மோடியின் அறிவிப்பில் மிகப் பெரிய ஊழல்: திருமாவளவன் குற்றச்சாட்டு

மோடியின் செல்லாத நோட்டு அறிவிப்பைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 18 ஆம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “500, ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த நாளிலிருந்து ஏழை எளிய மக்கள் சொல்லவொண்ணா துன்பத்துக்கு ஆளாகிவருகின்றனர். மோடி அரசின் சர்வாதிகார அறிவிப்பால் இதுவரை இருபத்தைந்துபேர் உயிரிழந்துள்ளனர். தமது குழந்தைகளுக்கு உணவு தர முடியவில்லையே என்ற கவலையில் பெண்கள் தூக்கிட்டுத் … Continue reading மோடியின் அறிவிப்பில் மிகப் பெரிய ஊழல்: திருமாவளவன் குற்றச்சாட்டு

திமுக கூட்டத்தில் பங்கேற்க முடியாது: திருமாவளவன் கடிதம்

திமுக ஒருங்கிணைக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து திமுக பொருளாளர் மு. க. ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்தக் கடிதத்தில், “காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட மைய அரசை வலியுறுத்தும் வகையில் இன்று தங்களின் தலைமையில் நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு விடுதலைச் சிறுத்தைகளுக்கு அழைப்பு விடுத்தமைக்காக தங்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். … Continue reading திமுக கூட்டத்தில் பங்கேற்க முடியாது: திருமாவளவன் கடிதம்

ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு மீது தேசத்துரோக வழக்கு: விசிக கண்டனம்

உலகப் புகழ்பெற்ற மனித உரிமை அமைப்புகளில் ஒன்றான ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் இந்தியப் பிரிவின்மீது 'பகமையைத் தூண்டுதல், கலவரம் செய்தல், தேசத்துரோகம்' உள்ளிட்ட குற்றங்கள் புரிந்ததாக பெங்களூரு போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர். சுதந்திர தினத்தன்று மேற்கொள்ளப்பட்டிருக்கும் கருத்துரிமைக்கு எதிரான இந்தத் தாக்குதலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம் என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக கருத்தரங்கு ஒன்றை நடத்தியுள்ளது. பாதிப்புக்குள்ளான காஷ்மீர் மாநிலத்தவர் … Continue reading ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு மீது தேசத்துரோக வழக்கு: விசிக கண்டனம்

மோடி ஆதரவும் எதிர்ப்பும்: விடுதலை சிறுத்தைகளிடையே கருத்து வேறுபாடா?

கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி தலித்துகளை அடிப்பதை நிறுத்தி விட்டு தன்னை அடியுங்கள் என பேசியிருந்தார். இந்தப் பேச்சுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும் எழுத்தாளருமான ரவிக்குமார் தன்னுடைய முகநூலில் ‘பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி!’ என ஒரு பதிவு எழுதியிருந்தார். அந்தப் பதிவில், “பசு பாதுகாப்பு என்கிற பெயரில் வன்முறையில் ஈடுபடுகிறவர்களுக்கு எதிராகவும், தலித்துகளுக்கு ஆதரவாகவும் 07.08.2016 அன்று பிரதமர் நரேந்திர மோடி பேசியிருப்பதை வரவேற்கிறேன். 'தாக்கவேண்டுமென்றால் என்னைத் தாக்குங்கள், தலித்துகளை தாக்காதீர்கள்; சுடவேண்டுமென்றால் … Continue reading மோடி ஆதரவும் எதிர்ப்பும்: விடுதலை சிறுத்தைகளிடையே கருத்து வேறுபாடா?

15 வயது தலித் மாணவன் கொடூர கொலை;கபாலிக்கு அடித்துக் கொண்டிருக்கிறதா தமிழ் சமூகம்?

Joshua Isaac Azad மதுரை SMP காலனியை சேர்ந்த லக்ஷமணன் என்னும் பதினைந்து வயது மாணவன், 12.06.16 அன்று மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்புகையில் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறான். மாணவனது உடலை வாங்க மறுத்து, விடுதலை கட்சியினர்  போராட்டத்தில் ஈடுபட்டதுடன், கொலையாளிகளை "எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மீது வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கும் சட்டத்தின்" கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து, கொலை தொடர்பாக ஆறு பேரை போலீசார் … Continue reading 15 வயது தலித் மாணவன் கொடூர கொலை;கபாலிக்கு அடித்துக் கொண்டிருக்கிறதா தமிழ் சமூகம்?

