டுக்கும் உள்ள தொடர்பினால் உருவாகும் மும்முனை மௌனம் சுவாரசியமானது. ரஞ்சித் பேசியதில் குறிப்பிடத்தக்க இரு முக்கிய அம்சங்கள்; 1 . இராஜராஜ சோழன் காலத்தில் … Continue reading பா. ரஞ்சித்தும் சோழர்களும்

அயோத்திதாசரின் ஒரு பைசாத் தமிழன் தொடங்கப்பட்ட நாள் இன்று!

தமிழில் நேரடியாகவும் மறைமுகமாகவும் அயோத்திதாசரின் சிந்தனைத் தொகுதிகள் அழுத்தமான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன.

அயோத்திதாசரை தமுஎகச புறக்கணிக்கிறதா? ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம்

அரசியலை விடவும் இலக்கியம், வழக்காறு, சமயம் பற்றி அதிகம் பேசியிருப்பவர் அயோத்திதாசர். அவரைப் பற்றி குறிப்பிடும்படியான பேச்சுகளோ நிகழ்வுகளோ தமுஎகசவால் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

திமுக: நம்பகமான கூட்டாளியா?

ஸ்டாலின் ராஜாங்கம் அதிமுக பெரும்பான்மை பலம் பெற்றிருக்கிறது. திமுக வலிமையான எதிர்க்கட்சியாக மாறியிருக்கிறது. தலித் கட்சிகளின் பிரதிநிதிகள் மட்டுமல்லாது இடதுசாரிகள் கூட இல்லாத சட்டசபையாகியிருக்கிறது. இது தொடர்பாக பொறுமையாக பின்னால் எழுத வேண்டும். இப்போதைக்கு சிறு கணக்கீடு மட்டும் இங்கே. இத்தேர்தலில் தலித் தலைவர்கள் குறைந்த வாக்குவித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறார்கள். திருமாவளவன் 87,டாக்டர் கிருஷ்ணசாமி 493,சிவகாமி 6853 ஆகிய வாக்குகள் வித்தியாசங்களிலேயே தோற்றிருக்கின்றார்கள். திருமாவளவனுக்கு காட்டுமன்னார்கோயிலும் கிருஷ்ணசாமிக்கு ஒட்டப்பிடாரமும் செல்வாக்கான தொகுதிகள். தங்களுக்கிருக்கும் ஓட்டுகளோடு மற்றொரு கட்சியின் … Continue reading திமுக: நம்பகமான கூட்டாளியா?

பெரிய மாயத்தேவர் பாரதிராஜா பெயர் சர்ச்சையும் அறிவுத்துறை பெரும்பான்மைவாதமும்

ஸ்டாலின் ராஜாங்கம் 1)தேர்தல்பணிகள் தொடங்கிய நேரத்தில் கட்சி கூட்டமொன்றில் திமுக பொன்முடி, சாதி பற்றி பேசினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது பொன்முடியின் சொந்த குடும்பத்தில் நடந்திருக்கும் கலப்புமணங்களை வரிசைப்படுத்திக் காட்டி அவரை சாதிரீதியாக யோசிக்கக் கூடாது என்று எழுதப்பட்டது. 2)இப்போது முகநூல்பக்கத்தில் தன்பெயரை மட்டுமே போட வாய்ப்பிருந்தும் சாதிப்பட்டத்தோடு கூடிய 'மாற்றமுடியாத'தன் அப்பாவின் பெயரோடு தன் பெயரை குறிப்பிட்டிருக்கிறார் பாரதிராஜா.(பெரிய மாயத்தேவர் பாரதிராஜா)இந்நிலையில் சினிமாத்துறையைச் சேர்ந்த சிவா என்பவர் இதை விமர்சித்து பதிவிட்டிருக்கிறார். வாசிக்க: “ஓட்டு போடும் … Continue reading பெரிய மாயத்தேவர் பாரதிராஜா பெயர் சர்ச்சையும் அறிவுத்துறை பெரும்பான்மைவாதமும்

#தலித்வரலாற்றுமாதம்: சத்தியவாணி முத்து முதல் பெண் தலித் அமைச்சர்!

