“போயி வேற வேலை பாருங்கடா”!: காட்டமான விஜய் சேதுபதி

சமீபத்தில் நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமான வரி சோதனைகளின் பின்னணிக்கு கிறித்தவ மதமாற்ற நடவடிக்கைகளே காரணம் என பாஜக தரப்பினர் சொல்லி வந்தனர்.

நடிகர் விஜய், ஆர்யா, விஜய் சேதுபதி ஆகியோரின் பெயர் இந்த விவகாரத்தில் அடிபட்டது.

இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக எதிர்வினை ஆற்றியுள்ளார் விஜய் சேதுபதி.

‘விஜயின் தந்தையை 1%கூட நம்பாதீர்கள்’ என்கிறார் மாரிதாஸ்!

அண்மையில் நடிகர் விஜய் தொடர்புடைய தயாரிப்பாளர், ஃபைனான்சியர்களிடம் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. நடிகர் விஜய்யிடம் அவருடைய குடும்பத்தாரிடமும் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விஜய் – பாஜக மோதல் ஒரு காரணம் என சொல்லப்பட்டாலும், ஒரு சிலர் விஜய் மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதே பாஜக அரசின் கோபத்துக்குக் காரணம் என சுட்டிக்காட்டினர்.

இந்த நிலையில், பாஜக ஆதரவாளரான மாரிதாஸ், “திரைத்துறை கிறிஸ்தவ மதமாற்றும் கூட்டத்தின் பிடியில் வலுவாகச் சிக்கியுள்ளது. தமிழன் என்று அந்த கூட்டம் தன் அடையாளத்தை மொழியின் பின்னால் ஒளிந்து கொண்டு தன் இந்து விரோதத்தைக் காட்டுகிறது என்பது அசைக்க முடியாத உண்மை. யாரை வேண்டுமானாலும் நம்புங்கள்- விஜயின் தந்தையை 1% கூட நம்பாதீர்.” என ட்விட் செய்துள்ளார்.

மதம் மாறுவது, மாற்றுவது தடை செய்யப்பட்ட செயல் அல்ல என்றபோதும், இந்துத்துவ ஆட்சி நடத்தும் பாஜக அதை தனது கொள்கை விரோதமாகப் பார்க்கிறது.

மெர்சல் மருத்துவம்!

சிவசங்கரன் சரவணன் 

மெர்சல் படத்தில் மருத்துவர்கள் மீதும் மருத்துவத்துறை மீதும் பல குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். விஜய் ஒழுங்கா, அட்லீ ஒழுங்கா என கேட்டு சண்டை போடவேண்டியதில்லை. அதை பார்க்கிறவர்கள் அட ஆமால்ல சரியாத்தான் கேக்கறார் ல என்று எண்ணுவதை நாம் மறைக்கமுடியாது. என் மனைவி கூட என்னிடம் மருத்துவர்களைப் பற்றி அந்த படத்தில் சொல்லப்படுகிற பெரும்பாலான குற்றச்சாட்டுகள் சரிதானே என்று கேட்கிறார். எனவே படக்குழுவினர் மீது கோபப்படுவதை விட உண்மைகளை விளக்குவதற்கு நாம் முயலவேண்டும்.

அதற்கு முன் ஒரு வரலாற்று செய்தியை தெரிந்துகொள்ளலாம். ஜவஹர்லால் நேரு ஏன் மாபெரும் தீர்க்கதரிசி என தெரிந்துகொள்ளமுடியும்.

நேரு பிரதமராக இருக்கும்போது மருத்துமனைகள் ஆரம்பிக்க தனியாருக்கு வங்கிக்கடன் வழங்கவேண்டும் என்ற கோரிக்கை வருகிறது. நேரு கோப்பு ஒன்றில் தன் கைப்பட எழுதுகிறார் : தயவு செய்து மருத்துவமனைகள் ஆரம்பிக்க வங்கிகள் கடன் தரக்கூடாது என்று. நேருவின் எண்ணம் யாதெனில் ஒருத்தர் வங்கிக்கடன் வாங்கி மருத்துவமனை ஆரம்பிக்கிறார் என்றால் அவர் கடனை அடைப்பதற்காகவாவது அந்த ஆஸ்பத்திரியில் டார்கெட் பிக்ஸ் பண்ணப்படும் என்பதே.

