அன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்?

அன்புள்ள திரு.வை.கோ வணக்கம்.. நான் உங்களுடன் விவாதிக்கும் முன் சில விசயங்களை தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன்.. கடந்த 2006 வரை நான் உங்களை ஒரு அரசியல் தலைமைக்கான நபர் என நம்பினேன்.. உங்கள் விரிவான வரலாற்றறிவு,மொழிப்புலமை, பேச்சாற்றல், ஆகியவை தமிழ்ச்சமூகத்தின் எல்லா சாமானியரைப்போலவே எனக்கும் உவப்பான ஒன்றுதான்.. பொதுவாக நான் இந்திய ஜனநாயகத்தை பல்வேறு தத்துவத்தரப்புகளின் முரணியக்கமாக காண்பவன். அந்த வகையில் அண்ணா ஈ.வி.கே.சம்பத் ஆகியோருக்கு அடுத்து திராவிட இயக்கத்தின் ஆகச்சிறந்த நாடாளுமன்றவாதி நீங்கள்தான் என்பதில் இப்போதும் பெரிய … Continue reading அன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்?

“தலைமைப் பண்பின் இலக்கணம்!”

வேந்தன். இல கேட்கப்படும் கேள்விக்கு பின்னே சதி உள்ளதோ அல்லது யாரோ எழுதிக்கொடுத்ததோ. ஆனால் ஒரு கேள்வியையோ விமர்சனங்களையோ எதிர்கொள்ளும் பக்குவம் ஒரு தலைவருக்கு இருக்கவேண்டும். அப்படி இருப்பது தான் தலைமை பண்புக்கு அழகு. பெரியாரின் வரலாற்றை அறிந்த, அண்ணாவுடன் அரசியல் பயின்ற கலைஞருடன் வளர்ந்தவர் என்று சொல்லப்படும் மதிமுக தலைவர் வைகோ அவர்களுக்கு இது இருக்க வேண்டும் என்று சொல்லித் தெரிய தேவையில்லை. உணர்ச்சிவயப்பட்டு பேசுவதால், தான் சார்ந்திருக்கும் கொள்கைக்கும் கூட்டணிக்கும் மிகப்பெரிய சிக்கல் ஏற்படும் … Continue reading “தலைமைப் பண்பின் இலக்கணம்!”

ஈழ அரசியல்: குளத்து ஆமைகளும் கடல் ஆமைகளும்!

“மத்தியில் பிஜேபி அரசு அமைந்தால் போர் நிறுத்தம் வந்துவிடும்” என்று ஆசை காட்டுவதில் மொட்டு விட்ட இவர்களது கயமை “இலை மலர்ந்தால் ஈழல் மலரும்” என்பதாக விரிந்து ஈழத்தில் ரத்தம் குடிப்பதில் போய் முடிந்தது.

விடுதலை வேந்தனுக்கு வீர வணக்கம்: வைகோ

ஃபிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: 2016 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாளாகிய இந்த நாள், மனிதகுலத்தின் இருதயத்தில் துன்ப ஈட்டியைச் சொருகி உள்ளது. ஆம்; உலக வரலாற்றில், யுகயுகாந்திரத்திற்கும் புகழ் படைத்த தலைவர்கள் வரிசையில், கியூபாவின் விடுதலை வேந்தன் ஃபிடல் கேஸ்ட்ரோ (90) இன்று நம்மை விட்டுப் பிரிந்தார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முழு ஆயுத பலத்தோடு கியூபாவில் அடக்குமுறை ஆட்சியை நடத்திக் கொண்டு இருந்த சர்வாதிகாரி பாடிஸ்டுடாவை எதிர்த்து … Continue reading விடுதலை வேந்தனுக்கு வீர வணக்கம்: வைகோ

என்.டி.டி.வி. செய்தித் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு தடை: கருத்துரிமையைத் தடுக்கிறதா மத்திய அரசு?

“பஞ்சாப் மாநிலம் பதன்கோட் இராணுவ முகாம் மீது ஜனவரி மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பான செய்திகளை என்.டி.டி.வி. தொலைக்காட்சி ஒளிபரப்பியது. பாதுகாப்பு தொடர்பான தகவல்களையும், அரசின் ரகசியமான ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளையும் பகிரங்கமாக ஒளிபரப்பியதாக குற்றம் சாட்டி, மத்திய அமைச்சர்கள் குழு அளித்துள்ள பரிந்துரையை ஏற்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் நவம்பர் 9 ஆம் தேதி ஒரு நாள், என்.டி.டி.வி. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தடை விதித்து இருக்கிறது. இது தொலைக்காட்சி … Continue reading என்.டி.டி.வி. செய்தித் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு தடை: கருத்துரிமையைத் தடுக்கிறதா மத்திய அரசு?

மவுலிவாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கியர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்குக!: வைகோ

மவுலிவாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கிய மக்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிகை விடுத்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை -போரூர் மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த அடுக்கு மாடி குடியிருப்பு 2014, ஜூலை 28 ஆம் தேதி திடீரென்று இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 61 பேர் பலியான சோக நிகழ்வு நடந்தது. 11 மாடிகளைக் கொண்ட தலா இரண்டு அடுக்குமாடிக் … Continue reading மவுலிவாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கியர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்குக!: வைகோ

சென்னையில் இயங்கும் சிப்பெட் நிறுவனத்தை டெல்லிக்கு மாற்ற முயற்சி: வைகோ கண்டனம்

இலாபகரமாக இயங்கும் சிப்பெட் நிறுவனத்தை டெல்லிக்கு மாற்ற மத்திய அரசு முயற்சிப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “மத்திய அரசின் இரசயானம் மற்றும் உரத்தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் சென்னை கிண்டியில் இயங்கி வரும் மத்திய பிளாஸ்டிக் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனமான ‘சிப்பெட்’ 1968 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பிளாஸ்டிக் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் கல்வி மையமாகத் திகழும சிப்பெட், உலகளாவிய நிறுவனங்களுக்கு இணையாக வளர்ச்சி பெற்றுள்ளது. உற்பத்தித் தொழில்துறையில் குறிப்பிடத்தக்க இடத்தைப் … Continue reading சென்னையில் இயங்கும் சிப்பெட் நிறுவனத்தை டெல்லிக்கு மாற்ற முயற்சி: வைகோ கண்டனம்

அரசியல் சட்டத்தைக் கேலிக்கூத்தாக்கிய மோடி அரசு: வைகோ கண்டனம்

காவிரி பிரச்சினையில் அரசியல் சட்டத்தைக் கேலிக்கூத்தாக்கியுள்ளதாக மோடி அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “காவிரி நதி நீர்ச் சிக்கலுக்குத் தீர்வு காண, அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் செப்டம்பர் 30 ஆம் தேதி, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இன்று (3.10.2016) மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக … Continue reading அரசியல் சட்டத்தைக் கேலிக்கூத்தாக்கிய மோடி அரசு: வைகோ கண்டனம்

ஜெயலலிதா நலம் பெற்றுத் திரும்ப தலைவர்கள் வாழ்த்து

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதலமைச்சர் நலம்பெற்றுத் திரும்ப அரசியல் கட்சித் தலவர்கள் வைகோவும் மு. க. ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின் < div class="mtm _5pco"> உடல் நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும், தமிழக முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் விரைவில் முழுமையாக குணம் அடைந்து, நிர்வாகப் பணிகளை தொடர வேண்டும் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் விரும்புகிறேன். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: < … Continue reading ஜெயலலிதா நலம் பெற்றுத் திரும்ப தலைவர்கள் வாழ்த்து

சேல் கேஸ் எடுக்க தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது: பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் வைகோ வாதம்

காவிரி தீரத்தில் பாறைப்படிம எரிவாயு (சேல் கேஸ்) எடுக்க தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது என பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாதாடினார். இன்று (19.9.2016) தென்னிந்திய தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தில், பாறைப் படிம எரிவாயு குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் தமிழக விவசாயிகள் சார்பில் வாதாடிய வைகோ, முன்வைத்த கருத்துகள்: காவிரி தீரத்தில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் அபாயகரமான திட்டத்தை எதிர்த்து, இதே தீர்ப்பு ஆயத்தில் நான் வாதாடினேன். காவிரி தீர மக்களும், … Continue reading சேல் கேஸ் எடுக்க தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது: பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் வைகோ வாதம்

சிறையில் ராம்குமார் மரணம்; சிறை நிர்வாகம் என்ன செய்துகொண்டிருந்தது?: அரசியல் கட்சிகள் கண்டனம்

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கொலை வழக்கில் கைதான ராம்குமார் மரணமடைந்தது குறித்து நீதிவிசாரணை நடத்த வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. விசிக தலைவர் தொல் திருமாவளவன்: ராம்குமார் சாவுக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். இதை தற்கொலை என்று மூடி மறைக்க அரசு முயற்சிக்க கூடாது. அவர் தற்கொலை செய்துக் கொண்டாரா இல்லை கொலை செய்யப்பட்டாரா என்று விசாரிக்க வேண்டும். அவர் உடலை உடனே அடக்கம் செய்யக்கூடாது. சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன்: … Continue reading சிறையில் ராம்குமார் மரணம்; சிறை நிர்வாகம் என்ன செய்துகொண்டிருந்தது?: அரசியல் கட்சிகள் கண்டனம்

திமுக தோல்விக்கு வைகோ காரணமா?: உடன் பிறப்புகளுக்கு 11 கேள்விகள்!

விஷ்வா விஸ்வநாத் கடந்த ரெண்டு நாளாக வைகோவை எண்ணி எண்ணி குமுறி குமுறி நிலத்தில் புரண்டு புரண்டு சின்னப்புள்ளங்க மாதிரி அழுது கதறி கதறி சிலர் எழுதிட்டு இருப்பதை பார்க்கும்போது அடிப்படையான சில கேள்விகள் எழுகின்றன. 1. வைகோ திமுகவில் பொறுப்பு வகித்து கொண்டே அக்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து உள்குத்து வேலை செய்யவில்லை. அவர் தனக்கென்று ஒரு தனிக்கட்சி வைத்துள்ளார். தேர்தல் காலத்தில் ஒரு கூட்டணியை ஒருங்கிணைக்கிறார். இதில் என்ன தவறு ? 2. அவர் … Continue reading திமுக தோல்விக்கு வைகோ காரணமா?: உடன் பிறப்புகளுக்கு 11 கேள்விகள்!

