வா. மணிகண்டன் தமிழக அரசியலில் சுவாரசியமான காட்சிகள் அரங்கேறத் தொடங்கியிருக்கின்றன. நிறையக் கட்டுரைகள் எழுதப்படுகின்றன. ஆனால் எதை நம்புவது எதை விடுவது என்றுதான் குழப்பமாக இருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் வாள்வீச்சுக்குத் தயராகிக் கொண்டிருக்கின்றன. ஜெயலலிதா உடல்நிலை மிகவும் பலவீனமாகிவிட்டதாக அறிவிக்கப்பட்ட டிசம்பர் 5 ஆம் தேதியன்று சென்னைக்கு வந்த வெங்கய்யா நாயுடு அடுத்த நாள் உடல் அடக்கம் செய்யும் வரைக்கும் இடத்தை விட்டு அசையாமல் தேவுடு காத்ததிலிருந்து பா.ஜ.கவின் அரசியல் வெளிப்படையாகத் தெரிகிறது. சசிகலா, அவரது குடும்பமெல்லாம் … Continue reading ”சசிகலாவின் தலைமையைத்தான் திமுகவும் காங்கிரஸூம் கூட விரும்பும்!”
குறிச்சொல்: வா. மணிகண்டன்
திமுகவின் போராட்ட குணம் எங்கே போனது?
வா. மணிகண்டன் கடந்த வாரம் திமுக நடத்திய மனிதச் சங்கிலிப் போராட்டம் கோவை, ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் பிசுபிசுத்துப் போனதாக உள்ளூர் நண்பர்கள் சொன்னார்கள். பிற மாவட்டங்களைப் பற்றித் தெரியவில்லை. வழக்கமாக திமுகவின் போராட்டங்கள் குறித்து ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வரக் கூடிய செய்திகளும் படங்களும் கூட இந்த முறை இல்லை. ஐநூறு, ஆயிரம் ரூபாய்த் தாள் குறித்தான விவகாரம்தான் பேசப் பட்டுக் கொண்டிருக்கிறதே தவிர அதே பிரச்சினைக்காக மனிதச் சங்கிலி நடத்திய திமுக … Continue reading திமுகவின் போராட்ட குணம் எங்கே போனது?
ஜெயலலிதா எதிர்த்த NEET தேர்வை அமைச்சர் பாண்டியராஜன் ஏன் ஆதரிக்கிறார்?
வா. மணிகண்டன் மாஃபா பாண்டியராஜன் தமிழக கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட போது சந்தோஷமாக இருந்தது. படிப்பாளி, விவரம் தெரிந்தவர், சுயமாக முடிவெடுக்கும் திறன் வாய்ந்தவர் என்கிற நம்பிக்கையின் விளைவான சந்தோஷம் அது. ஆனால் தமிழக மாணவர்களின் தலையில் பெருங்கல்லைச் சுமந்து வைத்திருக்கிறார். மாநாடு ஒன்றுக்காக டெல்லி சென்றவர் ‘தமிழகத்தில் நீட் கட்டாயம் நடக்கும். மாணவர்களுக்கு பயிற்சியளிப்போம்’ என்று பேசிவிட்டு வந்திருக்கிறார். இதே நீட் தேர்வைத்தான் ஜெயலலிதா எதிர்த்துக் கொண்டிருந்தார். இப்பொழுது ஏன் அமைச்சர் பாண்டியராஜன் குறுக்கே … Continue reading ஜெயலலிதா எதிர்த்த NEET தேர்வை அமைச்சர் பாண்டியராஜன் ஏன் ஆதரிக்கிறார்?
