மலட்டுத் தன்மையை நீக்க “முன்னோர்கள்” பயன்படுத்திய சாசு விரட்டுதல் பற்றி தெரியுமா?

டாக்டர் ரவீந்திரநாத் மலட்டுத் தன்மையை நீக்க " சாசு" விரட்டுதல்... மாட்டுச்சாணியை பயன்படுத்தி,"வசிய மருந்து" தயாரித்தல்... வசிய மருந்து உண்ட பின்பும், குழந்தை பேறு கிட்டவில்லை எனில், சாமியாடியுடன் உறவு கொண்டு பிள்ளை பெறுதல்.. அதன் மூலம் "" மலடி"" என்ற அவர் பெயரிலிருந்து தப்பித்தல்...கணவன் மலடாய் இருந்தும் அதை இந்த " சாசு விரட்டுதல்" மூலம் மறைத்து, ஆணுக்கு மலட்டுத்தன்மை இல்லை என்ற ஆணாதிக்கத்தை நிலைநாட்டல் என்ற சிகிச்சை முறை எல்லாம் நம் பாரம்பரியத்திலும் இருந்துள்ளது.இதை … Continue reading மலட்டுத் தன்மையை நீக்க “முன்னோர்கள்” பயன்படுத்திய சாசு விரட்டுதல் பற்றி தெரியுமா?

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி முடிவுகள் தமிழர் நாகரீகம் கிமு 3000 என்கிறது !

சந்திரமோகன் தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும் என காமராஜ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார். இந்த பொதுநல வழக்கில், ஆதிச்சநல்லூரில் எடுக்கப்பட்ட பொருட்கள் குறித்து விளக்கும்படி மதுரை கிளை மத்திய தொல்லியல் துறைக்கு இது தொடர்பான ஆணையை பிறப்பித்து இருந்தது. இன்று பதில் அளித்த மத்திய தொல்லியல் துறையானது, Carbon dating / கார்பன் பரிசோதனைக்காக ஃபுளோரிடாவிற்கு அனுப்பப்பட்டு கிடைத்த பதிலாக, ' ஒரு தொல்பொருள் கி.மு 905 எனவும், மற்றொரு … Continue reading ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி முடிவுகள் தமிழர் நாகரீகம் கிமு 3000 என்கிறது !

தலித் பெண் குழந்தைகளை பள்ளியில் அனுமதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஐயன்காளி போராட்டத்தை தொடங்கினார்: பி.எஸ். கிருஷ்ணன்

பீட்டர் துரைராஜ் 'A Crusade for Social Justice ' என்ற நூலின் கதாப்பாத்திரமான பி.எஸ்.கிருஷ்ணன் 21.1.2019 அன்று இலயோலா கல்லூரியில் பேசினார். ஓய்வுப் பெற்ற ஆட்சிப் பணி அதிகாரியான இவர் மத்திய அரசு உருவாக்கிய பல சமூக நீதிச் சட்டங்களுக்கு அச்சாணியாக விளங்கியவர். 'A Roadmap for Social Justice' என்ற தலைப்பில் நில உரிமை, Dalit Manifesto, நகல் மசோதா, தலித்துக்களுக்கு தனி கல்வி நிலையங்கள் என பல செய்திகள் குறித்து சமூக செயற்பாட்டாளர்களிடையே … Continue reading தலித் பெண் குழந்தைகளை பள்ளியில் அனுமதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஐயன்காளி போராட்டத்தை தொடங்கினார்: பி.எஸ். கிருஷ்ணன்

இந்து கோயில்களாக்கப்பட்ட பௌத்த விகாரைகள்: சர்ச்சையா? உண்மையா? சில ஆதாரங்கள்!

பௌத்த கோயில்கள், இந்து கோயில்களாக மாற்றப்பட்டன என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறிய கருத்து பலத்த சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. இந்த சர்ச்சையை ஒட்டி, அறிஞர் மயிலை சீனி. வெங்கடசாமி எழுதிய பெளத்தமும் தமிழும் நூலிலிருந்து ஒரு பகுதியை இங்கே பகிர்கிறோம்... சாத்தன்’, அல்லது ‘சாத்தனார்’ என்னும் பெயர் ‘சாஸ்தா’ என்னும் வடமொழிப் பெயரின் திரிபு. ‘சாஸ்தா’ என்பது புத்தருக்குரியபெயர்களுள் ஒன்று என்பது ‘அமரகோசம்’, ‘நாமலிங்கானுசாசனம்’ முதலிய வடமொழி நிகண்டுகளால் அறியப்படும். எனவே, ‘சாஸ்தா’ … Continue reading இந்து கோயில்களாக்கப்பட்ட பௌத்த விகாரைகள்: சர்ச்சையா? உண்மையா? சில ஆதாரங்கள்!

