ஈழம், ராஜுவ்காந்தி, பிரபாகரன்: சர்ச்சையை கிளப்பிய இரண்டு பதிவுகள்!

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அண்மையில் அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி ஈழ ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள், விமர்சகர்கள் என பலரும் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர்.  ஒரு கட்டத்தில் திமுக ஆதரவாளர்களுக்கும் ஈழ ஆதரவாளர்களுக்குமிடையே கருத்து மோதலாக இது உருவெடுத்தது. குறிப்பாக திராவிடர் கழக ஆதரவாளர் பிரபாகரன் அழகர்சாமி மற்றும் எழுத்தாளர் விநாயக முருகன் எழுதிய பதிவுகள் சர்ச்சையை கிளப்பியுள்ளன. பிரபாகரன் அழகர்சாமி தனது முகநூலில் எழுதிய பதிவு: இன்று இராஜிவ் காந்தி தமிழக மண்ணில் படுகொலை செய்யப்பட்ட நாள். … Continue reading ஈழம், ராஜுவ்காந்தி, பிரபாகரன்: சர்ச்சையை கிளப்பிய இரண்டு பதிவுகள்!

வரலாற்றின் பக்கங்களை ஒருபோதும் திருத்தி எழுதிவிட முடியாது!

விநாயக முருகன் பெண்களின் ஆதர்சம் என்று ஒரு தோழி சொன்னார். மரணம் சிலரை மிக எளிதாக புனிதர்களாக்கிவிடும். ஆனால் காலம் அப்படி செய்யாது. ஹிட்லர் இறந்தபோது ஜெர்மனி நாட்டு மக்கள் எல்லாரும் அழுதார்கள். ஹிட்லர் புனிதபிம்பமாக மாறினார். இன்னமும் ஜெர்மனியில் ஹிட்லருக்கு தீவிர ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். ஹிட்லர் ஜெர்மனியர்களுக்கு அவ்வளவு ஆதர்சம். ஆனால் யூதர்களுக்கு? வரலாறு இன்னமும் ஹிட்லரை நினைவில் வைத்துள்ளது. ஆனால் என்னவிதமாக என்பதுதான் கேள்வி. ஒருவரின் மரணத்தின்போது அவரின் செயல்பாடுகளை விமர்சிப்பது அநாகரிகம்தான். ஆனால் … Continue reading வரலாற்றின் பக்கங்களை ஒருபோதும் திருத்தி எழுதிவிட முடியாது!

சென்னை மெல்ல மெல்ல கடலுக்குள் கரைந்துக் கொண்டிருக்கிறது: விநாயக முருகன்

விநாயக முருகன் ஒருகாலத்தில் சென்னையை சுற்றி ஆயிரக்கணக்கான ஏரிகள் இருந்தன. செங்கல்பட்டை (அப்போது செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் ஒன்றாக இருந்தன) லேக் மாவட்டம் என்றே சொல்வார்கள். பொன்னியின் செல்வன் நாவலில் வீராணம் ஏரியை சுற்றி அறுபத்துநான்கு மதகுகள் இருந்தன என்ற தகவல் வரும். மாம்பலத்தில் மாம்பலம் கால்வாய் இருந்தது. கொளத்தூர், பெரியார் நகர் எல்லாம் ஒரு காலத்தில் குளம், குட்டை நிறைந்த கிராமங்கள். நிலத்தடி நீர் சுவையாக இருந்தது. இப்போது சென்னையில் எங்கு எங்கு ‘போர்’ … Continue reading சென்னை மெல்ல மெல்ல கடலுக்குள் கரைந்துக் கொண்டிருக்கிறது: விநாயக முருகன்

“எங்கள் மூதாதை மாயோன்”: நாம் தமிழர் கட்சியின் தமிழர் பட்டியலில் சேரும் கிருஷ்ணன்!

பழம் தமிழ் இலக்கியங்களில் சுட்டப்படும் மாயோன் தெய்வம் தான், தற்போதைய கிருஷ்ணனாகக் கொண்டாடப்படுகிறார் என சொல்கிறார் நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ண ஜெயந்தி சுவரொட்டிகள். தமிழனின் முப்பாட்டன் முருகன்(குறிஞ்சி நிலத் தலைவன்) என சொன்னவர்கள், “எங்கள் மூதாதை மாயோன்” என இந்து மதக் கடவுளான கிருஷ்ணனை தமிழர்கள் பட்டியலில் சேர்த்திருக்கிறது நாம் தமிழர் கட்சி. ஐந்திணை நிலங்களில் மாயோன் முல்லை நிலத் தலைவன். இம்மக்கள் மேய்ச்சலில் ஈடுபடுவதால், இந்து புராணங்களில் மாடு மேய்க்கும் கடவுளாக குறிப்பிடப்படும் கண்ணனை, மாயோன் என … Continue reading “எங்கள் மூதாதை மாயோன்”: நாம் தமிழர் கட்சியின் தமிழர் பட்டியலில் சேரும் கிருஷ்ணன்!

மதராசப்பட்டினத்தில் துரத்தப்பட்ட நரிகள்; விநாயக முருகனின் ‘வலம்’

கண்ணன் ராமசாமி  'வலம்' நாவலின் முன்னுரையில் அதன் எழுத்தாளர் விநாயக முருகன் இப்படியாக அறிவிக்கிறார்: “நான் வரலாற்று ஆசிரியன் அல்ல. கிடைத்த தகவல்களை எல்லாம் ஆவணப்படுத்துவது என் நோக்கமும் அல்ல. ஒரு கற்பனை சித்திரத்தை முன்வைக்கும் ஓவியன்” இது தான் வலம். எந்தவொரு வரலாற்று எழுத்தாளருக்கும் தன்னுடைய ஆய்வு முடிவுகள் உண்மையானதாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஆனால், வரலாற்றுப் பின்னணியில் சேதி சொல்லும் புனைவுச் சித்திரத்தை மட்டும் வரையும் ஓவியரின் இத்தகைய அசாத்திய … Continue reading மதராசப்பட்டினத்தில் துரத்தப்பட்ட நரிகள்; விநாயக முருகனின் ‘வலம்’

#புத்தகம்2016: இரா. முருகவேளின் ’முகிலினி’ இரண்டு விமர்சனங்கள்!

எழுத்தாளர் இரா. முருகவேள் எழுதி வெளியாகியிருக்கும் நாவல் ‘முகிலின்’. நாவல் குறித்து இயக்குநரும் ஊடகவியலாளருமான வெற்றிவேல் சந்திரசேகர், மற்றும் நாவாலசிரியர் விநாயக முருகன் எழுதியிருக்கும் விமர்சனங்கள் இங்கே... வெற்றிவேல் சந்திரசேகர் இரா.முருகவேளின் 'முகிலினி' நாவலை வாசித்து முடித்தேன். நல்லதொரு வாசிப்பனுபவம்! அவரது எழுத்தும் அவர் முன் வைக்கும் அரசியலும் எப்போதும் எனக்கு நெருக்கமானதாகவே இருக்கும். அவரது மொழி பெயர்ப்பான 'பொருளாதார அடியாளின் வாக்குமூலம்' ஏற்படுத்திய பாதிப்புகள் என்னை வழிநடத்தி வருகின்றன. 'எரியும் பனிக்காடு' இவரது மொழி பெயர்ப்பு … Continue reading #புத்தகம்2016: இரா. முருகவேளின் ’முகிலினி’ இரண்டு விமர்சனங்கள்!