அரசியல் செய்றதே இதுக்குத்தான்!:“தேமுதிக கட்சி துவங்கி யாருக்கும் லாபமில்லை ஆனால், உங்கள் குடும்பத்துக்குத்தான் லாபம்”

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு எதிராக 14 மாவட்ட செயலாளர்கள்  போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். மாவட்ட செயலாளர்கள் ஏ.எம்.காமராஜ் (சென்னை மேற்கு), எஸ்.நித்யா (வேலூர் கிழக்கு), வி.சந்திரன் (கிருஷ்ணகிரி), டாக்டர் வி.இளங்கோவன் (தர்மபுரி), என்.தினேஷ்குமார் (திருப்பூர் வடக்கு), ஆர்.பாண்டியன் (கோவை வடக்கு), துரை காமராஜ் (பெரம்பூர்), எஸ்.செந்தில்குமார் (திருச்சி தெற்கு), பி.சம்பத் குமார் (நாமக்கல்), பாலு (திண்டுக்கல்), முத்துகுமார் (மதுரை மாநகர்), கே.ஜெய பால் (திருநெல்வேலி), டி.ஜெகநாதன் (கன்னியா குமரி கிழக்கு), க.ராமசாமி (புதுக்கோட்டை) ஆகியோர் பகிரங்கமாக கடிதம் எழுதி … Continue reading அரசியல் செய்றதே இதுக்குத்தான்!:“தேமுதிக கட்சி துவங்கி யாருக்கும் லாபமில்லை ஆனால், உங்கள் குடும்பத்துக்குத்தான் லாபம்”

அதிகாரப் பூர்வ அறிவிப்பு; மக்கள் நலக்கூட்டணியில் இருந்து வெளியேறி தேமுதிக தேசிய ஜனநாயக கூட்டணிக்குத் தாவுகிறது!

சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள், மதிமுக  இணைந்த மக்கள் நலக் கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக தேமுதிக வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்தே போட்டியிடும் என்று அக்கட்சியின் பொருளாளர் ஏ.ஆர். இளங்கோவன் அறிவித்துள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்கப்படும் என கூறப்பட்ட தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டது. இதனை எதிர்த்து அக்கட்சியிலிருந்து சந்திரகுமார் உள்ளிட்ட சிலர் பிரிந்து சென்று மக்கள் தே.மு.தி.க., என்ற பெயரில் … Continue reading அதிகாரப் பூர்வ அறிவிப்பு; மக்கள் நலக்கூட்டணியில் இருந்து வெளியேறி தேமுதிக தேசிய ஜனநாயக கூட்டணிக்குத் தாவுகிறது!

திமுக தோல்விக்கு வைகோ காரணமா?: உடன் பிறப்புகளுக்கு 11 கேள்விகள்!

விஷ்வா விஸ்வநாத் கடந்த ரெண்டு நாளாக வைகோவை எண்ணி எண்ணி குமுறி குமுறி நிலத்தில் புரண்டு புரண்டு சின்னப்புள்ளங்க மாதிரி அழுது கதறி கதறி சிலர் எழுதிட்டு இருப்பதை பார்க்கும்போது அடிப்படையான சில கேள்விகள் எழுகின்றன. 1. வைகோ திமுகவில் பொறுப்பு வகித்து கொண்டே அக்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து உள்குத்து வேலை செய்யவில்லை. அவர் தனக்கென்று ஒரு தனிக்கட்சி வைத்துள்ளார். தேர்தல் காலத்தில் ஒரு கூட்டணியை ஒருங்கிணைக்கிறார். இதில் என்ன தவறு ? 2. அவர் … Continue reading திமுக தோல்விக்கு வைகோ காரணமா?: உடன் பிறப்புகளுக்கு 11 கேள்விகள்!

ஷுட்டிங் புறப்பட்ட விஜயகாந்த்!

தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகி எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத நிலையில் ‘தமிழன் என்று சொல்’ படப்பிடிப்பில் இருப்பதாக ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார் தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த். https://twitter.com/iVijayakant/status/733594228278730752 https://twitter.com/iVijayakant/status/733593916461580288 https://twitter.com/iVijayakant/status/733588272580952064 https://twitter.com/iVijayakant/status/733577518544916481  

மாற்று முழக்கம் தோற்றுவிட்டதா?

மாதவராஜ் தமிழக தேர்தல் முடிவுகள், நம்பிக்கைகளை தொலை தூரத்தில் காட்டுவதாகவே இருக்கின்றன. ஆளும் கட்சியான அதிமுகவின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக இணைந்து போராட்டங்கள் நடத்தும் உறுதியோடு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும், மதிமுகவும் இணைந்து மக்கள் நலக் கூட்டு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. சில மாதங்களில் எதிர்வந்த தேர்தலையொட்டி, இந்த கூட்டு இயக்கமானது ஊழல் மலிந்த, அரசியல் நேர்மையற்ற, சர்வாதிகார மனப்பான்மை கொண்ட, மக்கள் விரோத திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணியாக … Continue reading மாற்று முழக்கம் தோற்றுவிட்டதா?

