மத்திய அரசு பசுவதை தடை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி கூட்டறிக்கை

மத்திய அரசு பசுவதை தடை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீகின் கே.எம்.காதர்மொகிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர், தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாகிருல்லாஹ் ஆகியோர் கூட்டறிக்கையை விடுத்துள்ளனர். மாநில பட்டியலில் இருக்கும் இப்பிரச்னையில் மத்திய … Continue reading மத்திய அரசு பசுவதை தடை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி கூட்டறிக்கை

விடுதலை சிறுத்தைகள் கட்சி குறித்து ஆய்வு செய்யும் அமெரிக்கர்!

அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் காலின்ஸ் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைப்பற்றி பிஎச்டி பட்டத்துக்காக ஆய்வு செய்துவருவதாக தெரிவித்துள்ளார் அக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரான ரவிக்குமார் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். “அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் காலின்ஸ் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைப்பற்றி பிஎச்டி பட்டத்துக்காக ஆய்வு செய்துவருகிறார். 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது என்னுடனேயே தங்கியிருந்து திருவள்ளூர் தொகுதியில் கள ஆய்வை மேற்கொண்டார். அவரது தெளிவான தமிழ்ப் பேச்சால் தொகுதி முழுதும் பிரபலமாகிவிட்டார். வாக்குப் பதிவு முடிந்து அமெரிக்கா திரும்பியபோது அவருக்கு எங்கள் சின்னத்தை நினைவுபடுத்தும்விதமாக … Continue reading விடுதலை சிறுத்தைகள் கட்சி குறித்து ஆய்வு செய்யும் அமெரிக்கர்!

யாருக்கு ஓட்டு போடக் கூடாது; யாருக்கு ஓட்டு போடவேண்டும்?

 ஞாநி ஒவ்வொரு கட்சியாக நாம் ஏன் அதற்கு ஓட்டு போடக் கூடாது என்று பார்ப்போமா? தி.மு.க: 1. எவ்வளவு பூசி மெழுகினாலும், கருணாநிதி மாறன் குடும்பத்தின் நலன்களுக்கு முக்கியத்துவம் தந்து இயக்கப்படும் கட்சி. 2.பதவி பேரங்களுக்காக மட்டுமே டெல்லி அரசியலைப் பயன்படுத்தும் கட்சி. அங்கே இங்கே என இரண்டு இடங்களிலும் இதே கட்சி அதிகாரத்தில் இருந்தால், கட்சித்தலைவர் குடும்பத்தின் வியாபாரத்தொழில் துறை ஏகாதிபத்தியத்தின் விஸ்தரிப்பு கட்டுக்கடங்காமல் போய்விடும். 3. பகுத்தறிவு, தமிழ்ப்பற்று போன்றவற்றையெல்லாம் வெற்று கோஷங்களாக மட்டுமே … Continue reading யாருக்கு ஓட்டு போடக் கூடாது; யாருக்கு ஓட்டு போடவேண்டும்?

நீதிபதியின் சாதி மனசாட்சி..!

வன்னி அரசு. சாதி மறுத்து காதல் மணம் புரிந்த சங்கர் கவுசல்யாவை பட்டப்பகலில் அரிவாளால் வெட்டிச் சாய்த்தது சாதிவெறி கும்பல். காதல் மணம் புரிந்த எட்டு மாதங்கள் முழுக்க கொலை மிரட்டல்கள், லட்சங்களில் பணம் தருகிறோம் என்று அவன் காதலுக்கு விலை சொல்லப்பட்ட போதும், இரண்டு முறை கொலை முயற்சி நடந்தபோதும் எந்த விதத்திலும் தன் காதலை விட்டுத்தராமல், உறுதியோடு நின்று, இந்த முறை நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டான் எங்கள் வீரன் சங்கர். எல்லாவற்றையும் விட தான் … Continue reading நீதிபதியின் சாதி மனசாட்சி..!

குமரி அனந்தனை வழி அனுப்ப மகள் தமிழிசை வரவில்லையே!

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை உடனே அமல்படுத்த வலியுறுத்தி, காங்கிரஸ் மூத்தத் தலைவர் குமரி அனந்தன், 50 நாள் நீண்ட நடைப்பயணத்தை தொடங்கியிருக்கிறார். சென்னை பாரிமுனையில் உள்ள ராஜாஜி சிலை அருகே, நடைப்பயணத்தை குமரி அனந்தன் வெள்ளிக்கிழமைத் தொடங்கினார். இந்த பயணம்,  காந்தியடிகளின் அஸ்தி கன்னியாகுமரியில் கரைக்கப்பட்ட நாளான பிப்ரவரி 12-ஆம் தேதி  நிறைவடைகிறது. நடைப்பயணத்தை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், அக்கட்சியின் மூத்தத் தலைவர்  நல்லக்கண்ணு, … Continue reading குமரி அனந்தனை வழி அனுப்ப மகள் தமிழிசை வரவில்லையே!