பேரறிவாளனைத் தாக்கிய கைதி தற்கொலைக்கு முயற்சி; வேலூர் சிறையில் என்ன நடக்கிறது?

வேலூர் சிறையில் உயர் பாதுகாப்புப் பிரிவில் உள்ள பேரறிவாளனை, மதுரையைச் சேர்ந்த ஆயுள் கைதியான ராஜேஷ்கண்ணா (46) இரும்புக் கம்பியால் தாக்கியதில், அவரது தலையில் பலத்தகாயம் ஏற்பட்டு 4 தையல்கள் போடப்பட்டன. இந்நிலையில், ரத்த அழுத்தத்துக்கான மாத்திரைகளை அதிகளவில் ராஜேஷ் கண்ணா உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கிக் கிடந்த அவரைக் காவலர்கள் மீட்டு சிறை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ராஜேஷ் கண்ணாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள், ராஜேஷ் கண்ணா, பேரறிவாளனுடன் நட்புடன் … Continue reading பேரறிவாளனைத் தாக்கிய கைதி தற்கொலைக்கு முயற்சி; வேலூர் சிறையில் என்ன நடக்கிறது?

நளினிக்கு பரோல்!

தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினிக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் வசித்த நளினியின் தந்தை சங்கர நாராயணன் செவ்வாய்கிழமை மரணமடைந்தார்.  அவரது உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, நாளை அடக்கம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் அவருக்கு பரோல் வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.