ஆக ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தவரை இந்தியாவில் தனியார் மருத்துவமனை கட்ட லோன் கிடையாது. அவருக்கு பின் வந்த சாஸ்திரி காலத்திலும் கூட இல்லை. பிறகு செல்வாக்கான நபர் மூலம் செல்வாக்கான வழியில் அந்த நடைமுறை தளர்த்தப்பட்டது வேறு கதை.

சரி அடுத்ததாக நாம் தெரிந்துகொள்ளவேண்டியது சிங்கப்பூர் ஆசியாவிலேயே காஸ்ட்லியான மருத்துவத்திற்கு பேர் போன நாடு. சிங்கப்பூரில் வாங்குகிற கட்டணத்தை பார்த்து மிரண்டு போய் சென்னைக்கு வருகிற நோயாளிகள் ஏராளம். அடுத்த எல்லாருக்கும் தெரிந்திருந்தாலும் இந்த தகவலை இன்னொரு முறை ஞாபகப்படுத்திவிடுகிறேன் :

சிங்கப்பூர் நாட்டின் மொத்த மக்கட்தொகை 50 லட்சம் பேர். சென்னையின் மக்கட்தொகை மட்டும் 75 லட்சம் பேர். இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வேலை தேடி போகிற டாக்டர்கள் அதிகம். காரணம் இந்தியாவில் ஒரு டாக்டருக்கு வழங்கப்படும் சம்பளத்தை விட சிங்கப்பூரில 300% முதல் 500% வரை அதிகம். எனக்குத்தெரிந்த ஒரு கண் டாக்டர் சென்னையில் 1.5 லட்ச ரூபாய் சம்பள வேலையை விட்டுவிட்டு சிங்கப்பூரில 6 லட்ச ரூபாய் சம்பளத்துக்கு சென்றார்.

சிங்கப்பூரோடு இந்தியாவை ஒப்பிடுவது எந்த விதத்திலும் நியாயமே அல்ல. தமிழ் சினிமாவில் இந்த அபத்தத்தை ஆரம்பித்தது சுஜாதா என்றே நினைக்கிறேன்.

சரி, காசு உள்ளவன் தாஜ் ஓட்டலுக்கு போவான், காசு இல்லாதவன் அம்மா கேன்டீனுக்கு போவான். அதுபோலத்தான் ஏழைகளுக்கும் அரசாங்க ஆஸ்பத்திரி தான் கதியா? அப்பல்லோ விற்கு ஒரு ஏழையால் போக முடியுமா? அப்பல்லோ போல தர்மாஸ்பத்திரி இருக்கவேணாமா? என்று கேட்கிற கேள்வி யில் நியாயம் இருப்பதாகவே கருதுகிறேன். இதை எப்படி சரி செய்வது?

அப்பல்லோ வில் இருக்கிற எல்லா பெசிலிட்டியும் சென்னை பொது மருத்துவமனையிலும் இருக்கிறது. பிறகு வேறென்ன வித்தியாசம்?

அப்பல்லோ வில் ஒரு டாக்டர் செய்யும் வேலையை விட ஒரு அரசு டாக்டர் இரண்டு மடங்கு அதிக வேலையை செய்கிறார். ஆனால் அப்பல்லோ டாக்டர் வாங்குற சம்பளத்தில் பாதி தான் இவர் வாங்குறார். டாக்டர்கள் கார்ப்பரேட் ஆஸ்பத்திரியை நோக்கி படையெடுப்பதை தடுத்து நிறுத்த ஒரே வழி தனியார் மருத்துவர்களுக்கு இணையாக அரசு மருத்துவர்களுக்கும் சம்பளம் தரவேண்டும். அரசு சம்பளத்தை விட நிறைய தருகிறார்கள் என்று தானே ஒரு டாக்டர் தனியாருக்கு போகிறார், பிறகு மேனேஜ்மென்ட் அழுத்தம் தர அதை நோயாளிகள் மீது திருப்புகிறார்! அரசாங்கத்திலும் அதே சம்பளம் என்றால் அவர் போங்கயா நான் கவர்ன்மென்ட் லயே வேலை பார்த்துக்கறேன் என்று வருவார்.