மாற்று முழக்கம் தோற்றுவிட்டதா?

மாதவராஜ் தமிழக தேர்தல் முடிவுகள், நம்பிக்கைகளை தொலை தூரத்தில் காட்டுவதாகவே இருக்கின்றன. ஆளும் கட்சியான அதிமுகவின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக இணைந்து போராட்டங்கள் நடத்தும் உறுதியோடு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும், மதிமுகவும் இணைந்து மக்கள் நலக் கூட்டு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. சில மாதங்களில் எதிர்வந்த தேர்தலையொட்டி, இந்த கூட்டு இயக்கமானது ஊழல் மலிந்த, அரசியல் நேர்மையற்ற, சர்வாதிகார மனப்பான்மை கொண்ட, மக்கள் விரோத திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணியாக … Continue reading மாற்று முழக்கம் தோற்றுவிட்டதா?

”ஊழல் பணநாயகம் வென்றுள்ளது”

தேர்தல் முடிவுகள் குறித்து தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் ஊழல் பணநாயகம் வென்றுள்ளது அதிமுகவும், திமுகவும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை வாரி இறைத்து வாக்குகளை ‘வாங்கி’ இருக்கின்றன. தமிழகத்தில் இந்த நச்சுச் சுழல் தொடரவிடாமல், மக்கள் ஆட்சித்தத்துவம் காக்க உத்வேகத்துடன் தொடர்ந்து போராடுவோம். மாற்று அரசியலை முன்னெடுத்துச் செல்ல அகரம் எழுதி இருக்கின்ற தேசிய முற்போக்கு திராவிட கழகம் … Continue reading ”ஊழல் பணநாயகம் வென்றுள்ளது”

காட்டுமன்னார்கோயிலில் திருமாவளவன் மீது தாக்குதல் முயற்சி!

திருமாவளவன் மீது நடந்த தாக்குதல் முயற்சியை வன்மையாக கண்டிப்பதாக மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி -தமாகா அணியின் காட்டுமன்னார்கோயில் தொகுதி வேட்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் சகோதரர் தொல்.திருமாவளவன் அவர்கள் போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில், திருமாவளவன் அவர்கள் சாவடிக்குப்பத்தில் பிரச்சாரம் செய்யச் சென்றபோது, வழியில் டிராக்டரை நிறுத்தி அவர் சென்ற … Continue reading காட்டுமன்னார்கோயிலில் திருமாவளவன் மீது தாக்குதல் முயற்சி!

ஈழத் தமிழர்களை நாம் அவமானப்படுத்துகிறோம்!

ஜி. கார்ல் மார்க்ஸ் ஈழ விவகாரத்தில் கருணாநிதியை முன்வைத்து தீவிரமான விவாதங்கள் சமூக ஊடகங்களில் நடந்தன. தினமலரும், நியூஸ் செவனும் நடத்திய கருத்துக் கணிப்பில், திமுக முந்துவதான தோற்றம் வரவும், விவாதம் அந்தப் பக்கம் திசை திரும்பியிருக்கிறது. இத்தகைய விவாதத்தில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் தீவிர கட்சி அபிமானிகளாக இருப்பதால், ஈழ விவகாரம் யாருக்கு பெரும் நட்டத்தை விளைவித்தது, அதனால் இழப்புகளை சந்தித்தவர்கள் யார் என்ற அளவிலேயே அது நிற்கிறது. முதலில், ஈழ விவகாரத்தில் நட்டமடைந்தவர்கள் ஈழத்தமிழர்கள். அதை … Continue reading ஈழத் தமிழர்களை நாம் அவமானப்படுத்துகிறோம்!

அசோக்குமார் ஏன் டிஜிபியாக தொடர்ந்து பதவியில் நீடிக்கிறார்?

தேர்தல் ஆணையத்திற்கு மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ கடிதம் எழுதியிருக்கிறார். அதில், “மதிப்பிற்குரிய தலைமைத் தேர்தல் ஆணையர் அவர்களுக்கு, வணக்கம். எனது 30.04.2016 கடிதத்தின் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் நடுநிலையான, நேர்மையான தேர்தல் நடத்திட உடனடி நடவடிக்கைக்காக இந்தக் கோரிக்கையைத் தங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறேன். கடந்த 48 மணி நேரத்தில் தேர்தல் ஆணையம் உயர்ந்த பதவிகளில் இருக்கக்கூடிய காவல்துறையின் மூத்த மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகளை அவர்கள் வகித்த பொறுப்புகளில் இருந்து விலக்கி உள்ளார்கள். டி.ஜி.பி. - … Continue reading அசோக்குமார் ஏன் டிஜிபியாக தொடர்ந்து பதவியில் நீடிக்கிறார்?