“தர்மம் மீண்டும் வெல்லும்”

தேர்தல் முடிவுகள் குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து: “தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடந்த போரில், ஜனநாயகத்தை பணநாயகம் வென்றுள்ளது. ஆனால் எல்லா நேரங்களிலும் சத்தியமே ஜெயிக்கும் என்பதை வரும் காலங்கள் உணர்த்தும். “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும்”. தேமுதிக, தமாகா, மக்கள் நலக்கூட்டணியை ஆதரித்து வாக்களித்த அனைத்து வாக்காள பெருமக்களுக்கும் நன்றி!  

விஜயகாந்த், பி. எல். சுந்தரம், தளி ராமச்சந்திரனுக்கு நிச்சய வெற்றி: தந்தி டிவி தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு!

மக்கள் நலக் கூட்டணி-தேமுதிக- தாமாக கூட்டணி வேட்பாளர்களான உளூந்தூர்பேட்டை தொகுதி வேட்பாளர் விஜயகாந்த், பவானிசாகர் பி.எல்.சுந்தரம், தளி தொகுதி வேட்பாளர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு நிச்சய வெற்றி உண்டு என தந்தி டிவியின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடும் காட்டுமன்னார்கோயில் தொகுதியிலும் ரவிக்குமார் போட்டியிடும் வானூர் தொகுதியிலும் இழுபறி நிலை நீடிப்பதாகவும் இந்தக் கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. https://youtu.be/hmmCxoF82Uw கருத்து கணிப்பு முடிவுகள் அதிமுக - 111 … Continue reading விஜயகாந்த், பி. எல். சுந்தரம், தளி ராமச்சந்திரனுக்கு நிச்சய வெற்றி: தந்தி டிவி தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு!

விஜயகாந்த் குடும்ப செல்ஃபி!

விருகம்பாக்கம் காவிரி பள்ளியில் குடும்பத்துடன் சென்று வாக்களித்தார் விஜயகாந்த். வாக்களிக்க மை வைக்கப்பட்ட விரல்களைக்காட்டி தன் குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியை தனது முகநூலில் பதிவு செய்திருக்கிறார்.

யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் குழப்பமா?

யாருக்கு வாக்களிப்பது? குழுப்பத்தை தீர்க்குமா? இந்த படம்...  

“பாஜக, அதிமுக, திமுக எனக்கு பணம் கொடுக்க முன்வந்தார்கள்”: விஜயகாந்த் ஒப்புதல்

Kumaresan Asak விஜயகாந்தை விமரிசிக்கிறவர்கள் அவருக்குக் கோர்வையாகப் பேசத்தெரியாது என்று சொல்கிறார்கள். பேசத்தெரியாத ஒருவர் இப்போது பேசியிருக்கிற பேச்சு குண்டு போட்டது போன்ற விளைவை ஏற்படுத்தியிருக்கிறது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதும், வாக்குச் சாவடியிலேயே மற்ற கட்சிகளின் முகவர்களுக்குப் பணம் கொடுப்பதும், அணி சேர்வதற்காகத் தலைமைக்கே பணம் கொடுப்பதும் இப்படிப்பட்ட பெரிய கட்சிகளைப் பொறுத்தவரையில் புதிய விசயம் அல்ல. அந்தக் கட்சிகள் பண பேரம் நடத்தியிருக்க மாட்டார்கள் என்று சொல்வாரா நண்பர்? தேமுதிகவை இழுக்க கோடிக்கணக்கில் பணம் தர … Continue reading “பாஜக, அதிமுக, திமுக எனக்கு பணம் கொடுக்க முன்வந்தார்கள்”: விஜயகாந்த் ஒப்புதல்

மக்கள் நலக்கூட்டணிக்கே என் ஓட்டு!

இளமதி சாய்ராம் “பணத்தை எப்படி கொண்டு போய் சேர்க்குறதுன்னு தெரியல... ஒரே கெடுபிடியா இருக்கு... வண்டிக்கு பெட்ரோல் போடுறதுக்காவது காசு கொடுங்கப்பா, எப்படி பிரச்சாரம் பண்றது..” இவ்விரண்டு, வெவ்வேறு முனைகளின் குரலாகத்தான் இந்த தேர்தலை பார்க்கத் தோன்றுகிறது. இலவச அறிக்கைகள், கருத்துக்கணிப்புகளை பார்த்து குழம்பித்தவிக்கும் மக்களின் சித்திரமே கண்முன் ஓடுகிறது. இந்த கட்சிதான் ஜெயிக்கும்னு தீர்மானமாக சொல்லமுடியால் இருப்பது இத்தேர்தலின் சுவாரசியம் என்றால், அதிமுக, திமுக போன்ற இரண்டு பெரிய கட்சிகளின் அதிகாரத்தை ஆட்டம் காணவைத்த மக்கள் நல … Continue reading மக்கள் நலக்கூட்டணிக்கே என் ஓட்டு!