இலவச மருத்துவம் என்பது தமிழ்நாட்டில் ஏற்கெனவே இருந்து வருகிற ஒன்று தான். ஏழைகள் அதிகளவில் பெரும் பயன் அடைகிறார்கள். ஒரேயொரு சின்ன உதாரணம் : பாம்புக்கடி விஷத்துக்கு மருந்து தயார் செய்து அதை இலவசமாக வழங்குகிற ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் அதுவும் ஒவ்வொரு இருபது கிலோமீட்டர் சுற்றளவுக்குள்ளேயே. ஏன் தனியாரிடம் அது இல்லை என்றால் அந்த மருந்துக்கு குறைந்தபட்சம் 20,000 ரூபாய் ஆகும். பாம்பு கடித்து வருபவர்கள் கிராமப்புற ஏழைகளாக இருப்பார்கள். காசு இருக்காது. காசு இல்லாதவனுக்கு வைத்தியம் பார்க்க தனியாருக்கு அவசியம் இல்லை. இது ஒரு உதாரணம் மட்டுமே.

ஆக ஏழைகளுக்கு தர்மாஸ்பத்திரிகள் துணை புரிகின்றன. பணக்காரர்களுக்கு அது அவசியமே இல்லை. அவன் நேரா கார்ப்பரேட் ஆஸ்பத்திரிக்கு போறான். பிரச்சினை மிடில் கிளாஸ் மொண்ணைகளிடம் தான். இவருக்கு ஏழையோடு ஏழையாக தர்மாஸ்பத்திரி போகவும் கவுரவம் தடுக்கிறது, கார்ப்பரேட் ஆஸ்பத்திரியில் வாங்குற கட்டணமும் வாயை பிளக்க வைக்கிறது. இவர் உடனே தான் வஞ்சிக்கப்படுகிறோம் என உணர்கிறார். இந்த குரூப் தான் தடுப்பூசி போடலாமா போடக்கூடாதா என்ற சிந்தனையிலேயே இருப்பார்கள். நான் சென்னை புளியந்தோப்பு பகுதியில் வசிக்கிறவன். எங்கள் பகுதிவாசிகள் அரசு இலவசமாக போடுகிற எல்லா ஊசிகளையும் தங்கள் குழந்தைகளுக்கு கேள்வியே கேட்காமல் போட்டுவிடுவார்கள். போயஸ்கார்டன் ல வசிக்கிற ஆட்களும் தப்பித்துவிடுவார்கள். தடுப்பூசி போடக்கூடாது என வாட்சப் வதந்திகளை நம்பி வீணா போற குரூப் நடுசென்ட்டர் குரூப் தான்.

சினிமா வில் மருத்துவம் மேம்படவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் கருத்து சொல்பவர்கள், நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்றெல்லாம் வியாக்கியானம் பேசாமல் அரசாங்கம் இலவசமாக வழங்குகிற ஊசிகளை போட சொல்வது தான் நியாயமானதாக இருக்கும்.

அடுத்தது நுகர்வோர் சட்டத்திலிருந்து மருத்துவத்தை விடுவிக்கவேண்டும். ஒரு நோயாளி மூன்று மாதங்களுக்கு முன்பு தான் ஒரு ஆஸ்பத்திரியில் எல்லா டெஸ்ட்டுகளும் எடுக்கிறார். பிறகு வேறொரு டாக்டரிடம் செல்கிறார். அந்த டாக்டர் ஏற்கெனவே எடுத்த டெஸ்ட்டுகளே போதும் என்று கருதினால் கூட அவர் மீண்டும் புதுசாக எடுக்க சொல்லி எழுதுவார்.

ஏன்?

