மாரியப்பனின் காலை அகற்ற சொன்ன மருத்துவர்கள்;அப்படி ஒரு வாழ்க்கை தேவையில்லை என்ற தாய்: நம்பிக்கை வென்றெடுத்த தங்கம்!

ரியோ பாரா-ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கப்பதக்கம் வென்றார். இதையடுத்து, தமிழக அரசு  2 கோடியும், மத்திய அரசு 75 லட்சமும் பரிசாக அறிவித்தள்ளன. அது மட்டுமில்லாமல் பல்வேறு தனியார் நிறுவனங்களும் நன்கொடை அறிவித்து வருகின்றன. மஹிந்திரா நிறுவனம் தன்னுடய புதிய தயாரிப்பான THAR SUV காரை பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளது. அதே போல்,  ஹிந்தி திரையுலகின் மிக பெரும் தயாரிப்பு நிறுவனமான YRF ஸ்டூடியோவும் பத்து லட்சம் ரூபாய் அளிக்கவுள்ளது. மாரியப்பனுக்கு … Continue reading மாரியப்பனின் காலை அகற்ற சொன்ன மருத்துவர்கள்;அப்படி ஒரு வாழ்க்கை தேவையில்லை என்ற தாய்: நம்பிக்கை வென்றெடுத்த தங்கம்!

“உடல் முடக்கத்துக்கும் இறப்புக்குமான போட்டியில் நான் முடக்கத்தைத் தேர்ந்தெடுத்தேன்”: பாராலிம்பிக்கில் சாதனை படைத்த தீபாவின் பயணம்

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்கில், 4.61 மீட்டர் தூரம் குண்டை வீசியெறிந்து  வெள்ளிப்பதக்கம் வென்றார் தீபா மாலிக். இதன் மூலம் பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்தியாவை சேர்ந்த முதல் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார் தீபா. 45 வயதாகும் தீபா மலிக் ஹரியானாவைச் சேர்ந்தவர். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான தீபா, முதுகுத் தண்டில் ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக 31 அறுவை சிகிச்சைகளுக்கு ஆளானவர். சிறுவயது முதலே முதுகுதண்டு வடத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக … Continue reading “உடல் முடக்கத்துக்கும் இறப்புக்குமான போட்டியில் நான் முடக்கத்தைத் தேர்ந்தெடுத்தேன்”: பாராலிம்பிக்கில் சாதனை படைத்த தீபாவின் பயணம்

முருகன்கள் ஒதுங்குவதும் ஜெய்ஷாக்கள் சாய்க்கப்படுவதும் மட்டுமே நிகழும்!

சதீஷ் செல்லத்துரை என்னுடைய பேட்ஜ்மேட் முருகன். ஓங்கி ஊதினா ஒரு பத்தடி தூரத்தில் விழுற மாதிரி ஒல்லியான உடம்பு. திருமங்கலம் பகுதியை சேர்ந்தவன்... ஆர்மில சேரனும்னு வெறியா ஓடுவானாம். ஆனா போதிய உணவு கிடையாது. நம்புங்க... கொண்டைக்கடலை சாப்பிடுவதற்காகவே சென்னைல ஹோட்டல்ல வேலைக்கு சேர்ந்து தன்னை காத்துக்கொண்டு ஒரு வழியா எல்லைப் பாதுகாப்புப் படையில் சேர்ந்து கொண்டான். இந்த பென்சில் பாடிக்குள் இவ்ளோ ஸ்டெமினாவானு தோணும். ட்ரெய்னிங்ல இருக்கும்போதே க்ராஸ் கண்ட்ரி எனும் மாராத்தான் போன்ற போட்டிகளுக்கு … Continue reading முருகன்கள் ஒதுங்குவதும் ஜெய்ஷாக்கள் சாய்க்கப்படுவதும் மட்டுமே நிகழும்!

குடிக்கத் தண்ணீர் கொடுக்கக்கூட ஆள் இல்லை; மைதானத்தில் மயங்கி விழுந்த ஜெய்ஷா

ஷான் இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக்கில் மாரத்தான் ஓடிய பெண் இந்திய சாதனையாளர் ஓபி ஜெய்ஷா. அவர் 42கிமீ தூரத்தை 2 மணி 47 நிமிடத்தில் கடந்திருக்கிறார். ஆனால் அவரது சென்ற ஆண்டு சாதனை 2 மணி 34 நிமிடங்கள். எப்படி இவ்வளவு மோசமான ஓட்டத்தை ஓடினார் என்ற கேள்வி எழுகிறதல்லவா? எந்த ஒரு மாரத்தான் ஓட்டமும் மிகுந்த திட்டமிடலுடன் ஓட வேண்டிய ஒன்று.. ஏனென்றால் தொடர்ந்த இயக்கத்தால் உடல் நீர் சத்தை இழந்து விடும். தாதுக்களை இழந்து … Continue reading குடிக்கத் தண்ணீர் கொடுக்கக்கூட ஆள் இல்லை; மைதானத்தில் மயங்கி விழுந்த ஜெய்ஷா