‘அந்தக்காலத்துலயே திராவிடம் பாருங்க!’: நொய்யல் ஆற்றங்கரையில் ஒரு வரலாற்றுப் பயணம்

கொடுமணல் 2000+ ஆண்டுகள் முந்தி நொய்யலாற்றங்கரையில் வாழ்ந்த நாகரீகத்தின் எச்சங்கள் கிடைத்துக்கொண்டிருக்கக் கூடிய இடம். ஒரு இண்டஸ்ட்ரியல் டவுன் என்ற வகையிலே திருப்பூருக்கு தாத்தா.

பெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆரியர்களின் வருகைக்கு மரபணு ரீதியான ஆதாரம் கண்டுபிடிப்பு

வெண்கல யுகத்தில் நடந்த புலப்பெயரில் பாலியல் சமத்துவமற்ற நிலைமை இருந்திருக்கிறது. அதாவது புலப்பெயர்வில் ஆண்களே அதிகமானோர் இருந்திருக்கிறார்கள். எனவே, இந்திய பெண்களின் தாய்வழி மரபணுக்களை வைத்து இதுநாள் வரை சரியான முடிவை நோக்கி ஆய்வாளர்களால் நகர முடியவில்லை.

தமிழக வரலாற்றியல் ஆய்வுகளில் பொ. வேல்சாமி

பாவெல் தருமபுரி சமீப காலமாக தங்களை மார்க்ஸிய அறிவு ஜீவிகள் என அறிமுகப் படுத்திக் கொள்ளும் சிலர் தமிழக வரலாற்றியலில் மார்க்ஸிய வழியிலான ஆய்வு க. கைலாசபதி நா.வா மற்றும் கோ.கேசவன் தலைமுறையோடு நின்றுபோய் விட்டதாக தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறார்கள். அவர்களின் கூற்றுகளில் உண்மை இல்லாமல் இல்லை என்றாலும் மறைந்த தேவ. பேரின்பன் தொடங்கி வெ. பெருமாள்சாமி, சி. மௌனகுரு, மே.து. ராசுகுமார், அ. பத்மாவதி என ஆய்வு முயற்சிகளின் பட்டியல் நீளமானது. இந்த பட்டியலில் ரொம்பவுமே வித்யாசமானவர் … Continue reading தமிழக வரலாற்றியல் ஆய்வுகளில் பொ. வேல்சாமி

வரலாற்று சிறப்பு மிக்க ஊத்துக்குளி கிணறு சுத்தம் செய்யும் பணியில் நீங்களும் இணையலாம்!

இயல்வாகை ஊத்துக்குளியில் ,கதித்தமலைக்கு செல்லும் வழியில் உள்ள நந்தவனக் கிணறு எனப்படும் 300 ஆண்டுகள் பழமையான, வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த கிணறு , ஆண்டாண்டு காலமாக மக்கள் பயன்படுத்தி வந்த கிணறு, திருப்பூரின் வளர்ச்சி ஊத்துக்குளிக்கும் நீண்டதன் காரணமாகவும், நீர்நிலைகளின் பயன்பாடும் முக்கியத்துவமும் இப்போதுள்ள தலைமுறைக்கு அறிந்துகொள்ள வாய்ப்பில்லாததன் காரணமாகவும் இப்போது சில ஆண்டுகளாக குப்பைக்களைக்கொட்டும் இடமாக மாறியுள்ளது.. கட்டுமானமே மிக அழகியலோடு உள்ள இந்தக்கிணற்றை இதற்கு முன்பே இரண்டுமூன்று முறை தூர்வாரி சுத்தம் செய்தோம்.. ஆனால் இதன் … Continue reading வரலாற்று சிறப்பு மிக்க ஊத்துக்குளி கிணறு சுத்தம் செய்யும் பணியில் நீங்களும் இணையலாம்!

“தமிழகத்தில் நகரங்களை உருவாக்கியவை பண்டைய துறைமுகங்கள்தான்”முனைவர் பா. ஜெயக்குமார் நேர்காணல்

