மேக்கே தாட்டு அணை கட்டுவதற்கு ஒப்புதல்: ஒட்டுமொத்த காவிரிச்சமவெளியின் உருக்குலைவு

ஆறுக்கும் மக்களுக்குமான உறவை, அணைகளை மேலாண்மை செய்கிற அதிகாரி வர்க்கத்தின் ஒற்றை தீர்மானங்கள் கிழித்துப் போட்டது! தற்போது நீதிமன்றங்கள் அதை செய்து வருகிறது.

குடும்பப் பிரச்னையால் தற்கொலை; வயது முதிர்வால் மரணம்: விவசாயிகள் மரணம் குறித்து தமிழக அரசு

வயது முதிர்வு, நோய் காரணமாகத்தான் விவசாயிகள் மரணமடைந்ததாகவும் வறட்சி காரணமாக யாரும் இறக்கவில்லை என்றும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. மேலும் 30 விவசாயிகள் குடும்பப் பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொண்டதாகவும் தமிழக அரசின் பிரமாணப் பத்திரம் கூறுவதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

17 விவசாயிகளுக்கு மட்டுமே நிவாரணம்; மற்றவர்களை கைகழுவி விட்டாரா முதலமைச்சர்?

வறட்சியால் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துபோன நிலையில் 17 விவசாயிகளின் குடும்பத்துக்கு மட்டும் நிவாரணம் அறிவித்துள்ளது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு. இறந்துபோன மற்ற விவசாயிகளின் குடும்பங்களை கைகழுவி விட்டதா தமிழக அரசு என கேள்வி எழுப்பியுள்ளார் சிபிஐயின் மாநில செயலாளர் இரா. முத்தரசன். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்கும் அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். கடந்த ஜனவரி 10 ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பை … Continue reading 17 விவசாயிகளுக்கு மட்டுமே நிவாரணம்; மற்றவர்களை கைகழுவி விட்டாரா முதலமைச்சர்?

வேளாண்மையை அழிக்கக் காத்திருக்கும் கார்ப்பரேட் அமைப்பு முறையை எப்போது மாற்றியமைக்கப் போகிறோம்?

நக்கீரன் மேட்டூர் அணையின் நீர்மட்டம் எவ்வளவு என்று தெரிந்துக் கொள்வதற்காக அன்றாடச் செய்திப் பார்ப்பது காவிரிப்படுகை உழவர்களின் வழக்கம். ஆனால் இன்று உழவர்களின் சாவு எண்ணிக்கையைத் தெரிந்துக்கொள்ளச் செய்தியை பார்க்கும் அவலநிலை. வயல்கள் நீரின்றிக் காய்ந்தாலும், உழுகுடிகளின் கண்கள் நீரால் நிரம்பி வழிகின்றன. ஒரு நெடிய உறக்கத்துக்குப் பிறகு மாநில அரசு விழித்துக்கொண்டு பாதிப்பு பற்றி ஆராய உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் அதற்குள் இன்னும் எத்தனை பலி காத்திருக்கிறதோ! குறுவை சாகுபடிக்கான நீரை ஆண்டுதோறும் ஜூன் 12ந்தேதி திறந்து … Continue reading வேளாண்மையை அழிக்கக் காத்திருக்கும் கார்ப்பரேட் அமைப்பு முறையை எப்போது மாற்றியமைக்கப் போகிறோம்?

விவசாயிகளின் துயரத்தை புரிந்துகொள்ள, தீர்வு காண உதவும் ஓர் விவாதம்!