ஏனென்றால் நோயாளிக்கு ஏதாவது பிரச்சினையாகி அவர் சார்பாக டாக்டர் மீது யாரேனும் வழக்கு தொடர்ந்தால் அப்ப ஜட்ஜ் கேட்கக்கூடிய முதல் கேள்வி : நீ ஏன் இந்த இந்த டெஸ்ட் லாம் எடுத்து பார்க்கவே இல்ல என்பது தான்.

ஒரு இதய டாக்டர் தனது அனுபவத்தால் பரிசோதனை செய்து நார்மல் என முடிவுக்கு வந்தாலும் அவரால் நார்மல் என சொல்லிவிடமுடியாது. ஏனென்றால் நாளைக்கு உங்களுக்கு ஒன்றாகி அவர் மீது கேஸ் போட்டால், எந்த டெஸ்ட்டுமே எடுத்து பார்க்காம நீ எப்படி நார்மல் என சட்டம் கேட்கும். டெஸ்ட் எடுத்து பிறகு ஏதாவது ஆனால் கூட, நான் டெஸ்ட் எடுத்தபோது நார்மல் ரிசல்ட் தான் வந்தது எனக்காட்டி சேஃப் ஆகலாம். டெஸ்டு எடுத்திராவிட்டால் டாக்டர் காலி.

அப்புறம் Family physician concept ஐ திரும்ப கொண்டுவரவேண்டும். இது டாக்டர்கள் கையில் இல்லை. நமது கையில் தான் இருக்கிறது. நம்ம பக்கத்து தெருவிலேயே இருக்கிற டாக்டரிடம் செல்லாமல் ஒரு சாதாரண பிரச்சினைக்குக் கூட மல்ட்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிக்கு போகவேண்டியது. இந்த லோக்கல் டாக்டர் எவ்ளோ நாள் தான் கிளினிக் ல ஈயோட்டுவார்? க்ளினிக் க இழுத்து மூடிட்டு அந்த மல்ட்டி ஸ்பெசாலிட்டி ஆஸ்பத்திரியில் சம்பளத்துக்கு வேலையில் சேர்வார்.

அதாவது டாக்டர்கள் என்றாலே மனித புனிதர்கள் என்று நான் சொல்வதாக கருதவேண்டாம். நான் அரசு மருத்துவமனையில் படித்து தனியார் மருத்துவமனைகளில் வேலை பார்த்தவன். இன்றும் அந்த இரண்டு ஆஸ்பத்திரிகளோடும் தொடர்பில் இருந்து பணியாற்றுகிறவன். டாக்டர்கள் பணம் பறிப்பதே இல்லை என்றெல்லாம் சொல்லமாட்டேன். அதே சமயம் எது நியாயம் எது அநியாயம் என்பதிலும் நமக்கு தெளிவு வேண்டும். மூணு வருஷ டிகிரி முடிச்சுட்டு ஐடி கம்பெனில 40 ஆயிரம் சம்பளத்துக்கு ஒருத்தர் வேலைக்கு சேருவார், நமக்கு வருடா வருடம் நல்ல இன்கிரிமென்ட் வேண்டும், கை நிறைய சம்பாதிக்கிற மாப்பிள்ளை வேண்டும் ஆனால் டாக்டர் மட்டும் காசு வாங்காமல் சேவை செய்யவேண்டும் என எதிர்பார்க்கலாமா? பாவம் அவருக்கும் வயிறு, மனசு இருப்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

சிசேரியன் குறித்து ஒரு ஆர்டிஐ போட்டிருக்கிறேன். அதற்கு பதில் கிடைத்தவுடன் அந்த டேட்டாவை வைத்துக்கொண்டு இன்னொரு தனிப்பதிவாக எழுதுகிறேன்.

சிவசங்கரன் சரவணன், மூகநூலில் எழுதிய பதிவு.

 

சினிமா பிரபலங்கள் வாக்களித்தனர்!

இயக்குநர் சுசீந்திரன் வாக்களித்தார்

https://twitter.com/dir_susee/status/732108222392229888

நடிகர் விஜய் வாக்களித்தார்

இயக்குநரும் நடிகருமான ஆர். பார்த்திபன் வாக்களித்தார்..

