“93 வயதிலும் நான் தான் முதல்வர் என்பதும் தயாநிதியுடன் சேர்ந்துகொண்டு பிரசாரத்துக்குப் போவதும் நெஞ்சழுத்தம் அல்லாது வேறென்ன?”

ஜி. கார்ல் மார்க்ஸ் ஜெயா ஜெயித்ததற்காக அறச்சீற்றத்தில் கொந்தளிக்கும் அதே நேரத்தில் திமுக தோற்றதற்காகவும் சிலர் வெம்பி வெடிப்பது நகைமுரண். ஜெயலலிதா எப்படி வெற்றி பெறத் தகுதி இல்லாத ஒருவரோ அதே அளவுக்கு தகுதியற்ற ஒருவர்தான் கருணாநிதியும் என்பது தான் மக்கள் சொல்லியிருக்கும் செய்தி. ஒப்பாரியையும், வசையையும், முத்திரை குத்தலையும் நிறுத்திவிட்டு கட்சி அபிமானிகளுக்கு இதில் யோசிக்க சில விஷயங்கள் உண்டு. இப்போதும் கண்முன் இருக்கும் உதாரணங்கள் நிறைய: கருணாநிதி ஒன்றும் எம்ஜியார் கிடையாது படுத்துக்கொண்டே ஜெயிப்பதற்கு. … Continue reading “93 வயதிலும் நான் தான் முதல்வர் என்பதும் தயாநிதியுடன் சேர்ந்துகொண்டு பிரசாரத்துக்குப் போவதும் நெஞ்சழுத்தம் அல்லாது வேறென்ன?”

“இன்றைய அரசியலில் நையாண்டி செய்யப்பட வேண்டிய அரசியல்வாதி ஜெயலலிதாதான்”

ஜி. கார்ல் மார்க்ஸ் எனக்குத் தெரிந்து இன்றைய அரசியலில், மிகவும் நையாண்டி செய்யப்பட வேண்டிய அரசியல்வாதி யாரென்றால் அது ஜெயலலிதாதான். எழுத்தாளர்கள், அரசியல் விமர்சகர்கள், முக்கியமாக கார்ட்டூனிஸ்டுகள் ஆகியோருக்கு தனது தேர்தல் பரப்புரை மூலம் ஜெயலலிதா அளித்துக்கொண்டிருப்பது பெரும் தீனி. ஜனநாயகத்துக்கு கொஞ்சமும் தகுதியில்லாத, பதட்டங்கள் நிறைந்த காமெடியனாக அவர் தோற்றம் கொண்டிருக்கிறார். ஒரு செருப்போ, ஒரு கல்லோ மேடையை நோக்கி வரக்கூடும் என்ற பதட்டம் அவரைச் சுற்றியுள்ள மற்றெல்லோருக்கும் இருக்கிறது. அதனால் தான் இவ்வளவு உருட்டல் … Continue reading “இன்றைய அரசியலில் நையாண்டி செய்யப்பட வேண்டிய அரசியல்வாதி ஜெயலலிதாதான்”

ஜெயலலிதாவின் படிப்படியான மதுவிலக்கும் கருணாநிதியின் பூரண மதுவிலக்கும்

ஜி. கார்ல் மார்க்ஸ் “மதுவிலக்கு படிப்படியாக அமலுக்கு வரும்” என்று ஜெயலலிதா தனது தொடக்க பிரச்சாரக் கூட்டத்தில் அறிவித்திருக்கிறார். தனது கடைசி அஸ்திரமாக, பூரண மதுவிலக்கைக் கூட அவர் அறிவிக்கக் கூடும் என்று நான் நினைத்திருந்தேன். அதே சமயம் மதுவிலக்கு பற்றி பேசும் தகுதி கருணாநிதிக்கு இல்லை என்று சொல்லியிருக்கிறார். அது ஓரளவு உண்மையும் கூட. ஜெயலலிதாவின் அறிவிப்பு நாடகம் தான். அவரது புள்ளி விவரத்தில், விற்கும் மது புட்டிகளின் எண்ணிக்கைக் குறைந்திருக்கிறது, அதனால் குடிப்பவர்களின் எண்ணிக்கைக் … Continue reading ஜெயலலிதாவின் படிப்படியான மதுவிலக்கும் கருணாநிதியின் பூரண மதுவிலக்கும்