வீடியோ: எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந்த் என்ன செய்தார்?

எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் என்ன செய்தார்? இந்த வீடியோவைப் பாருங்கள்... https://www.facebook.com/veeramani525wapegocom/videos/939125162823375/

பிரணாய் ராய், விஜயகாந்துடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட ’சிவப்பு மல்லி’ போஸ்!

தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் பிரணாய் ராய் எடுத்துக்கொண்ட படம் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் விஜயகாந்த், “பிரனாய் ராய் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க... நான் நடித்த 'சிவப்பு மல்லி' படத்தில் வரும் காட்சி போல் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்” என தெரிவித்துள்ளார்.

“வைகோ ஹீரோ; வில்லன் கலைஞர்; வில்லி ஜெயலலிதா!” ட்விட்டரில் விஜயகாந்த் பதில்

தேமுதிக தலைவர் விஜயகாந்த், ட்விட்டரில் மக்களின் கேள்விகளுக்கு ஞாயிற்றுக் கிழமை பதிலளித்தார். இதில் ஒருவர், “சார், உங்களுக்கு மிகவும் பிடித்த வில்லன் யார்? (வைகோ தவிர)” எனக் கேட்டிருந்தார். அதற்கு விஜயகாந்த் அளித்த பதில், “வைகோ ஹீரோ; வில்லன் கலைஞர்; வில்லி ஜெயலலிதா!”   https://twitter.com/iVijayakant/status/726652024234856448 அன்பின் கேப்டன், சில ஊடகங்கள் தங்கள் மீது காட்டும் தனிப்பட்ட தாக்குதல் பற்றிய தங்களது கருத்து? விஜயகாந்த் பதில்: கவலைப் படுவதில்லை. https://twitter.com/iVijayakant/status/726653687855222784 தொங்கு சட்டமன்றம் அமைந்தால் உங்கள் ஆதரவு யாருக்கு? … Continue reading “வைகோ ஹீரோ; வில்லன் கலைஞர்; வில்லி ஜெயலலிதா!” ட்விட்டரில் விஜயகாந்த் பதில்

“தலைவா நீ எங்கள் வீட்டுப் பிள்ளை”: ஹிட்டடித்த விஜயகாந்த் பிரச்சாரப் பாடல்

http://www.youtube.com/watch?v=CawZA1gGnQQ  

#வீடியோ புதுசு: வேர்த்துக்கொட்டிய உதவியாளருக்கு விசிறிவிட்ட விஜயகாந்த்!

அடிக்கப் பாய்ந்தார், நாக்கைத் துருத்தினார் என்றெல்லாம் வைரலான விஜயகாந்தின் செய்கையில் இந்த முறை ஒரு நேர்மறை மாற்றம். திருமங்கலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட விஜயகாந்த், தனது பாதுகாப்புக்காக மேடையில் தனக்குக் கீழே அமர்ந்திருந்த பாதுகாவலருக்கு வேர்த்துக் கொட்டியதைப் பார்த்து விசிறிவிட்டிருக்கிறார். இதை வெட்கத்தோடு அணுகினார் உதவியாளர். விஜயகாந்தின் செயலைப்  பார்த்த பொதுக்கூட்டத்துக்கு வந்திருந்த கூட்டத்தினர் விசில் அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். http://www.youtube.com/watch?v=rVucvL7ACHg

விஜயகாந்தை எதிர்த்து களமிறக்கப்படும் பாமக வழக்கறிஞர் பாலு: சிறு குறிப்பு

விஜயகாந்துக்கும் பாலுவுக்கும் ஏழாம் பொருத்தம். விஜயகாந்த் ‘மக்களுக்காக மக்கள் பணி’ என தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் தமிழகம் எங்கும் பயணம் செய்தார். அப்போதைய கூட்டங்களில் கடுமையாக பாமக வழக்கறிஞர் பாலு  குறித்து பேசுவார். பாலுவும் தொலைக்காட்சி விவாதங்களில் விஜயகாந்தை காய்ச்சி எடுப்பார்.  பாமகவின் கோட்டையை கைப்பற்றி விட்டோம் என விஜயகாந்த் பேசியதையும், மக்களவைத் தேர்தலில் தங்கள் கூட்டணியில் இருந்த பாமக, தங்களுக்காக தேர்தல் பணியாற்றவில்லை என்பதையும் பரஸ்பரம் காரணங்களாக கூறிகொள்கின்றனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் … Continue reading விஜயகாந்தை எதிர்த்து களமிறக்கப்படும் பாமக வழக்கறிஞர் பாலு: சிறு குறிப்பு