“வைகோ ஹீரோ; வில்லன் கலைஞர்; வில்லி ஜெயலலிதா!” ட்விட்டரில் விஜயகாந்த் பதில்

தேமுதிக தலைவர் விஜயகாந்த், ட்விட்டரில் மக்களின் கேள்விகளுக்கு ஞாயிற்றுக் கிழமை பதிலளித்தார். இதில் ஒருவர், “சார், உங்களுக்கு மிகவும் பிடித்த வில்லன் யார்? (வைகோ தவிர)” எனக் கேட்டிருந்தார். அதற்கு விஜயகாந்த் அளித்த பதில், “வைகோ ஹீரோ; வில்லன் கலைஞர்; வில்லி ஜெயலலிதா!”   https://twitter.com/iVijayakant/status/726652024234856448 அன்பின் கேப்டன், சில ஊடகங்கள் தங்கள் மீது காட்டும் தனிப்பட்ட தாக்குதல் பற்றிய தங்களது கருத்து? விஜயகாந்த் பதில்: கவலைப் படுவதில்லை. https://twitter.com/iVijayakant/status/726653687855222784 தொங்கு சட்டமன்றம் அமைந்தால் உங்கள் ஆதரவு யாருக்கு? … Continue reading “வைகோ ஹீரோ; வில்லன் கலைஞர்; வில்லி ஜெயலலிதா!” ட்விட்டரில் விஜயகாந்த் பதில்

திருவாரூரில் பிரச்சாரம்: திமுகவினர் தன்னைத் தாக்க முயற்சித்ததாக வைகோ புகார்!

திருவாரூரில் தனக்கு எதிராக திமுகவினர் கருப்புக் கொடி காட்டியது குறித்தும் மதிமுக தொண்டர்கள் தாக்கப்பட்டது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: நேற்று ஏப்ரல் 30 ஆம் நாளன்று மாலை நான்கு மணிக்கு சிதம்பரத்தில் பிரச்சாரத்தைத் தொடங்கிய நான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பாலகிருஷ்ணன் அவர்களை ஆதரித்து நான்கு இடங்களில் பேசிவிட்டு, அடுத்து சீர்காழி தொகுதியில் தே.மு.தி.க., வேட்பாளர் உமாநாத், மயிலாடுதுறையில் தே.மு.தி.க. வேட்பாளர் அருள்செல்வன், பூம்புகார் த.மா.கா. வேட்பாளர் சங்கர், நன்னிலம் சிபிஎம் வேட்பாளர் … Continue reading திருவாரூரில் பிரச்சாரம்: திமுகவினர் தன்னைத் தாக்க முயற்சித்ததாக வைகோ புகார்!

இது வைகோ சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டும் தானா?

ஸ்டாலின் ராஜாங்கம் நடுநிலை காட்டுவதற்காக சாதிபிம்பங்களை இடத்திற்கொன்றாக ஆராதிக்கும் வைகோவின் செயல்கள் யாரும் அறியாததல்ல. ஆனால் இப்பிரச்சினை வைகோ தேர்தல் போட்டியிலிருந்து விலகியது பற்றியதாகவும் திமுக மீதான அவரின் குற்றச்சாட்டு பற்றியதாகவும் மட்டுமே முடித்துகொள்ளப்படுகிறது. உண்மையில் இது மட்டும் தான் பிரச்சினையா? 1) கோவில்பட்டி திமுக வேட்பாளர் தேவர் * நாயக்கர் எதிர்மறை மூலம் தன் தேவர் சாதியின் எண்ணிக்கை பெரும்பான்மையை காட்டி பேசியது கடந்த 3 நாட்களாக செய்தி பக்கங்களில் உலா வந்தது.இப்போக்கு தேர்தல் சம்பந்தப்பட்ட … Continue reading இது வைகோ சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டும் தானா?

திமுக சாதி கலவரத்தைத் தூண்ட திட்டமிடுகிறது: தேர்தல் போட்டியில்லை என வைகோ பரபரப்பு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் என் உயிரான கண்மணிகளுக்கும், தேசிய முற்போக்கு திராவிட கழகம், மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்களுக்கும், அக்கட்சிகளின் தோழர்களுக்கும், தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கும், அக்கட்சியின் தொண்டர்களுக்கும், தமிழக வாக்காளப் பெருமக்கள், பொதுமக்கள், ஊடகங்களின் செய்தியாளர்கள், தொலைக்காட்சிகளின் ஒளிப்பதிவாளர்களுக்கும், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் நான் வேட்பாளராகப் … Continue reading திமுக சாதி கலவரத்தைத் தூண்ட திட்டமிடுகிறது: தேர்தல் போட்டியில்லை என வைகோ பரபரப்பு

“நான் தேவர் சமூகத்தை சேர்ந்தவன்; வைகோ நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்; வெற்றி எனக்குத்தான்” திமுக வேட்பாளரின் தேர்தல் வியூகம்!

சாதி ஓட்டுகளை கணக்கில் கொண்டே வேட்பாளர்களை நிறுத்துவதாக அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் மேல் குற்றச்சாட்டு இருந்துவருகிறது. இதற்கு உதாரணமாக வேட்பாளர் பட்டியலே உள்ள நிலையில், கோவில்பட்டி திமுக வேட்பாளர் அ. சுப்பிரமணியன் சாதி ஓட்டு தனக்கு வெற்றியைப் பெற்றுத்தரும் என்று பேட்டியளித்துள்ளார். “நான் தேவர் சமூகத்தை சேர்ந்தவன். 50 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் தேவர் சமூகத்தை சேர்ந்தவருக்கு டிக்கெட் வழங்கி இருக்கிறார்கள். அதே நேரத்தில் வைகோவும், அ.தி.மு.க. வேட்பாளர் ராமானுஜம் கணேசும் நாயுடு சமூகத்தை … Continue reading “நான் தேவர் சமூகத்தை சேர்ந்தவன்; வைகோ நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்; வெற்றி எனக்குத்தான்” திமுக வேட்பாளரின் தேர்தல் வியூகம்!