பெங்களூருவில் என்னதான் நடக்கிறது; ஒரு நேரடி பதிவு
வா. மணிகண்டன் பெங்களூருவில் ஆங்காங்கே 144 போட்டுவிட்டார்கள்; தமிழ் சங்கத்துக்குள் ஆட்கள் புகத் தயாராக இருக்கிறார்கள் என்றெல்லாம் வரிசையாகச் செய்திகள் வந்து கொண்டேயிருக்கின்றன. அலுவலகத்திற்குள் இருப்பவர்கள் பதறுகிறார்கள். தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்குத் தொடர்ந்து அலைபேசி அழைப்புகள் வந்து கொண்டேயிருக்கின்றன. ‘பத்திரமா இருக்கியா?’ என்று விசாரித்துக் கொண்டேயிருக்கிறார்கள். நான்கரை மணியிலிருந்து ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்தேன். பிரச்சினைகள் எதுவுமில்லை என்றாலும் வெளியில் ஒருவிதமான பதற்றம் தெரிகிறது. வாகனங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. எல்லோரும் அவசர அவசரமாக வீடுகளுக்கு விரைந்து கொண்டிருக்கிறார்கள். … Continue reading பெங்களூருவில் என்னதான் நடக்கிறது; ஒரு நேரடி பதிவு
பெங்களூரு பற்றியெரியவும் இல்லை; தமிழர்கள் பரிதவித்தும் போகவில்லை: வா. மணிகண்டன்
வா. மணிகண்டன் இரண்டு மூன்று தினங்களாக நிறையப் பேர் விசாரித்துவிட்டார்கள். ‘உங்களுக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லையே?’ என்று. உண்மையில் பெங்களூரில் பிரச்சினையே இல்லை. வியாழக்கிழமை இரவு எப்பொழுதும் போலத்தான் கிளம்பி ஊருக்குச் சென்றோம். TN 42 என்ற பதிவு எண் கொண்ட மகிழ்வுந்து. சற்று பயமாகத்தான் இருந்தது. யாராவது கல்லை விட்டு எறிவார்களோ என்று தயக்கத்தில்தான் ஓட்டினேன். அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. கர்நாடகக் கொடிகளைப் பிடித்துக் கொண்டு சில இளைஞர்கள் அத்திபள்ளியில் நின்று கொண்டிருந்தார்கள். திக்கென்றிருந்தது. அவர்கள் … Continue reading பெங்களூரு பற்றியெரியவும் இல்லை; தமிழர்கள் பரிதவித்தும் போகவில்லை: வா. மணிகண்டன்
“எளியவனை உறிஞ்சிப் பிழைக்கிற வாழ்க்கை முறைதான் நம் முன்னால் இருக்கிறது”: மூன்றாம் நதி நாவல் குறித்து வா. மணிகண்டனுடன் உரையாடல்
எழுத்தாளர் வா. மணிகண்டனின் முதல் நாவலாக வெளிவந்திருக்கிறது மூன்றாம் நதி (யாவரும் பதிப்பக வெளியீடு). மழை பொய்த்து, வேளாண்மை அழிய ஆரம்பித்த காலத்தில் விளிம்பு மக்களின் நகரத்தை நோக்கிய இடம்பெயர்வும் அதன் பிறகான வாழ்க்கைப் போராட்டமுமே கதைக்களம். கொங்கு மண்டல மக்களின் பெங்களூர் இடப் பெயர் ‘பவானி’ என்ற கதை நாயகி வழியாக அறியத்தருகிறார் நாவலாசிரியர். பவானியின் ஒரு பாதி வாழ்க்கையில் எத்தனை துயரங்கள், இந்தத் துயரங்களின் அக-புற காரணிகள் எவை என நாவல் பேசிச் செல்கிறது. இவற்றினூடாக சூழலியல், … Continue reading “எளியவனை உறிஞ்சிப் பிழைக்கிற வாழ்க்கை முறைதான் நம் முன்னால் இருக்கிறது”: மூன்றாம் நதி நாவல் குறித்து வா. மணிகண்டனுடன் உரையாடல்
எழுத்தாளன் தன்னைப் பற்றி பேசினால் என்ன தப்பு? : வா.மணிகண்டன்