“வள்ளுவர் என்னை வலது கன்னத்தில் அடித்தார்”: ஆனந்தவிகடன் கட்டுரையை எழுதிய பத்திரிகையாளர் திருமாவேலன் வைகோவுக்கு விளக்கம்

ஆனந்த விகடனில் கடந்த வாரம்(6.4.2016)வெளியான ‘போர்வாள் அட்டக்கத்தி ஆன கதை’ என்ற கட்டுரை மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோவும் இடதுசாரிகளும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதற்கு கட்டுரை எழுதிய பத்திரிகையாளர் ப. திருமாவேலன் ‘வைகோவின் புரிதலும் எனது விளக்கமும்!’ என்ற தலைப்பில் தன்னுடைய முகநூலில் ஒரு குறிப்பு எழுதியிருக்கிறார். அதில், “மக்கள் நலக்கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக வைகோ பேசிய பேச்சுகளை விமர்சித்து ஆனந்த விகடன் இதழில், 'போர் வாள் அட்டக்கத்தி ஆன … Continue reading “வள்ளுவர் என்னை வலது கன்னத்தில் அடித்தார்”: ஆனந்தவிகடன் கட்டுரையை எழுதிய பத்திரிகையாளர் திருமாவேலன் வைகோவுக்கு விளக்கம்

பழம் நழுவி பாலில் விழும் என்று கூறி ​மக்களை குழப்பினார் கருணாநிதி!

திருச்சி உறையூரில் தேமுதிக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் மகளிர் அணித் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி விஷயத்தில் பொறுமையாக தெளிவான முடிவை மேற்கொண்ட நிலையில் பழம் நழுவி பாலில் விழும் என்று கூறி திமுக தலைவர் கருணாநிதி மக்களைக் குழப்பியதாகத் தெரிவித்தார்.

திமுக, அதிமுக என மாறி மாறி ஆட்சி வாய்ப்பு அமைந்து வருகிறது: கருணாநிதி அறிக்கை

“உடன்பிறப்பே உன்னால் முடியாதது உலகினில் ஏதும் உண்டோ?’ என்ற தலைப்பில் திமுக தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:   தமிழ்நாடு பதினைந்தாவது சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, வரும் ஏப்ரல் 22 அன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. ஜனநாயக மரபுகளையொட்டி, கழகத்தின் சார்பில் விருப்ப மனு அளித்த அனைவருடனும் “நேர்காணல்” நிறைவுற்று, மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரையும் அழைத்துக் கலந்தாலோசனை செய்து, அவர்களுடைய கருத்துக்களைப் பெற்று, பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் வழங்கிய அறிவுரை, … Continue reading திமுக, அதிமுக என மாறி மாறி ஆட்சி வாய்ப்பு அமைந்து வருகிறது: கருணாநிதி அறிக்கை

#வீடியோ ”விஜயகாந்த் முதலமைச்சரானால் நாண்டுக்கிட்டு சாகலாம்”: சீமான் சொன்னபடி செய்வாரா?

அதிரடி பேச்சுகளுக்கு பெயர் போன சீமானின் இந்த முறை விஜயகாந்தை குறி வைத்திருக்கிறார். சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில்., “விஜயகாந்த் முதல்வரானால் தமிழர்கள் நாண்டுக்கிட்டு சாகலாம்” என தெரிவித்துள்ளார். சவால் விடுவதில் பெயர் போன சீமான், ஒரு வேளை விஜயகாந்த் முதல்வரானால் என்ன செய்வார்? வீடியோ இணைப்பு கீழே... http://www.youtube.com/watch?v=JNHxxN37jPs

திமுக-தேமுதிக கூட்டணி அமையாமல் தடுத்தது யார்?

(தேமுதிகவுடன் மக்கள் நல கூட்டணி இணைவதற்கு முன்னால் அச்சான நம்ம அடையாளம்  கவர் ஸ்டோரி இது. விஜயகாந்த் மட்டுமல்ல ஏனைய கட்சி தலைவர்களும் திமுக பக்கம் வரவிடாமல் தடுத்தது யார் என்பதை விவரிக்கிறது). திமுகவும் தேமுதிகவும் சேர்ந்தால் அதிமுகவை வீழ்த்துவது உறுதி என தெரிந்தும், அந்த கூட்டணி அமையாமல் போனது ஏன்? ஆட்சிக்கும் சேர்த்து கூட்டணி என விஜயகாந்த் விதிக்கும் நிபந்தனை முதல் காரணம். கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து கிடைத்த அனுபவம் அவரை அப்படி பேச வைக்கிறது. … Continue reading திமுக-தேமுதிக கூட்டணி அமையாமல் தடுத்தது யார்?