தேவர் சமாதிக்குச் சென்று சேர்த்த புகழை வைகோ இப்படியா இழப்பது?

ஸ்டாலின் ராஜாங்கம் நல்ல பேர் வாங்க வேண்டுமென்பதற்காக அதீத நடுநிலை, தன்னை முன்னிறுத்தல், இவற்றுக்கான மிகை உணர்ச்சி போன்றவற்றால் வைகோவுக்கு எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டிருப்பதே அனுபவம்.ஆனால் சூழ்நிலைகளுக்கேற்ப பார்த்து பார்த்து திட்டமிடுபவர்களை காட்டிலும் வைகோவின் கவன ஈர்ப்பு அரசியல் அவர் அறிந்தோ அறியாமலோ சில வேளைகளில் நேர்மறை அம்சங்களை நோக்கியும் நகர்த்திவிடுகிறது போலும். இத்தேர்தலில் கருணாநிதி மீது சாதிய வசை,மறுநாளே அதற்கு நேரெதிர் முனையில் நின்று மன்னிப்பு, பிரச்சார கூட்டத்தில்(மதுரை) முத்துராமலிங்கத்தேவர், காமராசர், இம்மானுவேல் சார்ந்த நடுநிலை … Continue reading தேவர் சமாதிக்குச் சென்று சேர்த்த புகழை வைகோ இப்படியா இழப்பது?

“இன்றைய அரசியலில் நையாண்டி செய்யப்பட வேண்டிய அரசியல்வாதி ஜெயலலிதாதான்”

ஜி. கார்ல் மார்க்ஸ் எனக்குத் தெரிந்து இன்றைய அரசியலில், மிகவும் நையாண்டி செய்யப்பட வேண்டிய அரசியல்வாதி யாரென்றால் அது ஜெயலலிதாதான். எழுத்தாளர்கள், அரசியல் விமர்சகர்கள், முக்கியமாக கார்ட்டூனிஸ்டுகள் ஆகியோருக்கு தனது தேர்தல் பரப்புரை மூலம் ஜெயலலிதா அளித்துக்கொண்டிருப்பது பெரும் தீனி. ஜனநாயகத்துக்கு கொஞ்சமும் தகுதியில்லாத, பதட்டங்கள் நிறைந்த காமெடியனாக அவர் தோற்றம் கொண்டிருக்கிறார். ஒரு செருப்போ, ஒரு கல்லோ மேடையை நோக்கி வரக்கூடும் என்ற பதட்டம் அவரைச் சுற்றியுள்ள மற்றெல்லோருக்கும் இருக்கிறது. அதனால் தான் இவ்வளவு உருட்டல் … Continue reading “இன்றைய அரசியலில் நையாண்டி செய்யப்பட வேண்டிய அரசியல்வாதி ஜெயலலிதாதான்”

#சர்ச்சை:“பறைச்சியெல்லாம் ஜம்பரும் புளவுசும் போடுவதால் துணிவிலை ஏறிவிட்டது என்று பேசவிடலாமா?”

ஸ்டாலின் ராஜாங்கம் வைகோ கருணாநிதியை சாதி சொல்லி திட்டிய கயமையை கண்டித்து பலரும் பேசியிருந்தார்கள்.எனக்கும் அதில் உடன்பாடு உண்டு. இந்நிலையில் தி இந்து நாளேட்டில் (தமிழ்)இது தொடர்பான கட்டுரை மீது திராவிடர் கழகத் துணைத்தலைவர் திரு.கலி.பூங்குன்றன் எழுதிய எதிர்வினையொன்று (12.04.2016)கடிதப்பகுதியில் வெளியாகியிருந்தது. பெரியாரும் வைகோவும் ஒன்றா? என்ற தலைப்பிலான அதில்" சாதி ஆணவத்தில் வன்மத்துடன் பேசிய வைகோவின் பேச்சையும் சாதி ஒழிப்புக்காக காலமெல்லாம் பேசிய பெரியாரின் பேச்சையும் ஒரே தளத்தில் வைத்து ஒப்பிட்டு எழுதுவது முறையற்றதும் கண்டிக்கத்தக்கதாகும்" … Continue reading #சர்ச்சை:“பறைச்சியெல்லாம் ஜம்பரும் புளவுசும் போடுவதால் துணிவிலை ஏறிவிட்டது என்று பேசவிடலாமா?”

மதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கோவில்பட்டியில் வைகோ போட்டி

தமிழக சட்டமன்றத் தேர்தல் - 2016 மதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கோவில்பட்டி - வைகோ எம்.ஏ. பி.எல்., திருப்போரூர் - மல்லை சத்யா எம்.ஏ., காரைக்குடி - புலவர் சே. செவந்தியப்பன், டி.லிட்., ஆலங்குடி - டாக்டர் க. சந்திரசேகரன் பி.வி.எஸ்சி., செஞ்சி - ஏ.கே. மணி சங்கரன்கோவில் - டாக்டர் சதன் திருமலைக்குமார், எம்.பி.பி.எஸ்., சிங்காநல்லூர் - ஆடிட்டர் அர்ஜூன்ராஜ் குளச்சல் - சம்பத் சந்திரா, பி.ஏ., எல்.எல்.பி,. திருச்சி கிழக்கு - டாக்டர் … Continue reading மதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கோவில்பட்டியில் வைகோ போட்டி

திருவாளர் திமுக சாதியை எதிர்க்கிறீர்களாமே..?

