“எனக்கென்று சொந்தங்களுமில்லை, என்னை யாரும் பார்ப்பதற்கும் தயாரில்லை”:முன்னாள் விடுதலை புலியின் கண்ணீர்க் கதை!

“எனக்கென்று சொந்தங்களுமில்லை, என்னை யாரும் பார்ப்பதற்கும் தயாரில்லை” என்கிறார் முன்னாள் போராளியான இளையதம்பி தவராணி. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி தனது சொந்த ஊரான மட்டக்களப்பிற்கு வரும் போது தனக்கு 24 வயது என தவராணி குறிப்பிடுகின்றார். ஐ.பி.சி தமிழ் பிரிவுக்கு வழங்கிய பிரத்யேக பேட்டியில் தவராணி, “தவராணி ஆகிய நான் 9 வருடங்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இருந்துள்ளேன். எனக்கு தாயுமில்லை. தந்தையுமில்லை, எனக்குரிய காணித்துண்டு … Continue reading “எனக்கென்று சொந்தங்களுமில்லை, என்னை யாரும் பார்ப்பதற்கும் தயாரில்லை”:முன்னாள் விடுதலை புலியின் கண்ணீர்க் கதை!

நளினிக்கு பரோல்!

தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினிக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் வசித்த நளினியின் தந்தை சங்கர நாராயணன் செவ்வாய்கிழமை மரணமடைந்தார்.  அவரது உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, நாளை அடக்கம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் அவருக்கு பரோல் வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இலங்கையில் ரகசிய சித்திரவதைக் கூடங்கள்: முன்னாள் கடற்படைத் தளபதி மறுப்பு

“இலங்கையில் விடுதலை புலிகளுக்கு எதிரான போரின்போது, திரிகோணமலை கடற்படைத் தளத்தில் ரகசிய சிறை செயல்பட்டது. அப்போதைய கடற்படைத் தளபதி வாசந்தா கரன்னகோடாவின் உத்தரவின்பேரில், அங்கு தமிழ்க் கைதிகள் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டனர்” என்று ஐ.நா. விசாரணைக் குழு குற்றம்சாட்டியுள்ளது. மேலும், இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அக்குழு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகளை வாசந்தா கரன்னகோடா மறுத்துள்ளார். இதுதொடர்பாக, கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “திரிகோணமலை கடற்படைத் தளத்திலுள்ள ரகசிய … Continue reading இலங்கையில் ரகசிய சித்திரவதைக் கூடங்கள்: முன்னாள் கடற்படைத் தளபதி மறுப்பு