திமுகவின் பலவீனத்தை ஸ்டாலினை விட தெளிவாக புரிந்து கொண்டவர் விஜயகாந்த்!

ஜி. கார்ல் மார்க்ஸ் நடைபெற இருக்கிற தேர்தலில் சிறப்பே, கூட்டணி பேரத்தில் எல்லா கட்சிகளும் குறைந்தது இரண்டு முறைக்கு மேல் அசிங்கப்பட்டது தான். ஆனால், எல்லா இடங்களிலும் ஜெயலலிதாவுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதற்குக் காரணம், இந்த அரசு மீது 'அதிருப்தி அலை' இல்லை. ஜெயாவின் இந்த செயல்படாத அரசு மீது உள்ள முணுமுணுப்பு, திமுகவுக்கான அலையாக ஏன் மாறவில்லை? போன ஐந்து வருடத்தில் திமுக ஆடிய ஆட்டம், மக்களுக்கு மறக்கவில்லை. அதுதான். மட்டுமல்லாமல் திமுகவின் … Continue reading திமுகவின் பலவீனத்தை ஸ்டாலினை விட தெளிவாக புரிந்து கொண்டவர் விஜயகாந்த்!

சாதிய படுகொலைகள்: இப்போதைக்கு சிசிடிவிக்களை நிறுத்தி வைப்போம்!

ஜி. கார்ல் மார்க்ஸ் ஒரு இருபத்திரண்டு வயது இளைஞன், தற்போது தான் கல்லூரியை முடித்தவன், அவனுக்கு பத்தொன்பது வயதில் படிப்பை விட்ட ஒரு மனைவி. வேலை கிடைத்தவுடன் உயிருக்கு ஆபத்தான கிராமத்தை விட்டு நகர வேண்டும். இல்லையில்லை.. ஓடிவிட வேண்டும். அதற்குள் எல்லாரும் பார்க்க வெட்டிக் கொல்லப்படுகிறான். அவளும் வெட்டப்படுகிறாள். இந்த கொலையின் கண்ணிகளைத் தொடர்ந்தால் அது எங்கு போகிறது என்பதை நான் யோசித்துக்கொண்டே இருக்கிறேன். முதலில், இந்தக் கொலையை திட்டமிட்டவர்களைத் தாண்டி, நேரடியாகக் களத்தில் செய்பவர்கள் … Continue reading சாதிய படுகொலைகள்: இப்போதைக்கு சிசிடிவிக்களை நிறுத்தி வைப்போம்!

#பழம் நழுவி பாஜகவில் விழுந்ததா? “விஜய்காந்தை முதல்வராக்க பிரச்சாரம் செய்வோம்”:ஜவடேகர் 

ஒரு நாளுக்கு முன்புதான் திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக என்கிற பழம் கனிந்துவிட்டதாகவும் அது பாலில் விழும் தருணம் வந்துவிட்டதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். அடுத்த நாள், பாஜகவின் மேலிடப் பொறுப்பாள பிரகாஷ் ஜவடேகர், “தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துகொண்டுதான் இருக்கிறது. பிரேமலதா விஜயகாந்துடன் இன்றும்கூட பேசினேன். டெல்லி வர இருந்த அவரால் கட்சி பணிகள் காரணமாக வரமுடியவில்லை” என்று Rediff.com இணையதளத்திற்கு பேட்டியளித்திருக்கிறார். பாஜக - தேமுதிக இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்து பேச பிரேமலதா விஜயகாந்த் விரைவில் டெல்லி … Continue reading #பழம் நழுவி பாஜகவில் விழுந்ததா? “விஜய்காந்தை முதல்வராக்க பிரச்சாரம் செய்வோம்”:ஜவடேகர் 

“கொள்கை இல்லை; ஆனால் தேசியம், முற்போக்கு, திராவிடம் எல்லாம் பெயரில் உண்டு!”

 சுப. உதயகுமாரன் "ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பார்கள். தமிழக அரசியலின் அவல நிலையைப் புரிந்துகொள்ள தே.மு.தி.க. என்கிற ஒரு கட்சியை அவதானித்தாலே போதும். கொள்கை என்பது அறவே கிடையாது. தேசியம், முற்போக்கு, திராவிடம் என மனதிற்கு தோன்றிய வெறும் வார்த்தைகளை போட்டுக் குழப்பி ஒரு சொற்றொடரை உருவாக்கி, தமிழர்களுக்கு பண்ருட்டியார் போன்றோர் சேர்ந்தளித்த மாபாதகப் பரிசுதான் இந்தக் கட்சி. "இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே" என்பதுதான் இவர்கள் நாட்டுக்கு வழங்கியிருக்கும் மார்க்சிசத்துக்கு அடுத்த மாபெரும் … Continue reading “கொள்கை இல்லை; ஆனால் தேசியம், முற்போக்கு, திராவிடம் எல்லாம் பெயரில் உண்டு!”