கௌதம சன்னா வைகோ பேசிய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை, அதே நேரத்தில் உடனே அவர் மன்னிப்பும் கேட்டுவிட்டார். அந்த மன்னிப்பு கோரலை ஏற்பதும் தண்டிப்பதும் கலைஞர் அவர்களின் பெருந்தன்மையைப் பொருத்தது.. ஆனால் இந்த நேரத்தில் பழைய கதைகளைப் பேசலாமா என்பது திமுகவினர் யோசிக்க வேண்டும். பழைய கதைகளைப் பேசினால் திருவாளர் திமுகவினரின் முற்போக்கான சாதிய நடவடிக்கைகள் அம்பலமாகும் என்பதை அவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். அருவருக்கத்தக்க வகையில் அவர்கள் மேற்கொள்ளும் … Continue reading திருவாளர் திமுக சாதியை எதிர்க்கிறீர்களாமே..?

வைகோவின் நோக்கம் நிறைவேறியதா?

மனுஷ்யபுத்திரன் வைகோ எதை வேண்டுனாலும் பேசுவார், அடிகிடைக்கும் என்று தெரிந்ததும் மன்னிப்புக் கேட்பார் என்றால் இந்த தந்திரத்தை எல்லோரும் பயன்படுத்த ஆரம்பிப்பார்கள். இது தேர்தல் களத்தை பெருமளவு சீரழித்து விடும். சாதி ரீதியாக இழிவுபடுத்தும் சொற்களைபேசுவது, ஆதாரமற்ற அவதூறு குற்றச்சாட்டுகளை கூறுவது தேர்தல் விதிமுறைகளின்படி மிகக்கடுமையான குற்றம். தேர்தல் ஆணையம் தானாக முன் வந்து வைகோ மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். அவர்மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யவேண்டும். இல்லாவிட்டால் தேர்தல் ஆணையர் தேர்தல் விதிமுறைகளைப் பற்றி பேசுவது … Continue reading வைகோவின் நோக்கம் நிறைவேறியதா?

#வீடியோ: வைகோ பேசியது என்ன?

திமுக தலைவர் கருணாநிதி குறித்தும் தேமுதிகவிலிருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார் குறித்தும் வைகோ பேசியது என்ன? http://www.youtube.com/watch?v=42fgF1HfTZc

”வைகோ துணை முதல்வர்; திருமாவளவன் கல்வி அமைச்சர்; இடதுசாரிகளுக்கு உள்ளாட்சி, நிதித்துறை அமைச்சகம்”

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெற்றால், விஜயகாந்த் முதலமைச்சராவார். வைகோ துணை முதல்வராகவும் திருமாவளவன் கல்வி அமைச்சராகவும் பதவி ஏற்பார்கள். இடதுசாரிகளுக்கு உள்ளாட்சித் துறையும் நிதித்துறையும் ஒதுக்கப்படும் என தேமுதிக இளைஞரணி தலைவர் சுதிஷ் தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சிறுதாவூர் பங்களாவில் கண்டெய்னர் லாரி நிறைய கட்டுக் கட்டாக பணம்: வைகோ இந்தியத் தலைமை தேர்தல் ஆணையருக்குக் கடிதம்!

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான சிறுதாவூர் பங்களாவில் கண்டெய்னர் லாரிகள் கட்டுக்கட்டாக பணம் கொண்டு செல்லப்பட்டதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ கடிதம் எழுதியிருக்கிறார்...   அன்புடையீர், வணக்கம். தங்களுடைய மேலான நடவடிக்கைக்காக அதி முக்கியம் வாய்ந்த பிரச்சினையை தங்களது கவனத்துக்குக் கொண்டுவருகிறேன். கடந்த 27 ஆம் தேதி இரவு மாண்புமிகு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் அடிக்கடி தங்குகின்ற சிறுதாவூர் பங்களாவிற்கு மிகப் பெரிய கண்டெய்னர் ஒன்று லாரியில் எடுத்துச் செல்லப்பட்டது. இந்தக் … Continue reading சிறுதாவூர் பங்களாவில் கண்டெய்னர் லாரி நிறைய கட்டுக் கட்டாக பணம்: வைகோ இந்தியத் தலைமை தேர்தல் ஆணையருக்குக் கடிதம்!