நடிகர் விஷ்ணு விஷால்…

நடிகர் சித்தார்த் வாக்களித்தார்…

https://twitter.com/Actor_Siddharth/status/732107336878170112

நடிகர் வரலட்சுமி வாக்களித்தார்…

நடிகர் மோகன்பாபு வாக்களித்தார்…

விஷால், ஆர்யா வாக்களித்தனர்…

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி வாக்களித்தார்..

திரிஷா வாக்களித்தார்…

இசையமைப்பாளர் அனிருத் குடும்பத்தினருடன் வாக்களித்தார்…

இயக்குநர் பாண்டிராஜ் வாக்களித்தார்…

 

#தெறி:“நல்ல தமிழ் படங்கள இப்படி காப்பி அடிச்சு நாசமாக்றீங்களே, அட்லீ”

ஜி. விஜயபத்மா

vijayapadma
ஜி. விஜயபத்மா

எந்த ஒரு விசயத்துல ஈடுபடும் முன்பும் mindsetனு ஒண்ண நம்ப subconscious mind..பட்டுனு consious mindக்கு transferபண்ணிடும். நாம அதுக்கு நம்பளயும் அறியாம தயாராகிடுவோம். அதாவது சுவிஷேச கூட்டத்துக்கு போறோம்னா வாய் தானா ஜீஸஸ்னு சொல்லும். திருப்பதி போனா கோவிந்தான்னு சிலிர்க்கும். அதுமாதிரி தளபதி விஜய் படத்துக்கு போனா இப்படித்தான் இருக்கும்னு தெரிஞ்சுதான”தெறி”மாஸ் ஆக்ஷன் படம் பார்க்க போறோம். அப்புறம் படம் பார்த்துட்டு அட்லீங்கிற இயக்குனர நான் எப்படி திட்டி விமர்சனம் எழுத முடியும்?

கனடா சினிபிளக்ஸ் தியேட்டர்ல நைட்ஷோ பார்த்துட்டு அந்த நடுக்குற குளிர்ல என் எமோஷன் தாங்காம வியர்த்தது. வீட்டுக்கு வந்ததும் கண்ணாடிக்கு முன்னாடி நின்னு என்னை நானே திட்டிகிட்டேன். பேபி…தாங்கலப்பா.ஜி.விபிரகாஷ் ஒரே நேரத்துல நாம ஜேம்ஸ்பாண்ட மாதிரி சவாரி செய்ய முடியாது. ப்ளீஸ் இனி நீங்க நடிக்க மட்டும் செய்யலாமே. படத்துல மட்டும்தான் பிரதர் நாம டூப் போடணும் தெறில உங்க டூப் யாரோ மியூசிக் போட்டுடாங்க பிரதர். பீ கேரஃபுல்!அடலீ உங்க மேக்கப்மேன கோஞ்சம் கவனிங்க.. உங்க மேடை பேச்சு மாதிரியே அவரும் கொஞ்சம் ஓவரா மேக்கப் எல்லோர் மூகத்திலேயும் அன்பா அப்பிட்டார்.

மிஸ்டர் ஜார்ஜ் ..நீங்க பாவம். நீங்கதான் ஒளிப்பதிவாவாமே..பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். “கத்தியில போடறது ஈஸி.பேனா எடுத்து எழுதுறது கஷ்டம்”உணர்ந்து எழுதிய வசனம் போல் தெரிகிறது ரமணகிரிவாசன்.விஜய் படத்துக்கு வசனம் எழுதுறது walkபடத்துல கயிறு மேல நடக்கிறமாதிரி அவ்வளவு சிரமம். ஆனாலும் ரமணன் கிடைச்ச இடத்துல நின்னு கபடி விளையாடி இருக்கிறார்.

கிளைமாக்சில் நேதாஜி பற்றி பேசுவது.”எப்ப உன் பையன் ரேப் பண்ணி ஒரு பொண்ண கொலை செஞ்சானோ அப்வே நீ அப்பனா தோத்துட்ட.. அவங்க அம்மாவ நீதான் கொன்னேனு தெரிஞ்சும் சாரி கேட்டுட்டா மன்னிச்சு விட்டுடலாம்பான்னு எப்ப என் பொண்ணு சொன்னாலோ அப்பவே அப்பனா நான் ஜெயிச்சிட்டேண்டா” என்ற இடத்தில் வசனகர்த்தாவாக சிக்ஸர் அடிச்சிட்டீங்க ரமணன். நல்ல ஸ்கிரிப்ட கிடைத்தால் உங்க எழுத்து உயிர் பெறும்.