“திருமாவளவன் தமிழ்நாட்டுக்கு தலைமை ஏற்கும் காலம் வந்தால் மக்களுக்கு நல்லது” நடிகர் சத்யராஜ்

“திருமாவளவன் தமிழ்நாட்டுக்கு தலைமை ஏற்கும் காலம் வந்தால் மக்களுக்கு நல்லது” என நடிகர் சத்யராஜ் பேசியிருக்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கலைப்பட்டறை வெளியிட்டிருக்கும் இந்த வீடியோவில், “அம்பேத்கர் வழியைப் பின்பற்றும் திருமாவளவன் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடக் கூடியவர்” என புகழாரம் சூட்டியிருக்கிறார். http://www.youtube.com/watch?v=s13fa3VuQpc

ஓட்டு கேட்ட திருமாவளவனுக்கு தங்க சங்கிலியை பரிசளித்த ‘அன்பு தங்கை’!

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வானமாதேவியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு மாணவி தன் கழுத்தில் இருந்த தங்க சங்கிலை கழற்றி திருமாவளவனுக்கு பரிசளித்தார். இதுகுறித்து தன்னுடைய முகநூலில் பதிவு செய்திருக்கும் திருமாவளவன், “நேற்று வானமாதேவியில் தேர்தல் பரப்புரையின் போது நந்தினி என்கிற மாணவி தனது கழுத்திலிருந்த ஒரு சவரன் தங்க சங்கிலியை கழற்றி அன்பளிப்பாக கொடுத்தார்.... "என் கழுத்திலிருந்த செயின் இனி எங்க அண்ணனிடம் இருக்கும்"" என சொல்லி எனக்கு அணிவித்தார். அது … Continue reading ஓட்டு கேட்ட திருமாவளவனுக்கு தங்க சங்கிலியை பரிசளித்த ‘அன்பு தங்கை’!

வசந்தி தேவி யார்? அரசியலுக்கு வசந்தி தேவியின் தேவை என்ன?

முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர். கே. நகர் தொகுதியில் அவரை எதிர்த்து மக்கள் நலக்கூட்டணியின் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்  களம் காண்கிறார் வசந்தி தேவி.  இவரைப் பற்றி எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் சிலரின் கருத்துக்கள் இங்கே... அ. மார்க்ஸ் (பேராசிரியர்) ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயாவை எதிர்த்து ம.ந.கூ சார்பாக டாக்டர் வசந்தி தேவி நிறுத்தப்பட்டுள்ளார். சக்கரைச் செட்டியார் அவர்களின் பேத்தி முன்னாள் துணை வேந்தர், முன்னாள் பெண்கள் ஆணையத் தலைவர், கல்லூரி ஆசிரியர் சங்கப் போராளி, அனைவராலும் மதிக்கப்படும் ஒரு … Continue reading வசந்தி தேவி யார்? அரசியலுக்கு வசந்தி தேவியின் தேவை என்ன?

சாலையோரத்தில் பூ விற்ற பெண்ணை விரட்டியடித்த போலீஸ்; தப்பித்து ஓடியவர் ரயிலில் அடிப்பட்டு மரணம்

சிதம்பரம் - கடலூர் சாலையில் ஆலப்பாக்கம் ரயில்வே கேட் அருகில் பூ விற்கும் பெண்களை வழக்கமாக புதுச்சத்திரம் காவலர்கள் குறிப்பாக ஆய்வாளர் ரவிச்சந்திரன், உதவி ஆய்வாளர் அண்ணாமலை, சண்முகம் ஆகியோர் ஆபாசமாக திட்டி விரட்டியடிப்பார்களாம். அதுபோல வியாழன் (31-3-2016) மாலை 6 மணியளவில் புதுச்சத்திரம் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஏழு காவலர்கள், விரட்டியடிக்கும் போது கீழ் அனுவம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த புஷ்பா(38) க/பெ மணிவேல் என்ற பெண் ரயிலில் அடிபட்டு இறந்து விட்டார். இறந்த புஷ்பாவின் கணவர் மணிவேல் ஒரு … Continue reading சாலையோரத்தில் பூ விற்ற பெண்ணை விரட்டியடித்த போலீஸ்; தப்பித்து ஓடியவர் ரயிலில் அடிப்பட்டு மரணம்

டிவி சேனல் தொடங்குகிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி: பெயர் வெளிச்சம் டிவி!