ஸ்டாலின் ராஜாங்கம் ஞாயிறு தமிழ் தி இந்து(01.05.2016) பெண் இன்று இணைப்பில் முதல் பெண் தலித் அமைச்சர் என்ற தலைப்பில் சத்தியவாணிமுத்து பற்றி சிறு கட்டுரை ஒன்றை ஆதி எழுதியுள்ளார் .திமுக வின் தொடக்ககால தலைவர்களில் ஒருவர், 1967 ல் திமுகவின் முதல் அமைச்சரவையில் இடம்பெற்ற தலித்,தாழ்த்தப்பட்டோர் முன்னேற்ற கழகம் என்ற கட்சி நடத்தியது, மாநிலங்களவை உறுப்பினர் உள்ளிட்ட அவர் பற்றிய பெரும்பாலான தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன. நல்ல பதிவு. எல்லோரும் கருதுவதை போல சத்தியவாணிமுத்துவின் அரசியல் வாழ்க்கை … Continue reading #தலித்வரலாற்றுமாதம்: சத்தியவாணி முத்து முதல் பெண் தலித் அமைச்சர்!

#சர்ச்சை:“பறைச்சியெல்லாம் ஜம்பரும் புளவுசும் போடுவதால் துணிவிலை ஏறிவிட்டது என்று பேசவிடலாமா?”

ஸ்டாலின் ராஜாங்கம் வைகோ கருணாநிதியை சாதி சொல்லி திட்டிய கயமையை கண்டித்து பலரும் பேசியிருந்தார்கள்.எனக்கும் அதில் உடன்பாடு உண்டு. இந்நிலையில் தி இந்து நாளேட்டில் (தமிழ்)இது தொடர்பான கட்டுரை மீது திராவிடர் கழகத் துணைத்தலைவர் திரு.கலி.பூங்குன்றன் எழுதிய எதிர்வினையொன்று (12.04.2016)கடிதப்பகுதியில் வெளியாகியிருந்தது. பெரியாரும் வைகோவும் ஒன்றா? என்ற தலைப்பிலான அதில்" சாதி ஆணவத்தில் வன்மத்துடன் பேசிய வைகோவின் பேச்சையும் சாதி ஒழிப்புக்காக காலமெல்லாம் பேசிய பெரியாரின் பேச்சையும் ஒரே தளத்தில் வைத்து ஒப்பிட்டு எழுதுவது முறையற்றதும் கண்டிக்கத்தக்கதாகும்" … Continue reading #சர்ச்சை:“பறைச்சியெல்லாம் ஜம்பரும் புளவுசும் போடுவதால் துணிவிலை ஏறிவிட்டது என்று பேசவிடலாமா?”

#தலித்வரலாற்றுமாதம்: தமிழகத்தில் ’ஜெய்பீம்’ முழக்கமிட்ட முன்னோடி பி.வி.கரியமால்!

ஸ்டாலின் ராஜாங்கம்  படத்திலிருப்பவர் பெயர் பி.வி.கரியமால். இப்போதுமிருக்கும் கடந்த தலைமுறை அம்பேத்கரிய அரசியல் தலைவர். எண்பது வயதை நெருங்கும் என்று நினைக்கிறேன். தருமபுரி மாவட்டம் அரூரில் வாழ்ந்துவருகிறார். பாரதீய குடியரசு கட்சி தலைவர். ரோகித் வெமூலா எழுப்பிய பின்னணியில் உணர்ச்சிபூர்வ நிலையை அடைந்திருக்கும் ஜெய்பீம் என்ற முழக்கத்தை இத்தகைய கவனஈர்ப்புக்கு வெளியே நீண்ட நாட்களாக தங்கள் வணக்கம் செலுத்தும் முறைகளிலும் மேடைகளிலும் பயன்படுத்தி வந்தவர்கள் குடியரசுக் கட்யினர் தாம்.இப்போதும் நீலத்துண்டு,ஜெய்பீம் வணக்கத்தோடும் வாழ்கிறார் பி.வி.கே. தலித் அரசியல் … Continue reading #தலித்வரலாற்றுமாதம்: தமிழகத்தில் ’ஜெய்பீம்’ முழக்கமிட்ட முன்னோடி பி.வி.கரியமால்!