அடலீக்கு ஒரு கேள்வி விஐய் பார்க்க போற பொண்ணு சுனைனா..ஒரு ஐயர் பொண்ணுனு காட்றீங்க அதன் மூலம் நீங்க என்ன சொல்ல வர்றீங்க?முதல்ல ஜாதியத்தாண்டி வாங்க பாஸ். சென்டிமெண்ட் ஸீன் வச்சா படம் பிச்சிக்கும்னு யாராவது உங்ளுக்கு வேப்பிலை அடிச்சி ஏத்தி விட்டாங்களா படம் முழுக்க அழுகாச்சியா இருக்கு. அதே போல ஹீரோ சென்டிமெண்ட்னா அழணும்னு உங்க இயக்குனர் சங்கர் பாடம் எடுத்தாரா? டாக்டர்ஸ்ஆபிஸர்ஸ் எல்லோரும் அழறாங்க. கலைப்புலி தாணு உங்க படத்துக்கு கிளிசரின் வாங்கியே காலி ஆயிருப்பார்னு நினைக்கிறேன். நல்ல சம்பளம் வாங்கி இருப்பீங்க.

அடுத்து தெலுங்குல மகேஷ்பாபு படம் பண்ண போறதா கேள்விப் பட்டேன்.பளீஸ் அப்படியே போய்டுங்க. நல்ல தமிழ் படங்கள இப்படி காப்பி அடிச்சு நாசமா ஆக்றீங்களே..இது உங்களுக்கே அநியாயமா தெரியல..ப்ளீஸ் போங்க போயி தெலுங்கு தேசத்த காப்பாத்துங்க. ஆள் தமிழ் ஹீரோஸ் பாவம்!

கடைசியா ஒரு வார்த்தை அந்த முள்ளும்மலரும் லாபாயிண்ட், உதிரிபூக்கள் கிளைமாக்ஸ்..மெல்லிய மெட்டி ஒலியில் காதில் கவிதை சொன்ன மகேந்திரன் இயக்குநர் அத்தனை ரவுடிகளும் தெறியாக சண்டை போடும்போதும் அசத்தலாக கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து அப்படி ஒரு லுக் விடுகிறாரே அப்படிதான் இன்னமும் எங்கள் மனதில் இயக்குநராக சிம்மாசனத்தில் உட்கார்ந்து இருக்கிறார். அவரை நடிகராக்கி ஒரே படத்தில் காலியாக்கி 70வயது கம்பீரத்தை தலைகீழாக கட்டி தொங்க விட்டிட்டீங்களே அட்லீ…you are too bad!

ஜி. விஜயபத்மா, எழுத்தாளர்; இயக்குனர்

வந்த வேகத்தில் யூ ட்யூப்பில் இருந்து நீக்கப்பட்டு, மீண்டு வந்த விஜய்யின் ‘தெறி’ டீஸர்!

விஜய் நடிக்கும் தெறி படத்தின் டீஸர் நேற்றிரவு வெளியானது. வெளியான சில மணிநேரங்களிலேயே 9 லட்சத்துக்கு மேற்பட்ட பார்வைகளைக் கடந்த இந்த டீஸர், தீடிரென யூட்யூப் இணைப்பிலிருந்து நீக்கப்பட்டது. Tamil takies என்ற நிறுவனத்துக்கு சொந்தமானது. காப்புரிமை பிரச்சினையால் நீக்கப்பட்டது என அறிவிப்பு வந்தது. ஆனால் இந்த டீஸர், தெறி படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணுவின் பெயரிலான கணக்கில் வெளியிடப்பட்டது. தயாரிப்பாளருக்கே காப்புரிமை பிரச்சினையா என இணைய பார்வையாளர்கள் குழம்பி நிற்க, சில நிமிடங்களில் மீண்டும் டீஸர் இணைப்பு மீளப் பெறப்பட்டது. நடுவில் காணாமல் போனதற்கு என்ன காரணமென்பதை படக்குழுதான் விளக்க வேண்டும்.

