அக்னிக்குஞ்சுகள்!

வா. மணிகண்டன் விக்னேஷ் இறந்துவிட்டான். திருவாரூரைச் சேர்ந்த விக்னேஷ் பாண்டியன். இரண்டு நாட்களுக்கு இந்தப் பெயரைப் பேசுவார்கள். முத்துக்குமார் எரிந்து கருகிய போதும் இப்படித்தான் பேசினார்கள். செங்கொடி தீக்கு தன்னை இரையாக்கிய போதும் இதே மாதிரிதான் பேசினார்கள். இதற்கும் முன்பு எத்தனையோ பேர் எரிந்து வீணாகப் போனார்கள். மண்டல் கமிஷன் போராட்டத்திலிருந்து, தன் தலைவனை கட்சியை விட்டு நீக்குகிறார்கள் என்பது வரை எத்தனையோ காரணங்களுக்காக இளைஞர்களை தீ காவு கொண்ட மண் இது. முத்துக்குமார் ஞாபகத்தில் இருக்கிறான். … Continue reading அக்னிக்குஞ்சுகள்!

தீக்குளித்த விக்னேஷ் சிகிச்சை பலனின்றி மரணம்

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி நடத்திய பேரணியில் கலந்துகொண்ட அக்கட்சியின் தொண்டர் விக்னேஷ் தீக்குளித்தார். 90 சதவீத காயங்களுடன் மருத்துமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக நாம் தமிழர் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்த அறிக்கையில், “கர்நாடகாவில் தமிழர்களைத் தாக்கியும் தமிழகப் பேருந்துகளை அடித்து நொறுக்கியும் காவேரியில் தமிழர்களுக்குத் தண்ணீர் தர மறுத்தும் போராடுகிற கன்னடர்களைக் கண்டித்து சென்னை எழும்பூரில் நேற்று (15-09-2016) மாலை 3 மணிக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற … Continue reading தீக்குளித்த விக்னேஷ் சிகிச்சை பலனின்றி மரணம்