பொதுமக்களுக்கும் ஆய்வறிஞர்களுக்குமிடையே மிகப் பெரிய இடைவெளி தமிழ்ச் சமூகத்தில் இருக்கிறது. ஒரு முக்கிய முக்கியமான காரணம் பதிப்பகங்கள் ஆய்வறிஞர்களை ஒவ்வாமையுடன் அவர்களுடைய பணி கல்வி புலத்திலே முடியக்கூடியது என முன் தீர்மானத்துடன் அணுகுவது. இலக்கியங்கள்தான் தமிழ் நூல்கள், இலக்கியவாதிகள் எழுதுவதுதான் வரலாறு என்கிற ஒரு போக்கும் இங்கே உள்ளது. இந்த மூடத்தனத்தால் தமிழில் துறைவாரியான ஆய்வு எழுத்துகள் வந்தபோதும் அதை வெகுமக்களிடம் போகாமல் முடங்கிப் போய் உள்ளன. இலக்கியத்தை மட்டுமே பதிப்பிக்கும் பதிப்பகங்கள் முன்னணி பதிப்பகங்கள் என்கிற … Continue reading “தமிழகத்தில் நகரங்களை உருவாக்கியவை பண்டைய துறைமுகங்கள்தான்”முனைவர் பா. ஜெயக்குமார் நேர்காணல்

தனுஷ்கோடி புயலின் முதல் சாட்சியம்

மோவி திரு ஆத்மனாதன். மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கலைக் கல்லூரியின் வரலாற்று துறை பேராசிரியர். சில ஆண்டுகளாக தனுஷ்கோடி பற்றிய தீவிர ஆய்வில் இருந்தார். இன்று தனது ஆய்வுக்கட்டுரையை மதுரை காமராஜர் பல்கலையில் சமர்பித்தார். அங்கு நானும் அவரும் உரையாடிக்கொண்டிருந்த போது... அன்று அதிகாலை மணி மூன்றை நெருங்கிக்கொண்டிருந்தது. பாம்பன் – தனுஷ்கோடி இடையிலான பயணிகள் ரயில் பாம்பன் ரயில் நிறுத்ததில் நின்றுகொண்டிருந்தது. ரயில் முழுவதும் பயணிகள் கூட்டம். அனைத்து கதவு ஜன்னல்களும் அடைக்கப்பட்டிருந்தது. வெளியே … Continue reading தனுஷ்கோடி புயலின் முதல் சாட்சியம்

இந்து புராண புரட்டுகள் மூலம் அசுரனாக்கப்பட்ட மகிஷன் ஒரு பவுத்த அரசன்: பேராசிரியர் குருவின் ஆய்வுக் கட்டுரை

மைசூர் அல்லது மகிஷ மண்டலா ராஜாங்கத்தின் மிகச் சிறந்த ஆட்சியாளராக இருந்தவர் மகிஷா. புத்தமத கலாச்சாரத்திலும் மரபிலும் வந்த மகிஷா, மனிதநேயத்தையும் ஜனநாயக கொள்கைகளையும் தனது ஆளுடையில் பின்பற்றினார். ஆனால், கர்நாடகத்தின் கலாச்சார மற்றும் அறிவுசார் தலைநகரமான மைசூரை, புராணங்கள் மூலம் பார்ப்பன சக்திகள் திட்டமிட்டே புதைத்தனர் என்கிறார் பேராசிரியர் மகேஷ் சந்திர குரு. விரைவில் வெளிவரவிருக்கும்  Mahishasur: Brahmanizing a Myth என்ற நூலிலிருந்து இந்த கட்டுரையை ஃபார்வர்டு பிரஸ் வெளியிட்டுள்ளது. அதன் தமிழாக்கம் இங்கே: மகிஷ … Continue reading இந்து புராண புரட்டுகள் மூலம் அசுரனாக்கப்பட்ட மகிஷன் ஒரு பவுத்த அரசன்: பேராசிரியர் குருவின் ஆய்வுக் கட்டுரை

#புத்தகம்2016: நிகழ்காலப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு நாம் கடந்தகாலத்தில் இருந்து தொடங்க வேண்டும்”

பாவெல் தருமபுரி சமீபத்தில் 'புதுமை ' என்னும் பதிப்பகத்தில் வெளிவந்த நூல்களில் சிலவற்றை தோழர் ஒருவர் எனக்கு வாசிக்கக் கொடுத்தார். வாசித்த பிற்பாடு அனேக நூல்களும் கற்றலை ஊக்குவிக்கும் என்பதாலும், காலத்தின் அவசியத் தேவை என்பதாலும் நூல்கள் குறித்து கொஞ்சம் எழுத எண்ணம் மேலோங்கியது. இன்று ஓசாமு கோண்டா எழுதிய " இந்திய வரலாற்றில் நிலவுடைமைச் சமதாயத்தின் தோற்றம் " எனும் சிறு நூல். மற்றவை தொடரும். காலனியாட்சிக்கு முந்தைய இந்திய சமூக அமைப்பை ஆய்வு செய்வதில் … Continue reading #புத்தகம்2016: நிகழ்காலப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு நாம் கடந்தகாலத்தில் இருந்து தொடங்க வேண்டும்”