’ஓ.பி.எஸ்., நத்தம் கிட்ட எடுத்த 30 ஆயிரம் கோடியை மறைக்கத்தான் 500 கோடி, 1500 கோடி மேட்டராம்’

தற்சமயம் சமூக வலைத்தளங்களில் ரூ. 500 கோடி, 1500 கோடி பற்றிய பேச்சுதான் வைரலாகிக் கொண்டிருக்கிறது. மக்கள் தங்கள் கற்பனைக் கேற்றமாதிரி ‘கதை’ கதையாக கதைக்கிறார்கள். சில ட்விட் கதைகள் இங்கே! https://twitter.com/thoatta/status/713669301157306369 https://twitter.com/gokula15sai/status/713704493179908096 https://twitter.com/thoatta/status/713707164209008640 https://twitter.com/Thiru_navu/status/713657596125667328 https://twitter.com/oorkkaaran/status/713654838735671296 https://twitter.com/senthilcp/status/713648957096759296 https://twitter.com/Thiru_navu/status/713628385944031233 https://twitter.com/Asalttu/status/713629798594031616 https://twitter.com/oorkkaaran/status/713617216659279872

#வீடியோ: ’அதிமுக ரூ. 1500 கோடி கொடுத்ததா?’ பேட்டியாளரின் கேள்விக்கு மைக்கை தூக்கி வீசிவிட்டு கிளம்பிய வைகோ!

மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ, இரண்டு நாட்களுக்கு முன் திமுக, தேமுதிகவை கூட்டணியில் இணைக்க ரூ. 500 கோடி பேரம் பேசியது என குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு திமுக தரப்பில் இருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தேமுதிக மகளிரணித் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் பத்திரிகைகள்தான் பேரம் பேசுவதாக தொடர்ந்து எழுதின; அப்படி எழுதுவதை தயவு செய்து நிறுத்துங்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை என்றார். இந்நிலையில் பாலிமர் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் வைகோவிடம், ‘திமுக ரூ. … Continue reading #வீடியோ: ’அதிமுக ரூ. 1500 கோடி கொடுத்ததா?’ பேட்டியாளரின் கேள்விக்கு மைக்கை தூக்கி வீசிவிட்டு கிளம்பிய வைகோ!

கைவிடப்பட்டுக்கிடக்கிறாள் கௌசல்யா!

ச. தமிழ்ச்செல்வன் கோவை அரசு மருத்துவமனையில் ஒரு சர்வதேச அனாதையைப்போல கைவிடப்பட்டுக்கிடக்கிறாள் கௌசல்யா. காதல் மணம் புரிந்த சங்கர் கண் முன்னால் வெட்டிச் சாய்க்கப்பட்டதைக் கண்ட அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல்.. இதுவரை மார்க்சிஸ்ட் கட்சித்தோழர்கள், ஜனநாயக மாதர் சங்கத்தினர், தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர், அய்யா வைகோ, அறிவியல் இயக்கத்தோழர்கள் மோகனா, உதயன் போல வெகு சிலரே சென்று அந்தப் பெண் குழந்தையைக் கண்டு வந்துள்ளனர். குறைந்த பட்சம் கோவை வட்டாரத்தில் உள்ள பல்வேறு அமைப்பினர் முறை வைத்துத் … Continue reading கைவிடப்பட்டுக்கிடக்கிறாள் கௌசல்யா!

ஐந்தாயிரத்துக்கெல்லாம் கொடூர கொலை செய்வது தமிழகத்தில் சாதாரணமாகிவிட்டது: தொல். திருமாவளவன் நேர்காணல்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் சிறப்பு நேர்காணலை வெளியிட்டுள்ளது  ‘தீக்கதிர்’(20-03-2016) நாளிதழ். அதனுடைய மறுபிரசுரம்... சந்திப்பு : மதுக்கூர் ராமலிங்கம், சி. ஸ்ரீராமுலு மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் ஏற்கெனவே பல்வேறு கூட்டணிகளில் இடம்பெற்றிருந்தன. அதற்கும், தற்போது அமைந்துள்ள மக்கள் நலக் கூட்டணிக்கும் அடிப்படை வேறுபாடு என்ன? மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்வைத்த கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்திற்கு இந்தக் கூட்டணி எந்த வகையில் ஒத்திசைவாக உள்ளது? திமுக,அதிமுக ஆகிய இரு … Continue reading ஐந்தாயிரத்துக்கெல்லாம் கொடூர கொலை செய்வது தமிழகத்தில் சாதாரணமாகிவிட்டது: தொல். திருமாவளவன் நேர்காணல்

ஈழப்பிரச்சினையை வணிகமாக்கும் ஊடகங்கள்: திமுகவையும் அதிமுகவையும் ஒரே கோட்டில் நிறுத்துவது சரியா?

யுவகிருஷ்ணா தேர்தல் தேதி அறிவித்தாகி விட்டது. இனி ஜெயா அரசு காபந்து அரசுதான். இன்னுமா விகடனாருக்கு பயம்? அண்ணன் ப.திருமாவேலன் அவர்கள் இவ்வார விகடனில் எழுதியிருக்கும் ’இன்னும் எத்தனை நாடகங்கள்?’ கட்டுரை, ஜெயலலிதாவையும் கலைஞரையும் ஈழப்பிரச்சினையில் ஒரே தராசில் சரிக்கு சமமாக நிறுத்திவைக்க முயற்சிக்கிறது. மநகூ என்கிற அதிமுகவின் ‘பீ’ டீம் செய்யும் அதே வேலையைதான் விகடனும் செய்கிறது. ஈழப்பிரச்சினையில் கலைஞர் என்ன சொல்கிறாரோ, அதற்கு நேரெதிரான கருத்தை ஜெ. சொல்லுவார் என்று கட்டுரை சொல்கிறது. உண்மைதான். … Continue reading ஈழப்பிரச்சினையை வணிகமாக்கும் ஊடகங்கள்: திமுகவையும் அதிமுகவையும் ஒரே கோட்டில் நிறுத்துவது சரியா?