‘விவசாயிகள் துயரத்துக்கு யார் காரணம்?’ என்ற தலைப்பில் நியூஸ் 18 தமிழ்நாடு ‘காலத்தின் குரல்’ நிகழ்ச்சியில் திங்கள்கிழமை விவாதம் நடத்தப்பட்டது. இந்த விவாதத்தில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அவற்றுக்கான தீர்வுகள், உடனடியாக அரசு செய்ய வேண்டியது என்ன? என பல முக்கியமான பொருள்களில் விவாதம் நீண்டது. இந்த விவாதத்தில் கே.கனகராஜ் (மார்க்சிஸ்ட்), பி.ஆர்.பாண்டியன் (விவசாயிகள் சங்கம்), ஜெ.ஜெயரஞ்சன் (பொருளாதார வல்லுநர்), எம்.ஜி.தேவசகாயம் (ஐ.ஏ.எஸ். அதிகாரி (ஓய்வு)), கோலப்பன் ( பத்திரிகையாளர்) ஆகியோர் பங்கேற்றனர்.  நெறியாள்கை செய்தார் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் தலைமை செய்தியாசிரியர் மு.குணசேகரன். … Continue reading விவசாயிகளின் துயரத்தை புரிந்துகொள்ள, தீர்வு காண உதவும் ஓர் விவாதம்!

விவசாயிகள் மரணம் குறித்து ஒரு ஆறுதல் அறிக்கைகூட முதலமைச்சர் வெளியிடவில்லை: விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு

விவசாயிகள் மரணம் குறித்து முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆறுதல் தெரிவித்து ஒரு அறிக்கைகூட வெளியிடவில்லை என‌ அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டியுள்ளார். தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் 5-ம் தேதி விவசாயிகள் மாநிலம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்குமாறு திமுக பொருளாளரும், எதிர்கட்சி தலைவரும் ஆன மு.க.ஸ்டாலினை சந்தித்து பி.ஆர். பாண்டியன் கேட்டுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் … Continue reading விவசாயிகள் மரணம் குறித்து ஒரு ஆறுதல் அறிக்கைகூட முதலமைச்சர் வெளியிடவில்லை: விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு

கண்டுகொள்ளாத தமிழக அரசு; தஞ்சையில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே குழிமாத்தூர் கிராமம் குடியானத் தெருவை சேர்ந்த அரவிந்த். இவர், 13 ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்திருந்தார். ஆனால் போதிய அளவில் காவிரியில் நீர் திருந்துவிடப்படாத காரணத்தாலும், மழை பெய்யாததாலும் 10 ஏக்கர் நெற்பயிர்கள் கருகிப்போயின. இதனால்  அரவிந்த் கடந்த மனவேதனையுடன் காணப்பட்டிருக்கிறார். பயிர் கருகிய சோகம் தாங்க முடியாமல் வயலுக்காக வாங்கி வைத்திருந்த பூச்சிமருந்தை குடித்து அரவிந்த் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள், தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி … Continue reading கண்டுகொள்ளாத தமிழக அரசு; தஞ்சையில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை

பயிர்கருகி இதுவரை 25 விவசாயிகள் மரணம்: பட்டியல் இதோ…

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரமறுத்தாலும், வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனதாலும் சாகுபடி செய்த பயிர்கள் கருகி அழிந்தன. இதனால் ஏற்பட்ட கடும் சேதத்தால் மனம் உடைந்த விவசாயிகள் தற்கொலை மற்றும் அதிர்ச்சியால் மரணம் - என உயிர் பலியாகி வருகிறார்கள். இது வரை 3 பெண்கள் உட்பட 25 பேர் மரணமடைந்திருப்பது மரணமடைந்திருக்கிறார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு இறந்தவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம். 1.திருவத்துறைப்பூண்டி … Continue reading பயிர்கருகி இதுவரை 25 விவசாயிகள் மரணம்: பட்டியல் இதோ…

8 ஏக்கர் நெற்பயிர்கள் கருகின: மனஉளைச்சலில் விவசாயி மரணம்

நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த கீழையூரைச் சேர்ந்த விவசாயி ராஜகுமாரன். இவர் 8 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டிருந்தார். ஆனால் போதிய மழை இல்லாததாலும் காவிரியில் நீர் வராததாலும் பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன. பயிர் சாகுபடிக்காக வாங்கிய கடனை எப்படி கட்டுவது என கலங்கிப் போனார் ராஜகுமாரன். இதனால் கடந்த நான்கு நாட்களாக அவர் கடும் மனஉளைச்சலில் இருந்ததாக அவருடைய குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். தொடர் மன உளைச்சல் காரணமாக மாரடைப்பு வந்து ராஜகுமாரன் உயிரிழந்துள்ளார். இவரையும் சேர்த்து, … Continue reading 8 ஏக்கர் நெற்பயிர்கள் கருகின: மனஉளைச்சலில் விவசாயி மரணம்

டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பயிர்களை காங். குழு பார்வையிடும்: திருநாவுக்கரசர்

டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பயிர்களை காங்கிரஸ் குழுவினர் விரைவில் ஆய்வு செய்ய உள்ளனர் என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு. திருநாவுக்கரசர். தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'காவிரி டெல்டா பகுதியில் ஏற்கெனவே குறுவை பொய்த்து போனது, தற்போது சம்பா சாகுபடியும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பயிர்கள் கருகுவதைப் பார்த்து விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். எனவே, தமிழக அரசுமும், மத்திய அரசுமும் விவசாயிகள் வாங்கியுள்ள அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். மேலும், இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா … Continue reading டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பயிர்களை காங். குழு பார்வையிடும்: திருநாவுக்கரசர்

நபார்டு வங்கி மூலம் ரூ.21,000 கோடி விவசாயக் கடன்…

விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ.21,000 கோடி விவசாயக் கடன் வழங்குவதற்கு நபார்டு வங்கிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக பொருளாதார விவகாரங்கள் துறைச் செயலர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய அவர், “தற்போது ரபி பருவச் சாகுபடி நடைபெற்று வருவதால், விவசாயிகளுக்கு தடையின்றி பணம் கிடைத்திட வேண்டும். இதற்காக, விவசாயிகளுக்கு வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கடனுதவி வழங்குவதற்காக, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.21,000 கோடியை நபார்டு வங்கி அளிக்கும். இதனால், … Continue reading நபார்டு வங்கி மூலம் ரூ.21,000 கோடி விவசாயக் கடன்…

’3 ஆண்டுகளில் 80 % விவசாய நிலங்கள் அழிந்துபோகும்!’

தமிழ்நாட்டைப் போல புதுச்சேரியிலும் விவசாய நிலங்களை மனைகளாக பதிவு செய்ய தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் புதுச்சேரி அரசு இரண்டு வாரத்தில் பதிலளிக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரியில் விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றி வருகின்றனர், இந்நிலை தொடர்ந் தால் அடுத்த மூன்றாண்டுகளில் 20 விழுக்காடு விவசாய நிலங்கள் மட்டுமே மீதமிருக்கும். எனவே தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் விளைநிலங்களை பத்திரப்பதிவு செய்ய தடை … Continue reading ’3 ஆண்டுகளில் 80 % விவசாய நிலங்கள் அழிந்துபோகும்!’

அடுத்தடுத்து நடக்கும் விவசாயிகள் தற்கொலை; மத்திய குழு ஆய்வு செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்

அடுத்தடுத்து நடக்கும் விவசாயிகள் தற்கொலைகள் குறித்து மத்திய குழு ஆய்வு செய்ய தமிழக எதிர்க்ட்சித் தலைவரும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை சுமார் 40 சதவீத அளவுக்கே பெய்ததைத் தொடர்ந்து, வடகிழக்குப் பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யவில்லை என்பதால் அனைத்து மாவட்டங்களிலும் வறட்சி தாண்டவமாடுகிறது. மாநிலத்திற்கு கிடைக்கும் வருடாந்திர மழையளவில் 48 சதவீதமும், கடலோர மாவட்டங்களுக்கு 60 சதவீத மழையும் கிடைக்கும் வட கிழக்கு பருவமழை ஏறக்குறைய … Continue reading அடுத்தடுத்து நடக்கும் விவசாயிகள் தற்கொலை; மத்திய குழு ஆய்வு செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்

ஈரோடு அருகே மீண்டும் ஒரு விவசாயி தற்கொலை!