“இறைச்சியை தவிர்க்கச் சொல்லும் இந்திய உணவுப் பழக்கம் விளையாட்டு வீரர்களுக்கு உகந்தது அல்ல”: சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்த்

ரியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பிவி. சிந்துவின் வெற்றிக்கான காரணங்கள் குறித்து பல விவாதங்களும் செய்திகளும் நடந்து வருகின்றன. அதில் குறிப்பிடத் தகுந்த விஷயம், சிந்துவின் பயிற்சியாளரான முன்னாள் பேட்மிண்டன் வீரர் பி. கோபிசந்த் தன்னுடைய பயிற்சியில் கட்டாயம் அசைவ உணவுகளை உண்ண வேண்டும் என வலியுறுத்துவதான் என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏடு. இது பற்றிய செய்திக் கட்டுரையில், கோபிசந்த் பேட்மிண்டன் அகாடமியில் சைவ உணவு உண்பவர்கள் சேர்ந்தாலும்கூட, பயிற்சியின் ஒரு பகுதியாக … Continue reading “இறைச்சியை தவிர்க்கச் சொல்லும் இந்திய உணவுப் பழக்கம் விளையாட்டு வீரர்களுக்கு உகந்தது அல்ல”: சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்த்

இதயங்களை வென்று விட்டாய் சிந்து!

ரியோ நகரில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவைச் சேர்ந்த பேட்மிண்டன் போட்டியில் பி.வி. சிந்து, வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார். சிந்துவுக்கு சமூக வலைத்தளங்களில் குவியும் சில பாராட்டுகளின் தொகுப்பு இங்கே... அ. ராமசாமி விளையாடும் பெண்கள் விளையாடட்டும்; விட்டு விடுதலையாகிக் களிக்கட்டும். உஷையில் தொடங்கி சாக்சி, சிந்துவெனப் பறந்து திரியட்டும். பட்டங்கள் மட்டுமல்ல; பதக்கங்களோடு. Rahim Journalist சிந்து வழி நாகரீகம்... நாளைல இருந்து பெய புள்ளைக.. பேட்டும் கையுமா அலையுமே... Rajarajan RJ சீன முகங்கள் … Continue reading இதயங்களை வென்று விட்டாய் சிந்து!

ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் பதக்கம் வெல்லும் முதல் இந்திய பெண் சாக்‌ஷி மாலிக்!

ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா முதல் பதக்கத்தை வென்றுள்ளது. இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக், வெண்கலம் வென்றிருக்கிறார். 58 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டியில் பங்கேற்ற சாக்‌ஷி, கிர்கிஸ்தான் வீராங்கனை டின்பெக்கோவாவை எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் பதக்கம் வெல்லும் முதல் இந்திய பெண் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார். ஹரியாணாவின் ரோதக் நகரின் அருகேயுள்ள மோக்ரா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். சாக்‌ஷி மாலிக். சாக்‌ஷி தன்னுடைய 10 வயது முதல் மல்யுத்த பயிற்சியில் … Continue reading ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் பதக்கம் வெல்லும் முதல் இந்திய பெண் சாக்‌ஷி மாலிக்!

ஒலிம்பிக்கும் இந்தியா கைவிட்ட குற்றாலீஸ்வரன்களும்!

ஸ்ரீதர் ஏழுமலை இந்த படத்தில் இருப்பவர் பெயர் ரமேஷ். ரமேஷ்ன்னு சொன்னா ஊரில் ஆயிரம் ரமேஷ் இருப்பார்கள். குற்றாலீஸ்வரன் என்று சொன்னால்மட்டுமே பலருக்கு இவர் யாரென்று தெரியும். இவர் ஒரு தங்க மீன். 13 வயதில் இங்கிலிஷ் கால்வாயை நீந்தி கடந்தவர். அதே வருடத்தில் பட படவென உலகின் பெரிய மற்ற 5 கால்வாய்களையும் நீந்தி மிர் சென்னின் உலக சாதனையை முறியடித்தார். உலகத்தில் தலை மன்னார் பாக் ஜலசந்தி முதல் இத்தாலியின் மெஸ்ஸின்னா ஜலசந்தி வரை நீந்தி … Continue reading ஒலிம்பிக்கும் இந்தியா கைவிட்ட குற்றாலீஸ்வரன்களும்!