#தலித்வரலாற்றுமாதம்: அயோத்திதாசரும் பர்மா புத்தரும்

ஸ்டாலின் ராஜாங்கம் படத்திலிருக்கும் புத்தர் சிலை நூறுவருட தலித் அரசியலின் எழுச்சியையும் தேக்கத்தையும் மாற்றங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது என்றுச் சொன்னால் யாரேனும் வியப்படையக்கூடும். உண்மை அதுதான். அயோத்திதாசர் தொடங்கியிருந்த தென்னிந்திய சாக்கைய பௌத்த சங்கத்திற்கு அவர் உயிரோடு இருந்த காலத்திலேயே பர்மாவிலிருந்து மூன்று பஞ்சரத்தின புத்தர் சிலைகள் நன்கொடையாக அனுப்பப்பட்டன. முதலிரண்டு சிலைகள் சென்னை,கோலார் தங்கவயல் சங்கங்களில் வைக்கப்பட்டன. மூன்றாவது சிலை திருப்பத்தூர்(வேலூர்)சங்கத்தில் வைக்கப்பட்டது. அச்சிலை தான் இது. பண்டிதர் காலத்திலேயே அவரின் சகபயணியான பெரியசாமி புலவரின் … Continue reading #தலித்வரலாற்றுமாதம்: அயோத்திதாசரும் பர்மா புத்தரும்

அதிர்வெண்: தலித் அரசியல் பண்பாட்டு இதழ் அறிமுகம்

ஸ்டாலின் ராஜாங்கம் அதிர்வெண் என்ற பெயரில் தலித் அரசியல் பண்பாட்டு இருமாத இதழ் ஒன்று வெளிவந்துள்ளது. கே.பி.எஸ். மணி, ரெட்டியூர் பாண்டியன், சகஜானந்தரின் பேச்சும் எழுத்தும் போன்ற நூல்களை கொணர்ந்தவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பல்வேறு வெளியீடுகளை ஒருங்கிணைத்தவரும் ஆன பூவிழியன் பெரும் உழைப்பின் மூலம் இதழை வெளியிட்டிருக்கிறார். கடந்த கால வரலாற்றை விமர்சன பூர்வமாக தொகுக்கும் வகையில் டாக்டர் அம்பேத்கர், ஜெ.பாலசுப்பிரமணியம், அன்புசெல்வம் ஆகியோரின் கட்டுரைகளோடு என்னுடைய கட்டுரை ஒன்றும் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இதுவரை பெயராக … Continue reading அதிர்வெண்: தலித் அரசியல் பண்பாட்டு இதழ் அறிமுகம்

திராவிட கட்சிகள் முதலில் தங்கள் கட்சி பொறுப்புகளில் இட ஒதுக்கீட்டை பின்பற்றுகிறார்களா?

ஸ்டாலின் ராஜாங்கம்  கடலூர் மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள இரண்டு சாதிகளை கணக்கெடுத்து இரண்டாகப் பிரித்து ஒரு மாவட்ட பொறுப்பை வன்னியருக்கு கொடுத்து அவர்கள் கோபப்படாமல் பார்த்துவிட்டு தான்,மற்றொரு மாவட்ட பொறுப்பை தலித் ஒருவருக்கு கொடுத்திருக்கிறார்கள்.இதேபோல மற்ற மாவட்டங்களின் பொறுப்புகளை தீர்மானிக்கிற போது தலித்துகளை திருப்திப்படுத்த வேண்டுமென்று இவர்களால் யோசிக்க முடிவதில்லையே ஏன்? 60க்கும் மேற்பட்ட மாவட்டங்களாக பிரிக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறேன்.இவற்றில் பெரும்பான்மையாக உள்ள இரண்டு வடமாவட்டங்களில் வாய்ப்பளிக்க முடிந்த இக்கட்சி, மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் தலித்துகளை மாவட்ட செயலாளர் ஆக்கும் … Continue reading திராவிட கட்சிகள் முதலில் தங்கள் கட்சி பொறுப்புகளில் இட ஒதுக்கீட்டை பின்பற்றுகிறார்களா?