ஈரோடு மாவட்டம் கொடுமுடியை அடுத்த கரட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ராமலிங்கம். தண்ணீரின்றி காணப்பட்ட மஞ்சள்பயிரை கண்டு மனமுடைந்த அவர், கடந்த வாரம் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் மற்றொரு விவசாயி முத்துசாமியும் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். அதிகாலையில் தோட்டத்திற்கு சென்ற அவர் கருகிய பயிரை கண்டு மனமுடைந்து விஷமருந்தை குடித்து இறந்திருக்கிறார். கொடுமுடி பகுதி காளிங்கராயன் அணையை நம்பி விவசாயம் செய்கிறவர்கள்.

நாகப்பட்டினத்தில் ஒரே நாளில் 2 விவசாயிகள் மரணம்; பயிர் கருகி உயிரிழந்த விவசாயிகளின் எண்ணிக்கை 9 ஆனது!

  நீரின்றி, மழையின்றி நட்ட பயிர்கள் காய்ந்து கருகியதைக் கண்டு மனம் கருகி, ஒரே நாளில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த இருவிவசாயிகள் மாண்டு போன துயரச் சம்பவம் நேர்ந்துள்ளது. தேமங்கலம் அந்தோணிசாமி கீழ்வேளூர் அருகே உள்ளது சங்கமங்கலம். அந்த கிராமத்தின் தெற்குவெளி மாதாகோயில் தெருவைச் சேர்ந்த விவசாயி அந்தோணிசாமி(62). இவருக்கு சிக்கலில் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. மிக அல்லற்பட்டு அந்த ஒரு ஏக்கர் நிலத்தில்சம்பாவை நட்டார்.அந்தோணிசாமி, தினமும் தேமங்கலத்திலிருந்து சிக்கல் வந்து சம்பா பயிர் தேறியிருக்கிறதா … Continue reading நாகப்பட்டினத்தில் ஒரே நாளில் 2 விவசாயிகள் மரணம்; பயிர் கருகி உயிரிழந்த விவசாயிகளின் எண்ணிக்கை 9 ஆனது!

உழவுக் கருவி வாங்குவதில் ரூ.38 கோடி ஊழல்: விசாரணை நடத்த அன்புமணி வலியுறுத்தல்

உழவுக் கருவி வாங்குவதில் நடந்த ரூ.38 கோடி ஊழல் குறித்து உரிய விசாரணை நடத்த பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆக்டபசின் கரங்களைப் போன்று நீளும் தமிழக ஆட்சியாளர்களின் ஊழல் உழவுக் கருவிகளைக் கூட விட்டு வைக்கவில்லை. விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் எனப்படும் உழவுக் கருவிகளை வழங்குவதில் மிகப்பெரிய அளவில் ஊழலும், முறைகேடுகளும் நடைபெற்று வருகின்றன. வேளாண் தொழிலை நவீனமயமாக்கும் நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக உழவர்களுக்கு மானிய … Continue reading உழவுக் கருவி வாங்குவதில் ரூ.38 கோடி ஊழல்: விசாரணை நடத்த அன்புமணி வலியுறுத்தல்

பயிர்கள் கருகியதால் மேலும் ஒரு விவசாயி தற்கொலை

கரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி ராமலிங்கம் தனது தோட்டத்தில் மஞ்சள் சாகுபடி செய்துள்ளார். பவானிசாகர் அணையில் 28 நாட்களே தண்ணீர் திறந்து விடப்பட்டதால் காளிங்கராயன் கால்வாய் பகுதிக்கு சரிவர தண்ணீர் வரவில்லை. இந்த பாசன பகுதியில் உள்ள இவரது நிலத்தில் சாகுபடி செய்த மஞ்சள் தண்ணீர் இன்றி கருகியுள்ளது. இதனை கண்ட அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஏற்கனவே டெல்டா மாவட்டங்களில் பயிர் கருகிவருவதால், விவசாயிகள் தற்கொலை செய்துவரும் நிலையில் தற்போது … Continue reading பயிர்கள் கருகியதால் மேலும் ஒரு விவசாயி தற்கொலை

ரூ.1000 – 500 சர்ச்சை: பணமற்ற பொருளாதாரத்தில் தொலைந்துபோன இந்தியாவின் ஆன்மா!