டீஸர் இங்கே…

“கோட்டாவுல சீட்ட வாங்கி டாக்டராகுறான் : தப்பு தப்பா ஊசி போட்டு சாவடிக்குறான்” விஜய் ஆண்டனி, இயக்குனர் சசிக்கு எதிராக எழும் கண்டனங்கள்

நாகேந்திரகுமார் திலகவதி

அது அயல்நாட்டு பறையோ, உள்ளூர் பறையோ… எனக்கு எப்போதும் நல்ல ராகத்துடன் கூடிய தெறி அடி பாடல்கள் என்றால் கொள்ளைப் பிரியம்! இளையராஜா, ரஹ்மான், ஹாரிஸ், யுவன், விஜய், ஜெயமூர்த்தி இன்னும் பெயர் தெரியா எவ்வளவோ பேரை தேடி தேடி கேட்டு ரசித்திருக்கிறேன். ஆனாலும் ஒரு படத்தின் அனைத்து பாடல்களும் பிடித்த படம் எனக்கு எதுவென்றால் பூவேலி, சுக்ரன்தான். அதிலும் சுக்ரனை கணக்கு வழக்கு இல்லாமல் கேட்டு மூழ்கியிருக்கிறேன்.

அந்தவகையில் நான் மதிப்பு வைத்திருக்கும் விஜய் ஆண்டனியின் இசையில் “பாழாப்போன உலகத்திலே” (Glamour Song) எனும் பாடலும் என் ரசனைக்கு உகந்ததுதான்.

ஆனால் இந்த பாடலின் 2:18 நேரத்தில்

“கோட்டாவுல சீட்ட வாங்கி டாக்டராகுறான்..
தப்பு தப்பா ஊசி போட்டு சாவடிக்குறான்”
எனும் தற்குறித்தனமான வரிகள் வருகின்றன. இது இடஒதுக்கீடை கடைபிடிக்கும் இந்திய இறையாண்மையையே கேலி செய்வதாகும்; சமூக நீதி குறித்து மண்டையில் ஒரு மண்ணும் இல்லாத ஒரு பொறம்போக்கின் வரிகள்தான் இவை.

இந்த வரிகளை எழுதிய கழிசடைக்கோ, அனுமதித்த இயக்குனர் சசிக்கோ, பயன்படுத்திய விஜய் ஆண்டனிக்கோ மூளை எனும் அவயம் குறித்த கவனம் இல்லாமல் இருக்கலாம். ஒரு தயாரிப்பாளராக விஜய் ஆண்டனி தமது பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும். வரிகள் நீக்கப்படவேண்டும்.

 

#சட்டப்பேரவைத்தேர்தல்2016: முதல்வர் வேட்பாளர் விஜய்?!

மக்களின் ‘தலைவன்’ தேடுதல் மீண்டும் சினிமா வட்டாரத்தின் பக்கம் திரும்பியிருக்கிறது. ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தங்களுக்கு நல்ல தலைவராக இருப்பார் என ஒரு சிலர் விரும்புவதுபோல், நடிகர் விஜய் எங்களுக்கு தலைவராக இருப்பார் என்கிற விருப்பத்தையும் ஒரு சில மக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

சமீபத்தில் நியூஸ் 7 தொலைக்காட்சி, லயோலா கல்லூரியுடன் இணைந்து கருத்துக் கணிப்பு நடத்திய அதில் முதல்வர் வேட்பாளராக, ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திற்கு 4 சதவீதம் பேரும், நடிகர் விஜயக்கு 2.7 சதவீதம் பேரும் கருத்துக் கணிப்பில் ஆதரவு தெரிவித்துள்ளனர்.  நடிகர் ரஜினிக்கு 1.5 சதவீதம் பேரும், நடிகர் அஜித்திற்கு 0.2 சதவீதம் பேரும் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.