எதிர்க்கட்சிகளே இல்லாத தமிழ்நாடு!

தேமுதிக திருப்புமுனை மாநாட்டில் விஜயகாந்த் அதிமுக அரசை கடுமையாக தாக்கிப் பேசினார். தேமுதிகவின் மகளிரணித் தலைவர் பிரேமலதா விஜயகாந்தும் அதிமுகவையும் ஜெயலலிதாவையும் கடுமையாகப் பேசினார். இந்த மாநாடு முடிந்த அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்றும்கூட கருதாமல் தேமுதிக அதிப்ருதி எம் எல் ஏக்கள் உள்பட அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த 10 பேர் பதவி விலகினர். தேமுதிகவை சேர்ந்த விருதுநகர் எம்எல்ஏ மாஃபா பாண்டியராஜன், திட்டக்குடி தொகுதி உறுப்பினர் தமிழழகன், திருத்தணி எம்எல்ஏ அருண் சுப்பிரமணியன், பேராவூரணி … Continue reading எதிர்க்கட்சிகளே இல்லாத தமிழ்நாடு!

#திருப்புமுனைமாநாடு: ’என்னதான் சொல்ல வர்றீங்க தலீவா’ ட்விட்டர் மக்கள் பகடி

https://twitter.com/praburemya_/status/701097889951383552 https://twitter.com/PuliArason/status/701097629644492800 https://twitter.com/Geosundar07/status/701097526041169920 https://twitter.com/SuruliOfficial/status/701096982731890688 https://twitter.com/Kmkarthikn/status/701096971851804673 https://twitter.com/satranluv/status/701096751919403008 https://twitter.com/SAMI_hadyh/status/701100230645649408 https://twitter.com/SAMI_hadyh/status/701099653224206336 https://twitter.com/k_karikalan/status/701100132633153537 https://twitter.com/k_karikalan/status/701100132633153537 https://twitter.com/Barasree1012/status/701100687480860673 https://twitter.com/manumechster/status/701100601661267969 https://twitter.com/kumaran_nanu/status/701100471360970752 https://twitter.com/umakantsingh_in/status/701100645017739268

உயிர்பெறும் தேசிய ஜனநாயக கூட்டணி: தேமுதிக, பாமக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டதாக டைம் ஆஃப் இந்தியா செய்தி!

சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு புத்துயிரூட்டப்பட்டிருப்பதாகவும், பா.ம.க.வுக்கு 70 இடங்களையும், தே.மு.தி.க.வுக்கு 113 இடங்களையும் ஒதுக்க பாரதிய ஜனதா முன்வந்திருப்பதாகவும், மீதமுள்ள இடங்களில் அக்கட்சி போட்டியிடவுள்ளதாகவும் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.   இந்தச் செய்தி குறித்து மறுப்பு வெளியிட்டுள்ளது பாமக. பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவதன் மூலம் பா.ம.க மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை குலைக்க முடியாது; பா.ம.க. ஆதரவாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முடியாது; … Continue reading உயிர்பெறும் தேசிய ஜனநாயக கூட்டணி: தேமுதிக, பாமக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டதாக டைம் ஆஃப் இந்தியா செய்தி!

ஸ்டாலின்-வைகோ: யார் சிறந்தவர்?

ராம்குமார் சேகர் முதலமைச்சர் மாநாடு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மாநாடு, IIT, IIM யில் சிறப்புறை என்று எப்பேர்ப்பட்ட இடத்திலும் வைகோ மிகச்சிறப்பான பேச்சாளராக இருப்பார். அது தமிழாகட்டும், ஆங்கிலமாகட்டும்... ஐரோப்பிய பாராளுமன்றத்தில் வைகோ பேசியது நீங்கள் இபோதும் youtube இல் பார்க்கலாம். தமிழர்களுக்காக அவர் பேசிய உரை அது... ஸ்டாலினுக்கு திமுக கூட்டத்தை தவிர்த்து வேறு எங்கும் பேசத் தெரியாது. இந்த விஷயத்தில் ஸ்டாலினை விட கனிமொழி பரவாயில்லை. வைகோ சுய ஒழுக்கம் மற்றும் நேர்மையில் அனைத்து … Continue reading ஸ்டாலின்-வைகோ: யார் சிறந்தவர்?

#அட்டேன்ஷன்: விஜயகாந்துக்கு அதிகாரம்!

கூட்டணி குறித்து முடிவெடுக்க விஜயகாந்திற்கு அதிகாரம் அளிப்பதாக சனிக்கிழமைக் கூடிய தேமுதிக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்’த்தூ’ என சொன்ன அன்புமணி: மு. க.ஸ்டாலினை செருப்பால் அடிக்க வேண்டும் என்று பேசிய காடுவெட்டி குரு!