விடுதலை சிறுத்தைகள் கட்சி, வெளிச்சம் டிவி என்ற பெயரில் புதிய தொலைக்காட்சி சானல் ஒன்றைத் தொடங்குகிறது. இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது இந்தியன் எக்ஸ்பிரஸ். அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்ரல் 14-ஆம் தேதி முதல் வெளிச்சம் டிவி செயல்பட ஆரம்பிக்கும் என அந்தச் செய்தி சொல்கிறது. “ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களை ஒலிப்பதாக இந்தச் சேனல் இருக்கும். ஊடகங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரல் மற்றவர்களுக்கு இணையாக ஒலிப்பதில்லை. செய்திகள், நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் இதே தான்” என்றூ விடுதலை சிறுத்தைகள் … Continue reading டிவி சேனல் தொடங்குகிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி: பெயர் வெளிச்சம் டிவி!

68 ஆண்டுகளாக இருந்த பூங்காவைக் காணோம்; ’அம்மா’ கண்டுபிடித்துத் தருவாரா?

  சன்னா  உலகின் மிகக்பெரிய மில்களில் ஒன்றாக இருந்த பின்னி மில் தொழிலாளர்களின் வசதிக்காக தொழிற்சங்கத் தலைவர்களாக இருந்த திருவிக, செல்வபதி செட்டி ஆகியோர் நினைவாக சென்னை புளியந்தோப்பில் இரண்டு பூங்காக்கள் மெட்ராஸ் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டன. அதில் செல்வபதி பூங்கா மற்றும் மணிக்கூண்டு 1948ம் ஆண்டு அமைக்கப்பட்டது. பின்பு 1965ம் ஆண்டு சத்தம் ஒளிக்கும் வகையில் மணிகூண்டு சீரமைக்கப்பட்டு மறுபடியும் திறக்கப்பட்டது. தொடர்ந்து 2004ம் ஆண்டு புணரமைக்கப்பட்டு இன்று வரை பரிமரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் பூங்காவிற்கு … Continue reading 68 ஆண்டுகளாக இருந்த பூங்காவைக் காணோம்; ’அம்மா’ கண்டுபிடித்துத் தருவாரா?

“நாங்க என்ன தப்பு செஞ்சோம்? லவ் பண்ணுவது அவ்வளவு பெரிய குற்றமா?”: கவுசல்யா

வன்னி அரசு கடந்த 13.3.16 அன்று உடுமலைப்பேட்டையில் சாதி மறுத்து காதல் மணம் புரிந்த சங்கர் - கவுசல்யா இணையர் சாதிவெறி கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டனர். இதில் சங்கர் கொல்லப்பட்டான், தங்கை கவுசல்யா உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இப்போது உடல் நலம் தேறி சிகிச்சை பெற்று வருகிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் வழிக்காட்டுதலின்பேரில் தங்கை கவுசல்யாவை சந்திக்க நாங்கள் எடுத்த தொடர் முயற்சியின் விளைவாக மார்ச் 23 … Continue reading “நாங்க என்ன தப்பு செஞ்சோம்? லவ் பண்ணுவது அவ்வளவு பெரிய குற்றமா?”: கவுசல்யா

கி.வீரமணி,சுபவீயின் அருந்ததியருக்கான குரல் திராவிட இயக்கத்தை காப்பதற்கான கேடயம்!

ஸ்டாலின் ராஜாங்கம் கி.வீரமணி,சுபவீ போன்றோர் விசிகவை ஆதரிப்பதற்கு உடனடி அரசியல் காரணங்கள் தான் உண்டே தவிர தலித் அரசியலின் வருகை காரணமாக ஏற்பட்ட சுயவிமர்சனத்தினூடான கருத்தியல் மாற்றங்களை ஏற்று ஆதரிக்கவில்லை என்று நான் முன்பு எழுதினேன். அதாவது விசிக திமுக கூட்டணியில் இருந்ததாலேயே ஆதரிக்கிறார்கள் என்பதே நான் எழுதியதன் பொருள். அதைதான் சுபவீ இப்போது நிருபித்துக்கொண்டிருக்கிறார். அதை சில தலித் தோழர்கள் புரிந்துகொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.ஒரு தலித் கட்சிக்கு நிலவும் சூழலில் கூட்டணி எப்படியும் அமையலாம். அது … Continue reading கி.வீரமணி,சுபவீயின் அருந்ததியருக்கான குரல் திராவிட இயக்கத்தை காப்பதற்கான கேடயம்!

மக்கள் நலக் கூட்டணியை ஏன் ஆதரிக்கவேண்டும்?