சி.  மதிவாணன் நியூஸ் 18 தமிழ் சானலில் ‘செல்லாத நோட்டு ... நெருக்கடி சாமாணியர்களுக்கா? பண முதலைகளுக்கா?“ என்றொரு விவாதம் நிகழ்ந்ததை ‘நேரலையாக‘ வலைமனை மூலம் பார்க்க நேர்ந்தது.  அதில் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், ஒரு விஷயத்தைப் பற்றி மட்டும் தற்போது பேசுவோம். இந்தியாவின் ஆன்மா கிராமங்கள் என்று காந்தி என்று ஒருவர் சொன்னதாக சொல்லிக்கொள்கிறார்கள். அப்படியொரு ஆன்மா இருப்பதையே இந்திய ஆளுகையும் ஊடகங்களில் பேசும் அறிவாளிகளும், ஊடகங்களும் அறியாதிருக்கிறார்கள் என்பதை இந்த நிகழ்ச்சி … Continue reading ரூ.1000 – 500 சர்ச்சை: பணமற்ற பொருளாதாரத்தில் தொலைந்துபோன இந்தியாவின் ஆன்மா!

இன்னுமொரு விவசாயி இறந்துவிட்டார்; சரி விடுங்கள் நாம் பேச விஷயங்களா இல்லை!

சி. மதிவாணன் நவநீதன் என்றொரு விவசாயி. தனது 70 வயதையும் வயலில் கழித்தவர். நாகை மாவட்டத்தின் கீழகாவலகுடி கிராமத்தைச் சேர்ந்தவர். திங்கள் இரவு இதயச் செயலிழப்பினால் மரணித்தார். அவரது நிலத்தில் அவர் விதைத்திருந்த சம்பா பயிர் காய்ந்துபோனதால் அவர் இதயம் தவியாய் தவித்து பின்னர் நின்றுபோய்விட்டது. அவர் தமிழக அரசின் அறிவுரையின் படி நேரடி விதைப்பு செய்திருந்தார். ஆனால், விதை முளைக்கவில்லை. எந்த விவசாயப் பொருள் கடையில் விதை வாங்கினாரோ? இப்போதெல்லாம் விவசாயிகள் கையில் விதை நெல் … Continue reading இன்னுமொரு விவசாயி இறந்துவிட்டார்; சரி விடுங்கள் நாம் பேச விஷயங்களா இல்லை!

பயிர் கருகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்: ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்

“நடப்பாண்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசன நீர் கிடைக்காததால் குறுவை சாகுபடி முற்றிலும் செய்யப்படவில்லை. காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பின் படி தண்ணீர் திறக்காததாலும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை கர்நாடகம் திறந்து விடாததாலும் இவ்வாண்டு சம்பா சாகுபடியும் டெல்டா பிரதேசத்தில் முழுமையாக செய்யப்படவில்லை. ஒரு பகுதி விவசாயிகள் நாற்று விட்டு நடவு செய்வதற்கு பதிலாக நேரடி நெல்விதைப்பு செய்தனர். இதற்கும் போதுமான அளவிற்கு தண்ணீர் கிடைக்காததால் நேரடி நெல்விதைப்பு செய்யப்பட்ட சம்பா பயிரும் பெரும்பான்மையாக … Continue reading பயிர் கருகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்: ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்

நெற்களஞ்சியமாகத் திகழ்ந்த தஞ்சை மண்டலம் தற்கொலைக் களமாக மாறிக்கொண்டிருக்கிறது: ஸ்டாலின்