சமீபத்தில் விஜயகாந்த் பத்திரிகையாளர்களைப் பார்த்து ‘த்தூ’ என்று சொன்னது பெரும் சர்ச்சையானது. இது குறித்து அரசியல் தலைவர்கள் சிலரும் கருத்து தெரிவித்திருந்தனர். குறிப்பாக பாமக முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், ‘த்தூ’ என்று துப்பியதால் இனி விஜயகாந்‘த்தூ’ என அழைக்கப்படுவார் என பகடி செய்திருந்தார். விஜயகாந்தின் நடத்தையும் கண்டித்திருந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விழுப்புரத்தில் நடந்த பாமக மாநாட்டில் பேசிய ‘சர்ச்சை’ புகழ் காடுவெட்டி குரு, திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினின் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் … Continue reading விஜயகாந்’த்தூ’ என சொன்ன அன்புமணி: மு. க.ஸ்டாலினை செருப்பால் அடிக்க வேண்டும் என்று பேசிய காடுவெட்டி குரு!

கட்டுப்பாடு மிக்கவர்கள் தேமுதிகவினரா? அதிமுகவினரா? விஜயகாந்தின் விவாதம்

தஞ்சையில், பேனர் கிழிக்கப்பட்டது தொடர்பாக நடைபெற்ற கலவரத்தில் தேமுதிகவை சார்ந்தவர்கள்தான் தரம் தாழ்ந்து நடந்துகொண்டதாக ஜெயலலிதா குறிப்பிட்டதை அடுத்து கட்டுப்பாடுமிக்கவர்கள் தேமுதிகவினரா? அதிமுகவினரா? என்ற தலைப்பில் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த  அறிக்கையில்  "2011-ம் ஆண்டு  கூட்டணி வைக்கும் போது, தேமுதிகவினர் தரம் தாழ்ந்தவர்கள் என்பது ஜெயலலிதாவுக்கு தெரியாதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். ஜெயலலிதா தலைமையில் உள்ள அதிமுகவின் தரம் எப்படி இருக்கிறதென்பதை தமிழக மக்கள் பார்த்துக்கொண்டு இருப்பதாக குறிப்பிட்ட விஜயகாந்த்,  ஒவ்வொரு முறையும் ஜெயலலிதா … Continue reading கட்டுப்பாடு மிக்கவர்கள் தேமுதிகவினரா? அதிமுகவினரா? விஜயகாந்தின் விவாதம்

#சர்ச்சை: ஞாநி, ஆனந்த விகடன், திமுக மிரட்டல், மனுஷ்யபுத்திரன், சமஸ்

 விஜயகாந்த் செய்தியாளர்களிடம் நடந்துகொண்ட விதம் குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செவ்வாய்கிழமை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான நேர்படப் பேசு நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது. அதில் பத்திரிகையாளர்கள் ஞாநி, விஜயசங்கர், மணி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விவாதத்தில் ஞாநி கூறிய கருத்து சர்ச்சையைக் கிளப்பியது. தற்போது திமுகவில் இணைந்திருக்கும் எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன், இதுகுறித்து வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், “கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது ‘ அவருக்கு வயதாகிவிட்டது. அவரை அவரது குடும்பத்தினர் இம்சித்து அரசியலில் நீடிக்க செய்கிறார்கள். இது மனிதாபிமானமல்ல’ … Continue reading #சர்ச்சை: ஞாநி, ஆனந்த விகடன், திமுக மிரட்டல், மனுஷ்யபுத்திரன், சமஸ்

’ஊடகங்களும் அரசியல்வாதிகளும் சுயபரிசோதனை செய்யவேண்டிய நேரம் இது’

ஜோதிமணி விஜயகாந்த் ஒரு அரசியல் கட்சியின் தலைவர். பொதுவாழ்வில் இருக்கவேண்டியவர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளைக் கடந்தது அவர் விமர்சனத்தில் பயன்படுத்திய ஒரு எழுத்து என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதுவே நாளை ஒரு அரசியல்வாதிக்கும் நிகழக்கூடும். பார்ப்பவர்கள் எல்லாம் விமர்சனத்துக்குப் பதில் காறி உமிழ ஆரம்பித்தால் ஒருவர் கூட நடமாட முடியாது. ஆகவே இதை அவர் நிச்சயம் திரும்பப்பெறவேண்டும். பத்திரிக்கையாளர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. ஆனால் அப்படியொரு மனநிலை பெரும்பான்மையான ஊடக நண்பர்களிடம் நிலவுகிறது என்பதையும் மறுக்கமுடியாது. சமீபகாலமாக … Continue reading ’ஊடகங்களும் அரசியல்வாதிகளும் சுயபரிசோதனை செய்யவேண்டிய நேரம் இது’

விஜயகாந்த் எந்த வகையில் மாற்று அரசியல் செய்கிறார்? ஊழலிலா, வாரிசு அரசியலிலா, சமூகநீதி சார்ந்த மாற்றுப் பார்வையிலா?

