போபாலில் பாஜக நடத்தியுள்ள பச்சைப் படுகொலை!: வன்னி அரசு

வன்னி அரசு மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் மத்திய சிறையிலிருந்து தப்பியதாக சொல்லப்பட்ட சிமி இயக்கத்தை சேர்ந்த 8 பேரை என்கவுண்டர் மூலம் கொன்றதாக போலீஸ் அறிவித்துள்ளது. இந்த என்கவுண்டர் குறித்து பல்வேறு தரப்பிலும் பலத்த சந்தேகங்கள் எழுப்பபட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியின் திக் விஜய் சிங், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் எச்சூரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பிரகாஷ் காரத், ஹைதராபாத் எம்பி அசாதுதின் ஒவைசி உள்ளிட்ட தலைவர்கள் சந்தேகங்கள் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட அனைவரும் குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக் … Continue reading போபாலில் பாஜக நடத்தியுள்ள பச்சைப் படுகொலை!: வன்னி அரசு

யார் இந்த நீதிபதி மகேந்திரபூபதி: அதிர்ச்சியளிக்கும் பின்னணி தகவல்கள்!

வன்னி அரசு மதுரை கிரானைட் வழக்கு என்பது அரசின் அனுமதி இல்லாமல் கிரானைட் வெட்டி எடுத்தது, கிரானைட் கற்களை பட்டா நிலங்களில் வைத்தது என பல்வேறு வழிகளில் இயற்கையை அழித்து மக்களின் வாழ்வாதாரங்களை சீர்குலைத்ததை ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அவர்களின் விசாரணை கமிஷன், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு சமூக இயக்கங்களின் உழைப்பில் வெளிக்கொணரப்பட்டு தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதில் மிக முக்கியமான பிஆர்பி கிரானைட்ஸ் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பி.ஆர்.பழனிச்சாமி … Continue reading யார் இந்த நீதிபதி மகேந்திரபூபதி: அதிர்ச்சியளிக்கும் பின்னணி தகவல்கள்!

“நாங்க என்ன தப்பு செஞ்சோம்? லவ் பண்ணுவது அவ்வளவு பெரிய குற்றமா?”: கவுசல்யா

வன்னி அரசு கடந்த 13.3.16 அன்று உடுமலைப்பேட்டையில் சாதி மறுத்து காதல் மணம் புரிந்த சங்கர் - கவுசல்யா இணையர் சாதிவெறி கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டனர். இதில் சங்கர் கொல்லப்பட்டான், தங்கை கவுசல்யா உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இப்போது உடல் நலம் தேறி சிகிச்சை பெற்று வருகிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் வழிக்காட்டுதலின்பேரில் தங்கை கவுசல்யாவை சந்திக்க நாங்கள் எடுத்த தொடர் முயற்சியின் விளைவாக மார்ச் 23 … Continue reading “நாங்க என்ன தப்பு செஞ்சோம்? லவ் பண்ணுவது அவ்வளவு பெரிய குற்றமா?”: கவுசல்யா

சாதி ஆதிக்க பரப்புரை: உங்கள் நோக்கம் தான் என்ன?

வன்னிஅரசு இன்று காலை தான் இப்போது.காம் என்ற இணையதளத்தின் பெயரில் வெளியிடப்பட்டிருந்த படங்களை பார்க்க நேர்ந்தது. பல பெண்ணிய செயற்பாட்டாளர்கள் 'நான் உயர் சாதிப் பெண்' 'நான் ஆதிக்க சாதிப் பெண்' என்று அறிமுகமாகி 'இருந்தாலும்' ஆணவக்கொலையைக் கண்டிக்கிறேன் என்று முடியும் வாசகங்களுடன் அவர்களின் படங்களும் அதில் இருந்தது. அந்த 'ஆதிக்க சாதி ஆணவ விளம்பரத்தில்' வந்திருந்த பெண்களில் சிலரின் செயல்பாடுகளை அறிந்தவன் என்ற முறையில் எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. பிறகு விசாரித்ததில் தான் பல … Continue reading சாதி ஆதிக்க பரப்புரை: உங்கள் நோக்கம் தான் என்ன?

நீதிபதியின் சாதி மனசாட்சி..!

வன்னி அரசு. சாதி மறுத்து காதல் மணம் புரிந்த சங்கர் கவுசல்யாவை பட்டப்பகலில் அரிவாளால் வெட்டிச் சாய்த்தது சாதிவெறி கும்பல். காதல் மணம் புரிந்த எட்டு மாதங்கள் முழுக்க கொலை மிரட்டல்கள், லட்சங்களில் பணம் தருகிறோம் என்று அவன் காதலுக்கு விலை சொல்லப்பட்ட போதும், இரண்டு முறை கொலை முயற்சி நடந்தபோதும் எந்த விதத்திலும் தன் காதலை விட்டுத்தராமல், உறுதியோடு நின்று, இந்த முறை நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டான் எங்கள் வீரன் சங்கர். எல்லாவற்றையும் விட தான் … Continue reading நீதிபதியின் சாதி மனசாட்சி..!

இலங்கையின் செய்தித் தொடர்பாளர் ஆகிப் போன ஐநா மனித உரிமைகள் ஆணையர்!

வன்னி அரசு. ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் செயத் ராஅட் அல் ஹுசேனின் நான்கு நாள் இலங்கை சுற்றுலா இன்று முடிவடைந்தது. அவர் பயணத்தின் விளைவாக தமிழர்களுக்கு எதாவது நன்மை நடக்கும் என்று நாம் எதிர்பார்த்த எந்தவொரு நிகழ்வும் நடக்கவில்லை. மாறாக இலங்கை அரசு மேற்பார்வையில் நடத்தப்பட்ட மற்றுமொரு சடங்கு போல இந்த பயணம் அமைந்துள்ளது. தமிழர்களின் மிகமுக்கிய கோரிக்கைகளில், ஐநாவுக்கு எந்த பங்கும் கடமையும் இல்லாதது போல கைகழுவி உள்ளது. தனது பயணத்தின் இறுதியில் … Continue reading இலங்கையின் செய்தித் தொடர்பாளர் ஆகிப் போன ஐநா மனித உரிமைகள் ஆணையர்!