அப்போது ஆமைக்கறி; இப்போது மான்கறி | யுத்த காலத்தில் சீமான் கறி விருந்து உண்டாரா?

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனுடன் இலங்கையில் உச்சக்கட்ட போர் நடைபெற்ற சமயத்தில் ஆமைக்கறி சாப்பிட்டதாக நாம் தமிழர் கட்சியின் சீமான் சொன்னது பெரும் சர்ச்சையானது. இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் காட்டு மானை சுட்டு தனக்கு தலைவர் பிரபாகரன் விருந்து வைத்ததாக சீமான் கூறியுள்ளார். சமூக ஊடகங்களில் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு வீடியோவில், “மானை சுடக்கூடாதுன்னு தடை பண்ணிட்டாரு. ஆனா, என் தம்பி வந்திருக்கான் மானை சுடுங்கன்னு சொல்றாரு. உடனே, துப்பாக்கி எடுத்துக்கிட்டு ஒருத்தர், என்ன… அண்ணன் … Continue reading அப்போது ஆமைக்கறி; இப்போது மான்கறி | யுத்த காலத்தில் சீமான் கறி விருந்து உண்டாரா?

சிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல: சீமான் கருத்துக்கு யாழ்ப்பாண பேரா. ந. ரவீந்திரன் மறுப்பு

சந்திரமோகன் அம்பேத்கர் படிப்பு வட்டம் சார்பாக,  சேலத்தில் "சாதியும் சமூக மாற்றமும் " எனும் தலைப்பில் இலங்கை யாழ்ப்பாண பேராசிரியர். ந.ரவீந்திரன் உரை நிகழ்த்தினார். சிங்களர்- தமிழர் இன முரண்பாடு, இலங்கையில் சிறுபான்மை தமிழர் மகாசபை, வர்க்கம் எதிர் சாதி, வருணங்கள், பிராமண மதம், தமிழர் நிலப்பரப்பில் தோன்றிய திணை அரசுகள், மார்க்சியம், ரஷ்யப் புரட்சியில் "ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்றுபடுங்கள்" என்ற அணுகுமுறை எனப் பல்வேறு விசயங்கள் பற்றி விரிவாக பேசினார். "சிங்களர்கள் கண்டி நாயக்கர்கள் என்று … Continue reading சிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல: சீமான் கருத்துக்கு யாழ்ப்பாண பேரா. ந. ரவீந்திரன் மறுப்பு

அகரமுதல்வனின் கதையும் தமிழினியை புணரும் மேட்டுக்குடித் திமிரும்: த. கலையரசன்

த. கலையரசன்  விடுதலைப் புலிகளின் தலைவர்களில் ஒருவரான தமிழினியை மோசமாக சித்தரிக்கும் ஆபாசக் கதையை ஒரு புலி ஆதரவாளர் எழுதி இருக்கிறார். "சாகாள்" என்ற தலைப்பின் கீழ் அகரமுதல்வன் என்பவர் எழுதிய கதையை பலரும் விமர்சித்து விட்டார்கள். அந்தக் கதை எழுதியவரின் இனவெறி, பிரதேசவாதம், வர்க்க வெறுப்பு பற்றி இன்னமும் யாரும் விமர்சிக்கவில்லை. புலி எதிர்ப்பாளர்கள் வன்மையான கண்டனங்களையும், புலி ஆதரவாளர்கள் மென்மையான கண்டனங்களையும் பதிவு செய்துள்ளனர். அகரமுதல்வன் என்ற "புலி ஆதரவாளரே" ஒரு "புலி எதிர்ப்பு … Continue reading அகரமுதல்வனின் கதையும் தமிழினியை புணரும் மேட்டுக்குடித் திமிரும்: த. கலையரசன்

’ஈழத் தமிழர் ஆதரவு இயக்கங்களை சிதைத்துக் கொண்டிருக்கும் இந்துத்துவ அடியாள் சீமான்!’

வி. சபேசன் 2009இல் ஈழத் தமிழகளின் விடுதலைப் போர் மோசமாக தோற்கடிக்கப்பட்டது. தமிழினம் பேரழிவுக்கு உள்ளானது. இது பலரை ஒருவித மனப்பிறள்வுக்கு உள்ளாக்கியது. இந்த மனப்பிறள்வு தமிழர்களை நிதானமான முறையில் சிந்தித்து, எதிர்கால திட்டங்களை வகுக்க முடியாதபடி செய்தது. இந்த மனப்பிறள்வுக்கு உள்ளாகியவர்களில் சீமான் முக்கியமானவர். ஒரு நேரத்தில் அவரிடம் இருந்த தமிழினப் பற்றை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அவருடைய மனப்பிறள்வு அவரை ஒரு மோசமான நிலையை நோக்கி கொண்டு சென்றது. சீமான் உண்மையில் ஒரு … Continue reading ’ஈழத் தமிழர் ஆதரவு இயக்கங்களை சிதைத்துக் கொண்டிருக்கும் இந்துத்துவ அடியாள் சீமான்!’