கார்ல் மாக்ஸ் தொண்ணூறுகளில் வடமாவட்ட கிராமங்களில் பயணம் செய்ய வாய்ப்பிருந்தவர்கள் கவனித்திருக்கலாம். திமுக, அதிமுக கொடிக்கம்பங்களுக்குப் பிறகு விஜயகாந்தின் ரசிகர்மன்ற போர்டுகள் எல்லா ஊர்களிலும் இருக்கும். ஊடகங்கள் எல்லாம், ரஜினியின் புகழை ஊதிப்பெருக்கிக் கொண்டிருந்த அதே தொண்ணூறுகளில், யதார்த்தத்தில் கிராமங்களில் புகுந்திருந்தது விஜயகாந்த் தான். தென்மாவட்டங்களில் அவர் ஒரு மதுரைக்காரர் என்ற பிம்பம் சாதாரணமாகவே அவர்மீதான ஈர்ப்பை உருவாக்கி வைத்திருந்தது. தொண்ணூறுகளின் பிற்பகுதியில் தமிழகத்தில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களில் கவனிக்கத்தக்கவை என்றால் ஒன்று, பாமக திராவிடக் கட்சிகளுடன் … Continue reading விஜயகாந்த் எந்த வகையில் மாற்று அரசியல் செய்கிறார்? ஊழலிலா, வாரிசு அரசியலிலா, சமூகநீதி சார்ந்த மாற்றுப் பார்வையிலா?

திமுகவுடன் தேமுதிக கூட்டணி உறுதியோ? இந்தப் படத்தைப் பாருங்க…

எழிலரசன் செவ்வாய்கிழமை கடலூர் விஜயகாந்தின் ஆர்ப்பாட்டத்துக்கு வந்த வேனில் 'தேமு-திமுக' என்று பேனர்! திமுகவுடன் கூட்டணி உறுதியோ?

சட்டம் தன் கடமையை செய்யும்: ஜெயலலிதா அறிவிப்பால் விஜயகாந்த் முன் ஜாமீன் மனு

தஞ்சையில் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற தேமுதிக ஆர்ப்பாட்டத்தின் போது, முதலமைச்சர் ஜெயலலிதாவின் பேனர்களை கிழித்ததாக கூறி 13 தேமுதிகவினரை செவ்வாய்கிழமை  காலை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரையும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே இவ்விவகாரத்தில் கைது செய்யப்படும் வாய்ப்பு இருப்பதால், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவசர அவசரமாக முன் ஜாமீன் மனு ஒன்றை  தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது பிற்பகல் விசாரணை நடைபெற உள்ளது.

விஜயகாந்த்துக்கு எதிராக போராட்டம் வேண்டாம்: ஜெயலலிதா வேண்டுகோள்…

விஜயகாந்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான  ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் "தேமுதிகவை போன்று தரம் தாழ்ந்த நடவடிக்கையில் இறங்க வேண்டாம்  என்று கட்சி தொண்டர்களுக்கு அறிவுறுத்தி இருப்பதுடன், விஜயகாந்துக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் கூறியுள்ளார். சட்டம் தன் கடமையை செய்யும் என்று குறிப்பிட்டுள்ள ஜெயலலிதா, கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை உயிர் மூச்சாக கொண்டு செயல்பட வேண்டும் என்றும் … Continue reading விஜயகாந்த்துக்கு எதிராக போராட்டம் வேண்டாம்: ஜெயலலிதா வேண்டுகோள்…

#த்தூ : விஜயகாந்துக்கு ஒரு தமிழ் எழுத்தாளரின் கடிதம்!

நந்தன் ஸ்ரீதரன் வணக்கம் திரு விஜயகாந்த்.. எல்லோரையும் போல உங்களை கேப்டன் என்று விளிக்காததற்கு எனக்கு ஓர் எளிய காரணம் இருக்கிறது. எங்கள் நண்பரில் ஒருவரை நாங்கள் கேப்டன் என்றே அழைக்கிறோம்.. உங்களையும் கேப்டன் என்றழைத்தால் பெரும் குழப்பம் விளையக் கூடும். அது தவிர நீங்கள் ஒரு வேளை மெய் வாழ்வில் கேப்டனாக இருந்தால் அதனால் என்னென்ன நிகழும் என்று நினைக்கையில் எனக்கு பகீரென்றிருக்கிறது. அதன் காரணமாகவும் நான் இந்த விளியை தவிர்க்கிறேன் என்றும் வைத்துக் கொள்ளுங்கள்.. … Continue reading #த்தூ : விஜயகாந்துக்கு ஒரு தமிழ் எழுத்தாளரின் கடிதம்!