சாதிவெறியை ஒழிக்க வைகோ உள்ளிட்ட மக்கள் நல கூட்டணி தலைவர்களுக்கு ஒரு வாய்ப்பு..!

கார்ட்டூனிஸ்ட் பாலா இரு தினங்களுக்கு முன் கவிஞர் சல்மா அவர்கள் பதட்டமாக போனில் தொடர்பு கொண்டார். அவருக்கு தெரிந்த ஒரு காதல் தம்பதியை பிரித்து பெண்ணுக்கு கட்டாயத்திருமணம் செய்ய முயற்சி நடக்கிறது.. ஏதாவது உதவ வாய்ப்புண்டா என்று கேட்டார். இதுபோன்ற பஞ்சாயத்துகளை கவனிக்கும் சாகசம் என்ற அமைப்பினரின் தொடர்பு எண் கொடுத்தேன். அதன்பிறகு எப்படியோ காவல்துறையினர் மூலம் திருமண ஏற்பாடுகளை நிறுத்தியிருக்கிறார்கள். காதலுக்கு குறுக்கே நிற்கும் வழக்கமான சாதி பிரச்னைதான் இந்த காதல் தம்பதியை பிரிக்க முயற்சிப்பதற்கும் … Continue reading சாதிவெறியை ஒழிக்க வைகோ உள்ளிட்ட மக்கள் நல கூட்டணி தலைவர்களுக்கு ஒரு வாய்ப்பு..!

#தலித்முதல்வர் விவாதம்: சுபவீயின் கேள்வி புறக்கணிக்கக்கூடியதா?

மதிவண்ணன் பத்திரிக்கையாள நண்பரொருவர் தலித் முதல்வர் ஆக வேண்டும் என்கிற விவாதத்தில் உங்கள் கருத்து என்ன எனக் கேடடார்;. அவரிடம்; சொன்னதும் சொல்ல நினைத்ததுமான சில கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன் தலித் முதல்வர் ஆக வேண்டும் என்கிற கருத்து எனக்கு உடன்பாடானதே. இன்னும் கூடுதலாக அழுத்திச் சொல்வதென்றால் ஒடுக்குமுறையில் உச்சபட்சத்தை அனுபவிக்கின்றதும் உற்பத்தியில் உடல் உழைப்பில் நற்பண்புகளில் முதன்மை இடத்தை வகிப்பதுமான அருந்ததியர் வகுப்பில் ஒருவர் முதல்வர் ஆவது கருத்தியல் ரீதியில் பொருத்தமான ஒன்று. நடைமுறையில் … Continue reading #தலித்முதல்வர் விவாதம்: சுபவீயின் கேள்வி புறக்கணிக்கக்கூடியதா?

‘மக்கள் நலக் கூட்டணியை உடைக்க முயல்கிறாரா ரவிக்குமார்?’

அ.மார்க்ஸ் நான் எதிர்பார்த்தது போல மக்கள் நலக் கூட்டணியைச் சிதைக்கும் வேலையை ரவிக்குமார் தொடங்கிவிட்டது தெரிகிறது. தேர்தலுக்குப் பின் ஏதோ ஒரு அரசியல் சூழலில் மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வரும் வாய்ப்பிருந்து யார் முதல்வர் எனக் கேள்வி எழுந்தால் நிச்சயமாக அந்தத் தகுதி தொல்.திருமாவளவனுக்கு உண்டு என்பதில் எனக்கெல்லாம் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் ஒரு கூட்டணி உருவாகி அதில் முதல்வர் வேட்பாளர் என யாரையும் அறிவிப்பதில்லை எனவும் முடிவானபின், கூட்டணியில் உள்ள ஒரு … Continue reading ‘மக்கள் நலக் கூட்டணியை உடைக்க முயல்கிறாரா ரவிக்குமார்?’

2016 சட்டப்பேரவைத் தேர்தல்: பி டீம்களின் தர்ம யுத்தம்; கலக்கப்போவது யாரு?

வில்லவன் இராமதாஸ் அதிமுக கட்சி பாஜகவின் பி டீம் என்பது அனேகமாக அனைவருக்கும் தெரிந்த செய்தி (இதனை அதிமுக ஒத்துக்கொண்டாலும் மார்க்சிஸ்ட் ஒத்துக்கொள்ளாது). மக்கள் நல கூட்டியக்கத்தை அதிமுகவின் பி டீம் என்கிறது திமுக வட்டாரம். இந்த பட்டியலில் அடுத்த பி டீம் ஒன்றைப் பற்றிய தகவலை மார்க்சிஸ்ட் கட்சியின் சிந்தன் (இரா) தன் நிலைத்தகவல் ஒன்றில் வெளியிட்டிருக்கிறார். அதாவது திமுகவை அதிமுகவின் பி டீம் என குறிப்பிட்டிருக்கிறார். ஆக தமிழக தேர்தல் களம் மூன்று முக்கிய … Continue reading 2016 சட்டப்பேரவைத் தேர்தல்: பி டீம்களின் தர்ம யுத்தம்; கலக்கப்போவது யாரு?