வா. மணிகண்டன் ‘எழுத்தாளன் அவனது புத்தகத்தைப் பற்றி அவனே பேசலாமா?’ என்று ஆரம்பித்திருக்கிறார்கள். யாரும் யாரையும் குறிப்பிட்டு எழுதவில்லைதான். பொதுவாக எழுதியிருக்கிறார்கள். வருடாவருடம் புத்தகக் கண்காட்சி சமயத்தில் இப்படித்தான் ஆரம்பிப்பார்கள். அதுவொரு சாங்கியம். ‘பேசினால் என்ன தப்பு?’ என்று பதில் எழுத வேண்டிய சாங்கியம் நம்முடையது. தெரியாமல்தான் கேட்கிறேன். என்ன தவறு? எழுத்தாளன் தன் புத்தகத்தைப் பற்றி பேசுவதே அவல நிலை என்றால் எட்டுக் கோடி தமிழர்கள் வாழ்கிற சூழலில் வெறும் முந்நூறு பிரதிகளை விற்பதே பெரும்பாடு … Continue reading எழுத்தாளன் தன்னைப் பற்றி பேசினால் என்ன தப்பு? : வா.மணிகண்டன்
‘அடேயப்பா…234 தொகுதியிலும் இரட்டை இலையா?’; ஊடகங்கள் கட்டமைக்கும் அம்மா எனும் புனித பிம்பம்
வா. மணிகண்டன் அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு வரை ஐவர் அணி காலி செய்யப்பட்டுவிட்டது. சென்னையை விட்டு விரட்டியடிக்கப்பட்ட செந்தில்பாலாஜி காணாமல் போய்விடுவார். ராஜேந்திர பாலாஜி, ராமஜெயம் போன்ற வாட்ஸ்-அப் புகழ் வேட்பாளர்களுக்கு இடமிருக்காது என்றெல்லாம் புளகாங்கிதம் அடைந்து கொண்டிருந்த ஊடகவியலாளர்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். கடந்த ஐந்தாண்டுகளாக நடைபெற்ற செயல்பாடற்ற ஆட்சியின் அத்தனை கழிசடைத்தனங்களும் எம்.எல்.ஏக்களாலும் மந்திரிகளாலும்தான் செய்யப்பட்டவையே தவிர அம்மா ஒரு அப்பாவி எனவும் அவருக்கும் கடந்த ஐந்தாண்டுகளின் அசமஞ்சத்தனத்துக்கும் சம்பந்தமேயில்லை என்று கட்டமைக்கப்பட்ட … Continue reading ‘அடேயப்பா…234 தொகுதியிலும் இரட்டை இலையா?’; ஊடகங்கள் கட்டமைக்கும் அம்மா எனும் புனித பிம்பம்
பெங்களூரு கழிவில் மிதக்கும் நகரம்!
வா. மணிகண்டன் அல்சூர் ஒரு காலத்தில் தமிழர்களின் பேட்டை. இப்பொழுதும் கூட தமிழர்கள்தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். அந்தக் காலத்தில் கவிஞர் கண்ணதாசன் இங்கே ஒரு வீடு வைத்திருந்தாராம். பங்களா. அவரிடம் சாவியை வாங்கிக் கொண்டு அந்தக் காலத்து நடிகர்கள் வந்து குடித்து கும்மாளமடித்துவிட்டுச் செல்வார்களாம். மலை வாசஸ்தலத்தைப் போன்ற குளிரும் மரங்களும் பெங்களூருவை நோக்கி நடிகர்களை ஈர்த்திருக்கின்றன. அவை தவிரவும் ஏகப்பட்ட காரணங்கள் இருந்திருக்கக் கூடும். யாருக்குத் தெரியும்? கும்மாளமடிப்பதோடு நில்லாமல் வீட்டை நாறடித்து விடுவார்களாம். பார்க்கும் … Continue reading பெங்களூரு கழிவில் மிதக்கும் நகரம்!
#விவாதம்: மனுஷ்யபுத்திரன்; திமுக உறுப்பினர் ஆவதற்கு முன்னும் பின்னும்!
வா. மணிகண்டன் எழுத்தாளர் ஞாநி, பத்ரி சேஷாத்ரி போன்றவர்கள் தாங்கள் மக்கள் நலக் கூட்டணியை ஆதரிக்கப் போவதாக வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்கள். மக்கள் நலக் கூட்டணி வென்றுவிடும் என்று இப்பொழுது வரைக்கும் நான் நம்பவில்லை என்றாலும் திமுக, அதிமுகவிற்கு மாற்று எதுவுமேயில்லை என்ற நிலை இல்லை. மூன்றாவதாக ஒரு ஆள் இருக்கிறார் என்பதே சந்தோஷம்தான். ஆனால் மூன்றாவதான ஒரு ஆளையும் அவர்களை ஆதரிப்பவர்களையும் தர்ம அடி அடிப்பதைத்தான் காணச் சகிக்கவில்லை. மனுஷ்ய புத்திரன் மாதிரியானவர்கள் வைகோவையும் மக்கள் நலக் … Continue reading #விவாதம்: மனுஷ்யபுத்திரன்; திமுக உறுப்பினர் ஆவதற்கு முன்னும் பின்னும்!