பத்ரி சேஷாத்ரி 1967-ல் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டபின் இன்றுவரை தமிழகத்தை திமுகவும் அஇஅதிமுகவும் மாறி மாறி ஆண்டுகொண்டிருக்கின்றன. இவ்விரு கட்சிகளும் ஒரேபோல்வன என்று நான் சொல்ல வரவில்லை. நிச்சயமாக இரண்டில் தற்போதைக்கு மிக மோசமானது அஇஅதிமுகதான் என்று நினைக்கிறேன். கடந்த ஆறு தேர்தல்களில் இவ்விரு கட்சிகளுக்கும் மாறிமாறி வாக்களித்துவந்திருக்கிறோம். அவ்வகையில் இம்முறை திமுகதான் வெற்றிபெறவேண்டும். ஆனால் நிலைமை வெகுவாக மாறியுள்ளது என்று நான் நினைக்கிறேன். கடந்த தேர்தல்களின்போது பிற சிறு கட்சிகளெல்லாம் திமுக, அஇஅதிமுக இருவரில் எவருடன் சேர்வது … Continue reading மக்கள் நலக் கூட்டணியை ஏன் ஆதரிக்கவேண்டும்?

இலங்கையின் செய்தித் தொடர்பாளர் ஆகிப் போன ஐநா மனித உரிமைகள் ஆணையர்!

வன்னி அரசு. ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் செயத் ராஅட் அல் ஹுசேனின் நான்கு நாள் இலங்கை சுற்றுலா இன்று முடிவடைந்தது. அவர் பயணத்தின் விளைவாக தமிழர்களுக்கு எதாவது நன்மை நடக்கும் என்று நாம் எதிர்பார்த்த எந்தவொரு நிகழ்வும் நடக்கவில்லை. மாறாக இலங்கை அரசு மேற்பார்வையில் நடத்தப்பட்ட மற்றுமொரு சடங்கு போல இந்த பயணம் அமைந்துள்ளது. தமிழர்களின் மிகமுக்கிய கோரிக்கைகளில், ஐநாவுக்கு எந்த பங்கும் கடமையும் இல்லாதது போல கைகழுவி உள்ளது. தனது பயணத்தின் இறுதியில் … Continue reading இலங்கையின் செய்தித் தொடர்பாளர் ஆகிப் போன ஐநா மனித உரிமைகள் ஆணையர்!

#அரசியலில் தலித்துகள்: ராமதாசின் ஜாதி சங்க குரலுக்கு நிகரானது சுபவீயின் குரல்!

தமிழ் ஆதவன் சுப வீரபாண்டியனின் விவாதம் சிறுத்தைகள் அருந்ததியருக்கு போட்டியிட வாய்ப்புத் தரவில்லை என்ற பொய்யான செய்தியை பதிவு செய்வதோடு நிற்கவில்லை. நாம் அதை அந்த அளவோடு நிறுத்திப் பார்ப்பதும் சரியானதல்ல. தலித்கள் அதிகாரத்திற்கு வந்தாலும் மாற்றம் வராது, இன்னமும் இழிவை சுமக்கும் போது தலித்கள் அதிகாரம் குறித்து சிந்திக்க கூடாது. சிறுத்தைகள் அனைத்து பட்டியலினப் பிரிவினருக்குமான கட்சி அல்ல போன்ற செய்தியைகளை பல வார்த்தை ஜாலங்களில் பதிவு செய்தார் சுப வீரபாண்டியன். சுபவீ சிறுத்தைகளை குற்றம் … Continue reading #அரசியலில் தலித்துகள்: ராமதாசின் ஜாதி சங்க குரலுக்கு நிகரானது சுபவீயின் குரல்!

மரக்காணம் தீர்ப்பு : யாருக்குக் கிடைத்தது நீதி?

அ. மார்க்ஸ் 1.ஏப்ரல் 25, 2013 அன்று மகாபலிபுரத்தில் நடந்த வன்னியர் சங்க மாநாட்டிற்கு அச்சசங்கத்தினர் சென்ற போது மரக்காணத்தில் நடை பெற்ற சாதிக்கலவரத்தில் கொல்லப்பட்ட பா.ம.க வைச் சேர்ந்த செல்வராஜ் கொலை வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதில் கொலைக் குற்றத்தை உறுதி செய்து ஆறு தலித்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பா.ம.க நிறுவனர் தீர்ப்பை வரவேற்றுள்ளார். வி.சி.க தலைவர் திருமாவளவன் தீர்ப்பை ஏற்கவில்லை; தண்டிகப்பட்டவர்கள் அப்பாவிகள் எனக் கூறியுள்ளார். இது விசாரனை நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு. … Continue reading மரக்காணம் தீர்ப்பு : யாருக்குக் கிடைத்தது நீதி?