“அதிமுக ஆட்சியில் நடக்கும் விவசாயிகள் தற்கொலை அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அடுத்தடுத்து நிகழ்ந்த தற்கொலை செய்தி கேட்டு ஒரு காலத்தில் தமிழகத்தின் நெற்களஞ்சியமாகத் திகழ்ந்த தஞ்சை மண்டலம் இப்படி தற்கொலைக் களமாக மாறக் கூடிய அவலமான நிலை இந்த அதிமுக ஆட்சியில் உருவாகியிருக்கிறது” என கடுமையாக விமர்சித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சை கீழ்த்திருப்பந்துருத்தி ராஜேஷ்கண்ணா, திருவாருர் கோட்டூர் அருகேயுள்ள ஆதிச்சியபுரம் அழகசேன், திருத்துறைப்பூண்டி கோவிந்தராஜ் ஆகிய … Continue reading நெற்களஞ்சியமாகத் திகழ்ந்த தஞ்சை மண்டலம் தற்கொலைக் களமாக மாறிக்கொண்டிருக்கிறது: ஸ்டாலின்

மேலும் இரு விவசாயிகள் அதிர்ச்சியில் சாவு: உடனடியாக நிவாரணம் வேண்டும்!

மரணமடைந்த விவசாயிகள் குடும்பத்துக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “வறட்சி காரணமாக விதைத்த நெல் விளையாததால் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த ரகுநாதபுரத்தைச் சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ் உயிரிழந்ததால் ஏற்பட்ட துயரம் விலகும் முன்பே, பயிர்கள் காய்ந்ததால் மேலும் 2 விவசாயிகள் அதிர்ச்சியில் சுருண்டு விழுந்து இறந்துள்ளனர். விவசாயிகளுக்கு ஏற்பட்ட இந்த துயர முடிவு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அளிக்கிறது. … Continue reading மேலும் இரு விவசாயிகள் அதிர்ச்சியில் சாவு: உடனடியாக நிவாரணம் வேண்டும்!

பயிர்கள் கருகியதால் தற்கொலை செய்து கொண்ட விவசாயி; சந்தேக மரணம் என்கிறது போலீஸ்

திருவாரூர் மாட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த ரகுராதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். விவசாயினான இவர் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் நேரடி சம்பா சாகுபடியில் ஈடுபட்டிருந்தார். ஆனால் விவசாயத்திற்கு போதுமான அளவில் தண்ணீர் இந்தாண்டு வராமல் இருந்துள்ளது. இதனால் பயிர்கள் கருகி சுமார் 4 ஏக்கர் நிலமும் முற்றிலும் பாதிப்பிற்குள்ளானதால் அடுத்த என்ன செய்வதென்று புரியாமல் வேதனையில் கடந்த சில நாட்களாக இருந்துள்ளார். வாங்கிய கடனை எப்படி அடைப்பது என்ற சோகம் அவரை தூங்க விடாமல் வைத்துள்ளது. வீட்டில் … Continue reading பயிர்கள் கருகியதால் தற்கொலை செய்து கொண்ட விவசாயி; சந்தேக மரணம் என்கிறது போலீஸ்

ரேஷன் கடைகள் மூடப்படுகிறதா? விவசாய மானியம் நிறுத்தப்படுகிறதா?: உலக வர்த்தக அமைப்புடன் என்னதான் ஒப்பந்தம் செய்திருக்கிறது மோடி அரசு?

இந்திய அரசு - உலக வர்த்தக அமைப்புடன் டிசம்பர் 2015-ல் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் உள்ள ரேஷன் கடைகள் படிப்படியாக மூடப்படும் என்றும், விவசாயிகளுக்கான மானியம் முற்றிலும் நிறுத்தப்படும் என்றும் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள  அவருடைய பேட்டியின், முக்கியமான பகுதிகளை எழுத்து வடிவில் கீழே அளித்திருக்கிறோம். *வெளிநாட்டில் இருந்து உணவு பொருட்களை இந்தியாவிற்குள் தாராளமாக இறக்குமதி செய்வதற்கு பாரதீய ஜனதா அரசு, உலக வர்த்தக … Continue reading ரேஷன் கடைகள் மூடப்படுகிறதா? விவசாய மானியம் நிறுத்தப்படுகிறதா?: உலக வர்த்தக அமைப்புடன் என்னதான் ஒப்பந்தம் செய்திருக்கிறது மோடி அரசு?